திருநெல்வேலி அருகில் வையகம் போற்றும் வளமான தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் நகரில், சண்முகசிகாமணி கவிராயர் – சிவகாம சுந்தரி அம்மையார் தம்பதியர் குழந்தை வரம் வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்னர்..
ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை.
“குழந்தை இல்லை எனும் கொடுமையை விட, அவன் பேசவில்லை என்ற கொடுமை பெரிதல்லவா…அவனை பேச வைக்க வேண்டும்!’ என்று முருகனையே வேண்டினர்.
நம்பிக்கையுடன் திருச்செந்தூர் சென்று, 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர்.
விரத காலம் முடிந்து விட்டாலும், “எங்கள் குழந்தை பேசும் வரை, இங்கிருந்து ஊருக்குச் செல்லமாட்டோம். நீ என்ன முடிவைத் தந்தாலும் சரி…’ என விரதத்தைத் தொடர்ந்தனர்.
, 45வது நாள்,செந்திலாண்டவன் சன்னதியில் முருகனின் சிலையைப் பார்த்த குமரகுருபரன், மடை திறந்த வெள்ளம் போல் “கந்தர் கலிவெண்பா’பாட ஆரம்பித்தார். குமரகுருபரரின் முதல் நூல், கந்தர் கலிவெண்பாவில் "சரவணபவ' என்ற மந்திரத்தின் மகிமை பற்றி, குமரகுருபரர் பாடியுள்ளார்.
மதுரை மீனாட்சிஅம்மனைப் புகழ்ந்து
“மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!’ பாடினார்..
“மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!’ பாடினார்..
தன்னைப் பாடிய குமரகுருரபனின் புகழை நாடறியச் செய்ய முடிவெடுத்த மீனாட்சி, திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றி, “மதுரைக்கு என் மகன் குமரகுருபரன் வந்துள்ளான். அவன், என்னைப் பற்றி பாடிய பிள்ளைத் தமிழை, கோவில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்!’ என உத்தரவிட்டாள்.
குமரகுருபரரை வரவேற்று, அரங்கேற்ற ஏற்பாடுகளை செய்தார் நாயக்கர். அப்போது, கோவில் தலைமை அர்ச்சகரின் மகள் வடிவத்தில் வந்த மீனாட்சி, நாயக்கரின் மடியில் அமர்ந்து பாடல் கேட்டாள்.
அவரது கழுத்தில் இருந்த முத்துமாலையை உரிமையோடு கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்தாள்.
பின்னர், கருவறை பக்கம் சென்று, மறைந்து விட்டாள்.
வந்தது மீனாட்சி என்பதை அறிந்த மக்கள், அவளது தரிசனம் கிடைக்கச் செய்த குமரகுருபரரை வாழ்த்தினர்.
காசி சென்ற குமரகுருபரர், அங்குள்ள சுல்தானைச் சந்தித்தார். அவருக்கு இந்தி மொழி மட்டுமே தெரியுமென்பதால், அவருடன் பேசும் வல்லமையைப் பெற கலைவாணியை எண்ணி “சகலகலாவல்லி மாலை’ பாடினார்குமரகுருபரர். அதைக்கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி, அவருக்கு பிறமொழி பேசும் ஆற்றலைக் கொடுத்தாள்.
சகலகலாவல்லி மாலை பத்துப் பாடல்களைக் கொண்டது,
கட்டளைக் கலித் துறையில் இயற்றப் பட்டது.
கலைமகளுடைய அருளால், தடைகள் நீங்கிக் காரிய சித்தி பெறத்துணை செய்வதாக திகழ்கிறது...!
அம்பாளின் அருளால், ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து,
சுல்தானின் சபைக்கு சென்றார் குருபரர்.
சுல்தானின் சபைக்கு சென்றார் குருபரர்.
இந்துஸ்தானி மொழியில் பேசி, மடம் கட்ட இடம் தரும்படி கேட்டார். சிங்கத்தின் மீது வந்த வீரப் புலவரைப் பார்த்த சுல்தான், அவர் கேட்ட இடத்தைக் கொடுத்தார். அந்த இடத்தில், "குமாரசுவாமி மடம்' அமைக்கப்பட்டது. இன்றும் காசியில் குமரகுருபரரின் பெயரில் உள்ள இந்த மடம், சமயப்பணியில் ஒரு ஈடுபட்டு வருகிறது.
தெய்வ நம்பிக்கையால் வாழ்வில் பெரிதும் உயர்ந்தவர் குமரகுருபரர்...
வைகாசி மாதம் தேய்பிறை திரிதியை திதியில் முக்தியடைந்தார் குமரகுருபரர். அந்த நாளில், அவருக்கு குருபூஜை நடக்கிறது. முருகனையும், மீனாட்சி அம்மனையும் பாடிய குருபரை, வணங்கி, நல்லாசி பெறுவோம்.
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
இயற்றிய
சகலகலாவல்லி மாலை
இயற்றிய
சகலகலாவல்லி மாலை
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6
பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7
சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

கந்தர் கலிவெண்பா, மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரர் வாழ்க்கையை இன்றுதான் அறிந்துகொண்டேன். பிள்ளைத்தமிழ் கேட்க பிள்ளையாய் வந்து மடியமர்ந்து அன்னை கேட்ட அழகே அழகு. சகலகலாவல்லி மாலையோடு, கலைவாணியின் திருவுருவங்களைத் தொகுத்தளித்தமை சிறப்பு. மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.
ReplyDeleteபடங்கள்... குமரகுருபரர் சிறப்புகள் அருமை... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeletesuperb post
ReplyDeleteAha aha arumai........
ReplyDeleteThe Sakalakalavallimalai pattu along with kalaimakal......
Very very nice dear. I enjoyed every bit.
Thanks for the post.
viji
பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன்.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 922 ooooo
குமரகுருபரர் வரலாறு அருமை. சகலகலாவல்லி மாலையும் அதனூடு படங்களும் மிகச்சிறப்பு.
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!
நாடும் பொருட்சுவை சொற்சுவை சகலகலா வல்லி மாலை இன்றே தெரிந்துகொண்டேன். குமரகுருபரர் பற்றிய விளக்கங்கள் சிறப்புங்க.
ReplyDeleteநானும் இந்த பத்து பாடலை படித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றிகள் அக்கா
ReplyDeleteகுமரகுருபர சுவாமிகள் கதை அழகாகப் படித்தேன்ன்... நல்லாயிருக்கு. இக்காலங்களில் எனில் இப்படி எங்காவது நடக்குமோ... சகலகலாவல்லிமாலை நானும் இடைக்கிடை விரத காலங்களில் படிப்பதுண்டு.
ReplyDeleteகுருபரர் கதை இதுவரை தெரியாதிருந்தது.
ReplyDeleteஎன் குடும்பத்தில் ஒருவர் தன் மகனுக்குத் திருச்செந்தூர் சென்று வந்ததும் பேச்சு வந்தது என்று குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.
அந்த மயில் படம்!
படித்து ரஸித்தேன். கலைமகள் ஸரஸ்வதியின் பலவித தரிசனம்.பார்க்கப் பரவசம். அன்புடன்
ReplyDelete