

பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.



பாண்டவ சகோதரர்களுள் ஒருவரான பீமன் வழிபட்ட தலம் ஆதலையூர். எனவே மூலவருக்கு பீமேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதிசயம் நிகழ்ந்தது. ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலில் மண்டிக் கிடந்த கொடிகளை அகற்றிக் கொண்டிருந்த போது ஆதண்டம் கொடிகளின் வேர்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்றன.


ஓரிடத்தில் அகற்றவே முடியாதபடி வேர்கள் பின்னிக்கிடந்த வேர்க் குவியலில் விநாயகர் காட்சி தந்தார்.


பின்னிக் கிடந்த அந்த வேர்களே விநாயகர் ரூபம் கொண்டிருந்தன.
நான்கு கரங்கள், தலையில் கிரீடம், முன்னே நீண்டு ஆசிர்வதிக்கும் துதிக்கை என அச்சு அசலாக விநாயகர் தோற்றம்!
கோயிலின் தொப்புள் கொடியாய் நீண்டிருந்த ஆதண்டக் கொடியில் பிறந்த விநாயகர் ஆதலையூர் மக்களின் கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகிறார்..

விவ சாயத்தையே பெரிதும் நம்பி நெல் பயிரிட்டு வரும் ஆதலையூர் மக்கள் ஆதண்டக் கொடி விநாயகரைக் கண்டெடுத்த நாள் முதலாய் தங்கள் பயிர்கள் நன்கு செழித்து வளர்வதாக சந்தோஷமடைகிறார்கள்.

ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் முன் ஆனை முகத்தனான இந்த வேர் விநாயகரை தேடி வந்து விதைகளை வைத்துப் படைத்து, பிறகுதான் தங்கள் வயில்களிலும் தோட்டங்களிலும் விதைக்கிறார்கள்.

இவ்வாறு பக்தர்கள் விதை நெல்கள், மற்றும் தானியங்களை படைக்கும் காட்சி காணற்கரியது.

கும்பகோணம்-நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆதலையூர் திருக்கோயில்.






பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன், மகிழ்ந்தேன்.
ReplyDeleteகுழல் ஊதும் பசுபால கிருஷ்ணனைப் போலத்தோன்றும் முதல் முதல்வனான பிள்ளையாரும், கடைசிப்படத்தில் கணக்குப்பிள்ளை மூஞ்சுறு அமர்ந்து ஏதோ படித்துக்கதைசொல்ல, அதை ஒய்யாரமாக குப்புறப்படுத்த நிலையில் கண்ணை மூடிக்கொண்டு கேட்கும் பிள்ளையாரும் மிகவும் பிடித்துள்ளன.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
நடப்பு 2013ம் ஆண்டின், தங்களின் வெற்றிகரமான, நாளைய 150வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
ooooo 923 ooooo
குறைவில்லா உங்கள் பணிக்கு குறையெல்லாம் தீர்ப்பான் கணேசன்
ReplyDeleteபதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள படம் புதுமையாக இருந்தது.
ReplyDeleteஅருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteபடங்கள் மிகவும் அருமை... விளக்கங்களுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆதலையூர் விநாயகரைப் பற்றி அறிந்து மகிழ்ந்தேன். விதவிதமான விநாயகர்களைக் கண்டு ரசித்தேன். அருமை! வாகனம் புத்தகம் படிக்க அதை படுத்தபடி ரசித்துக் கேட்கும் கணேசர் (கடைசிப் படம்) வெகு ஜோர்! தேங்காய் நாரினாலேயே உருவான கணநாதனும் மனம் கவர்ந்தார்.
ReplyDeleteபுதிய தகவல். ரசித்தேன். ஆதலையூர் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபடங்கள் மனதைக் கொள்ளை கொண்டன.....
சகோதரி... இன்றும் இது.......!
ReplyDeleteஅருமை. அழகென்றால் முருகன் மட்டுமல்ல ஆனைமுகனும்தான்.
கண்கொட்டாமல் இன்று அத்தனை படங்களும் தெளிவாக எனக்கு. அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
பகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!...
ஆதலையூர் ஆனை முகன் குறித்து அறிந்தேன்! அகம் மகிழ்ந்தேன்! அருமையான பகிர்வுக்கு நன்றி!
ReplyDeletewow great pictures good information
ReplyDeleteஆதலையூர் ஆனை முகனைப் படிக்கப் படிக்க ரஸிக்க,மனதினால் வணங்க முடிந்தது. படங்களும் அருமை. இம்மாதிரி படிக்கக் கூட கொடுத்து வைக்க வேண்டும். நன்றிகள் அனேகம். அன்புடன்
ReplyDeleteஅருமையான பதிவு, படங்கள் அருமை . நன்றி
ReplyDelete