Wednesday, May 15, 2013

சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்










ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


 காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட  காலத்தில் . வெள்ளத்தில் தவித்த மக்களை காப்பாற்ற திருமால் ஓடோடி வந்தார்.

காவிரியாற்றில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் ஏதோவொன்று சிக்கிக்கொள்ள கரைக்குக் கொண்டு வந்து பார்த்தனர். அது பெருமாளின் அழகிய விக்கிரகத் திருமேனி. அதையடுத்து வெள்ளமும் வடிந்து போகவே
அந்த பெருமாளை வையம் காத்த பெருமாள் எனப் பூரிப்புடன் அழைத்தனர். அதைத் தொடர்ந்து பெருமாளுக்கு அங்கே அழகிய கோவில் ஒன்று கட்டப்பட்டது.

ஆரம்பத்தில்`பெருமாள் கோவில்' என்ற பெயருடன் இருந்ததாம். பிறகு, இந்த ஊருக்கு அடுத்துள்ள ஆடுதுறை நகரம் விரிவாக்கம் பெற, இந்தப்பகுதியும் ஆடுதுறையின் ஓர் அங்கமானது.

ஸ்ரீதேவி - பூதேவியுடன் உத்சவர் ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாள் அழகுறக் காட்சி தருகிறார். தாயாரின் பெயர் - ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார்.

பிரிந்த தம்பதியர், நிம்மதியின்றித் தவிக்கும் தம்பதியர் ஆகியோர் தொடர்ந்து 16 நாட்கள் அல்லது 16 சனிக்கிழமைகள் இங்கு வந்து வெள்ளை மலர் சார்த்தி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, 16 முறை பிரகார வலம் வந்தால், பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மிகுந்த விசேஷமானவர் .. .

வடக்கு திசை நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை, செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபமேற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

நஷ்டத்தில் இருந்த தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். நல்ல வேலை, பதவி உயர்வு ஆகியவை வேண்டுவோர் பால் பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் மற்றும் முல்லை முதலான வெண்மை நிற மலர்கள் சார்த்தி வழிபட்டால் நலம் பெறலாம்....
ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.

வைகாசி பிரம்மோத்ஸவம் ஐப்பசி பவித்ரோத்ஸவம், மாசி பவுர்ணமி, புரட்டாசி நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை இங்க சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

நிலம் மற்றும் வாகன சம்பந்தமாக எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பார். ஸ்ரீவையம் காத்த பெருமாள். இங்கேயுள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கினால், நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார்.

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் கோவில். தமிழில் வையம் காத்த பெருமாள் என அழைக்கின்றனர்.
ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் கோவில்

16 comments:

  1. காலையில் எழுந்ததும் காணும் உங்கள் பதிவு மனதை அமைதிகொள்ள செய்கிறது

    ReplyDelete

  2. கும்பகோணத்தில் இருந்து சீர்காழி செல்லும் பாதையிலும் ஒரு ஆடுதுறை வருகிறது என்று நினைவு. இதுவும் அதுவும் ஒன்றா.?பிரதி ஆண்டும் அந்த சாலையில் சிதம்பரம் செல்வது வழக்கம். இந்த முறை வையம் காத்த பெருமாளை தரிசிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. படங்களும் செய்திகளும்
    மனதுக்கு நிறைவாக இருக்கின்றது சகோதரி..

    ReplyDelete
  4. மதுரை திருமோகூர் சக்கரத்தாழ்வார் மகிமைகளையும் விளக்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன்..

    ReplyDelete
  5. சிறப்பான படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  6. படங்கலும் , செய்தியும் அருமை

    ReplyDelete
  7. சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு என் வந்தனங்கள்.

    இன்றைக்காவது என் மனச்சங்கடங்களைத் தீர்க்கிறாரா பார்ப்போம் என தினமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

    அழகான பதிவு. அற்புதமான படங்களும் + விளக்கங்களும்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo 910 ooooo

    ReplyDelete
  8. சங்கடங்கள்தீர்க்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்ப்பற்றி தெரிந்து கொண்டேன். வடகுரங்ஆடுதுறையா? கபிஸ்தலம் என்று அழைக்கபடும் இடத்தில் உள்ள பெருமாள் கோவிலா? விளக்கவும்.
    படங்கள் எல்லாம் அழகு.
    நன்றி.

    ReplyDelete
  9. கண்களுக்கு விருந்தாக்கியது அனைத்துப் படங்களும்
    அத்துடன் பல முக்கியமான விசயங்களையும் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  10. Aha very nice post dear.
    Since i am a little sick, i cannot traval over here. So i preyed HIM by sitting at here.
    Thanks for the post. All the pictures are very nice.
    viji

    ReplyDelete
  11. வையகம் காத்த பெருமாள் அருமையான விளக்கத்துடன் படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  12. சக்கரத்தாழ்வார் பற்றிய செய்திகளும் பரிகார குறிப்புக்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
  13. வணக்கம்
    அம்மா

    சக்கரத்தாழ்வார் பற்றிய விளக்கம் மிக அருமை படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. ஆடுதுரைபெருமாளும் தாயாரும் என்ன அழகு!வையம் காத்தப் பெருமாள் சந்நிதியில் இருக்கும் சக்கரத்தாழ்வார் பற்றிய தகவல்கள் அருமை!

    ReplyDelete
  15. மனம் கவர்ந்த பதிவு! பகிர்விற்கு உளமார்ந்த நன்றி!

    ReplyDelete