தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்.
சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.
கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல ..பலமுறை தன் பக்தர்கள் வேண்டுதலுக்காக நரசிம்மராக பல தோற்றங்களில் அருளியிருக்கிறார் ..
யாதகிரி குட்டா ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் அற்புதமானது
ஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீ தூரத்தில் வாரங்கல்லுக்கு அருகில் அமைந்துள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோயில் பஞ்ச நரசிம்மக்ஷேத்ரமாகத் திகழ்கிறது ..
இங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,
ரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரரான .இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தார் ,
ரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்,
முதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார்
பின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்
அவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்
ஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார்
அதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார் ,
வைத்ய நரசிம்மர் ஆக தீராத வியாதியும் தீர்க்கிறார் ..
ஆக பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,
நவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும் மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க
இங்கு ஆஞ்சநேயரும் இருக்கிறார்
ஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் .
கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது
முன்பெல்லாம் இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம்
பல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம் என்றும் பெயர் ,
இப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.
சுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம் செய்த குகையும் மிக அற்புதமானது ..!
Surendrapuri - museum located about 60km from Hyderabad
SURENDRAPURI, A rising Temple Complex Located on Yadagirigutta Road and just 2 KM away from Yadagirigutta, Nalgonda Dist. Andhra Pradesh,
SURENDRAPURI, A rising Temple Complex Located on Yadagirigutta Road and just 2 KM away from Yadagirigutta, Nalgonda Dist. Andhra Pradesh,
ஸ்ரீ நரசிம்ஹ ஜ்யந்தி பற்றிய மிக அருமையான பதிவு.
ReplyDeleteநிறைய படங்கள் புதுமையாகவும் பிரமிக்க வைப்பதாகவும் உள்ளன.
குறிப்பாக படம் 7 முதல் கடைசிவரை ஜோர் ஜோர் ! ;)
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo 919 ooooo
படங்கள் பிரமாதம்... தகவல்கள், விளக்கங்களுக்கு மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteAha.....
ReplyDeleteSitting at home visiting all the places......
It is really wounder dear.
The pictures are very very pretty and some of them i am seeing the first time.
Really you are so great by giving such nice posts.
Thanks dear.
viji
superb pictures
ReplyDeleteபடங்கள் அருமை
ReplyDeleteஸ்ரீநரசிம்ம ஜெயந்தியை ஒட்டிய அருமையான பதிவு. படங்களும் அருமை. மிக்க நன்றி.
ReplyDeleteஸ்ரீநரசிம்ம ஜெயந்தியை ஒட்டிய அருமையான பதிவு. படங்களும் அருமை. மிக்க நன்றி.
ReplyDeleteவியக்கவைக்கும் விடயங்கள் நிறையவே. அருமை. படங்களும் ஒருசிலதான் எனக்குப் பார்க்கமுடிந்தது. மீண்டும் வந்து பார்க்கின்றேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு. மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteநாங்கள் யதகிரி குட்டாவுக்குச் சென்றிருக்கிறோம்.ஆனாலும் பதிவில் காணும் பல படங்கள் அங்கு கண்டதாக நினைவில்லை. ஒரு படத்தின் அடியில் கொடுத்த குறிப்பு போல் ‘விஸ்வரூபதரிசனம், யானைத் தந்த வளைவுகள், சங்கின் அடியில் பார்வதி கணேசன்’ போன்ற படங்கள் எந்த இடத்தைக் குறிக்கிறது என்றும் தெரிவித்திருந்தால் எந்த ஐயமும் ஏற்படாது. அருமையான படங்கள். பல வருஷங்களுக்கு முன் சென்றது. தரிசனம் முடித்து இறங்கும் போது இருபது முப்பது குரங்குகள் எங்களைச்சூழ்ந்துவர அச்சத்தால் அருகே சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர்களிடம் இருந்து அவர்களது கோல்களை வாங்கிக் கொண்டு இறங்கினது இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
நரசிம்ம ஜெயந்தி குறித்தும் நரசிம்மர் கோயில் குறித்தும் அழகிய படங்களுடன் விளக்கமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteயாதகிரி கோவில் போயிருக்கிறேன்.. சாதாரணமாக இருக்கும் அப்போதெல்லாம்.. இப்போ பப்பள பளபளக்கிறதே!
ReplyDeleteயாதகிரி கோவில் சக்கரம் பற்றிய செய்தி வியப்பை அளிக்கிறது.படங்கள் எல்லாம் வெகு அழகு.
ReplyDeleteதகவல்கள் படங்களுடன் தெய்வீக மனம் கமழ்கிறது.
ReplyDeleteபிரகலாதனும் நரசிம்மரும் இருந்த படம் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்திருப்பெனோ எனக்கேத் தெரியவில்லை.
பகிர்விற்கு நன்றி.
படங்கள் அனைத்தும் அற்புதம்.
ReplyDeleteயாதவகிரி சக்கிரம் இன்னும் சுற்றுகிறதா.
கருணை நரசிம்ஹரின் படம் மனதை நெகிழவைக்கிறது.
நரசிம்ம ஜெயந்தி நாளில் சிறப்பான பகிர்வு. படங்களும் நன்று.
ReplyDelete