
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
அழகு கொஞ்சும் தெய்வ காவியம்
கோடையில் மழைவரும் வசந்த காலம் வந்ததோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
சிவலிங்கத்தைச்சூழ்ந்திருக்கும் ரிஷிகளாக
சிவாலயத்தை தரிக்கவைக்கும் நாகலிங்கப்பூ




அனந்தசயனத்தில் பிரம்மனை தாமரையில்
தாங்கியிடும் ஆயிரம் தலை அனந்தனையும்
அபூர்வக்காட்சியாக்கி வியப்பளிக்கும்
நிஷாகந்தி என்னும் சுகந்த மலரே ..!
ஆனந்த சயனப்பூவோ ! நள்ளிருள் நாறியே .!





நடுநசியில் இதழ் விரித்து, காந்தப்பார்வையில்
விழிகள் விரித்து ,மனம் மகிழ அழ்காய்
சொக்கிவருகுதே! சொக்கக்கள்ளியே!

மலரும் அழ்கை ரசிக்க நடுநசிப்பூங்கொத்தே! ஆராதிப்பேன்
உனை விட்டு நீங்காதிருப்பேன்! பூவே!
ஊக்கமாய் மலரும் உன் அழகை ரசித்திருப்பேன் ..!

ஒரேயொரு இரவுதானே இருப்பாய்!
பிறகு தலைகவிழ்ப்பாய் அதிகாலையில்
மலர்ந்த உடனே விரைவாய் மகிழ்ச்சி
மலர்வித்து மணம் நிரப்பி மனம் நிறைத்து ..!
இரவு முழுதும் உன் விரிந்த விழி பார்த்து
கவிதை மலர்கிறது மனம் நிறைய
இக்கவிதை மட்டுமே சமர்ப்பணமாகுமா?
நிஷாகந்தி மலரே ! நடுநிசியின் மலரே ..!



சூரியனைக்காணாமல் பகல் உணராமல்
மலர்ந்தவுடன் மரிப்பது வரமா .சாபமோ!
ஆகவே உனைவிட்டு நகராதிருப்பேன்! உன்னதமே!
பிரமிப்பே! நிலத்தில் பூத்த வெண்தாமரையே!


நீ வாங்கி வந்த வரமிதுவா?
அதிசயமே! இலை விளிம்பு மலரே!
மலர்ந்த இரவு யாரும் உறங்காமல்
உன் நினைவாய் விழா எடுக்கவே ஆணையிடுவேன்!

நடுநசி நழுவும் போது நின் விழிகள் சொருகும்
தலை கவிழும், நரம்புகள் துவளும்

என் சுகந்தமே! காற்றில் மணம் கமழ்கிறதே
உனை விட்டு அகலேன்.வினாடி தோறும்
உன் மலர்ச்சியிலென் இதயம் நின்று போகட்டுமே!
நீ இற்று தலை கவிழ்ந்ததும்

நீ நானாக மலர்ந்து, நான் நீயாக
நீ நானாக கவிழ்ந்தும், நான் நீயாக வாடியும்
நறுமணமான இந்த ராக்காற்றில்—
உயிக்குள் உயிராக சங்கமித்த அழகு மலர் ..!
மீண்டும் இல்லத்தில் மலர்ந்து மனம் மகிழ்வித்தது ..!





















"மலரும் நிலவும்” என்ற இன்றைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ஆயிரம் மலர்களே மலருங்கள் ..... ..... .......
பாடல் மிகவும் பொருத்தம்.
நாகலிங்கப்பூ சூப்பர்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo 914 ooooo
அழகிய படங்கள் கண்களைக் கவர்ந்து சென்றது தோழி அருமை !
ReplyDeleteவாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் .
அருமையான கலெக்ஷன். காப்பி செய்ய முடியாதது ஒன்றே வருத்தம்.
ReplyDeleteஅருமையான படங்கள்... வாழ்த்துக்கள் அம்மா... மிக்க நன்றி
ReplyDeleteஅந்த நாகலிங்கப் பூ... கண்ணை இழுத்துப் பிடிச்சுட்டுது. மத்த எல்லா மலர்களும் மனசைக் கவர்ந்தன. அருமையான தமிழ் நடையினை ரசித்தபடி மலர்களின் சுகந்தத்தையும் உணர்ந்தேன். அருமை!
ReplyDeleteஎங்க ஊரில் இன்றும் ஒரே ஒரு நாகலிங்கப் பூ மரம் இருக்கிறது
ReplyDeleteமலர் பார்ப்பதற்கு அதிசயமாக இருக்கும்... மணம் சுகந்தமாக இருக்கும்...
அழகிய மணம் பரப்பும் மலர்கள் பற்றிய பதிவு.
அழகை ஆராதிக்கும் அன்னையே
ReplyDeleteவழங்கினை நாகலிங்கமலர் வனப்பினை
தழுவிடும் தென்றலாய் தந்தபாதனில்
பழமொடு பஞ்சாமிருத சுவைகண்டேன்...
மலரும் மலரொடு தந்த கவியும்
மணம் நிறையத் தந்ததுவே...
மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் சோதரியே!
எங்க ஊரில் கோவிலில் இருக்கிறது நாகலிங்கப்பூ... படங்கள் மிக மிக அழகுங்க. பாடல் அருமை.
ReplyDeleteமலர்களே மலருங்கள் இது என்ன கனவா.. பாடத்தோன்றுகிறது.
Poopoova poothirukku in the post.
ReplyDeleteVery pretty post. I just love the pictures.
nice.
viji
கள்ளிப்பூக்களும் எவ்வளவு அழகு.
ReplyDeleteமலர் என்றால் மகிழாதார் யார்.
இனிய வாழ்த்து.
தங்கள் படங்களை கொப்பி பண்ணாது தடுப்பது தான் வருத்தம்.
வேதா. இலங்காதிலகம்.
நாகலிங்கப் பூ இயற்கையின் அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
ReplyDeleteவண்ணத்துப்பூச்சி அற்புதம்!
இங்கிருக்கும் மலர்களை கண்கள் குளிர, மனம் குளிரப் பார்த்து ரசித்தோம்.
பாராட்டுக்கள்!
மலரும் நிலவும் மிக அழகு.
ReplyDeleteபாடல்கள் அதைவிட அருமை. ஒவ்வொரு மலருக்கும் கீழ் நீங்கள் எழுதிய வாசகங்கள் அழகு. இறைவனின் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் கண்களுக்கு நல்ல விருந்து. இயற்கையின் படைப்பை எண்ணி வியக்க வைக்கும் நிஷாகந்தி மலர், நடுநிசி மலர் பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள்.
மலர்கள் அழகு.பாடல்கள் அருமை.
ReplyDeleteஅடடா அடடா அடடா .
ReplyDeleteகண்கள் நகர மறுக்கின்றன.
என்ன அழகு.
நாகலிங்கப்பூவை கண்டு பல முறை வியந்திருக்கிறேன்.
இத்தனைப் பூக்களையும் எங்கே பிடித்தீர்கள்.?
அதிலும் நீலவண்ணப்பாதை அமைத்திருக்கும் அந்த கடைசிப் படம் கண்களுக்குள் இன்னும்.
நாகலிங்கப்பூ எங்கள் ஊரில் இருக்கின்றது. நிலத்தில் பூத்த வாசமலர் நிஷா காந்தி மனத்தை கொள்ளை கொள்கிறது. மலர்பாடல் அருமை.
ReplyDelete