

வண்ணப்பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா -- என்று
வண்ணமயமாய் பாடிய முறுக்குமீசை முண்டாசுக் கவி பாரதியாரின்
வாக்கை வண்ணச்சிறகுகளாக அணிந்து ,மனதைக் கொள்ளை கொண்ட
வண்ணப்பற்வைகள் சிலவற்றின் வண்ணக்கோலங்கள் எழிலாய் பார்வைக்கு...
வண்ணக்கலாப மயிலின் ஆடிவரும் அழகுக்கோலம் காண..
வண்ணமயமாய் பாடிய முறுக்குமீசை முண்டாசுக் கவி பாரதியாரின்
வாக்கை வண்ணச்சிறகுகளாக அணிந்து ,மனதைக் கொள்ளை கொண்ட
வண்ணப்பற்வைகள் சிலவற்றின் வண்ணக்கோலங்கள் எழிலாய் பார்வைக்கு...
வண்ணக்கலாப மயிலின் ஆடிவரும் அழகுக்கோலம் காண..

அழகென்ற சொல்லும் அழகு பெற அழகுவண்ணம் காட்டும் காட்சி..

ஆயிரம் கண்கள் போதாதே இந்த அழகைக் காண்பதற்கு வண்ணக்கிளியே..

என்மனவானில் சிறகு விரிக்கும் வண்ணப்பறவைகள்..இன்று வந்ததே புதிய பறவை.

கிளியே கிளியே கிளியக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா

வசந்தம் வந்தது என்று வரவேற்கும் வாய்ப்பு...

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு..உலகம் முழுதும் பறந்து பறந்து
சிட்டாய் நீயும் தமிழ் பண்பாடு...

மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-


சிந்து பாடும் பறவை நாம் சிறகடித்துப் பற்ந்திடுவோம்
பாஸ்போர்ட்டா விசாவா என்னதேவை எம்க்கு..















அழகு, மிகமிக அழகு; பறவைகளின் எழில் மிகு அழகு பரவசத்தினை அளிக்கிறது. பத்மாசூரி
ReplyDeleteஅழகான பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteகிளிகொஞ்சும் அழகு! அனைத்துப்படங்களிலும்;
ReplyDeleteபறவையாய் மாறிப்போய் பறந்து செல்லத்தான் மனதில் ஆசை!
சில பறவைகளுக்கு, அதன் உடல் எடையைவிட கூடுதலாக அந்த அலகின் எடை.
ஒவ்வொன்றின் அழகை கீழே சிற்சில வரிகளில் எடுத்துச்சொல்லியுள்ளது, ரசிப்புக்கு இனிமை சேர்ப்பதாக.
அருமை அருமை அருமை!
கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தியதற்கு
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தீபஒளி அழகு.
ReplyDeleteபறவைகள் எல்லாம் அழகு.
வண்ணபறைவகள் கண்டு மனது மகிழ்ச்சி அடைந்தேன்.
நன்றி.
ஆஹா, அந்த மயிலின் கழுத்துக்கலர் எவ்ளோ ப்ரைட்? ப்ரைட்டோ ப்ரைட்டு!
ReplyDeleteதோகையை விரித்ததும், நம் உடலும் மனமும் சிலிர்க்குதே!
சரணாலயம் போனால் கூட
ReplyDeleteஇத்தனை அழகிய பறவைகளைக் காண முடியுமா
என்பது சந்தேகமே
மனதைக் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
படம் 2
ReplyDeleteகழுத்தில் வரிவரியான சுருக்கங்கள் அசத்தலான படைப்பு.
உடலில் பல வண்ணங்கள்.
வாலில் கடுகு தாளித்தது போன்ற அழகிய வர்ணங்கள். அடடா!
தனி அழகு தானே!
அழகு பறவைகள் மனதை கவருகின்றன
ReplyDeleteபடம் 3
ReplyDeleteபஞ்சவர்ணக்கிளி படு ஜோர்
படம் 4
அந்தக்குட்டிப்பறவைக்கு அலகின் வெயிட் ரொம்ப அதிகமோ, பாவம்.
எண்ஜான் உடம்புக்கு இங்கு அலகே பிரதானமோ?
படம் 5
ReplyDeleteதன் ஜோடியைத்தேடுதோ அக்காவின் கண்கள்!
படம் 6
அடடா அரிவாள் போன்ற அசத்தலான மூக்கு. அந்தக்கால ப்ளைமெளத் கார் திரும்புவது போல .. அடடா!
படம் 7
சிட்டுக்குருவி டேக் ஆஃப் செய்ய ரெடியோ!
படம் 8
மாயக்குயிலோர் குரல் கொடுக்க மற்றொன்று பதில் அளிக்க ....
என்னதான் பேசுகின்றதோ!
படம் 9 to 23
ReplyDeleteஇவைகளில் பலவற்றை நான் பாஸ்போட் ஆபீஸ் வாசலிலும், அயல் நாட்டுத்தூதரக அலுவலக வாசலிலும், கால் கடுக்க கும்பலில் க்யூவில் நிற்கும்போது பார்த்துள்ளேனே!
அவை என்னைப்பார்த்து பரிகசித்து சிரித்தபடியே பறந்து சென்றதே!
தயவுசெய்து மன்னிக்கவும் நேற்றே குறிப்பிட மறந்து விட்டேன்
ReplyDeleteநீங்களும் உங்க ஊர் பற்றி தொடர் பதிவு எழுத அழைக்கின்றேன் .
வணக்கம் உங்களின் வழமையான இடுகைக்கு நடுவே மிகவும் நாம் விரும்புகிற இயற்க்கை கொஞ்சும் பறவைகளின் வண்ண படங்களுடன் அதற்கேற்ற குறிப்புகளுடன் அபாரம் பாராட்டுகள் நன்றி .
ReplyDeleteநல்ல படம்
ReplyDeleteதொடருங்கள் ...
அன்புடன்
கருணா கார்த்திகேயன்
lovely birds, beautiful post
ReplyDeleteபாரதியாரும் தான் இயற்றிய கண்ணன் என் காதலனில்,
ReplyDelete"ஆசை பெறவிழிக்கும் மான்கள் --- உள்ளம்
அஞ்சக் குரல் பழகும் புலிகள்--- நல்ல
நேசக் கவிதை சொல்லும் பறவை........."
என்று பாடியுள்ளார்
மற்ற "துணையும் இணையும்" {பறவை உட்பட} தாமரை மதுரையில் (சந்திர வம்சத்தில்) காண்க. பத்மாசூரி
ReplyDeletesuperrrrrrrrrrrrr
ReplyDeleteகண் கவரும் நிறங்கள்...அழகிய பறவைகளின் படங்கள்...
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteஅதற்கேற்ற வர்ணனை.
காணக் கண் கோடி வேண்டும்.
அழகு பதிவு.
வாழ்த்துக்கள்.
அருமையான கலர்ஃபுல் பறவைகள். ரசிக்கிற மனதுக்கு தான் இப்படி வசீகரமாய் தொகுக்க தோன்றும்.
ReplyDeleteமிக அழகான படங்கள்.
ReplyDeleteஆகா இறைவனின் படைப்பில் எத்தனை அற்புதங்கள்!....
ReplyDeleteஉலகினில் உள்ள ஒவ்வொரு விடயமும் அவன் மனம்போல்
அற்புதமானவையே.மிக அழகாக இந்தப் பறவைகளின்
புகைப்படங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.அத்துடன் ஒரு சின்ன வருத்தம்
இங்கே எரிகின்ற அந்த இரு விளக்குகள்போல் ஒரு விளக்கை
என் தளத்தில் எரியவைக்க முடியவில்லையே!....நன்றி
சகோதரி......
;)
ReplyDeleteகுருர்-ப்ரும்மா குருர்-விஷ்ணு
குருர்-தேவோ மஹேஷ்வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
655+7+1=663
ReplyDelete