
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமெ
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே
என்று சிவபெருமானால் கொண்டாடப்பட்ட அழகன் ராமபிரான்.

கம்ப நாட்டாழ்வாரும், குல சேகர ஆழ்வாரும், திருவையாறு தியாக ராஜ சுவாமிகளும், பத்ராசல ராம தாசரும், துளசி தாசரும், இன்னும் எத்தனையோ மஹான்கள் ஸ்ரீ ராமனையே பரம்பொருளாக எத்தனையோ பாடல்களையும், காவியங்களையும் இயற்றி இருக்கிறார்கள்.

மதுராந்தகம் நகரம் ராஜராஜசோழனுக்கு முன்னர் ஆட்சி செய்த உத்தமசோழன் எனும் மதுராந்தக சோழன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டதால் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது.
நாளடைவில் மதுராந்தகம் என மருவிற்று.
வகுளாரண்ய சேத்ரம் (மகிழ மரங்கள் நிறைந்த இடம்) என்ற மற்றொரு பெயரும் உண்டு.
வகுளாரண்ய சேத்ரமான இந் நகருக்கு அருகில் சுகநதி (கிளியாறு) என்னும் நதி ஒடிக் கொண்டிருந்தது.
நதியின் கரையில் விபண்டக மகரிஷி என்னும் முனிவர் ஆசிரமம் அமைத்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் கூடிய ஸ்ரீகருணாகரப் பெருமாளை ஆராதித்து தவம் செய்து வந்தார்.
ஸ்ரீராமபிரான் வனவாஸ காலத்தில் ஸ்ரீலஷ்மணன், சீதையுடன் விபண்டக மகரிஷியின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சிறிது காலம் தங்கி ஸ்ரீகருணாபெருமாளை ஆராதித்தார்.
ஆசிரமத்துக்கு எழுந்தருள வேண்டும் என விபண்டகமகரிஷி ஸ்ரீராமபிரானிடம் வேண்டிக் கொண்டார்.
ராவண சம்ஹாரம் முடித்து ஸ்ரீராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு செல்லும்போது வழியில் விபண்டக மகரிஷியின் ஆசிரமத்தை கடந்து போகும் போது அருகிலுள்ள பர்வதமலை விமானத்தை தடுத்தது.
தற்போது, இந்த மலை ஞானகிரீஸ்வரன் மலை என்று அழைக்கப்படுகிறது.
அப்போது, ஸ்ரீராமபிரானுக்கு விபண்டக மகரிஷிக்கு அளித்த வாக்கு நினைவுக்கு வந்தது.
புஷ்ப விமானத்தை விபண்டக மகரிஷியின் ஆசிரமத்துக்கு திருப்பி விமானத்திலிருந்து இளையபெருமாள் ஸ்ரீலஷ்மணனோடு, சீதாபிராட்டியின் இடதுகையை ஸ்ரீராமபிரான் வலக்கையால் பற்றியவாறு இறங்கி திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தாக புராணம் கூறுகிறது.
மூலஸ்தானத்தில் ராமர், சீதையின் கையை பிடித்துக் கொண்டிருப்பது போல திருக்கல்யாண கோலம் அருமையானது ....
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 80.கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் மதுராந்தகம்.
வைணவ புண்ணிய தலமான ஸ்ரீஏரி காத்த ராமர் எனும் கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது.
செங்கை ஆட்சியராக இருந்த ஆங்கிலேய கர்னல் லயோனல் பிளேசுவிடம் பொதுமக்கள், "மதுராந்தகம் ஏரி வருடா வருடம் பெய்யும் மழையால் உடைந்து வருவதனால் ஊருக்கு சேதம் விளைகிறது. ஆகவே, ஏரியில் மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
ராமர் கோயிலின் ஜனகவல்லி தாயார் சன்னதி சிதலமடைந்து உள்ளது. அதன்வெளிப்பாடாக ஏரி உடையலாம் என்றும் கூற
ஆட்சியர் லயோனல் பிளேசு, ஏரியை உடைக்காமல் ராமர் காப்பாற்றினால் கோயிலை திருப்பணி செய்து தருவேன் என்று கூறியுள்ளார்.
அந்த ஆண்டு பெருமளவு மழை பெய்து ஏரி நிரம்பி வழிந்ததும், ஏரியும் உடையும் அளவிற்கு நீர் வெளியேறியது.
அன்றிரவு ஏரிக்கு சென்று பார்வையிட்டார் லயோனல் பிளேசு. அப்போது, ஏரி உடையாமல் ஸ்ரீராமரும், லஷ்மணரும் பாதுகாத்து கொண்டிருந்த காட்சியைக் கண்டார் பிளேசு.

ஆட்சியர் சொன்னது போல் கோயிலின் ஜனகவல்லி தாயார் சன்னதியில் திருப்பணியை செய்து கொடுத்தார்.
இப்போதும், ஜனகவல்லி தாயார் சன்னதியில் மண்டபத்தில் கல்வெட்டில் "இந்த தர்மம் கும்பினிசாகிர் ஆட்சியர் லயோனல் பிளேசு துரை அவர்களது' என்று பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
வைணவ ஆச்சார்யரான ஸ்ரீராமானுஜருக்கு இத்திருத்தலத்திலுள்ள மகிழ மரத்தினடியில் அவரது குரு பெரியநம்பிகள் மூலமாக பஞ்சஸம்காரம் மந்திர உபதேசம் நடைபெற்றது.
மந்திர உபதேசத்தில் த்வயம் என்ற மந்திரம் உபதேசிக்கப்பட்டதால் த்வயம் விளைந்த திருப்பதி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
வைணவ ஆச்சார்யர்களாகிய பெரியநம்பிகள், ராமானுஜர், மகா தேசிகன், திருவரங்கபெருமாளரையர் ஆகியோர் மங்களாசாஸனம் செய்யப்பட்ட சிறப்பு உடையது..
திருமழிசை ஆழ்வார் சித்தி பெற்ற தலம்.
திருக்கோயிலின் வரலாறு குறித்த கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் கொடி மரம் அருகிலுள்ள மண்டபத்தின் தூணில் இருப்பதைக் காணலாம்.
மூலவர் ஸ்ரீசக்கரவர்த்தி திருமகன், கல்யாணராமன் (ஸ்ரீராமர் சீதையின் கையை பிடித்த கல்யாண திருக்கோலம்)

உற்சவர் ஸ்ரீகருணாகரப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.
கோயிலின் எதிரில் ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதியும், அதனருகில் ராம வனவாஸ காலத்தில் நீராடிய ராமதீர்த்தமும் உள்ளது.
கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவமும், பங்குனியில் ராமநவமியும்,
தைமாதம் 3-ம் நாள் கருங்குழி பர்வதமலைக்கு பரிவேட்டையும்,
விநாயகர் சதுர்த்தி மறுநாள் ராமானுஜர் தீட்சை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

அது... அந்த பயம் இருக்கட்டும்!
ReplyDeleteஎங்கங்க இவ்வளவு படம் பிடிக்கிறீங்க?
Dear thozi,
ReplyDeleteIn your blog,Marvellous pics displayed by you are mostly fascinated to me.
மதுராந்தகம் கோவில் வரலாறு படிக்க
ReplyDeleteஆச்சரியமாக இருந்தது
ஆங்கிலேயர் பிளேசு குறித்த தகவலும்
பெருமைப்படத்தக்கதாய் இருந்தது
படங்கள் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படம் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய படம். அழகிய படங்கள். வெளி நாட்டவர் சொன்னால்தான் எதையும் நம்புவேன் என்று சொல்லும் நிறைய பேர் இந்த ஏரி காத்த ராமர் கதையை படிக்கட்டும்.
ReplyDeleteமதுரமாய் அருளும் மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் வரலாறு படிக்க மதுரமாய் இருந்தது. அழகான ஸ்ரீ கோதண்ட ராமரை படங்களில் தரிசித்தேன்.
ReplyDeleteஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே; சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே!
தகவல்களுக்கு நன்றி. மகிழ்ச்சி.
பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மதுராந்தகம் பற்றி அழகான படங்களுடன் சுவாரசியமாய் தகவல்கள்.
ReplyDelete// மந்திர உபதேசத்தில் திவ்யம் என்ற மந்திரம் திவ்யம் விளைந்த திருப்பதி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.//
அது ’திவ்யம்’ இல்லை “த்வயம்” அப்படின்னா ரெண்டு என்று அர்த்தம். இரண்டு மந்திரங்கள். வைணவர்களுக்கு த்வயம் முக்கியம். ஆசார்யர்கள் மூலம் உபதேசம் பெறுவார்கள்.
@ ரிஷபன் said...//
ReplyDeleteஆம் .த்வயமந்திர உபதேசம் பரம்பரையாக சங்கு சக்ர முத்திரையுடன் நானும் திருவரங்கத்தில் வாங்கியிருக்கிறேன்.
அபடித்தான் பதிந்தேன். ஏதோ தவறு ஏற்பட்டிருக்கிறது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன்.
கோயிலில்லா ஊரிலே குடியிருக்க
ReplyDeleteவேண்டாம் என்பது பழமொழி
நீங்க எல்லாக் கோயிலையும்
அவங்கங்க வீட்டுக்கே கொண்டு
போறீங்க
இங்களுக்கு கோடி புண்ணியம்
ஆகுங்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
கோயிலில்லா ஊரிலே குடியிருக்க
ReplyDeleteவேண்டாம் என்பது பழமொழி
நீங்க எல்லாக் கோயிலையும்
அவங்கங்க வீட்டுக்கே கொண்டு
போறீங்க
இங்களுக்கு கோடி புண்ணியம்
ஆகுங்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
மிகவும் இன்ஃபர்மட்டிவ் வாக இருந்தது . மிக்க நன்றி
ReplyDeleteரொம்ப நாளாவேப் பார்க்கறேன். எப்படி இத்தனை விசயங்களை சொல்றீங்க?. நைஸ்..யூஸ்ஃபுல்.பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteபடங்கள் பிரமிக்க வைக்கின்றன. சிறுவயதில் மதுராந்தகம் கோவிலுக்கு அடிக்கடி போயிருக்கிறேன். கழுகு கதையும் எடுத்துச் சொல்லியிருக்கலாமே?
ReplyDeleteராமர் பட்டாபிசேகக் காட்சி கம்பீரமாக ராமர்,நளினாமாக சீதை, பணிவுடன் லட்சுமணன், அனுமன் - காண கோடி கண்கள் வேண்டும்.
ReplyDelete;)
ReplyDeleteகுருர்-ப்ரும்மா குருர்-விஷ்ணு
குருர்-தேவோ மஹேஷ்வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
652+2+1=655
ReplyDelete