

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "நீ இந்த உடல் இல்லை. நீ ஒரு ஆத்மா" என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.


நாம் இந்த உடல் இல்லை. நாம் ஒரு ஆத்மா என்ற இந்த ஒரு உண்மை புரிந்தால், நம்முடைய வாழ்க்கையில் ஒரு துன்பமும் வராது.

ஆனால் இந்த ஒரு உண்மையை புரிந்து கொள்ள மறந்தால் வாழ்க்கையில் துன்பம் மட்டும் தான் மிஞ்சும்.

நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா என்ற ஒரு உண்மையை முற்றிலுமாக உணர ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை தினமும் ஜபிக்க வேண்டும்.

"ஆத்மாவுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒருமுறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற , நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை" - பகவத் கீதை
ஆக ஆத்மாவான நமக்கு அழிவே கிடையாது. ஆத்மா நம்முடைய கண்ணுக்கு தெரியாது. அதனால் ஆத்மா கிடையவே கிடையாது என்று கூற முடியாது...

தனது 32 வயதிற்குள் எண்ணற்ற இலக்கியங்கள் மற்றும் கவிப்பெருக்கால் தத்துவ உலகை பிரமிக்கச் செய்து, அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்து, மும்முறைக்கும் மேலாக அகண்ட பாரத தேசத்தை தனது திருப்பாதங்களால் புனிதப் படுத்திய ஆதிசங்கரர் சர்வக்ஞபீடம் ஏறிய ஞானப் பிரவாகப் பேரொளியாக ஜொலித்தவர் ...!

கங்கை நதிக்கரை யில் காசி மாநகரில் பஜகோவிந்தம் உருவாகக் காரணமாக இருந்த நிகழ்ச்சி சிந்திக்கத்தக்கது ..!

ஒரு மூலையில் வயதான கிழவன் கால்கள் தள்ளாட, கைக்கோலுடன் மல்லாடிக் கொண்டே ஒரு சுவடியின் சில பகுதிகளை மனப்பாடம் செய்வதில் திண்டாடிக் கொண்டிருந்தான்.
இன்றைக்கோ நாளைக்கோ காலனுக்கு விருந்தாகப் போகிறவன் கோலத் தைக் கண்டு துணுக்குற்ற சங்கரர் மெல்ல அவன் அருகில் சென்றார்.
கிழவனும் சற்று உரக்கவேதான் படித்துக் கொண்டிருந்தான். மனப்பாடம் செய்து கொண்டிருந்தது, வடமொழி இலக்கணத்தில் வரும் சூத்திரத்தை.
சங்கரர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. என்ன உலகம்! மோகத்தின் வேகத்தில் சாகும் உலகம். பெண் ,பொன் - வெற்றுக் கல்வியின் மேலே மோகம் கொண்டு அழிகிறதே! பிறப்பறுக்கும் பெம்மானின் திருவருளைப் பெறுதலைவிட்டு, பந்தத்தின் மூலத்தை- பிறப்பிற்குக் காரணமானதை நாடுகிறதே... இந்த மூட மக்களுக்குப் போதித்துக் கரையேற்ற வேண்டாமா எனச் சிந்தித்து, "மோஹ முத்கரம்' (மோகத்தைத் தகர்க்கும் சம்மட்டி) என்ற இந்த ரத்தின மாலையைத் தொடுத்தார். ஆனால் இதன் முதல் மலர், "பஜகோவிந்தம்' என்று தொடங்குவதால் அதற்கும் "பஜகோவிந்தம்' என்ற பெயரே நிலைத்தது..!
ஸம்ப்ரஸ்தே சந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே.'
பாடலைத் தமிழில்,
"மாயனை எண்ணின் மாயம் மாயும் மாலை நினைவாய் அலை மனமே
நேயனை யன்றி மாயுங் காலம் யாரும் வாரார் உளங்கொள்வாய்'
என உணரலாம் ..!
"ஓ மூடனே! இறைவனுக்கு எப்பொழுதும் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பணிபுரிவதை விட்டு, "டுக்குங்கரணே' போன்ற இலக்கணப் பாடல்களைப் பயில்கிறாயே. இதனால் பயனுண்டா? இறக்கும் காலத்தே சாகும் கல்வி உடன்வருமா? சாகா கல்வியைக் கற்றால்தானே விடுதலை கிடைக்கும்? ஆகவே மனது, சொல், உடல் அனைத்தும் இறைவன்பால் சாரட்டும். அதற்கு ஆவண செய்' என்பது இதன் பொருளாகும்.

ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷேு திஷ்டதி
ப்ராமயன் ஸர்வ-பூதானி யந்த்ராரூடானி மாயயா
ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்." (பகவத் கீதை )

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்;
மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
மறுபடிப் பிறந்திருக்கும்;
மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று;
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
வெந்து தான் தீரும் ஓர் நாள்.
என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
எனதென்றும் அறிந்து கொண்டாய்;
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரம் செடி கொடியும் நானே;
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;
துணிந்து நில் தர்மம் வாழ.
புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
கண்ணனே கொலை செய்கின்றான்.
காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க!
பரித்ராணாய சாதூனாம்,
விநாசாய சதுஷ்க்ருதாம்;
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
சம்பவாமி யுகே யுகே.
.jpg)
.gif)
மனம் மலர்கிறது....
ReplyDeleteநல்ல விளக்கம்
ReplyDeleteஇன்றைய ”பஜ கோவிந்தம் - பஜ கோவிந்தம்” மிகவும் அருமையான படைப்பு.
ReplyDeleteமுதலில் காட்டியுள்ள அசையும் படம் அழகோ அழகு, அருமை. புதுமை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 913 ooooo
சகோதரி... பேச்சுக்கே இடமில்லை.
ReplyDeleteமனதின் அடித்தளத்தில் சம்மணமிட்டு ஆழப்பதிந்து கொண்டது உங்கள் பதிவும் படங்களும்..........
மிகமிக அருமை! பகிர்விற்கு நன்றிகள் பல!
பஜகோவிந்தம் பற்றி அருமையான படங்களுடன் நல்ல விளக்கங்கள்.கடைசி படம் அழகோ அழகு.நன்றிகள்.
ReplyDelete
ReplyDeleteஅண்மையில் சுந்தர்ஜியின் ‘கைகள் அள்ளிய நீரில்’ பஜகோவிந்தம் பாடல்களின் பொருளை வாசித்தேன். உங்கள் பதிவில் படங்கள் மனதை அள்ளிப் போகின்றன. இரண்டுமாகச் சேர்ந்திருந்தால்..... எனக்குப் பேராசை போல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
good explanation about athma
ReplyDeleteஎன் சிறு வயதில் சின்மயாமிஷன் பலவிஹாரில் சேர்ந்து பஜகோவிந்தம் கற்றுக் கொண்டு முழுவதும் பாடுவேன்.இப்போது கேஸ்ட்டை ஓடவிட்டு கேட்கிறேன்.
ReplyDeleteபடங்களும், பாடல்களும், மிக அருமை.
கீதையை படித்தேன். கிருஷன்ரின் படங்கள் மனதை மயக்குகின்றன.
ReplyDeleteஆத்மாவிற்கு அழிவில்லை என்றுணர்ந்தால் துன்பம் இல்லை தான் . ஆனால் அதை நாம் உணர்வது எப்போது?
அருமையான விளக்கம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபஜ கோவிந்தத்தின் விளக்கமும் படங்களும் அருமை.
ReplyDeleteஅதன் சாரமான 'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!' பாடல் முழுவதும் இங்கு காணக் கிடைத்தது நல்விருந்து.
32 வயதில் என்னவொரு ஞானம்!
நாம் எப்போது பெறப்போகிறோம்?
நான் உங்கள் பதிவை கவனிக்கவில்லை.அனைத்தும் அற்புதம் தொடருங்கள்
ReplyDelete