கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்திலுள்ள நாகமங்கலா என்ற ஊரில் சௌமிய கேசவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட ஸ்ரீசௌமிய கேசவர் ஆறடி உயரத்தில் அர்ச்சா மூர்த்தியாக . பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளி காட்சி தருகிறார்.
கேசி என்ற அரக்கனை வதைத்த மூர்த்தியானபடியால் கேசவர்
என்று அழைக்கப்படுகிறார். தேவி ஸ்ரீசௌமிய நாயகித் தாயார்.
என்று அழைக்கப்படுகிறார். தேவி ஸ்ரீசௌமிய நாயகித் தாயார்.
பொதுவாக திருமால் திருவுருவங்களில் பின்கரங்களில்
வலப்புறம் சக்கரமும் இடப்புறம் சங்கும் காணப்படும்.
வலப்புறம் சக்கரமும் இடப்புறம் சங்கும் காணப்படும்.
இங்கோ பின் வலக்கரத்தில் சங்கும் இடக்கரத்தில்
சுதர்சன சக்கரத்தையும் ஏந்தியபடி காட்சி தருகிறார்.
சுதர்சன சக்கரத்தையும் ஏந்தியபடி காட்சி தருகிறார்.
முன் வலக் கரத்தில் தாமரை மலரும் இடக்கரத்தில் கதையும் ஏந்தியுள்ளார்.
ராஜகோபுரத்தின் முன்பாக சுமார் 55 அடி உயரமுள்ள
விஜயஸ்தம்பம் என்னும் கருடஸ்தம்பம் உள்ளது.
விஜயஸ்தம்பம் என்னும் கருடஸ்தம்பம் உள்ளது.
இதை ஸ்ரீஇராமானுஜரே பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஸ்தம்பத்தின் ஒரு புறத்தில் பெரிய திருவடி யான கருடனும்
மறுபுறத்தில் சிறிய திருவடியான அனுமனும் சிறு குழந்தை போன்று உச்சிக் குடுமி யுடன் அழகிய சிலை வடிவில் காட்சியளிக்க்கிறார் அனுமனை
அழகிய ஏழு நிலை ராஜகோபுரம் வழியே ஒருசில படிகள் ஏறியவுடனே நுழைவாயிலில் இருந்தபடியே ஸ்ரீசௌமிய கேசவரைத் தரிசிக்கலாம்.
சிவராத்திரி நாளன்று இறைவனின் முன்புள்ள
விஜய ஸ்தம்பத்தின் அருகில் லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
விஜய ஸ்தம்பத்தின் அருகில் லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
அன்று ஆலயமே தீபஒளியில் தீபாவளி போன்றே காட்சியளிக்கும்.
அந்நாளில் ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.
அந்நாளில் ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.
ஸ்ரீசௌமிய கேசவப் பெருமாளின் வலப்புறம் ருக்மிணி, சத்யபாமாவுடன் புல்லாங்குழல் ஊதும் ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதி உள்ளது.
ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்த நிலையில்
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்....
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்....
அடுத்து ஸ்ரீ பூமிதேவி, நீளாதேவி சமேத ஸ்ரீபரவாசு தேவர்,
ஆழ்வார்கள், ஆசார்யர்கள், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன.
ஆழ்வார்கள், ஆசார்யர்கள், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன.
ஹொய்சாள மன்னர்களின் ஆலய கட்டிட பாணிக்கு
உதாரணமாக திகழும் நாகமங்கலா திருத்தலம்
நாக மண்டல பணிபாரக க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனந்தபுரம் என்ற பெயரும் உண்டு.
நாகமண்டலம் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும்.
மகாமண்டபத்தின் மேல் ஆதிசேஷன் மண்டலாகாரமாகத் தன்னைச்
சுற்றிக் கொண்டு சங்கின்மீது வேறெங்கும் காணாத அபூர்வ அமைப்பில்
சுற்றிக் கொண்டு சங்கின்மீது வேறெங்கும் காணாத அபூர்வ அமைப்பில்
அமர்ந்திருப் பதாக வடிக்கப்பட்டுள்ளது.
108 சங்குகளின் அமைப்பின் மீதுள்ள ஒரு பெரிய சங்கின்மீது உடலைச் சுற்றி வளைத்து அமர்ந்திருக்கும் ஆதிசேஷனுக்கு திருமஞ்சன வழிபாடு சிறப்பாகும்.
சர்ப்ப தோஷம், திருமண முறிவு, பயம், வியாதி போன்றவை அகலவும்; மணப் பேறு, மகப்பேறு வேண்டியும் திருமஞ்சனம் செய்கின்றனர்.
புவனேஸ்வர மண்டபம் என்னும் இந்த மண்டபத்திலுள்ள ஆதிசேஷனின் மண்டலாகார அமைப்பு மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது.
அனைத்து நாக தோஷங்களுக்கும் நாகமண்டலா திருத்தலம்
பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
ராகு- கேது ஆகிய வற்றால் திருமணத்தடை, சந்தான பாக்கியமின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடிய திருத்தலம் இது.
வாயிலில் உள்ள தீப கம்பத்தின்மீது யுகாதி, சிவராத்திரி, கார்த்திகைப் பௌர்ணமி போன்ற நாட்களில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
மைசூர்- மாண்டியாவிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாக மங்கலாவுக்குச் சென்றால், அருகிலுள்ள மேல்கோட் நாராயணபுரம் பெருமாளையும் சேவிக்கலாம்.
பெங்களூரிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில், மேல்கோட்- மங்களூர் சாலையில் நாகமங்கலா உள்ளது.
பெங்களூரிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில், மேல்கோட்- மங்களூர் சாலையில் நாகமங்கலா உள்ளது.
படங்கள் அருமை... சிறப்பான தகவல்களுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteAha....
ReplyDeleteVery nice post. Lovely pictures. Felt as if i visited over there.
Thanks Rajeswari.
viji
ReplyDeleteகர்நாடகத்தில் பல பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்றிருந்தாலும் மேல் கோட்டை போனதில்லை. வாய்ப்பு கிடைத்துப் போகும்போது நாகமங்கலாவும் செல்ல உங்கள் பதிவு ஆர்வம் தூண்டுகிறது. மிக அழகான படங்கள். வர்ணனைகள்... வாழ்த்துக்கள்.
செளந்திர நாயகியான ஸ்ரீ செளம்ய நாயகித் தாயாருக்கு என் அன்பான வந்தனங்கள்.
ReplyDeleteமுதல் படமே சும்மா ஜொலிக்குது.
ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு ப்டித்து விட்டு மீண்டும் வருவேனாக்கும்.
ஜாக்கிரதை!
>>>>>>
தலைப்புக்கும் முதல் படத்திற்கு இடையே ஏன் இவ்வளவு இடைவெளி விடப்பட்டுள்ளது?????
ReplyDelete//கேசி என்ற அரக்கனை வதைத்த மூர்த்தியானபடியால் கேசவர்
என்று அழைக்கப்படுகிறார். தேவி ஸ்ரீசௌமிய நாயகித் தாயார்.//
தேவியின் பெயர் மிகவும் அழகாக உள்ளது. செளந்தர நாயகி, செளம்ய நாயகி, ரெங்க நாயகி என்ற அம்பாளின் எல்லாப்பெயர்களுமே அழகோ அழகு தான். பொதுவாக நாயகி என்று முடியும் அம்பாள் பெயர்கள் எல்லாமே அழகாகத்தான் அமைந்து விடுகின்றன. ;)
>>>>>
ReplyDelete//பொதுவாக திருமால் திருவுருவங்களில் பின்கரங்களில்
வலப்புறம் சக்கரமும் இடப்புறம் சங்கும் காணப்படும்.
இங்கோ பின் வலக்கரத்தில் சங்கும் இடக்கரத்தில்
சுதர்சன சக்கரத்தையும் ஏந்தியபடி காட்சி தருகிறார்
முன் வலக்கரத்தில் தாமரை மலரும் இடக்கரத்தில் கதையும் ஏந்தியுள்ளார்.//
ஆஹா, இதையெல்லாம் கூர்ந்து கவனித்தோ அல்லது அந்தக்கோயிலின் ஸ்தல புராணத்தை படித்தோ கேட்டோ அறிந்து எங்களுக்கும் சொல்வது தங்களின் தனித்திறமை தான். ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நன்றிகள்.
>>>>>
ReplyDelete//ராஜகோபுரத்தின் முன்பாக சுமார் 55 அடி உயரமுள்ள விஜயஸ்தம்பம் என்னும் கருடஸ்தம்பம் உள்ளது.
இதை ஸ்ரீஇராமானுஜரே பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. //
அடேங்கப்பா, ஸ்ரீ இராமானுஜரே பிரதிஷ்டை செய்ததா? கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. அவ்வளவு பழமையும் புனிதமும் வாய்ந்த கோயில். ;)
>>>>>
ReplyDelete//இந்த ஸ்தம்பத்தின் ஒரு புறத்தில் பெரிய திருவடியான கருடனும் மறுபுறத்தில் சிறிய திருவடியான அனுமனும் சிறு குழந்தை போன்று உச்சிக் குடுமியுடன் அழகிய சிலை வடிவில் காட்சியளிக்கிறார்கள் //
பெரிய + சிறிய திருவடிகளுக்கு அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
>>>>>
ReplyDelete//சிவராத்திரி நாளன்று இறைவனின் முன்புள்ள விஜய ஸ்தம்பத்தின் அருகில் லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
அன்று ஆலயமே தீபஒளியில் தீபாவளி போன்றே காட்சியளிக்கும்.//
ஜகத்ஜோதியான தகவல்கள் ..... அதுவும் ஜகமணியிடமிருந்து. ;)))))
>>>>>
ReplyDelete// ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்த நிலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்....//
இவரைப் பார்க்கவே மயிர்கூச்சலெடுப்பதாக உள்ளது. தத்ரூபமான படம். ;)
>>>>>
ReplyDelete//பெங்களூரிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில், மேல்கோட்- மங்களூர் சாலையில் நாகமங்கலா உள்ளது.//
அடிக்கும் வெயிலில் அங்கெல்லாம் சென்று அலையாமல் அழகாக அமைதியாக ஆத்தில் உட்கார்ந்தே தரிஸிக்க வைத்து விட்டீர்கள். அந்தப்புண்ணியங்கள் யாவும் உஙளைச்சேரட்டும்.
அனைத்துப்படங்களும் வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள்.
கடைசியில் காட்டப்பட்டுள்ள கோபுரங்களும், 108 சங்குகளில் சுற்றி வளைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஆதிசேஷனும் அட்டகாசம்.
>>>>>
ReplyDeleteமொத்தத்தில் இன்றைய தங்களின் பதிவு வழக்கம் போல மிக அருமையான பயனுள்ள தகவல்களுடனும், அற்புதமான படங்களுடனும் தரப்பட்டுள்ளன.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ooooo 902 ooooo
pictures are so good
ReplyDeleteபுதிய கோவில் பார்க்காத கோவில் செய்தி நன்றி. ஸ்ரீசெளமிய நாயகி தாயார் . மற்றும் நாகமண்டல் ஆதிசேஷன், நரசிம்மர் படங்கள் எல்லாம் அழகு. பார்க்க் வேண்டிய லிஸ்டில் குறித்து வைத்துக் கொண்டேன்.
ReplyDeleteஒவ்வொரு படமும் பக்தி பரவசமாக உள்ளது . சௌமிய நாயகி தாயாரை இன்றுதான் தரிசிக்கிறேன்.பதிவை படிக்க படிக்க நேரில் தரிசனம் செய்யும் ஆவல் அதிகரிக்கிறது.பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம் .
ReplyDelete