ஓராயிரம் நாமங்கள் உண்டென்ற போதிலும்
ஒரு நாமத்தையாகிலும் உரைத்தாலும் நன்றன்றோ
ஆராவமுதமாம் அமிழ்தினும் இனியதாம்
நாராயணா என்னும் நாமம் நவில்தொறும் நவில்தொறும்
நாவினிக்கும் நெஞ்சம் நெக்குருகும்
பிறவிப் பெருந்தளையும் பட்டெனவே அறுந்திடும்
நிறைவான நித்யானந்தத்தை நிலைபெறச் செய்திடுமே
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்'
என்று நாராயணனைச்சரணடைந்த ஆழ்வார்கள் போல நலம் பல பெற்று நோயின்றி நூறாண்டு வாழ நாராயணனைச் சரணடைவோம். அவர்தம் அருள்பெற்ற வாத நாராயணாவை மருந்தாக்கி, வாத, பித்த, கப தோஷங்களையும் நீக்கி, முனைப் புடன் வாழ முனைவோம்.
வாதநாராயணன் மரத்தின் காட்சி
களித்துப் பூச்சொரியும் வாதநாராயணன் மரத்தின் காட்சி மயில் அழகாக தோகைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதைப்போல் மனம் கவரும் கண்கொள்ளாக்காட்சி..
தமிழகமெங்கும் வளரக்கூடியது. வெப்ப நாடுகளில் ஏராளமாகப் பயிராகும். வீடுகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் இதனை வளர்ப்பார்கள். இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும்.
வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை வாதமடக்கி எனவும் ஆங்கிலத்தில் TIGER BEAM, WHITE GULMOHUR என்றும் அழைப்பர்..
பல ஆண்டுகளான வைரம் பாய்ந்த மரத்தை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக்கி தேக்கு மரம் போன்று உபயோகப்படுத்துவார்கள்.
கால்நடைகளுக்கு நல்ல தீவனம். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம்.
பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். இது விதை மூலமும், கிளைகளை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
18 வகை நஞ்சுகளையும் நீக்கும் ஆற்றல் உள்ளது வாதநாராயணன் இலை..
வாதநாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாய்வைக் குறைக்கும். பித்தம் உண்டாக்கும். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். ஆடாதொடை போல இழுப்பு சன்னியைக் குணமாக்கும்.
வாதநாராயணன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும். சுவையும் அருமையாக இருக்கும்..
இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைகு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குணமாகும். மேல் பூச்சாக பூசலாம். கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவும் குணமாகும். மலச்சிக்கல் முழுவதும் குணமாகும்.
வாத நாராயணன் இலைகளை உலர்த்தி அரிசித்தவிடுடன் சேர்த்து பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் பக்கவாதம் குணமாகும்..
வாத வீக்கத்தைக் குணமாக்கும். வாயுவினால் உண்டாகும் குடைச்சல், குத்தல் ஆகியவற்றைக் குறைக்கும். ஆமணக்கு எண்ணெய் விட்டு வாதநாராயணன் இலையை வதக்கி வாத வீக்கங்களுக்கு கட்டினால் குணமாகும்.
வாதநாராயணன் இலைச் சாறுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் வாயு தொல்லை நீங்கி மலம் கழியும்
சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.
மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.
இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தயிருடன் கலந்து அருந்த குணம் தெரியும்.
இலையைப் போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.
நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மத்தித்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.
இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.
வாத நோய் எண்பது என்கின்றனர். இதன் இலை, பட்டை, வேர்பட்டை ஆகியன சூரணமாகவோ, குடி நீராகவோ, தைலமாகவோ சாப்பிட எல்லா வகையான வாதமும் தீரும்.
ஹிமாலயா ஹெல்த்கேர்(பழைய ஹிமாலயா ஃபார்மசியூட்டிக்கல்ஸ்)
மருந்துக்கம்பெனி ரியூமாட்டில் என்றொரு மருந்து செய்கிறார்கள்.
இது ஒரு களிம்பு. இதில் வாதநாராயணன் முக்கிய கூட்டு மருந்து.
பல சமயங்களில் மிகவும் எளிமையான சமாச்சாரங்களே விசேஷம்
படைத்தவையாக இருக்கும்.
வாதநாராயணன் இலையை உணவில் நிறைய பயன்படுத்தக் கூடாது. வாத நோய்களுக்கு (சிறு வயதில் வரும் ருமாட்டிக் காய்ச்சல், பெரியவர்களுக்கு வரும் ஆர்த்ரைட்டிஸ் இவைகளுக்கு) இலையை இளம் சூட்டில் வதக்கி, துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்க வேண்டும். நீர் நிரைய சேர்த்து கஷாயம் வைத்தும் ரசம் போல ஒரு ஆழாக்கு உள்ளே பருகலாம்.
இதன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராக குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.
“சேர்ந்த சொறி சிரங்கு, சேர்வாதம் எண்பதும் போம்
ஆர்ந்தெழுமாம் பித்தம் அதிகரித்த மாந்தமறும்-
ஐய்யின் சுரந்தணியும், ஆனதழுதாழைக்கே
மெய்யின் கடுப்பும் போம்விள்” -------குருமுனி.
மண் வளத்தை பாதுகாக்க அதிக அளவு இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும். இவற்றில் பசுந்தாள் உரம் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க கூடியது. சுந்தாழை உரம் என்பது குளக்கரை, தரிசநிலம், காடுகளில் உள்ள ஆவாரை, புங்கம், பூவரசு, கொடிபூரசு, வேம்பு வாதநாராயணன், ஆடாதொடா, நுணா, நெச்சி, சவுண்டல் போன்ற மரங்களில் இருந்து இலை தழைகளை சேகரித்து நஞ்சை நிலத்தில் மிதிக்க வேண்டும்.தழைச்சத்தை அதிக அளவு மண்ணில் நிலைப்படுத்துவதால் நிலம் வளம் அடைகிறது.
பகவான் நாராயணன் அஸ்திரம் தப்பாமல் பயனளிப்பதுபோல் அவரது பெயரைக்கொண்ட வாதநாராயண மரத்தின் பயனும் அள்விடற்கரியது..
சிறுவயதில் வாதநாராயணன் இலைகளையும் புளிய இலைக்கொழுந்துகள், அல்லது துளசி இலையும் சேர்த்து சுவைத்தால் நாக்கு வெற்றிலைபோட்டதுபோல் சிவக்கும் அதிசயத்தை கண்டுபிடித்திருக்கிறோம்..
கிளையை வெட்டி நட்டு வளர்த்து பறித்து துவையலாகவும், ரசத்திலும் இட்டு சமைத்து பயனடைந்திருக்கிறோம்..
கோலத்தில் கலர் போடுவதற்கும் இலைகள், பூக்கள் தான் பயன்படுத்தினோம். காய்ந்த வாதநாராயணன் இலை அருமையான பச்சைக் கலரைதரும்..
பசுமை நிறைந்த நிறைவான மலரும் நினைவுகள்...
இறப்பே கதியென்ற நிலையில் "நாராயணா' என்ற நாமம் நம்மைக் காப்பது போல், வாதம் முற்றிய நிலையில் வாத நாராயணாவே கதியென சரணடைவோம்.
நமது உடம்பில் எலும்புகளே பிரதானமானது. எலும்புகளின் வன்மையே நமது உடல் ஆரோக்கியத்தைப் பறைசாற்றும். இளம் வயதில் துள்ளிக் குதிக்கும் நாம் வயது தளர்ந்த நிலையில் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. வலியும் வேதனையும் அவரவருக்கு வந்தால்தான் தெரியும். எழுந்து நிற்கமுடியாத அளவுக்கு கால்களில் வலி உண்டாகி, வேறொருவர் தயவை நாடி எழுந்திருக்க முனையும் அவஸ்தையை உணர்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அந்த வேதனையின் ஆழம் தெரியும். "கடவுளே! என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்' என்று புலம்பி வாழ்தல் எவ்வளவு கொடியது!
இனி கவலைப்பட வேண்டாம். ஸ்ரீமன் நாராயணன் வரம் பெற்ற வாத நாராயணா மூலிகையை மருந்தாக்கி வளம் பெறலாம்.
வாத நாராயணா இலையை கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் மூன்று பல் பூண்டு, நான்கு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து விழுதாய் அரைத்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 21 நாட்களில் வாத நோய்கள் அனைத்தும் மறையும்.
வாத நாராயணா இலையை கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் மூன்று பல் பூண்டு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, 20 மி.லி. விளக்கெண்ணெ யில் நன்கு வதக்கி, இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் வாத நீர் சுரப்பு குறைந்து, மூட்டு வீக்கம், உடல் வீக்கம் போன்ற குறைபாடுகளும் தீரும்.
மூட்டு வலிகளைப் போக்க...
வாத நாராயணா இலைச்சாறு அரை லிட்டர் அளவில் எடுத்து அதில் கருப்பு உளுந்து அரை கிலோ அளவில் சேர்த்து அந்தப் பாத்திரத்தை வெயிலில் வைக்கவும். சாறு சுண்டி நன்கு காய்ந்தபின் அத்துடன் சிறுபருப்பு, துவரம்பருப்பு, புழுங்கலரிசி, வெள்ளை மிளகு வகைக்கு 50 கிராம் சேர்த்து மாவுபோல் அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் தேவை யான அளவு எடுத்து, வெங்காயம் வதக்கி சேர்த்து அடைபோல் சுட்டு சாப்பிட்டுவர, மூட்டுவலி, மூட்டு வீக்கம், மூட்டுத் தேய்வு, வாதவலி, கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலி போன்ற அனைத்து வாதம் சார்ந்த நோய்களும் விலகும். இதனை உணவைப்போல் ஒரு மாத காலம் தினமும் ஒருவேளை சாப்பிட்டுவர, மேற்கண்ட பிணிகள் அனைத்தும் முற்றிலுமாய் குணமாகும்.
வாத நோய்கள் தீர...
உலர்ந்த வாதநாராயணா, முடக்கத் தான், நொச்சியிலை, சிற்றாமுட்டி வேர்பட்டை, அமுக்கரா கிழங்கு, நில வேம்பு, ஆடாதொடை, பூனைக்காலி விதைப்பருப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, வாய்விளங்கம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவில் எடுத்து, ஒன்றாக்கித் தூள் செய்து சலித்துப் பத்திரப்படுத்த வும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர வாத நோய்கள், கை- கால் செயலிழப்பு, இதய நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள் போன்ற அனைத்தும் விலகும்.
சகல வலிகளுக்கும் தைலம்...
வாத நாராயணா இலைச்சாறு, நொச்சி இலைச் சாறு, முடக்கத்தான் இலைச்சாறு மூன்றையும் கால் லிட்டர் அளவில் எடுத்து வைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் மூன்றையும் வகைக்கு ஒரு லிட்டர் அளவில் எடுத்து ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பிலேற்றவும். எண்ணெய் கொதிக்கின்ற பதம் வந்ததும் மேற்படி எடுத்து வைத்துள்ள மூன்று வகையான சாறுகளையும் எண்ணெயில் சேர்க்கவும். சிறுதீயாய் எரித்து தைல பதத்தில் இறக்கிவிடவும். எண்ணெய் சூடு ஆறியபின், பச்சைக்கற்பூரம், ஓமம், புதினா, உப்பு வகைக்கு பத்துகிராம் எடுத்து தூள் செய்து எண்ணெயில் கலந்துவிடவும். இந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் கை, கால், மூட்டு, இடுப்பு, கழுத்து, தோள்பட்டை போன்ற பகுதிகளில் வரும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தும்.
சகல வலிகளுக்கும் பற்று மருந்து
வாத நாராயணா இலையுடன் சிறிது உளுந்து, மஞ்சள், கோதுமை மாவு ஆகிய அனைத்தையும் நீர் விட்டரைத்து வீக்கம் மற்றும் வலிகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டுவர உடனே குணமாகும்.
சகல வலிகளுக்கும் ஒற்றடம்...
உலர்ந்த வாத நாராயணா இலை, முடக் கத்தான், நொச்சி, வேப்பிலை, நுணா இலை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சித்திரமூல வேர், சாரணை வேர், அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, உளுந்துத் தவிடு, கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் சேர்த்து உரலில் போட்டு ஒன்றிரண்டாய் இடித்து வைத்துக்கொள்ளவும். இதை தேவையான அளவு கடாயில் இட்டு சூடு செய்து, வலி உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க மிகச் சிறந்த நிவாரணம் உண்டாகும்.
வாத நாராயணா இருக்க இனி ஒரு வலிக்கும் இடமில்லை.
ஸ்ரீமன் நாராயணனின் பெயரைச் சொல்லி, வாத நாராயணாவைச் சரணடைவோம்... வாழ்க வளமுடன்!
ஸ்ரீமன் நாராயணனின் பெயரைச் சொல்லி, வாத நாராயணாவைச் சரணடைவோம்... வாழ்க வளமுடன்!
ReplyDeleteVERY VERY GOOD MORNING !
தங்களின் இன்றைய இந்தப்பதிவு, இந்த 2013ம் ஆண்டின் வெற்றிகரமான 125வது பதிவாகும்.
பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.
நாளைய தங்களின் பதிவு வெற்றிகரமான 900வது பதிவாகும். அதற்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
வெற்றி மீது வெற்றி வந்து தங்களைச் சேரட்டும் ;)))))
>>>>>>. மீண்டும் பொறுமையாக வருவேன் >>>>>>
தெருவோர மரங்களில் இருந்து வரும் வாதநாராயணன் மரங்கள் கலர்கலராக பார்க்க இருக்கும்.இதற்க்கு கொன்றை மரமென்று இன்னொரு பெயரும் உண்டு
ReplyDelete"வற்றாத வளம் தரும் வாதநாராயணன்" என்ற தலைப்பினில் இன்று தாங்கள் கொடுத்துள்ள பதிவு மிகவும் பயனுள்ள மருத்துவக்குறிப்புகளாகும்.
ReplyDelete//களித்துப் பூச்சொரியும் வாதநாராயணன் மரத்தின் காட்சி மயில் அழகாக தோகைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதைப்போல் மனம் கவரும் கண்கொள்ளாக்காட்சி//
ஆம் அதுபோலவே கண்கொள்ளாக்காட்சியாகவே தான் உள்ளது. நல்லதொரு ஒப்பீடு.
இலைகளும் புளிய இலைகள் போலவே தான் உள்ளன.
>>>>>
//பகவான் நாராயணன் அஸ்திரம் தப்பாமல் பயனளிப்பதுபோல் அவரது பெயரைக்கொண்ட வாதநாராயண மரத்தின் பயனும் அள்விடற்கரியது//
ReplyDeleteமிக நீண்ட இந்தப்பதிவே பகவான் நாராயணனின் மிகப்பெரிய் அஸ்திரம் போல உணர முடிந்தது. ..
//சிறுவயதில் வாதநாராயணன் இலைகளையும் புளிய இலைக்கொழுந்துகள், அல்லது துளசி இலையும் சேர்த்து சுவைத்தால் நாக்கு வெற்றிலைபோட்டதுபோல் சிவக்கும் அதிசயத்தை கண்டுபிடித்திருக்கிறோம்.//
குழந்தை விஞ்ஞானியின் அருமையான கண்டுபிடிப்புக்குப் பாராட்டுக்கள். ..
>>>>>>
//கிளையை வெட்டி நட்டு வளர்த்து பறித்து துவையலாகவும், ரசத்திலும் இட்டு சமைத்து பயனடைந்திருக்கிறோம்//
ReplyDeleteஆஹா, துவையல் எங்கே? ரஸம் எங்கே?
நாங்களும் பயனடைய வேண்டாமா? ;(
ஒருவன் முன் கடவுள் தோன்றி, ”ஏதேனும் ஒரு வரம் தருவேன்; என்ன வரம் வேண்டும்?” எனக்கேட்டாராம். அவன் ’தனக்கு தினமும் பூஜைசெய்ய பசுமாடு வேண்டும்’ எனக்கேட்டானாம்.
அடுத்தவனிடமும் கடவுள் கேட்டாராம். மிகவும் புத்திசாலியான அவன் ”நான் செய்துவரும் நித்யப்படி பூஜைக்கு தினமும் இரண்டுபடி பசும்பால் வேண்டும்” என நேரிடையாகக் கேட்டானாம்.
பசுமாட்டுக்குத் தீனி போட்டு வளர்க்கணும். அதை தினமும் குளிப்பாட்டணும், நோய்நொடி வராமல் காக்கணும், அதன் பிறகும் அது பால் தருமா? அவ்வாறு தந்தாலும் எத்தனை நாளைக்குத்தரும்? என்பதில் உத்தரவாதம் ஏதும் இருக்காது. அதனால் பால் கேட்டவன் தான் புத்திசாலியாக்கும்.
அது போல எனக்கு நீங்கள் நேரிடையாக துவையல் + ரஸம் தந்திட வேண்டுமாக்கும். ;)))))
>>>>>>
//கோலத்தில் கலர் போடுவதற்கும் இலைகள், பூக்கள் தான் பயன்படுத்தினோம். காய்ந்த வாதநாராயணன் இலை அருமையான பச்சைக் கலரைதரும்.. பசுமை நிறைந்த நிறைவான மலரும் நினைவுகள்.//
ReplyDeleteஆஹா! இந்த பசுமை நிறைந்த நிறைவான மலரும் நினைவுகளைத் தான் பாடித்திரியும் பறவைகளாக அனிமேஷனில் காட்டியுள்ளீர்களே. அவை அழகோ அழகு.
பதிவைப்படித்து முடித்ததும் அந்தக் கடைசியில் காட்டப்பட்டுள்ள துள்ளும் குதிரை போலவும், பறக்கும் பறவைகள் போலவும் எழுச்சியை ஏற்படுத்தியது
தங்களின் இந்தப்பதிவை என்னைப்போல முற்றிலும் ரஸித்துப்படித்தவர்களுக்கு நிச்சயமாக சுளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
வாத நாராயணன் இலையைப் பறித்து தாங்கள் சொல்வது போல பக்குவமாக செய்துகொண்டு பிறகு படிப்பதே நல்லது. ;)
அவ்வளவு பெரிய பதிவு. ஏராளமான விஷயங்களை தாராளமாகக் கொடுத்துள்ளீர்கள்.
இந்தப்பதிவே ஓர் சர்வரோக நிவாரணியாக உள்ளது.
>>>>>>
அருமையான படங்கள் + அற்புதமான தகவல்களுடன் மிகச்சிறந்ததோர் மருத்துவப்பயனுள்ள பதிவினைக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
நாளைய பொழுதும் நல்லபடியாக விடியட்டும்.
நாளை ... இந்த ... வேளை பார்த்து ... ஓடிவா ... நிலா ! ;)))))
ooooo 899 ooooo
நல்ல தகவல். எப்போது முதல் ஆன்மீகத்தொடர் மூலிகைத்தொடராக மாறியது?
ReplyDeleteநாராயணா நாராயணா என்
ReplyDeleteநா சுழல்வதெல்லாம் நின் நாமம் நவின்றிடவே
நாராயணா நாராயணா
நவில்தொறும் நவில்தொறும்
நாராயணா நாராயணா
நானுமே பாடுவேன் நாராயணா
நானிலமும் எதிரொலிக்க நாராயணா. ..
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நல்ல ஒரு மூலிகை தகவல் . நன்றி
ReplyDelete
ReplyDeleteகாணும் எல்லாச் சேதிகளும் எனக்குப் புதிசு. நாராயணன் வாத நாராயணமரம்...ஒப்பீடும் அருமை. வாழ்த்துக்கள்.
நாராயண மந்த்ரம் எனச்சொல நாளும் பேரின்பம்...
ReplyDeleteஇப்படி இத்தனை ரஹஸ்யங்களா வாதநாராயண மரத்திலும்...
மிக அருமை சகோதரி! அத்தனையும் ரத்தினங்கள்! இப்போ அவசரம் தேவையானதையும் இங்கு கண்டேன். உடனடியாக அங்கிருந்து இங்கு பெற முயற்சி செய்கிறேன்.
அரிய நல்ல தகவல்கள். பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
வாதநாராயண மரத்தின் பயன்கள், மலரும் நினைவுகள் எல்லாம் அருமை.
ReplyDeleteவாதநாராயணன் இருக்க வலி துன்பம் இல்லை. ஸ்ரீமன் நாராயணன் பெயரைச்சொல்லி நலமாய் இருப்போம்.
வாழ்கவளமுடன்.
அருமையான பயனுள்ள தகவல்கள். பாராட்டுகள்.
ReplyDeleteஅப்ப்பா என்ன ஓட்டம் பிடிக்கிறது இந்த குதிரை... படங்கள் வெகு அருமைங்க சிறு பிள்ளைத்தனமாக பார்த்தபடி இருக்கலாம் போல...
ReplyDeleteகோடை விடுமுறைக்கு ஊருக்கு போவதால் இந்த பக்கம் வர இயலவில்லை.
வாதநாராயண மரம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களது இந்தப் பதிவின் மூலம் தான் முதல்முதலாக இந்த மரத்தையும், பூவையும் பார்க்கிறேன்.
ReplyDeleteஎத்தனை எத்தனை அரிய தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள்!
பரம்பொருள் நாராயணனுக்கும், வாத நாராயணனுக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சர்யப்பட வைக்கிறது.
நான் இந்த மரத்தின் பெயரைக் கேள்விப்பட்டதுண்டு. இதுவரை பார்த்ததில்லை. படங்களின் மூலம் ஆச்சரியப்பட வைத்ததுடன் தகவல்களையும் அள்ளித் தந்து ‘இவ்வளவு இருக்கா இதுல?’ என்று வியக்க வெச்சுட்டீங்க! உங்களின் தனி முத்திரையான ஆன்மீகமும் இந்தமூலிகை மரத்துடன் பின்னிப் பிணைந்து வந்தது வெகு சிறப்பு!
ReplyDeleteவாத நாராயணன் மரம் பற்றிய தகவல்கள் எனக்கு புதிது.
ReplyDeleteவாதநாராயணன் பூவும் இப்பொழுது தான் பார்க்கிறேன். இந்த் இலைகளில் எத்தனை மருத்துவக் குணங்கள் .பகிர்விற்கு நன்றி.
வாதநாராயணன் பூ சிவப்பு நிறத்திலும் இருக்கிறதா?
ReplyDeleteவாதநாராயணன் பூ சிவப்பு நிறத்திலும் இருக்கிறதா?
ReplyDeleteநாராயணன் நாமமே சுகம்........... நாராயணன் நாமமே அழகு...... நாராயணன் பெயர் கொண்டவைக்கு விளக்கம்தான் வேண்டுமா.......நாராயணனே பரம்பொருள் ஓம் நமோ நாராயணா
ReplyDeleteசங்கரநாராயணன்