Wednesday, May 1, 2013

மே தினம் கொண்டாட்டம் ..








பிராத்திக்கும் உதடுகளைவிட, பிறருக்கு உதவும் கரங்களே புனிதமானது”.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !
 வரப்புயர” நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும் கோன் உயர அரசு உயரும்

மே மாதம் முதல் நாளை உலகெங்கும் சர்வதேசத் தொழிலாளர் நாளாக நாம் கொண்டாடுகிறோம். 
உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்! 
உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், மே நாள்!
1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு, “மே தினப் பூங்கா” எனப் பெயரிட்டு; அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது;
 மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ உருவாகவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது.
அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
 இந்தியாவில் முதல் தொழிலாளர் தினத்தை பொதுவுடைமை வாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் அவர்கள் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் கொண்டாடினார்.
 
உலகத் தொழிலாளர்களே விழித்தெழுங்கள் என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொள்ளவேண்டிய உழைக்கும் திருநாள் .. விடுமுறை தினமல்ல.. உழைத்து சிறக்கவேண்டிய நன்நாள்..
 ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும். 
பார் எங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பல பெற்ற நன்நாள் 

 உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாள்  குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம் உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம் இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம் சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே


Socialists at their May Day Celebration in Union Square, New York, 1933
 May Day in Germany

13 comments:

  1. ரசித்தேன். எழுத்துகள் தெளிவாகவும் அழகாகவும் இருக்கின்றன.

    ReplyDelete
  2. தொழிலாளர் தினம் பற்றிய மிகவும் அழகான பதிவு.. பாராட்டுக்கள். வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  3. மே தினப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  4. விடுமுறை தினமல்ல உழைத்து சிறக்க வேண்டிய நன் நாள்.
    மிக் நன்றாக சொன்னீர்கள்.
    உழைத்தால் தான் உயரலாம்.
    மேதின பகிர்வு அருமை.படங்கள் எல்லாம் மேதின சிறப்பை பறைசாற்றுகிறது.
    மேதின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    ReplyDelete
  6. நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலையாய் தொழிலாளர் கசக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து எட்டு மணி நேர வேலையை நிச்சயப்பதற்கான தொழிலாளர் கிளர்ந்த எழுந்த நாளின் நினைவுகளைப் போற்றும் தினம் மே தினம். கடமையைச் செய்தோர் தம் உரிமைகளுக்காக சூளுரைத்த நாள்.கடமையும் உரிமையும் கூடப் பிறந்த இரட்டை சகோதரிகள் என்று உலகுக்கு அறிவித்த உன்னத நாள். எந்த தனியொரு நாட்டிற்கும் சொந்தமில்லாத உலகம் பூராவும் நிறைந்திருந்திருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு சொந்தமான நாள் இந்த ஒன்று தான்!

    மேதினத்திற்கான உங்கள் பதிவு, மற்றைய பதிவுகளிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தமைக்கு வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  7. உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்....
    உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்....

    மே தின வாழ்த்துகள்.....!

    ReplyDelete
  8. தொழிலாளர் தின வாழ்த்துகள்.

    படங்களும், விளக்கங்களும் வழக்கம் போல மிகச் சிறப்பாக உள்ளன.

    பாராட்டுக்கள்.

    ooooo 896 ooooo

    ReplyDelete
  9. வழக்கம் போல் கவரும் படத்தோரணத்துடன் மேதினப் பதிவு. உங்களுக்கும் மேதின வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள். உலகத் தொழிலாளர் தினம் என பெயரும் சூட்டிவிட்டிருக்கினம், ஆனா பிரித்தானியாவில விடுமுறை விடமாட்டினமாம்:).

    ReplyDelete
  11. சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது ” மே தினம்“ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. மே தினம் பற்றிய செய்திகளும் படங்களும் நன்று.......

    அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. முக்கியமாக மே தினத்திற்கு அனைத்து டிவி தொழிலாளர்களுக்கும் விடுப்பு விடவேண்டும். அன்னைக்கும் கூட ஆடுவதை நிறுத்த மாட்டார்கள் போல.

    நல்ல செய்தி.
    நன்றி.

    ReplyDelete