Sunday, August 31, 2014

உவகை தரும் உலர் மலர்கள்..!








இயற்கையாக கிடைக்கும் மலர்களை உலரவைத்து 
உலர் மலர்கள் தயாரிக்கப்படுகின்றன. 

நீண்ட காலம் வாடாமல் இருக்கும் உலர்  மலர்கள் 
அலங்காரத்திற்கும், பரிசளிக்கவும் பயன்படுகின்றன. 

உலர்  மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன. 

கோவை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் உலர் மலர் கண்காட்சிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

உலர் மலர்களையும், உலர் இலைகளையும் தயாரிக்க நல்ல சூரியவெளிச்சம் நிலவும் நாட்களில் செடியின் மீதுள்ள காலைப்பனி நீங்கிய பின்னர் சேகரிக்க வேண்டும். 

அறுவடை செய்த பின்னரும் மலர்களில் பனி நீர்த்துளிகள் காணப்பட்டால் அவற்றை உறிஞ்சும் காகிதம் கொண்டு ஒற்றி அகற்றிவிட வேண்டும். 

நீர் பாய்ச்சிய உடன் மலர்களைப் பறிக்காமல் நீர்பாய்ச்சி ஓரிரு நாட்கள் கழித்து, பின்னரே செடிகளிலிருந்து மலர்களைப் பறிக்க வேண்டும்.

வெளிறாமல் புதிதாக மலர்ந்த மலர்களைத் தேவையான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். 

அறுவடை செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உலர்த்த வேண்டும். இல்லாவிடில் இதழ்கள் வாடி தேவையான மலர் வடிவத்தினை இழந்துவிடும். 

உலர்த்தும் முன்னர் தேவையற்ற பாகங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும். 

காகிதங்களுக்கிடையில் வைத்து அதன் உருவ அமைப்பு போன்றே அழுத்தி வைக்க வேண்டும். உறிஞ்சும் காகிதங்களுக்கு இடையிலோ அல்லது உலர் கலன்களில் செயற்கையாக பராமரிக்கப்படும் வெப்பத்திலோ மலர்களை உலர்த்தலாம்.

மலர் வகைகளுக்கேற்றவாறு உலர்த்தும் வெப்பநிலையும் உலர்த்தும் காலமும் மாறுபடுகிறது. 

மலர் வகைகளைத் தனித்தனியே உலர்த்த வேண்டும்.

கெலிகிரைசம், லிம்மோனியம் போன்ற மலர்களைத் தலைகீழாக கட்டி விடுவதன் மூலம் காற்றில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்துவதால் இம்மலர்கள் தங்கள் புத்தம் புதுத் தன்மையில் இருந்து மாற்றங்களையும் அடைவதில்லை.
இலைகளையும் மலர்களையும் வெள்ளை மணல், சிலிக்கா ஜெல், போராக்ஸ் போன்றவை அடங்கிய உலோக, பிளாஸ்டிக் அல்லது மண் கலன்களில் வைத்துஅறை வெப்ப நிலையிலேயே உலர்த்தலாம். 
உலர் ஊடகத்தில் வைக்கப்பட்ட மலர்களை தினமும் சூரிய ஒளியில் உலர வைப்பதன் மூலம் மலர்கள் விரைவில் உலர்ந்துவிடும். மின்சாரம் மூலம் வெப்பப்படுத்தப்படும் ஓவன்களிலும் மலர்களை மிக விரைவாக உலர்த்தலாம். 

ஒவ்வொரு வகை மலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படும். உதாரணமாக ரோஜா மலர்களை 40-45 டிகிரி செ. வெப்பநிலையில் 48 மணி நேரம் வைப்பதன் மூலம் உலர்த்தலாம். 

கிளாடியோலஸ் மலர்கள் இந்த வெப்பநிலையில் உலர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

கோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு(கமுகு) மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் உலர் மலர்கள் வகையை சார்ந்ததாகும்

மலர்களுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் அழகிற்காக சேர்க்கப் படுகின்றன.

பலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன. 
தனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. 
சேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.

உலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. . 


பல விதமான செடிகள் இந்தியாவில் இருப்பதால், உலர் மலர்கள்  ஏற்றுமதியில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது.

உலர் மலர்கள் என்றால் மலர்கள் மட்டுமல்லாது உலர்ந்த கிளைகள், விதைகள் மற்றும் பட்டைகளையும் குறிக்கும்

உலர் மலர்கள் மற்றும் செடிகள் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு
அந்நிய செலாவணி கிடைக்கிறது. 

சுமார் 500 வகையான உலர் மலர்கள் இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 கைவினைக் காகிதம், பெட்டிகள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள், சணல் பை, அலங்கார புகைப்படம் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது. 
உலர் மலர்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதனால அதன் அழகு கூடுகிறது. சிலிக்கா மற்றும் சிலிக்கா பசையை உபேயாகப்படுத்துவதால் மலர்களின் தரம் மேம்படுத்தப்படுவதுடன். மலர்கள் உதிர்வதும் தடுக்கப்படுகிறது.

மிக மெல்லிய மலர் மற்றும் செடிகள் மணமூட்டப்பட்ட மலர்கள் பிளாஸ்டிக் பைகளில வைக்கப்படுகிறது.  அலமாரி, டிராயர் மற்றும் குளியலறைகளில் வைக்கப்படும்.தாவர வகைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில், பேச்சிலர் பட்டன், கோழிக் கொண்டை, மல்லிகைப் பூ, ரோஜா இதழ்கள், காகிதப் பூ, வேப்ப மர  இலைகள் மற்றும் பழக் கொட்டைகள் ஆகியவை பாட்பொரி செய்யப்பயன்படுகிறது.
இங்கிலாந்து, இவ்வகை தயாரிப்புகளை நமது நாட்டிலிருந்து கொள்முதல் செய்கிறது..
உலர் மலர் தொட்டி - உலர்ந்த தண்டு மற்றும் சிறு கிளைகள் பயன்படுத்தப்படுகிறது.
 
பொதுவாக உலர்ந்த பருத்தியின் கூடு, பைன் மலர்கள், காய்ந்த மிளகாய், மற்றும் சுரைக்காய், புல், மர மல்லிகை, அஸ்பராகஸ் இலைகள், பெரணி இலைகளை, மரப்பட்டைகள் மற்றும் சிறு குச்சிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.உலர்மலர் கைவினைப் பொருட்கள்
 உலர் மலர் வர்த்தகத்தில்மிக அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
வாழ்த்து அட்டைகள், கவர்கள், மெழுகு தாங்கி, கண்ணாடி கிண்ணங்கள் ஆகியவை பல வகை நிறமுள்ள உலர் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது













 photo Epiphyllum_oxypetalum_animation.gif

12 comments:

  1. உலர் மலர்கள் அதை உலர்த்தும் விதம் பற்றி நிறைய தகவல்கள். மலர்களும் அருமை.

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete
  3. தகவல்களும் படங்களுமாகப் பகிர்வு நன்று. நன்றி.

    ReplyDelete
  4. மலர்கள் கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  5. அழகிய படங்களுடன் அரிய தகவல்களை அறியத் தந்த பதிவு!..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. உலர் மலர்கள் ( DRY FLOWERS ) பற்றி இதுவரை நான் அறிந்ததில்லை. உங்கள் பதிவின் மூலம் அவற்றைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள்...உலர்மலர்கள் பற்றி எங்கும் படிக்காத தகவல்கள்...நன்றி.

    ReplyDelete
  8. திரு. தமிழ் இளங்கோ சொல்வது போல் நானும் இது வரை இந்த உளர் மலர்கள் பற்றி அறிந்ததில்லை. அருமைஉயான தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  9. அருமையான பதிவு! படங்களும் அழகு!

    இங்கு நாம் வசிக்கும் நாட்டில் உலர் மலர்களுக்கென விசேட கடைகள் இருக்கின்றன. உலர்மலர் ஒப்பனை இங்குள்ளோர் மத்தியில்
    மிக வரவேற்புப் பெற்றதொன்று!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  10. புதிய செய்திகள் தாங்கி வந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. உலர் மலர்கள் பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் தங்கள் தகவல்கள் பல அறியாதவை....முக்கியமாக பல வகைப் பூக்கள் பற்றிய தகவல்கள். அறியாத பூக்கள்....புதிய, விளக்கமான தகவல்கள்...மிக மிக அரிதான, அருமையான பகிர்வு! குறித்தும் கொண்டோம்.....பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete