"சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
திருவானைக்காவல் -ஒரு தீவு முழுவதையுமே வளைத்து மாபெரும் ஆலயமாக கட்டப்பட பெருமை வாய்ந்த திருத்தலம் ...
பக்தியும் பவித்ரமும் கொண்டு நான்காம் பிராகாரத்து திருமதிலை யாவரும் கண்டு வியக்கும் வண்ணம் மகோன்னதமான ஆலய கட்டுமானத்தை அந்நாளைய மன்னனும் உடனிருந்து கவனித்து வந்தான்.
எழில்மிகு ஆலயத்தைக் காணும் ஆவலினால் உந்தப்பட்டு காவி உடை, கமண்டலம், திருநீற்றுப்பை ஆகியவற்றுடன் சித்தர் , “"சம்போ மகாதேவா!' என்று திருமதிலின் கட்டுமானப் பணியைக் கண்டு மனம் மகிழ்ந்து வலம் வந்து நின்றார்.
"மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயன் திருநீறே'
"பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கொடுப்பது நீறு; அந்தமதாவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திருஆலவாயன் திருநீறே!'
சித்தரும் வேலையாட்கள் ஒவ்வொருவருக்கும் திருநீற்றை அள்ளி அள்ளி வழங்கிய பின் மறைந்துவிட்டார்.
அவர் கொடுத்த திருநீறெல்லாம் பொன்னாக மாறி மின்னிய பொன்னோ அவரவர் வேலைக்குத் தகுந்த கூலியாகவும் இருந்தது.
சித்தராக வந்தவர் சிவபெருமானே என்று சித்தம் தெளிந்தனர்
கோவில் திருப்பணியைப் பெருமானே நேரில் வந்து பார்த்ததோடு அல்லாமல், கூலியும் அல்லவா கொடுத்துச் சென்றிருக்கிறான்.!
கோவில் திருப்பணியைப் பெருமானே நேரில் வந்து பார்த்ததோடு அல்லாமல், கூலியும் அல்லவா கொடுத்துச் சென்றிருக்கிறான்.!
சிவபெருமான் சித்தராக வந்தருளி திருநீற்றையே கூலியாகக் கொடுத்த திருத்தலமே திருவானைக்காவல்
ஆனைக்காவில் உள்ள நான்காம் பிராகாரத்து திருமதில் இன்றும்
திருநீற்று மதில் என்றே வழங்கப்படுகிறது .....
திருநீற்று மதில் என்றே வழங்கப்படுகிறது .....
பெருமான் சித்தராக வந்து திருநீற்றையே கூலியாக வழங்கினார் என்பதனால் திருநீற்றுத்திருமதில் என்னும் பெயரே மதிலுக்கு நிலைத்துவிட்டது.
அம்பிகை அகிலாண்டேஸ்வரி இங்கு வழிபட்டார்; இன்றும் வழிபடுகிறார் என்பது ஐதீகம் காரணமாக உச்சிக் காலப் பூஜையின்போது அம்பிகை ஆலய அர்ச்சகர் பெண் வேடம் தாங்கிச் சென்று எம்பெருமானைப் பூஜிக்கின்றார். எத்தனையோ தலங்களில் அம்பிகை இறைவனைப் பூஜித்திருக்கிறார். வேறு எங்கும் காண முடியாத சிறப்பு .
செழுநீர் புனல் கங்கையை செஞ்சடை மேல் வைத்த அண்ணலை, செழுநீர்த் திரளாலேயே சிவலிங்கமாக உருவம் அமைத்து அன்னை அகிலாண்டேசுவரி வழிபட்டாள்.
சிவபெருமானும் சிந்தைமகிழ்ந்து நீரின் தன்மையோடு ஜம்புகேஸ்வரர் என்னும் திருப்பெயரோடு குளிர்ந்தே உள்ளம் உவந்து எழுந்தருளினார்.
சிவபெருமானும் சிந்தைமகிழ்ந்து நீரின் தன்மையோடு ஜம்புகேஸ்வரர் என்னும் திருப்பெயரோடு குளிர்ந்தே உள்ளம் உவந்து எழுந்தருளினார்.
திருநீறுப் பற்றியப் பாடல்கள் அருமை.படங்களுடன் உங்கள் விளக்கமும் அருமையே.தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete”திருநீற்று மதில்” என்ற தலைப்பில் இன்று தாங்கள் இன்று வெளியிட்டுள்ள எங்கள் ஊர் ’திருவானைக்கா’ பற்றிய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteமனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது..
படங்கள் யாவும் ஜொலிக்கின்றன.
அதுவும் உச்சிக்கால பூஜை, அறுபத்தி மூவர், சஹஸ்ர லிங்கங்கங்கள், திருநீற்று மதில்சுவர், கருங்கல் யானை முதலியனவும், மேலிருந்து இரண்டாவது படத்தில் உள்ள அம்பாளும் ஜோர் ஜோர்.
பூமாலைகள் + தொடுத்து வைத்துள்ள புஷ்பங்கள் மனதை மிகவும் மணக்கச்செய்கின்றன.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 915/2/2 ooooo
.
அருமையான படங்கள்... நன்றி...
ReplyDeleteபாடல்கள், விளக்கங்கள், படங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகிய படங்களும் வரலாறும்...
ReplyDeleteஅற்புதங்கள் எத்தனை... இப்புவி வாழ்வில் எமக்கு கிட்டாமலே போய்விடாமல் உங்கள் மூலம் அறியக் கிடைக்கச்செய்த அந்தப்பரம்பொருளுக்கும் உங்களும் என் மனமார்ந்த நன்றிகள் பல!
மிக அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு.என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅருமையான படங்கள் , விளக்கங்கள் நன்றி
ReplyDeleteஅருமையான படங்கள் , விளக்கங்கள் நன்றி
ReplyDeleteதிருநீற்று மதில்பற்றி அருமையான விளக்கம்.
ReplyDeleteபாடல்கள் படங்கள் எல்லாம் அருமை.
திருவானைக்காவல் தர்சித்திருக்கின்றேன். திருநீற்று மதில் சுவர் பற்றி இன்றுதான் அறிந்தேன். அழகிய படங்களுடன் பகிர்வு.
ReplyDeleteVery nice post and pictures.
ReplyDeleteThanks dear.
viji
ReplyDeleteதிருநீற்றுமதில் கண்டிருக்கிறேன். தகவல்கள் இதுவரை தெரியாதது. ஒவ்வொரு ஆண்டும் தரிசித்து மகிழும் பஞ்ச பூதத் தலங்களில் புனல் தலமான திரு ஆனைக்காவில் முன்பெல்லாம் லிங்கத்தை சுற்றி நீர் இருக்கும். இப்போது இருக்கிறது என்று அர்ச்சகர் சொல்வதுதான் கேட்கவேண்டும்.
எனக்கும் திருமதி மாதேவி போல் தான், திருவானைக்காவல் போயிருக்கிறேன். ஆனால் திருநீற்று மதில் பற்றிய விஷயம் தெரியாது .
ReplyDeleteநல்ல பகிர்வு,
நன்றி.
திருநீற்று மதில் பற்றிய தகவல்களும், படங்களும் அருமை!
ReplyDeleteஅறிந்த கோவில் ... அறியாத வரலாறு.... தெரிந்த நீறு.. தெரியாதது நூறு.. அருமைப் பதிவுக்கு அன்புடன் வாழ்த்துகள்..
ReplyDelete