செல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார்.
அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும்.
மஹாபாரதத்தில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவுடன், பாஞ்சாலி, அபயக் குரல் கேட்ட கண்ணன், அங்கேயே இருந்து அட்சயம் என்று சொல்லிய க்ஷணம். திரௌபதியின் புடவை குறையில்லாமல் வளர்ந்த சம்பவம் நடந்ததும் திருதியை தினம்தான் என்று எனவே அன்று புதிய ஆடை வாங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
அகிலத்திற்கும் அன்னையாக விளங்கும் அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் ஒரு திருதியை தினம். எனவே அட்சய திருதியை தினத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவது ரொம்ப சிறந்ததாம்.
பாண்டவர்கள் காட்டில் இருந்த சமயம், அன்ன பஞ்சம் தீர்க்க, கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினமும் திருதியை தினம்தான்.
குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வரியத்தை அடைந்த தினமும் இதுதான்.
குசேலர் ஸ்ரீகிருஷ்ணருக்கு தன் சக்திக்கேற்ப அவல் மட்டும் தந்துதான் செல்வந்தர் ஆனார்.
வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டு வாசலில் “பவதி பிக்ஷாந்தேகி” வந்து நின்ற ஆதிசங்கரருக்கு,, அப்போது தன் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லி கனியை தந்த பலனால், வறுமையிலும் உயர்ந்த பண்பாட்டில் நிற்கும் அந்த தாயின் நிலையை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாட, அதனால் ஸ்ரீமகாலஷ்மியின் மகிழ்ந்து அந்த குடும்பத்தின் தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். இந்த சம்பவம் நிகழ்ந்த நன்னாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்.
விஜயராகவ நாயக்கர் ஆட்சியில்தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார்.
நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார்.
50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை.
சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது.
சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. மக்கள். அட்சயம் என்றால் “வளருவது” என்ற மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.
ஆகவே அட்சய திருதியை அன்று அன்னதானம், நீர்மோர் தானம், நன்றாக படிக்கும் ஏழை மாணவ-மாணவிக்கு நம் சக்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை செய்தாலே சொர்கலோக வாழ்க்கை அமையும். அத்துடன் ஸ்ரீ மகாலஷ்மியை அன்று மனமுருகி பிராத்தனை செய்தால் குபேரர் போல் ஆண்டு முழுவதும் சுபிக்ஷத்தோடு செல்வ வசதியோடு வாழ்க்கை அமையும். இதைதான் எல்லா புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கிறது.
அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.
அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.
சக்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.
ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும்.
அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம்.
அதுபோல் அட்சய திருதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள்.
அட்சய திருதியையன்று நாம் பூஜிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள்.
அட்சய திருதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் ...
ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், வெள்ளி, சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும்.
அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.
இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும்.
பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.
இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்
அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.
அட்சய திருதியை தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும்.
சிறப்பான விளக்கங்கள் + படங்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
செல்வவளம் செழித்தோங்கும்
ReplyDeleteஇன்னாளுக்கான அழகிய விளக்கங்களும் படங்களும்.
வாழ்த்துக்கள் சகோதரி..
அட்சய த்ருதியை ஆன இன்று
ReplyDeleteஅன்ன தானம் செய்யுங்கள்.
வீடு தேடி வரும் ஒரு நபருக்காவது
ஒரு வாய் சோறு தாருங்கள்.
அவர்கள் தாகம் தீர்த்திட
ஒரு குவளை நீர் மோர் தாருங்கள்.
உங்கள் வீடுகளில் என்றுமே
சுபிக்ஷம் நிறைந்து வ்ழியும்.
தங்கம் தங்காது.
தங்குவது நிலைத்து நிற்பது எல்லாம்
தானமே. தானம் செய்யவேண்டும் என நினைக்கும்
தங்கள் பெருந்தன்மையே.
சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.in
www.Sury-healthiswealth.blogspot.in
அட்சய திருதியை பற்றிய மற்றொரு பதிவும் அருமை. பொன் பொருள் வாங்கி பூஜை செய்யும் முறை பற்றி தெரிந்து கொண்டேன். நிச்சயம் உப்பு, சக்கரை வாங்குவேன். தயிர் சாதம் அன்னதானம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். நன்றி...
ReplyDeleteஉப்பு, சர்க்கரை வாங்கலாம், கனகதாரா கேஸட் போட்டு கேட்டு மகிழலாம்.
ReplyDeleteயாரா சூரி சார் சொல்வது போல் நீர் மோர், உணவு தரலாம்.
அட்சயதிருதியை அழகான படங்கள் செய்திகளுடன் அருமையாக இருக்கிறது.
அக்ஷயமாய் அருளும் அக்ஷய திருதியை பற்றிய அக்ஷயமான விளக்கங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.
ooooo 907 ooooo
எப்போதும் போல இப்போதே அட்சயதிருதியை முன்னிட்டு தகவல்கள் வழங்கிவிட்டமைக்கு நன்றிங்கம்மா
ReplyDeleteஉண்ண உணளித்து உலகினில் நன்மை பெறுவோம்
ReplyDeleteஅன்னை அவளருளால் அழகிய இத் திருநாளில்
அன்னை அடி போற்றி எல்லாச் செல்வமும் தங்களுக்கும்
கை கூடிட வாழ்த்துக்கள் தோழி !
Annayar dina nal valthukkal Rajeswari.
ReplyDeleteVery nice askshya trithi post.
viji
அட்சய திருதியை பற்றி அறிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅட்சய திருதியைப் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருக்கின்றன. எல்லோருக்கும் இந்த நல்ல நாளில் வளம் பெருகட்டும்!
ReplyDeleteஅட்சய திருதியை அன்று சர்க்கரை வாங்க வேண்டுமென்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அனைவருமே வளம் பெற வாழ்த்துக்கள். மிக்க நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
அருமையான பகிர்வு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கம் வாங்க முட்டி மோதுவதை விட தான தர்மம் செய்வது எளியதும் இனியதுமாகும். நல்ல வழிகாட்டல்.
ReplyDeleteஅட்சயதிருதியையின் சிறப்புக்கள் அறிந்துகொண்டேன்.சிறப்பான பதிவு.
ReplyDeleteஉங்களுக்கு லஷ்மி அருள் கிடைக்கட்டும்.
ஒவ்வொரு அக்ஷய திருதியைப் பதிவும் சிறப்பு
ReplyDeleteவாய்ந்த பதிவாகப் புதிய
தகவல்களை அள்ளி அள்ளித் .
தருகிறது . நன்றி !
2nd அட்சயதிருதியை பற்றிய விளக்கங்கள் அருமை. படங்களும் அதோடு சிறப்பு . மிக்க நன்றி.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அ.திருதியைன்னா தங்கம்தான் வாங்கனும் என்று எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்காமல் உப்பு சர்க்கரை கூட வாங்கலாம் என்று பாலை வார்த்ததற்கு நன்றி.
ReplyDeleteவலைப்பதிவுகள் பக்கம் வந்து நாளாகிவிட்டது. நலம்தானே?