திருநீரில் மருந்திருக்கும் தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கும் புரியுமா முருகன்
அருள் மணக்கும் ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக்கண்ணை திறந்து வைக்கும் அருமருந்து
அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து
நல்ல ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும்மருந்து வேலன்
மங்கையர்க்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து
திரு மங்களமாய் குங்குமமும் வழங்கும் மருந்து குமரன்
கற்பனையில் கவிதைபாட செய்யும் மருந்து
பெரும் கள்வரையும் திருந்திவாழ செய்யும் மருந்து
முன்வினை தந்தஊழ் எல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்செல்வமெல்லாம் கொடுக்கும் மருந்து கந்தன்
திருச்செந்தூர் பன்னீர் இலை திருநீர் அரு மருந்தாகும் அணைத்து பிணிகளையும் நீக்கவல்லது..!
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளை இல்லை மருமகன்தான் திருமகன்
உமையவள் தன் வடிவம் மதுரை மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சி காமாட்சி
கங்கையிலே குளிக்கிறாள் காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கிணை எவனுண்டு
பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவர்க்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும்மற்றவற்றைத் தள்ளுங்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா, தேரோட்டம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கி சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை பட்டுடுத்தி, வெண்மலர்கள் சூடி பிரம்மா அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து 8 வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோயில் சென்றடைவது கண்கொள்ளாக்காட்சி.!
சுவாமி சண்முகர் அத்தி மர கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டுடுத்தி பச்சை மலர்கள் அணிந்து விஷ்ணு அம்சமாக காட்சியளித்து 8 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டு சுவாமி தரிசனம் அளிப்பார்..
தேரோட்டம்முதலில் விநாயகர் தேர் நான்கு ரதவீதிகள் வழியாக பவனி வந்து நிலையம் வந்தடைந்து தொடர்ந்து சுவாமி குமரவிடங்கா பெருமான் சர்வ அலங்காரங்களுடன் திருத்தேரில் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து நிலையம் வந்தடையும். அதன் பின் வள்ளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு ரதவீதிகளிலும பவனி வந்து நிலையம் வந்தடையும். .
//ஆன்மீகம்
ReplyDeleteவலைத்தளங்களில் ஆன்மீகம் என்று தேடிய பொழுது என் சிற்றறிவிற்கு எட்டிய ஒரே ஒரு வலைப்பதிவாளர் திருமதி இராஜராஜேஸ்வரி. ஆத்திக அன்பர்களுக்கு அரிய பொக்கிஷம் இவர் வலைப்பூ. இவங்க கிட்ட இருந்து கத்துக்க, காப்பி அடிக்க (அவங்க அனுமதியோட தான்) நிறைய இருக்கு.
இன்று சனிக்கிழமை அதனால் அவரது பதிவுகளில் இருந்து
http://jaghamani.blogspot.com/2014/08/blog-post_21.html
//
http://www.blogintamil.blogspot.in/2014/08/blog-post_23.html
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள்.
>>>>> மீண்டும் தாமதமாக வருவேன் >>>>>
மேடம்,
ReplyDeleteஉங்கள் கவனத்திற்கு.. இணையத்தில் உங்களுக்கு யாராவது தொர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்தால் (இரட்டை அர்த்தங்களுடன் கூடிய Comments'களையும் சேர்த்துதான்) நீங்கள் காவல் துரையின் சைபர் க்ரைமிடம் (Cyber Crime Department) புகார் பண்ணலாம்.
உங்கள் Blog'களில் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக செய்தி!
ஒரு Complaint கொடுத்தால், நாங்கள் உரிய நேரத்தில் (F.I.R) நடவடிக்கை எடுப்போம்.
தட்டுங்கள் திறக்கப்படும்!
அற்புதப் படங்கள்.
ReplyDeleteஇனிய நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
ஆவணி திருவிழா, கருத்துக்கள், படங்கள் அருமை.
ReplyDeleteஅன்புடன்,
சிவசுந்தரம்.
ஆவணி திருவிழா அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு பச்சைசாற்றி வணங்குவது மிக விஷேசம் அநத படங்கள் பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள்.