
ஸ்ரீ குரு பகவான் தட்சிணாமூர்த்தி,தங்ககவசத்தில் ..

குருபிரம்மா குரு விஷ்ணு, குருதேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நம:
சிவப் பரம்பொருளே ஆதிகுருவாக, தட்சிணாமூர்த்தியாக சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் முனி சிரேஷ்டர்களுக்கு கல்லால மரத்தின் கீழ் தென் திசை நோக்கி அமர்ந்து வேதப் பொருளை மௌனமாக உபதேசித்தருளியவர்.

"ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம்'
என்று அகநானூறும்;
"ஆலமர் தெய்வம்' என்று புறநானூறும் விரித்துச் சொல்கின்றன.
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.
பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில் பிரம்மதேவருடைய மகன்களான சனகன், சனந்தன், சனாதனன், சனத் குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு கோரிக்கையை வைத்தனர்.. "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை உபதேசிக்க வேண்டினர்.
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.


வேதநூல் தர்ம சாஸ்திரம் மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத் தனிநாட்டின் இறைவன் ஆகி
சோதியாய் குருவுமாகி சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள் அடைக்கலம் போற்றி போற்றி

சாதாரணமாக குரு வயது முதிர்ந்தவராகவும், சீடர்கள் இளைஞர்களாகவும் இருப்பது உலக இயல்பு.
ஆனால், தட்சிணாமூர்த்தியோ வயதில் இளையவராகவும், அவரிடம் வேதப் பொருளை அறிய வந்த சனகாதி முனிவர்கள் வயதில் முதியவர்களாகவும் இருப்பது அற்புதத்திலும் அற்புதம்.
குரு பேசிக்கொண்டிருப்பதும் சீடர்கள் பாடம் கேட்டுக்கொண்டிருப்பதும் தான் வழக்கம்.
ஆனால், இங்கு சீடர்கள்தான் சந்தேகங்களைக் கேட்கின்றனர்.
குருவோ மௌனமாக இருந்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்..

சிவபிரான் மௌனமாக சின்முத்திரை காட்டி அருளியதை,
"மௌன உபதேச சம்பு' என்று பழநித் திருப்புகழில்
அருணாகிரிநாதர் போற்றுகிறார்.
"சொல்லரிய நெறியையொரு சொல்லால் உணர்த்திய
சொரூப அனுபூதி காட்டிய தட்சிணாமூர்த்தியே
சின்மயானந்த குருவே'
என்று சின்மயானந்த குருவின் அருளை வியந்து பாராட்டுகிறார் தாயுமானவர்.

தென்திசை எமனின் திசை. எம பாசத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. ஜீவன்கள் மரண பயத்தினால் தன்னை வந்தடைந்து புகல் தேடும்போது, அவர்களது மரண பயத்தை நீக்கி அருளவே தட்சிணாமூர்த்தி தென் திசை நோக்கி அமர்ந்திருப்பதாகக் கூறுவர்.

பேச்சு, செயல், அறிவது எல்லாம் அடங்கிப்போன நிலையில் இருக்கிற தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக- புத்திப் பிரகாசம், வாக்குவன்மை, வித்வசந்தி எல்லாம் தருவார்.

தட்சிணாமூர்த்தி தம் திருக்கரங்களில் அட்சமாலை ஏந்தியுள்ளதை "சர்வ வித்யை அளிக்கும் பிரபு (ஈஸ்வரன்) சதாசிவனாகிய தட்சிணாமூர்த்தியே' என்று வேதம் புகழ்கிறது.
சுவடி தாங்கி நெற்றியில் பிறைச் சந்திரனை அணிந்து சந்திர "கலை கலை' வளருகிறது என்று அர்த்தம். அறிவும் ஞானமும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதைக் காட்டவே கைகளில் சுவடி.

வெண்மையும்கூட இன்னும் நிர்மலமாக- தன்வழியே ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்குத் தெளிந்து விடுகிறபோது அது ஸ்படிகமாகிறது. தட்சிணாமூர்த்தி, கைகளிலும் ஸ்படிகத்தாலான அட்ச மாலை இருப்பது இதைக் காட்டுகிறது.
குரு கடாக்ஷம் பரிபூர்ணம்' என்று சொல்வார்கள். அதன்படி குருவடிவான தட்சிணாமூர்த்தியை வியாழன்தோறும் வழிபட்டு நலம் பெறலாம்..
ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி பகவான், கும்மிடிப்பூண்டி,




ஆதி குரு தட்சிணாமூர்த்தி தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பு அம்மா...
ReplyDeleteவிளக்கங்களுக்கு நன்றி...
ReplyDeleteபல ஆலயங்களில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை காண்கிறோம். எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மூர்த்திக்குப் பின்னும் ஒரு உருவகக் கதை கூறி மக்களை நன்னெறிப் படுத்த முயன்ற நம் முன்னோர்களின் மேதாவிலாசங்கள்தான். வழக்கம்போல் படங்களும் விளக்கங்களும் அருமை. வாழ்த்துக்கள்.
குருபகவானின் திவ்ய தரிசனம்...
ReplyDeleteதெரியாத பல தகவல்களுடன் நல்லதொரு பதிவு! என்னவருக்கு முதன் முதலில் வைத்த பெயர் "ஆலமர் செல்வன்"தானாம்! அந்தப் பெயர்தான் இந்தப் பதிவுக்கும் என்னை இழுத்து வந்தது! :)
ReplyDeleteதங்கக் கவசம் பூண்ட குருபகவானின் சிலை மிக மிக மிக அழகாகவும், அற்புதமாகவும் இருக்கிறது. அது எந்தக் கோயிலில் உள்ளது என்று குறிப்பிடவில்லையா ராஜி மேடம்?
பகிர்வுக்கு மிக்க நன்றிகள்!
This Dakhsinamoorthy deity is in Dhyanapeetam, Bidadi . you can see as live in this site http://www.nithyananda.org/
Delete’குரு தக்ஷிணாமூர்த்தி’ பற்றி ’ஞான சரஸ்வதி’ கொடுத்துள்ள மிகவும் தெள்ளத்தெளிவான பதிவினை, இன்று படித்ததும் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ReplyDelete>>>>
இன்று குருவாரத்திற்கு [வியாழக்கிழமை] ஏற்ற மிகச்சிறப்பான பதிவு.
ReplyDeleteஅத்தனைப்படங்களும், விளக்கங்களும் அழகோ அழகு. ;))
>>>>>
பொதுவான வழக்கத்திற்கு மாறாக ...... குரு இளைஞராகவும் சிஷ்யர்கள் முதியவர்களாக்வும் காட்சியளிப்பதும், சிஷ்யர்கள் விளக்கம் கேட்டு பேசிக்கொண்டே இருக்க, பேச வேண்டிய குரு மெளனமாக அவர்களின் கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருப்பதும் ....... மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்களாக உள்ளன. ;)
ReplyDelete>>>>>
இன்றைய மாறுபட்ட பதிவும், படங்களும், விளக்கங்களும், தங்களின் கடும் உழைப்பும் பிரமிக்க வைக்கின்றன.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும், ப்கிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 897 ooooo
இன்றைய நாளுக்கேற்ற நற்பதிவு.
ReplyDeleteஅழகிய படங்கள். மிக நன்றி பகிர்விற்கு!
ஆலமர் தெய்வத்தின் ஓவியம் மிக மிக அழகு!
ReplyDeleteதட்சிணாமூர்த்தி அலங்காரம் வெகு அழகு.கோபுரத்தில் உள்ள ஆலமரம் உண்மையான மரம் போல் அழகாய் இருக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை இன்று உங்களால் எல்லோருக்கும் நன்மை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.நன்றி.
குருவாரம் என்று சொல்லும் வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் படங்களும், ஸ்தலங்கள் பற்றிய விளக்கங்களும் காணக் கிடைக்காத காட்சிகளாக இருக்கின்றன.
ReplyDeleteபாராட்டுக்கள்!
தட்சிணாமூர்த்தியின் படங்களும் தகவல்களும் அருமை.
ReplyDelete