Friday, May 17, 2013

சந்தோஷ சந்தோஷி மாதா





துணை புரிவாய் துணைபுரிவாய் சந்தோஷிமாதா
தூயவளே நாயகியே ஸந்தோஷிமாதா
எண்ணமெல்லாம் நிறைவேற இனிதருள்வாயே
இகலோக நாயகியே சந்தோஷிமாதா 
முழுமுதற் பரம்பொருளான கணபதி  பூலோகத்திற்கு தன் இருமனைவியரான சித்தி, புத்தியுடனும் குமாரர்களான லாபம், சுபத்துடனும் வருகை தந்த அந்த நாள் ஆவணி மாதம் பவுர்ணமி நாளை பூலோக மக்கள்  சகோதர உறவின் கையில் ரக்ஷா எனப்படும் கயிறுகளைகட்டி மகிழ்ந்தனர். 
லாபம், சுபத்திற்கு மனதில் ஏக்கம் சுபா! நமக்கும் ஒரு சகோதரி இருந்தால் இவ்வாறு கயிறு கட்டி மகிழ்ந்திருக்கலாமே! தேவலோகத்தினராகிய நாம் பூலோக பெண்களை சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள இயலாது.
தேவலோகத்தில்  ஒரு சகோதரியை தேடவேண்டும், என்றார் லாபம்
 லாபமும், சுபமும் தாங்கள்  பூலோகத்தில் மக்கள் அருகில் உள்ளவர்களைக்கூட சகோதர, சகோதரிகளாக பாவிப்பதையும், அதற்காக விழா எடுப்பதையும் குறிப்பிட்ட அவர்கள், தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டுமென கேட்டனர். 

நாரதர் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும்படி 
விநாயகரை வேண்டிக்கொண்டார்
விநாயகர்  சித்தி, புத்தி  மூவரும் இணைந்து ஒரு பெண் குழந்தையை உருவாக்கிய குழந்தையால்  தங்கள் புத்திரர்கள் சந்தோஷமடைவார்கள் என்பதால் அவளுக்கு சந்தோஷி எனப்பெயரிட்டனர். 
தங்களுக்கு சகோதரி பிறந்த செய்தியறிந்த சகோதரர்கள்
உமையன்னையின் சக்தியும், 
லட்சுமியின் செல்வச்செழிப்பும், 
சரஸ்வதியின் கல்வி ஞானமும் 
அக்குழந்தைக்கு கிடைக்கட்டும் என சகோதரியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
சந்தோஷியை வணங்குவோர் பொன்னும், பொருளும் பெற்று அறிவாற்றலுடன் திகழ்வார்கள் என ஆசி கூறினர்.

வெள்ளிக்கிழமையில் அந்தக் குழந்தை பிறந்தது. எனவே சந்தோஷி மாதாவிற்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படவேண்டுமென சகோதரர்கள் முடிவெடுத்தனர். 

ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர் சுனீதி என்ற சந்தோஷி மாதா பக்தையை மணந்தார்.    சுனீதியை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினர். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. 

யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத்தை மட்டும் அவள் விடாமல் செய்துவந்தாள். 

அவளது பக்திக்கு மெச்சிய சந்தோஷி மாதா குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள்செய்தாள். குடும்பம் ஒற்றுமையானது.  

இப்போதும் சந்தோஷி மாதா விரதம் இருக்கும் இடங்களில் அவளது பக்தையான சுனீதியின் கதை சொல்லப்படுகிறது.  சந்தோஷி மாதா ஒரு ஒற்றுமை தெய்வமாக போற்றப்படுகிறாள்.

14 comments:

  1. சித்தி, புத்தி, குமாரர்கள் லாபம், சுபம் வரலாறு, சந்தோஷி மாதா வரலாறு, சுனீதி வரலாறு எல்லாம் அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    எல்லோர் வாழ்விலும் சந்தோஷத்தை அள்ளி தரட்டும் சந்தோஷி மாதா.
    நன்றி.

    ReplyDelete
  2. அருமையான படங்களுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சந்தோஷி மாதா என்று தெய்வத்தின் பெயரை மட்டும்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சுனீதியின் கதையும், சந்தோஷி மாதாவின் வரலாறும் இப்போது படித்துத் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி! படங்கள் எல்லாமே அழகு!

    ReplyDelete
  4. "சந்தோஷ சந்தோஷி மாதா” இன்றாவது எனக்குக் கொஞ்சம் சந்தோஷம் தர பிரார்த்திக்கிறேன்.

    வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற,அற்புதமான விளக்கங்க்ளுடன் கூடிய அழகான பதிவு. படங்கள் யாவும் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ooooo 912 ooooo

    ReplyDelete
  5. சந்தோஷி மாதாவின் பெயரே சந்தோஷத்தை தருகிறதே...

    அழகிய படங்களும் வரலாறும். அருமை!
    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  6. aha santhoshamana post dear.
    The last two pictures are very nice.
    Santhosham reading this.
    viji

    ReplyDelete

  7. வடக்கில் விநாயகர் மணமானவர். மக்கள் செல்வம் பெற்றவர். ஆகவே வடக்கில் சந்தோஷி மாதா பிரசித்தம். தெற்கில் விநாயகர் பிரம்மசாரி. ஆகவே இக்கதை பற்றி அறியும் வாய்ப்பு குறைவு. அருமையான படங்களுடன் அறியாத கதைகளையும் வாரி வழங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சந்தோஷம் தரும் சந்தோஷிமா எல்லோருக்கும் சந்தோஷத்தையும், செழிப்பையும் நாளும் அருளட்டும்.
    சந்தோஷிமா கதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. very nice write up amma.. The pics gives more information.. Loved the way you presented..

    ReplyDelete
  10. சந்தோஷி மாதாபடங்களும் தகவல்களும் மிக அருமை. முதலாவது படத்திலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.அவ்வளவு அழகு.நன்றி.

    ReplyDelete
  11. சந்தோஷி மாதாவை துதிப்போம்.

    ReplyDelete
  12. Pray santoshi matha and get happy in your life. Jai santoshi matha

    ReplyDelete
  13. அம்மா சந்தோஷி நீ வரவேண்டும்

    ReplyDelete
  14. அம்மா சந்தோஷி நீ வரவேண்டும்

    ReplyDelete