



தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் புகழாரம் சூட்டி தாயை வணங்குகிறோம் ..
அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும்
தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும்
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவர்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்
உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது





ஆனந்த அன்னைக்கு அன்பு நமஸ்காரங்கள்.
ReplyDeleteஅனைத்துப்ப்டங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், ந்ன்றிகள்.
ooooo 905 ooooo
உதிரத்தை
ReplyDeleteஉருமாற்றி
உவகை உள்ளத்துடன்
நல்லமுதாய்
அருந்திடக் கொடுத்த
அன்னையரின்
மலர்ப்பாதம் பணிகின்றேன்.
அனைத்து படங்களும் அருமை...
ReplyDeleteஅம்மாவிற்கு வாழ்த்துக்கள்...
அன்னையர் தின படங்கள் அருமை
ReplyDeleteதாய்மைக்கு மதிப்பளிக்கும் அருமையான பதிவு.பாடல்பகிர்வு அருமை.
ReplyDeleteஎல்லா அன்னையருக்கும் வாழ்த்துக்கள்.தாயுமானவர்களுக்கு வாழ்த்துக்கள். படங்கள் அருமை.
உலகத்து அன்னையர் அனைவருக்கும் இத் தினமதில் சிறப்பான வாழ்த்துகள்.அழகான படங்கள் நன்றி
ReplyDeleteஅழகான படங்களுடன் அன்னையர்தினப்பதிவு. எல்லா அன்னையர்களும்
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துக்கள். உங்களுக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்.
அழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு .
ReplyDeleteஇப் பகிர்வு போல் மனம் ஆனந்தம் பெற
என்றுமே என் இதயபூர்வமான
அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரி !..........
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஉன்னோடு என்னை இணைத்த தொப்பூழ்
கொடி உறவு இனிவரும்
பிறவிகளிலும் தொடரட்டும்
சூப்பர்
அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்களுடன் அன்னையின் அழகு அருமை அம்மா ..... அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.....
ReplyDeleteபுகைப்படங்கள் அத்தனையுமே மிக அழகு! அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள் படைப்பு சுப்பர் சுப்பர்,,,,,
-அன்புடன்-
-ரூபன்-
அன்னையர் தினப் பதிவும், புகைப்படங்களும் அசத்தல்.
ReplyDelete//தன்னல மற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்//
அம்மா என்றாலே நமக்கு எத்தனை வயதானாலும் ஆனந்தம் தான்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
அழகிய படங்களும் பாடல் வரிகளும் வாழ்த்தை வசீகரிக்கின்றன. தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDelete