மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
-- திருநீற்றுப்பதிகம் - மதுரைக்கோவிலில் மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் இது.
இந்தப் பதிகத்தைப் பாடிக்கொண்டே மடப்பள்ளிச் சாம்பலை கூன்பாண்டியன் உடலில் தடவி அவரது வெப்பு நோயை சம்பந்தர் குணப்படுத்தினார்
இந்தப் பதிகத்தைப் பாடிக்கொண்டே மடப்பள்ளிச் சாம்பலை கூன்பாண்டியன் உடலில் தடவி அவரது வெப்பு நோயை சம்பந்தர் குணப்படுத்தினார்
இன்றைக்கும் முக்குறுணி விநாயகர் திருமுன்பு இருக்கும் கோபுரத்தின் மாடத்தில் மடப்பள்ளிச் சாம்பலை வைத்திருப்பார்கள்.
விபூதி, நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும்,விளங்குகின்றது. விபூதி, ஐஸ்வர்யங்களைத் தரவல்லது
மங்கையர்க்கரசி. மதுரையை ஆண்ட மகாராணி.
மதுரையில் நின்றசீர் நெடுமாறன் ஆட்சி செய்து வந்த அவர் சோழநாட்டு மங்கையர்க்கரசியை திருமணம் செய்தார்.
மனித குலத்தையே பாடாத நற்றமிழ் வித்தகன் ஞானசம்பந்தர் மங்கையர்க்கரசி மேல் பதிகம் பாடியிருக்கும் மகத்துவம் மிக்க மங்கை.மங்கையர்க்கரசி பிறந்தகமோ சோறுடைத்த சோழ நாடு! புகுந்தகமோ முத்துடைத்த பாண்டிய நாடு!
நின்றசீர் நெடுமாறன் சமண மதத்திற்கு மாறி விட்டான். மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலோ, சைவம் சார்ந்தது. அங்கே பூஜை, புனஸ்காரங்கள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
நின்றசீர் நெடுமாறன் சமண மதத்திற்கு மாறி விட்டான். மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலோ, சைவம் சார்ந்தது. அங்கே பூஜை, புனஸ்காரங்கள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
சைவத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மங்கையர்க்கரசியும், பாண்டியநாட்டு அமைச்சர் குலச்சிறையாரும் மன்னரின் போக்கால் வருந்தினர். மகாராணியின் ஆணைப்படி, சைவம் காக்க குலச்சிறையார், ஞானசம்பந்தரை சந்திக்க கிளம்பினார்.
சம்பந்தர் அப்போது திருமறைக் காட்டில் (வேதாரண்யம்) முகாமிட்டிருந்தார். அதே ஊருக்கு திருநாவுக்கரசரும் வந்திருந்தார்.
குலச்சிறையார் சம்பந்தரைச் சந்தித்து சைவம் காக்க மதுரை வரும்படி அழைத்தார். சம்பந்தரும் புறப்பட்டார். நாவுக்கரசர் அவரைத் தடுத்து, "ஐயனே… தாங்கள் கிளம்பும் இந்நாளில், கிரகங்களின் சூழல் நன்றாக இல்லையே… பொறுத்துப் போகலாமே…’ என்று அறிவுரை சொன்னார்.
"நாவுக்கரசரே… கவலை வேண்டாம். "நமசிவாய’என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் முன்னால் நவக்கிரகங்களுக்கு என்ன வேலை? நான் புறப்படுகிறேன்…’ என்றார்.
அப்போது அவர் பாடிய வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்ற பதிகம் தான், இன்று நவக்கிரக சந்நிதியில் பக்தர்களால் பாடப் படுகிறது.
ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடம் மன்னனின் இசைவோடு, சமணர் சூழ்ச்சியால் நெருப்பு வைக்கப்பட, ஐந்தெழுத்து மந்திரமோ, அன்புக் கட்டளையோ அந்த அக்னி எரியாமல் ஏமாற்றியது.
அக்னிக்கு அவரிட்ட ஆணை, அது பையவே வந்து பாண்டியனைப் பற்றிக் கொண்டது. பையவே சென்று பாண்டியனைப் பற்ற வைத்ததற்குக் காரணம்
பாண்டிமா தேவியின் மங்கல நாணுக்குக் கேடுவரக் கூடாது என்ற ஞானசம்பந்தனின் நல்லெண்ணம்.

நின்றசீர் நெடுமாறனுக்கு தீராத வயிற்றுவலியைக் கொடுத்தார். அவனை குணமாக்க சமணர்கள் செய்த மந்திர தந்திரங்கள் பலிக்கவில்லை. பாண்டியனால் நிமிர்ந்து நிற்க முடியாமல், குனிந்து வளைந்து வயிற்றைப் பிடித்து வலியை தாங்க வேண்டிய தாயிற்று.
இதனால், "நின்ற சீர் நெடுமாறனாக’ இருந்தவன், "கூன் பாண்டியன்’ என்று பட்டப்பெயர் பெற்று விட்டான்.
சம்பந்தர் மதுரை வந்து, சுந்தரேஸ்வரர் மடப்பள்ளியில் இருந்த சாம்பலை எடுத்து மன்னனுக்கு தடவினார்.
அவரது விழியுறு நோக்கால் வெம்மை நோய் குறைந்தது.
“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன்
திரு ஆலவாயான் திரு நீறே”
என்ற பாடலைப் பாடி வெண்ணீறு பூசியவுடன், வந்த வழி தெரியாமல் பறந்து போனது வெப்பு நோய்!
நோய் தீர்ந்தாலும் சமணமா? சைவமா? என்ற வாதம் தொடர்ந்தது.
அனல் வாதமும் புனல் வாதமும் : தீயிலிட்ட சமணர் ஏடு பஞ்சு போல் பற்றி எரிந்தது,
சம்பந்தர் ஏடோ பச்சை ஏடாக பளீரென்று எழும்பி நின்றது!
புனல் வாதத்திலோ சமணர் ஏடோ நீரில் அதிவேகமாக அடித்துச் செல்லப்பட்டது. சம்பந்தர் ஏடோ எதிர்த்து வந்தது.
அதில் வேந்தன் ஓங்குக! என்று எழுதியிருந்தமையால், கூன் பாண்டியனின் உடல் ஊனம் இருந்த இடம் தெரியவில்லை.
ஆம்! பாண்டிய மன்னனின் கூன் நிமிர்ந்தது. நின்ற சீர் நெடுமாறன் ஆனவன் ஞானசம்பந்தனின் பாதம் நான் உய்ந்தேன் என்றான்.
மங்கையர்க்கரசி மன்னனோடு ஒட்டுமொத்த மக்கள் அனைவரையும் மகத்தான சமயமாம் மாண்புறு சைவத்திற்கு மாற்றிக் காட்டினார்,
. சமய வரலாற்றை உற்று நோக்கும் வேளையில் உன்னதத் தொண்டு புரிந்த உத்தமியாகப் பரிமளிக்கிறார் பாண்டிமா தேவி!
தன் கணவர் மீண்டும் தாய் மதம் மாற காரணமாக இருந்தவர் மங்கையர்க்கரசியார் நாயன்மார் வரிசையில் இடம் பிடித்தார்.
அவரது கணவர் நின்றசீர் நெடுமாறன் மற்றும் அமைச்சர் குலச்சிறையாருக்கும் நாயன்மார் அந்தஸ்து கிடைத்தது.

ஞானசம்பந்தர் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த வரலாறு சைவத்தின் வரலாறு ஆகும்.
ReplyDeleteகோளறு பதிகம் மூட நம்பிக்கைகளுக்கு அந்த நாளிலேயே வேட்டு வைத்த்து.
மிகவும் அழகான பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteபழமை வாய்ந்த சில படங்கள் கண்டதில் மகிழ்ச்சி.
விளக்கங்கள் யாவும் வழக்கம்போல் அருமை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
ooooo 909 ooooo
அழகிய படங்களுடன் சிறப்பான வரலாறு...
ReplyDeleteநன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
அறியாத கதை. அழகாகச் சொன்னதற்கும் அற்புதமான படங்களுக்கும் (புத்தக விவரம் சொல்லுங்களேன்) நன்றி.
ReplyDeletevijiAhahah.........
ReplyDeleteI went to my olden days.
Wherein my father narratte these stories to us up still midnight.
While reading it I remmber my father.
Very very nice and fine post Rajeswari.
I read it several times......
Thanks thanks alot.
viji
very nice and interesting
ReplyDeleteஅழகியப் படங்கள் அதற்குள் மிளிரும் கருத்துகள் சூப்பர்
ReplyDeleteWOW..... amma.. SOo nice amma.. Its soo nice to read with a exact pictres.. kutti sivan romba cute... he is looking lie murugan... and like a krishnan too... I am sooo sooo sooo glad to read your blog..
ReplyDeleteand i have started blogging once again.. I request your valuable comments on that amma.. :) http://acolorfulbutterfly-riya.blogspot.in/
வெப்பு நோய் தீர்த்த வரிகள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteநாயன்மார்களின் கதைகள் எத்தனை முறை படித்தாலும் அலுப்புத் தட்டவே தட்டாது. சிறுவயதில் திருவேடீச்வரன் பேட்டையில் இருந்தபோது தரிசித்த 63 நாயன்மார்கள் உற்சவம் கண் முன்னே வந்தது.
ReplyDeleteசைவைத்தைக் காக்க எத்தனை பாடு பட்டிருக்கிறார்கள் இந்த அருட்செல்வர்கள்!
மங்கைர்க்கரசி அவர்களின் வரலாறு , பாடல் , படங்கள் எல்லாம் அருமை. எங்கள் வீட்டில் 63 நாயன்பார்கள் படம் இருக்கிறது. ஒவ்வொரு நாயன்மார் குருபூஜைக்கும் சேக்கிழார் பாடிய அந்த அந்த நாய்ன்மார்கள் பாட்டை பாடி வணங்குவது வழக்கம்.
ReplyDeleteஇன்று உங்கள் பதிவிலும் படித்து வணங்கி விட்டேன்.
நன்றி.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
மங்கையர்கரசியார் குரு பூசை தினத்தை நினைவு கூறியமைக்கு மிக்க நன்றியம்மா அருமையான விளக்கம் படங்கள் அருமை வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சைவம் தழைக்க நாயன்மார்கள் பட்ட கஷ்டங்கள் தான் எவ்வளவு?
ReplyDeleteமங்கையர் கரசியார் கதை படிக்க மிக அருமை.
இதே போல் நாயன்மார்கள் கதையை படங்களுடன் போட்டால் படிக்கக் காத்திருக்கிறோம்.
நன்றி