ஸ்ரீ மஹாலஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து ஆராதித்து சகல செல்வங்களும் , சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம்.
லக்ஷ்மி என்றால் செல்வத்துக்கு அதிபதி. செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமல்ல. செல்வம் என்பது எட்டுவிதமானது.
நிலையான தனம், நன்மக்கள்பேறு, தீதில்லா ஞானம், குறைவற்ற ஆரோக்கியம், நீடுநிற்கும் புகழ், நற்குடிப்பிறப்பு, பெருமானிடம் ஈடுபாடு . அத்தகைய எட்டு செல்வங்களையும் நமக்கு அருளும் அஷ்டலக்ஷ்மி
அமுதத்துடன் தோன்றிய பிராட்டியே! துர்வாஸ முனிவரின் சாபத்தால் வருந்திய தேவர்கள் எம்பெருமானின் திருமார்பில் அமர்ந்த உன்னை சேவித்து சரணம் அடைந்தனர். உன் திருக்கண் நோக்குகளால் செழிப்பாய்க் காணப்பட்ட இந்த மூன்று உலகங்களையும் மறுபடி அடைந்து எல்லா வகைகளிலும் நிலையான வளர்ச்சியை உடைய ஐஸ்வர்யத்தை அனுபவிக்கின்றனர்
இரண்டு யானைகள் (ஐராவதம், புண்டரீகம்) தும்பிக்கையால் ஜலத்தை வர்ஷிக்கின்றது.
இந்திரனின் இழந்த செல்வத்தை, தாயார் கஜலக்ஷ்மியாக அவதரித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன. (
இந்திரன் செய்த பிழைக்கு எல்லாத் தேவர்களும் அல்லல்பட்டுச் பின்
ஸ்ரீ-யைச் சரணடைந்து நன்மை பெற்றனர்.
ஐராவதம் செய்த தவறுக்கு மற்ற திக்கஜங்களும் சேர்ந்து பிராட்டிக்கு அபிஷேகம் செய்து ப்ராயச்சித்தம் செய்து கொண்டன.
இழந்த செல்வத்தை மீண்டும் அடைய கஜலக்ஷ்மியை ப்ரார்த்திப்போம்.
சகல ஐச்வர்யங்களுக்கும் அதிபதி. ஐஸ்வர்யலக்ஷ்மி .
தாயாரின் வலதுகரத்தில் ஸ்வர்ணரேகை ஓடுகிறது. தாம்பூலத்தில் செல்வத்தை தாரை வார்த்து தருவதாக ஐதீகம்
வாழ்வில் ஏற்படும் இடர்களை நீக்கி தைரியத்தை தந்து அவற்றை அகற்றி நம்மைக் காப்பவள். தைர்யலக்ஷ்மியின் கீர்த்தியை எடுத்துரைக்க போஜராஜன் கதை ஒன்று....
ஒருமுறை தாயார் அவன் கனவில் தோன்றி நாளை முதல் நான் உம்மை விட்டு நீங்கப்போகிறேன்.. ஏதேனும் ஒரு வரம் கேள் என்றார்.
மறுநாள் தாயார் தோன்றியபோது அவன், தாயே நீங்கள் எம் நாட்டை விட்டு நீங்கினாலும் அதை தாங்கக் கூடிய மன உறுதியை எமக்கும் எம்மக்களுக்கும் தரவேண்டுமெனப் பி ரார்த்திக்க அவ்வண்ணமே லக்ஷ்மி வரமளிக்க தைர்யலக்ஷ்மி அங்கேயே தங்கிவிட்டாள்.
எங்கே தைர்யம் இருக்கிறதோ அங்கே பலம் இருக்கும்.
பலம் இருக்கும் இடத்தில் ந்யாயம் இருக்கும்.
ந்யாயம் இருக்கும் இடத்தில் தர்மம் செழிக்கும்.
எங்கே தர்மம் செழிக்கிறதோ அங்கே சகல சௌபாக்யங்களும் நிலைபெறும்.
இதன்படி அஷ்டலக்ஷ்மிகளும் அவனுடைய நாட்டிலேயே தங்கிவிட்டனர்.
ஒப்பற்ற தீரர்களின் தாயே! நீண்ட தாமரைக் கண்களை உடையவளே!. உன்னுடைய புகழை உம்முடைய பதியான நாராயணனே பாட இயலாதபோது நான் எப்படி பாட சக்தியுடையவனாவேன்? -
என்று போற்றுகிறது லக்ஷ்மி சஹஸ்ரம் –
ஐஸ்வர்யம் தரும் அன்னையின் படங்கள் மனதைக் கொள்ளை கொண்டன. போஜராஜன் கதை சுவாரஸ்யம். தைரிய லக்ஷ்மியை துணைக்கு வைத்திருந்தால் அஷ்ட லக்ஷ்மிகளும் உடனிருப்பார்கள் என்பது அருமை!
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteபடங்கள் மிகவும் அருமை...
ReplyDeleteபோஜராஜன் கதை சிறப்பு...
நன்றி அம்மா...
அருமையான படங்கள் , விளக்கம் . நன்றி அம்மா
ReplyDeleteஅருமையான படங்கள் , விளக்கம் . நன்றி அம்மா
ReplyDelete
ReplyDeleteஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னை ." இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக அருமையான பதிவு.
மேலிருந்து கீழ் படம் 1, 2, 5 மற்றும் கீழிருந்து மேல் 1, 2, 3 ஆகிய படங்கள் அற்புதமாக உள்ளன.
அதுவும் மிகவும் கம்பீரமான, கீழிருந்து இரண்டாவது படம் என்னை மிகவும் கவர்ந்தது. நேரில் அப்படியே அம்பாளை தரிஸித்த திருப்தி ஏற்பட்டது.
>>>>>>>
//லக்ஷ்மி என்றால் செல்வத்துக்கு அதிபதி. செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமல்ல. செல்வம் என்பது எட்டுவிதமானது.
ReplyDeleteநிலையான தனம், நன்மக்கள்பேறு, தீதில்லா ஞானம், குறைவற்ற ஆரோக்கியம், நீடுநிற்கும் புகழ், நற்குடிப்பிறப்பு, பெருமானிடம் ஈடுபாடு . அத்தகைய எட்டு செல்வங்களையும் நமக்கு அருளும் அஷ்டலக்ஷ்மி//
மிகவும் அழகான விளக்கங்கள். ;))))))))
>>>>>>
ReplyDelete//இழந்த செல்வத்தை மீண்டும் அடைய கஜலக்ஷ்மியை ப்ரார்த்திப்போம்.//
;)))))
அசரீரி போன்ற இந்த அருள் வாக்கு மிகவும் எனக்கு இப்போது மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
>>>>>
ReplyDelete/எங்கே தைர்யம் இருக்கிறதோ அங்கே பலம் இருக்கும்.
பலம் இருக்கும் இடத்தில் நியாயம் இருக்கும்.
நியாயம் இருக்கும் இடத்தில் தர்மம் செழிக்கும்.
எங்கே தர்மம் செழிக்கிறதோ அங்கே சகல சௌபாக்யங்களும் நிலைபெறும்.//
போஜராஜன் கதையும் கதையிலிருந்து தெரிந்துகொள்ளும் மேற்படி அறிவுரைகளும் அருமையோ அருமை. மிக்க மகிழ்ச்சி.
>>>>>>
ReplyDeleteமிகச்சிறப்பான படங்களுடனும், மிக அழகான விளக்கங்களுடனும் இன்றைய பதிவு மனதுக்கு சந்தோஷம் + நிம்மதி அளிப்பதாக உள்ளது.
மனம் நிறைந்த இனிய நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
நாளைய தினம் இந்த 2013ம் ஆண்டின் வெற்றிகரமான தங்களின் 125வது பதிவினைக்காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ooooo 898 ooooo
கொள்ளை கொள்ளும் அழகு அத்தனை படங்களும். அற்புத ஸ்வரூபியான அன்னை மஹாலக்ஷ்மியின் திவ்யத்தோற்றம்... காணமுடியாமல் கண்களை மறைக்கிறது கண்ணீர் எனக்கு...
ReplyDeleteமனம் நெக்கி உக்கி செற்றுக்கொண்டிருக்கும் தருணம் இதோ இருக்கிறேன் என்று உங்கள் பதிவின்மூலம் அன்னை கூறுவதாய் தோன்றுகிறது. போஜராஜன் கதையும் சிறப்பு.
தைரிய லக்ஷ்மி துணையிருந்தால் அத்தனை லக்ஷ்மியும் சேர்ந்திருப்பார்கள் என்பதை படிக்கும்போது அந்த தைரியம் எமக்கும் வந்ததாக உணருகிறேன்.
அருமை... பகிர்விற்கு மனம்நிறைந்த நன்றிகள் சகோதரி...
கிழமைக்குச் சரியாக பதிவு எழுதி மன நிறைவு தருவதில் உங்களை அசைக்க முடியாது
ReplyDeleteஎட்டு செல்வங்களை அள்ளி தரும் லக்ஷ்மியின் அழகிய படங்கள் கதைகள் எல்லாம் அழகு, அருமை.
ReplyDeleteல்க்ஷ்மி கடாக்ஷ்ம் கிடைக்க பெற்றோம்.
நன்றி.
நேற்று குருபகவானின் அருட்படங்கள். இன்று வெள்ளிக்கிழமை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அழகழகான படங்கள் உள்ளத்தையும் கண்களையும் உருக்கிவிட்டன.
ReplyDeleteஎங்கள் எல்லோர் வீடுகளிலும் ஐஸ்வர்யலக்ஷ்மியை கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
pooja pictures are great
ReplyDeleteஅழகான படங்கள் கூடவே நல்ல விளக்கமும்.
ReplyDelete