மங்களம் பொங்க மனதினில் வந்திடும் எங்கள் அங்காளம்மாள்
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்சினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோம் கெஞ்சுகிறோம் உன்னை
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத அங்காளம்மா
தென்பொதிகை சந்தனம் எடுத்து மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரால் அபிஷேகம் செய்ய வந்தோம் அங்காளம்மா
அன்னையாக நீயிருந்து அருளெனும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே அங்காளம்மா
சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா.....
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வு தரும் மங்கையர்கரசி அங்கையர்க்கண்ணி அங்காளம்மா
மணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல் நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல் நாயகி
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறும்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாத அமாவாசை விழா வெகு சிறப்பாகும்..!.
கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்..!
உற்சவ அம்மனுக்கு வலக்கரங்களில் கத்தி, உடுக்கை, இடக்கரங்களில் சூலம், கபாலம் ஆகியவையும், தலையில் ஐந்து தலை நாக கிரீடத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்..
.உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெறும்..!
அம்மனுக்கு அர்ச்சனை செய்து மகாதீபாராதனை நடைபெற்றவுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடையும்..!
அன்னை ஆதிபராசக்தி சிவ சுயம்பு மண்புற்றுவாக திரு அவதாரம் செய்து
ஸ்ரீஅங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத்தலமான மேல்மலையனூர் மண் ஈர்ப்பு சக்தி கொண்டது..!.
அந்த மண்ணை மிதித்தாலே போதும் வாழ்வில் மாற்றங்கள் பல ஏற்படும். குறைகள் நீங்கிவிடும். நிறைவுகள் வந்து சேரும்.
அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியின் அருள் பார்வை கட்டாயம் கிட்டும்.
மேல்மலையனூர் ஆதியில் தண்டகாரண்யம்.
சிவபெருமான் தாட்சாயணிதேவியின் பூதஉடலை சுமந்து நர்த்தனதாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, தண்டகாரண்யம் என்ற மேல்மலையனூர் ஆகும்.
ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாயாக அன்னை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி திகழ்கிறாள்..!
மகத்துவம் மிக்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அன்னை..!
காளிதேவிக்கு ஆரத்தி சுற்றும் கையுடன் ஆரம்ப புகைப்படமும், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக் கேட்பது போன்ற பிரமையைத் தந்த பாடலும். தொடர்ந்து பளிச் படங்களுடன் கிடைத்த தகவல்களும்... வர்ணிக்க வார்த்தை இல்லை. அருமையம்மா...
ReplyDeleteமேல் மலையனூருக்கு இதுவரை சென்றதில்லை.
ReplyDeleteஅங்காள பரமேஸ்வரி பற்றிய அரிய தகவல்களுடன் - அழகிய பதிவு..
வாழ்க நலம்..
’அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஊஞ்சல் உற்சவம்’
ReplyDeleteஎன்ற தலைப்பும் இன்றைய பதிவும் நாமே ஊஞ்சல் ஆடுவது போன்றதோர் மகிழ்ச்சியைத் தருகின்றன.
>>>>>
படங்கள் எல்லாமே வழக்கம் போல அழகு.
ReplyDelete>>>>>
அனிமேஷன் படங்கள் யாவும் அசத்தல்.
ReplyDelete>>>>>
அங்காளம்மா மேல் கொடுத்துள்ள பாடல் வரிகள் படிக்கப் பரவஸம் தருவதாக உள்ளன.
ReplyDelete>>>>>
தொடர்புடைய 1200வது பதிவினை மீண்டும் காணும் பாக்யம் கிடைத்தது மனதுக்கு சந்தோஷம் தருவதாக அமைந்துள்ளது.
ReplyDeleteதையல் நாயகி அருளால் அதுசமயம் மேலும் ஓர் மழலைச் செல்வமும் கிடைக்கப்பெற்றோம்.
>>>>>
மேல் மலையனூர் பற்றிய அழகான அனைத்து விளக்கங்களும் என் நன்றிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
;) 1358 ;)
ooo ooo
அன்னை அங்காள பரமேஸ்வரியின் சிறப்ப அறிந்தென்
ReplyDeleteமிக்க நன்றி.
அங்காள பரமேஸ்வரி அருள் நிறையட்டும்.'
வேதா. இலங்காதிலகம்.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியின் அழகழகான படங்களுடன்
ReplyDeleteகோவில் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை. முதல் படம் என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDeleteநேரம் இருக்கும் போது என்னுடைய இன்றைய பதிவைப் பாருங்கள். பதிவு இடும் போது தங்களைத்தான் நினைத்துக் கொண்டேன் எவ்வாறு தாங்கள் தினமும் இப்படி போடுகிறீர்கள் என்று. படங்களை பொறுமையாக அணிவகுத்து,அதை பற்றி எழுத்துவதும் என்றால் பெரிய விஷயம் தான்.
தங்களின் ஆன்மிகப் பணிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
அங்காளம்மனின் அழகிய படங்களும் தகவல்களும் கருத்தை கவர்ந்தன! அருமை! நன்றி!
ReplyDeleteமேல்மலையனூர் அங்களம்மன் ஊஞ்சல் விழா அருமை.
ReplyDeleteகோவில்பற்றிய விளக்கங்கள் நன்றாக சொன்னீர்கள்.
படங்கள் தெய்வீகம்.
வாழ்த்துக்கள்.