


ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரவணாய/
தநதாந்யாதிபதயே தநாஷதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா//
குபேர மந்திரத்தை வடக்கு முகம் நோக்கி அமர்ந்து
1008 முறை ஜபம் செய்ய வேண்டும்.
ராஜதிராஜய ப்ரஸஹய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/
ஸ மே காமாந் காமகாமாய மஹயம்
காமேஸ்ரே வைஸ்ரவனோ ததாது
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம -
யஜுர் வேத குபேர சுலோகம்




மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும், மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரங்களினால் தினசரி துதித்தால் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்கியசாலிகளாகவும், வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர்.
அட்சய திருதியை திருநாளை அள்ள அள்ள குறையாமல்
அள்ளித்தரும் அற்புத திருநாள்
பொருளை தேடிக்கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது.

மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை செய்பவர்களுக்குக் கொடுக்கும்.
அட்சய திருதியை தினத்தன்று 10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி 100 சதவீத புண்ணியத்தை தேடித்தரும்.
இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை செய்ய வேண்டும்.
செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலைமகள் வீட்டில் அவதரிப்பாள்.
அட்சயம் என்றால் குறையாதது, வளர்ந்துகொண்டே இருப்பது என பொருள். அள்ள அள்ள குறையாமல் தருகிற பாத்திரத்தை அட்சய பாத்திரம் என்பதுபோல. அட்சய திரிதியை தினத்தில் நாம் எது செய்தாலும் அது ஒன்றுக்கு, பத்தாக பல மடங்கு பெருகி நமக்கு வளமும், நலமும் சேர்க்கும் என்பது சாஸ்திர வேத வாக்காகும்.
அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.
பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம்.
அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.
அன்னை பராசக்திஈசனுக்கு அன்னம் அளித்த இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும்..
மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம்.
ஆனால் இந்நாளில் இறைவா உண்டு மகிழ்வாயாக என வேண்டினால் இறைவனே உணவை ஏற்று நம்மை ஆசீர்வதிப்பார் என்பது ஐதீகம்.
எனவே மற்ற நாட்களில் படைப்பதை விட அட்சய திருதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.
பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் என்று ரமண மகரிஷி கூறுவார்.
இல்லாதோர், இயலாதோருக்கு அவர்களது தேவையறிந்து செய்யும் எல்லா வகையான உதவிகளும், பல மடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும்.
வீட்டுக்கும் குடும்பத்துக்கும் ஐஸ்வர்யம் சேரக்கூடிய, எல்லாருக்கும் ஆயுள், ஆரோக்கியம் தரக்கூடிய பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள் போன்றவற்றை துவங்கலாம்.
கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரலாம். அட்சய திருதியை நன்னாளில், பொதுநலத்துடன் கூடிய காரியங்களை செய்வது இன்னும் சிறப்பு.
அட்சய திருதியையின் அம்சமே கஷ்டப்படுவோருக்கு உதவுவதுதான்.
திரவுபதியின் மானம் காத்து ஆடை வழங்கியது,
சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்து,
திரவுபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்தது
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள்,
தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள்,
மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள்,
ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள்.
சங்கநிதி, பத்மநிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள்
என பல்வேறு பெருமைகள் அடங்கிய அட்சய திருதியை நன்னாளில் நல்ல காரியங்கள் நிறைய செய்து, நற்பலன்கள் பெருவோமாக.
முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் பூஜை அறையில் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அனைவரின் வீட்டிலும் மகாலட்சுமி குடிபுகுவாள் என்பது நிச்சயம்.









VERY GOOD MORNING !
ReplyDelete”ஐஸ்வர்யம் திகழும் திருநாள்”
தலைப்பே ’ஐஸ்ஸ்ஸ்ஸ்’ போல மனதுக்கு ஜில்லென்று ! ;)
அழகான பதிவு. அற்புதமான அக்ஷயமான விளக்கங்கள்.
படங்கள் அனைத்தும் அருமை.
அதுவும் மேலிருந்து கீழ் ஆறாவது வரிசையில் அந்த
[ஆ-றா-வ-து] நம் டிரேட் மார்க் படம் சொக்க வைத்தது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 908 ooooo
பொருள் சேர்பதைவிட ஏழைகளுக்குத் தானம் செய்வதைப் பற்றி உயர்வாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்.நல்ல யோசனை
ReplyDeleteசெய்ய வேண்டிய முறைகளை விளக்கமாக சொல்லி உள்ளீர்கள் அம்மா... அருமையான படங்கள்...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
ஐஸ்வர்யம் திகழும் திருநாள்பற்றி அருமையான விளக்கமும், படப் பகிர்வும் அருமை.
ReplyDeleteஅலைமகளை நாடு செழிக்க மழை வளத்தை தருமாறும். மற்றும் மனவளத்தையும் தருமாறும் கேட்டுக் கொள்வோம்.
இருப்பதை ஈயவேண்டும் என
ReplyDeleteஇதய சுத்தியுடன் நினைத்திடும்
ஒவ்வொரு நாளும்
இனிய நாளே
அந்த இதய சுத்தியும்
குபேரன் தந்த தங்கமே.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.in
அட்சய திருதியை என்றால் வாங்க மட்டும்தான் வேண்டும் என்று நினைத்திருந்தேன். தானம் கொடுப்பதும் பல மடங்கு செழிப்பைத்தரும் என்று உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்.
ReplyDeleteஉலகமெல்லாம் செழிக்கட்டும்!
படங்களை பார்த்தபடியே இருக்கலாம் போல செல்வம் கொட்டியபடி அழகான பகிர்வு. அருமையான விளக்கங்கள் நன்றிங்க.
ReplyDeleteஅட்சயதிருதியை குறித்த விளக்கமான கருத்துக்கள் சிறப்பு! படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!
ReplyDeleteஅள்ள அள்ளக் குறையாத அக்ஷயப் பாத்திரம் போல
ReplyDeleteபடிக்க படிக்க பார்க்கப் பார்க்கத் திகட்டாத பதிவு !
On akshya thrithiday this much pictures. Seeing these pictures will make us prosperous. Thanks for the post and pictures Rajeswari. So nice.
ReplyDeleteviji
அட்சயதிருதியை பற்றிய விளக்கங்கள் அருமை. படங்களும் அதோடு சிறப்பு . மிக்க நன்றி.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.