

சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று
ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும்,
உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து,
இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, வெற்றிக் கொடி ஏற்றினவரும்,

கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும்,

பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக,
ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப,
. அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடுவில் நடனம் செய்ய,
ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க,

மதில் சூழும் மருத அரசர் படை விடுதி வீடாக ...
மிகவும் விரும்பி இளமை வாய்ந்த ரிஷபத்தின் மேல் வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் கோயிலில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே, விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே.
கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும், யாரோடு பேசுகினும் .
இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள் வரிசையையும்,
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே ...







ரசித்தேன்.
ReplyDeleteசுகந்த மணத்தை சுவாசித்தேன்
ReplyDeleteதிரு உருவப்படங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
படங்கள் வியக்க வைக்கிறது...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் !
ReplyDeleteபகதபிரகலாதன் படத்தில் வரும் பாடல் தான் நினைவுக்கு வரும் நரசிம்மரைப்பார்த்தால்.
படங்கள் எல்லாம் அழகு, அற்புதம்.
அருமையான பதிவு.. அத்தனை படங்களையும் ரசித்தேன்
ReplyDeleteஅத்தனையும் அருமை. அதையெல்லாம் பார்த்ததற்கு
ReplyDeleteஅடியேனுக்கும் பெருமை.நன்றிங்க
great pictures
ReplyDeleteVery nice pictures.
ReplyDeleteviji
பிரகலாத வரதனுக்கு நமஸ்காரங்கள்.
ReplyDeleteஅனைத்துப்படங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
ooooo 904 ooooo
சிறு வயதில் பிரகலாதன் இரணீய வதம் படித்தது நினைவு வருகிறது.
ReplyDeleteதரவிற்கு நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.