சமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
திகிலான தலவரலாறு கேள்விப்பட்டோம்.
மகாகவி பாரதியாரின் யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடல் மனதில் ஒலித்தது.
உயிர்பலி மறுத்த அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி
அம்பரன்- அம்பன் என்ற இரண்டு அசுரகுல சகோதரர்களில், அம்பரனை அழித்த பத்ரகாளி அம்பகரத்தூர் தலத்தில் அஷ்டபுஜ பத்ரகாளியாகக் காட்சி தருகிறாள்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்த அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் ஆலயம், காரைக்கால் மாவட்டத்தில், சனி பகவானின் திருத்தலமான திருநள்ளாறிலிருந்து மேற்கே சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள்.
நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி; இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள்.
பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில் எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
நெடிய தோற்றம் கொண்ட இந்த அன்னையின் உருவத்தை அருகில் சென்று காணும்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது.
மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் அழகிய சுதை வடிவங்கள் வரவேற்கின்றன...
முன்பாக உள்ள மண்டபத்தில் பலிபீடம், மகிஷபீடம் ஆகியவை உள்ளன. எருமை வடிவெடுத்த அம்பரனை தேவி அந்த இடத்தில்தான் சம்ஹரித்தபடியால் அந்த இடம் மகிஷபீடம் எனப்படுகிறது.
காளியம்மனுக்கு இடப்புறம், வலக்கரத்தில் அரிவாளும் இடக்கரத்தில் பெரிய தடியும் ஏந்தி கிழக்கு முகமாகப் பெத்தார்ணர் கோவில் கொண்டுள்ளார்.
அவருக்கு அருகில் பெரியாச்சியம்மன் உள்ளாள்.
முன்னாளில் இந்த ஆலயத்தில் எருமைக்கடா பலி நடந்து வந்தது. அப்போது பூசாரி இந்த பெத்தார்ணரிடம் அனுமதிபெற்று அவரிடம் அரிவாள் வாங்குவாராம்!
ஆலயத்தில் சித்திரை மாதக் கடைசி யில் பெருவிழா நடைபெறுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாடும் பௌர்ணமியில் சிறப்பு வழிபாடும் நடைபெறு கிறது.
அப்பொழுது அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபடுகின்றனர்.
தற்போது இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
ஒருமுறை சிதம்பரத்திலிருந்து பெரிய முரட்டு எருமைக்கடா ஒன்று தானாக கட்டவிழ்த்து, வைகாசி இரண்டாவது செவ்வாய்க்கிழமை நாளில் பகல் 12.00 மணிக்கு அன்னையின் சந்நிதி முன்பு வந்து நின்று, வெட்டு ஏற்று வீடு பேறு பெற்றதாகச் செவி வழிச் செய்தியொன்று உள்ளது.
1964-ஆம் ஆண்டு அரசு வழங்கிய உத்தரவுப்படி இந்த கடா வெட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டது.
அதற்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மதியம் 12.00 மணிக்கு மகிஷாசுர சம்ஹார நினைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த அம்பகரத்தூரில் பார்வதீஸ்வரி சமேத பார்வதீஸ்வரர் சிவாலயமும்; அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் ஆலயமும்; மகாமாரியம்மன் ஆலயமும் உள்ளன.
இந்த மகாமாரியம்மனின் பூச்சொரி விழாவையடுத்து இந்த பத்ரகாளியம்மன் ஆலய விழா காப்புக் கட்டலுடன் ஆரம்பிக்கிறது.
அதிகாலையில்
ReplyDeleteகாளியின் அற்புத தரிசனம்
உங்களால் கிட்டியது
அனைவரின் நாட்களையும்
சிறந்த முறையில் துவக்கிவைக்கும்
உங்கள் முயற்சிக்கு
என் மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள்
//மகாகவி பாரதியாரின்
ReplyDeleteயாதுமாகி நின்றாய் காளி
என்ற பாடல் மனதில் ஒலித்தது.//
ஆம் இந்தப்பதிவைப்படிக்கும்போது என் மனதிலும் ஒலித்தது. நன்றி.
"அற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி" வரலாற்றை அற்புதமாக அழகாக், சுருக்கமாக், படங்களுடன் அளித்து அசத்தியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
அருமையான பதிவு.
ReplyDeleteபுதிய புதிய செய்திகளாக கொண்டு வந்து கொட்டுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
எனக்கு காளி என்றால் பக்தி அதிகம். எங்கள் ஊர் மடப்புரம் காளியின் கருணையினால். நீங்கள் செல்லும் கோவில்களின் அடையாளம் காட்டும் பெரிய ஊரின் பெயரை labelஆக போட்டால், அந்தபக்கம் செல்லும்போது உதவும். இப்போது தேட வேண்டியதாக உள்ளது. உ-ம், இன்றைய பதிவை கும்பகோணம் என்று குறிப்பிடுங்கள்.
ReplyDelete@Ramani said...//
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
@ FOOD said...
ReplyDeleteமுதல் வருகை பதிவு. கரண்ட் வந்ததும் மீள வருகிறேன்//
வாருங்கள். நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் s//
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete@Rathnavel said...//
ReplyDeleteவாழ்ஹ்துக்களுக்கு நன்றி.
@சாகம்பரி said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
I went to the temple, while i am in service along with my collegues. One of friends sisters husband familys guladaivam this Temple. Very nice photos and informations.
ReplyDeleteThanks for sharing Rajeswari.
viji
காளி தரிசனம்
ReplyDeleteதந்த உங்களுக்கு
கோடி புண்ணியம்
நன்றி பகின்றதர்க்கு
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete567+2+1=570 ;)
ReplyDelete