அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
ப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.'
தனிச் சிறப்புடையதமிழ் மாதங்களுல் மாதவ மாதம் எனப்படும் வைகாசி
மாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால்
பேறுகள் பல பெறலாம்.
பிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி.
புத்தர் அவதரித்த நாளாகவும்,போதி மரத்தடியில் ஞானம் பெற்ற நாளாகவும், பரிநிர்வாணமடைந்த நாளாகவும் இந்த வைகாசி பௌர்ணமி திகழ்கிறது.
திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங் கியதும் வைகாசி விசாகத்தில்தான்.
விசாகம் ஞானச் சிறப்புக்குரிய சிறந்த நட்சத்திரம்."
வைகாசி விசாகம் சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும். பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலை கள் அணிவித்து அர்ச்சனை செய் தால் பாவங்கள் அகலும், புண்ணி யங்கள் பெருகும்.
அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான்.
கும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும்.
திருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும். அன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா பதினான்கு நாட்கள் நடைபெறும்.
முதல் மூன்று நாட்களுக்கு மலைமீது விழா நடக்கும்.
நான்காம் நாள் முதல் அர்த்த நாரீஸ்வரர் நகருக்கு இறங்கிவர, மலை யடிவாரத்தில் விழா நடைபெறும்.
9-ஆம் நாள் திருவிழா வைகாசி விசாகத்தன்றுஇறைவன் தேரில் எழுந்தருளி நகர்வலம் வருவார்.
பதினான்காம் நாள் திருவிழா வின்போது இறைவன் மலைக் கோவிலுக்குத் திரும்பிச் செல்வார்.
ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் நரசிம்ம மூர்த்திக்கு வருடம் முழுவதும் சந்தனக்காப்பு சாற்றப்பட்டிருக்கும். வைகாசி விசாகத்தன்று சந்தனக்காப்பு நீக்கப் பட்டு நரசிம்மர் முழுப் பொலிவுடன் காட்சி தருவார்.
வைகாசி விசாகத் திருவிழாவன்று பேசும் பெருமாள் திருக்கோவிலில் தற்போது 16 கருட சேவையாக நடைபெறுகிறது.
சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல் வேறு திருநாமங்களைக் கொண்ட 16 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
வைகாசி விசாகத்தன்று திருத்தணி முருகன் கோவிலில் வழங்கப்படும் பாதரேனு என்ற சந்தனமும் விபூதியும், திருச்செந்தூரில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியும் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாகும்.
பன்னீர் இலையில் காணப்படும் பன்னிரு நரம்புகள் முருகனின் பன்னிரு கரங்க ளாகக் கருதப்படுகின்றன.
ஆறுமுகன், கார்த்திகேயன், பார்வதி நந்தனன், ஸ்கந்தன், அக்னி மைந்தன், குஹன், சுப்ரமண்யன், சத்யகாமன், சத்யசங்கல்பன், சரவணபவன், சரவணன், மகாசேனன், காங்கேயன், சேனானி (சேனைகளின் துக்கம் தவிர்ப்பவன்) ஆகிய பெயர்களை பார்வதிதேவிக்குச் சொல்கிறார் சிவபெருமான்.
கந்தனின் நாமங்கள் முக்தி அளிப்பவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குபவை' என்கிறார் சிவன்.
"சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர்.
ச- லட்சுமி கடாட்சம்.
ர- சரஸ்வதி கடாட்சம்.
வ (ஹ)- போகம், மோட்சம்.
ண- சத்ரு ஜெயம்.
ப- மிருத்யு ஜெயம்.
வ- நோயற்ற வாழ்வு.
எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்து, சச்சிதானந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து நெகிழ்வோம்;
‘சரவண பவ’ என்னும் திருமந்திரத்திற்குப் பின்னே இத்தனை பொருள் இருக்கிறதா? புதிய விஷயங்கள் அறிந்தேன். வைகாசி விசாகத்தின் சிறப்பையும் உணரத் தந்தீர்கள். மிக்க நன்றிங்க!
ReplyDeleteகாலத்துக்கு ஏற்ற வகையில் அருமையான கட்டுரை எழுதி வருகிறீர்கள்... அருமை... நன்றி...
ReplyDeleteஅய்யன் முருகனின் ஆசி உங்களுக்க் கிடைக்க வேண்டுகிறேன்.பதிவுகள் படங்கள் அருமை.தொடருங்கள்
ReplyDeleteAha mika arumai.
ReplyDeleteSARAHANABHA explanation is very nice. Pictures are very beautiful.
You are selecting pictures according to the occation and it does makes all happy.
Thankyou dear.
viji
images of lord murugan are so lovely and information about vaigasi visagam is very useful
ReplyDeleteசிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .அனைவருக்கும் இந்நாள்
ReplyDeleteசிறந்ததொரு பொன்னாளாக விளங்கட்டும் .
படங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteசரஹணபவ ஓம்.
ReplyDeleteவைகாசி விசாக திருநாள் செய்திகள் படங்கள் எல்லாம் அழகு, அருமை.
வாழ்த்துக்கள்.
அழகென்ற சொல்லுக்கு முருகா... நல்ல
ReplyDeleteஆன்மீகப்பதிவுக்கு ராஜராஜேஸ்வரி அக்கா...
இப்படிப்பாடத் தோணுகிறது...
அழகான அரிய பலசெய்திப்பகிர்வுடனான பதிவு சகோதரி!
மிக்க நன்றி!
அழகான பதிவுக்கும், படங்கள் மற்றும் விளக்கங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteooooo 917 ooooo
முருகா, கந்தா, கதம்பா, கார்த்திகேயா, ஷண்முகா, சரவணா, வள்ளி மணாளா -- வைகாசி விசாகப் பெருமைகள் அருமை... வாழ்த்துகள்...
ReplyDeleteபடங்களும் விளக்கமும் அருமை
ReplyDeleteசத்ய ஞான சபை உருவானதும் வைகாசியிலா பல அறிய தகவல்கள் தினம் தினம் தங்களால் மட்டுமே பகிர முடிகிறது . நன்றிங்க.
ReplyDeleteபடங்கள் அருமை. வைகாசி விசாகம் பற்றி தெரியாத பல விஷயங்களை அறிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவைகாசி விசாக்த்தின் சிறப்புகளை அறிந்தேன்.
ReplyDelete