எல்லையற்ற ஆகாயத்தில் எண்ணற்ற வண்ணங்கள்
அழகுக் கோலம் காட்டி நம் சிந்தையை மயக்குகின்றன.
அழகுக் கோலம் காட்டி நம் சிந்தையை மயக்குகின்றன.
வானத்திற்குச் சற்றும் சளைக்காமல் ஆழங்காண முடியாததாகவும், நாம் வாழும் பூமிப் பந்தின் முக்கால் பாகமாக நிலப்பகுதியின் நாற்புறமும் அரணாகச் சூழ்ந்து நீலப் பட்டாடையாக எழில் கோலம் பூண்டு விளங்கும் கடல் அன்னையும் வியக்கவைக்கும் வண்ணமயமான உயிரினங்களைத் தன்னகத்தே கொண்டு வனப்பினை மட்டுமல்லாமல் பொக்கிஷமாய் விலைமதிப்புள்ள புதையல்களையும் கொண்டு விளங்கும் கடல் வியப்புக்குரியது.
அவற்றுள் என் சிந்தை கவந்த சில படைப்புகளைப் பகிர்கிறேன்.
கடலுக்கடியில் நாம் இதுவரை காணாத பல அரிய
வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அரிய உயிரினங்களை புகைப்படமெடுப்பதை சில புகைப்படக்
கலைஞர்கள் தங்களது மூச்சாக எண்ணிச் செயற்படுகின்றனர்.
தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்துக்கள் நிறைந்த
கடலடியில் துணிகரமாக இவற்றை மேற்கொள்கின்றனர்.
மீனே மீனே மீனம்மா ..
அழகிய கண்களை மீனுக்கு ஒப்பிடுவது சரிதான் போல அழகு மீன்கள்..
கடல் குதிரைகளில் ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரிப்பதை
நீங்கள் அறிவீர்களா?
கடல் குதிரைகளிடையே அதிகளவான சீண்டல் அதன்பின்பு
பெண்கடல் குதிரையில் ஏற்படும் உடல் சிலிர்த்தல்
இதனால் ஆயிரக்கணக்கான முட்டைகளை வியத்தகும்
வகையில் ஆணின் வயிற்றில் உள்ள பையில்
முட்டைகளை இடுகிறது.
ஆணின் வயிற்றில் சுரக்கும் ஒரு வகை திரவம்தான்
குட்டிகளுக்கு உணவு.இரண்டு வாரங்கள் கழித்து
மினியேச்சர் கடல் குதிரைகள் ஒரு பேரணியாக
ஆண் கடல்குதிரையின் பையில் இருந்து வெளிவருகிறது.
பாம்பாய் தோற்றம் காட்டி பயமுறுத்துகிறது...
வானிலே கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைத்
தோற்கடிக்கும் எண்ணத்தில் வண்ணம் காட்டும் கடல் மீன்கள்.......
அழகென்ற சொல்லுக்கு மீன் என்று பெயரா...!????
கடல் புஷ்பமா என்ன? எத்தனை அழகு....!
கொட்டிக் கிடக்கும் கொள்ளை அழகு....!
வரிக் குதிரை மண்ணில் ஓடும்.. போட்டியாக இது தண்ணீரில் நீந்தும்....!
ஆக்டோபஸ் நடனம்..
நண்டுப் பிடி .. எல்லாவற்றிற்கும் எட்டுத்திசை நகர்வு உண்டு.
நண்டுக்கு மட்டும் பத்துத் திசையிலும் செல்ல முடியும்.
எட்டுத்திசையொடு மேலும், கீழும் நகரமுடியுமே.
நண்டு கொழுத்தால் வலையில் தங்குமா என்ன?
மானுக்குப் போட்டியாக புள்ளி
வைத்துக் கொண்டதோ..
எட்டுக் கையாலும் பற்றி இழுக்கும்..
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டே..
மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் வண்ணமீன்களைக் கண்டால்
மனக்கவலைகள் பஞ்சாய் பறந்துவிடுமே.
இதயம் மகிழ்ச்சியில் துள்ள ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வந்துவிடும்.
கண்ணைப் பறிக்கும் அழகு...
|
வண்ண வண்ணப் படங்களின் மூலம் எங்களை நீர்மூழ்கிப் பயணம் அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள். அனைத்துப் படங்களும் தகவல்களும் அருமை. குறிப்பாக அனிமேசன் படங்கள்....
ReplyDelete@ FOOD said...
ReplyDeleteவணக்கம்.முதல் வருகை.//
இன்றைய பகிர்வும் அற்புதம். பழைய கட்டிடம் என்று புறந்தள்ளாமல், புதுமை அதற்குள் புகுத்தப்பட்டுள்ளது.சிந்திக்க வைக்கும்.//
Thank you Sir.
@கலாநேசன் said...//
ReplyDelete. அனைத்துப் படங்களும் தகவல்களும் அருமை. குறிப்பாக அனிமேசன் படங்கள்...//
Thank you for comment.
கண்ணை கவரம் அருமையான படங்கள் காலையெ நல்லதொரு மனநிலைய நன்றீங்க..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
மீன்களின் அழகிய படத்தொகுப்பு கண்களைக் குளிர்விக்கிறது.
ReplyDeleteஇந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு தெரிகிறது..
ReplyDeleteநன்றி ..
தங்களின் விந்தை வண்ணங்கள் என் சிந்தையைக் கவர்ந்தன.
ReplyDeleteகடலுக்குள் சென்று வந்த கடும் உழைப்பு பளிச்சிடுகிறது.
அழகிய கண்களோடு கலர் மீன்கள், கடல்வாழ் பிராணிகள், ஆக்டோபஸ் நடனம், நண்டுப்பிடி அருமையோ அருமை.
திராக்ஷைக்கொத்துபோல, கலர்கலரான வண்ணங்களில் அழகிய பலூன்களுடன் பறந்திடும் அந்த வீடு, அன்னப்பறவைகளின் அழகிய அணிவகுப்பு அடடா, அற்புதம்.
புதுமையான முறையில், தண்ணி தாங்கியில் கட்டப்பட்டுள்ள, டீலக்ஸ் வீடு .... ஆஹாஹா அபார அழகு.
//கடல் குதிரைகளில் ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரிப்பதை நீங்கள் அறிவீர்களா?//
சத்தியமாத்தெரியாதுங்கோ !
//கடல் குதிரைகளிடையே அதிகளவான சீண்டல் அதன்பின்பு பெண்கடல் குதிரையில் ஏற்படும் உடல் சிலிர்த்தல் இதனால் ஆயிரக்கணக்கான முட்டைகளை வியத்தகும் வகையில் ஆணின் வயிற்றில் உள்ள பையில் முட்டைகளை இடுகிறது.//
பாவம் அந்த ஆண் கடல் குதிரைகள்.
வாயும் வயிறுமாக ரொம்பவும் சிரமப்படுமே, மசக்கை படுத்தியெடுக்குமே! என்ன இப்படியொரு ஆண் ஜன்மம் என்று நினைக்கத்தோன்றுகிறது.
கடலளவு ஆழமுள்ள அழகிய பதிவுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நீங்கள் நீடூழி வாழ்க !
பிரியமுடன் vgk
அற்புதமான பதிவு.
ReplyDeleteஅழகான படங்கள் நிறைய தொகுக்கப் பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு பதிவிற்கும் நிறைய உழைக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
அருமை அருமை
ReplyDeleteகடலுக்குள் சென்றுவந்ததைப்போல
வண்ணமயமான அனுபவம்
பதிவர்களுக்காக பதிவுலகுக்காக
தாங்கள் அர்பணிப்பு உணர்வுடன்
செயல்படும் விதம் பிரமிக்கவைக்கிறது
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்
அழகான படங்கள். அருமையான பகிர்வு, பதிவு. வேறென்ன சொல்ல. ? தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteமலேசியாவில் கோரல் ஐலண்டில் நேரடியாக கடலுக்கடியில் சில ஆற்புத படைப்புகளை கண்டு இரசித்தேன்.
ReplyDeleteஅவற்றை ஞாபகமூட்டுகின்றன இப்பதிவில் காணப்படும் மீண்கள்.
வல்ல இறைவனின் படைப்புகளை காண்பதில் அலாதி மகிழ்ச்சி
@ ♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteகண்ணை கவரம் அருமையான படங்கள் காலையெ நல்லதொரு மனநிலைய நன்றீங்க..//
Thank you.
@ சத்ரியன் said...
ReplyDeleteமீன்களின் அழகிய படத்தொகுப்பு கண்களைக் குளிர்விக்கிறது.//
நன்றீங்க...
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஇந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு தெரிகிறது..
நன்றி ..//
Thank you sir.
@வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதங்களின் விந்தை வண்ணங்கள் என் சிந்தையைக் கவர்ந்தன.
கடலளவு ஆழமுள்ள அழகிய பதிவுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நீங்கள் நீடூழி வாழ்க !
பிரியமுடன் vgk//
Thank you very much sir.
@ Rathnavel said...
ReplyDeleteஅற்புதமான பதிவு.
அழகான படங்கள் நிறைய தொகுக்கப் பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு பதிவிற்கும் நிறைய உழைக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.//
Thank you sir.
@ Ramani said...
ReplyDeleteஅருமை அருமை
கடலுக்குள் சென்றுவந்ததைப்போல
வண்ணமயமான அனுபவம்
பதிவர்களுக்காக பதிவுலகுக்காக
தாங்கள் அர்பணிப்பு உணர்வுடன்
செயல்படும் விதம் பிரமிக்கவைக்கிறது
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்//
Thank you sir.
@ G.M Balasubramaniam said...
ReplyDeleteஅழகான படங்கள். அருமையான பகிர்வு, பதிவு. வேறென்ன சொல்ல. ? தொடர வாழ்த்துக்கள்.//
Thank you sir,.
நட்புடன் ஜமால் said...//
ReplyDeleteவல்ல இறைவனின் படைப்புகளை காண்பதில் அலாதி மகிழ்ச்சி//
Thank you sir.
அருமை. ஆண் கடல் குதிரை கர்ப்பம் ஆச்சர்யம்.
ReplyDeleteகடவுள் ஒரு ஓவியர். தூரிகையின் வண்ணங்கள் அழகிய படங்களாய்... சில பயமுறுத்துகின்றன.
ReplyDelete@ஸ்ரீராம். said...
ReplyDeleteஅருமை. ஆண் கடல் குதிரை கர்ப்பம் ஆச்சர்யம்.//
கருத்துக்கு நன்றி.
@ சாகம்பரி said...
ReplyDeleteகடவுள் ஒரு ஓவியர். தூரிகையின் வண்ணங்கள் அழகிய படங்களாய்... சில பயமுறுத்துகின்றன.//
வாங்க சாகம்பரி. கருத்துக்கு நன்றி.
மீன் தான் இடும் முட்டைகளை கண்களால் பார்த்து குஞ்சுகளை பொரிக்கும்.அது போல் மதுரை மீனாக்ஷ்சியும் தன் கண்களால் மக்களை காப்பதாக கூறுவர். தங்கள் பதிவுகளும் எங்களை என்றும் மகிழ்விக்க மீனாக்ஷ்சி தங்களுக்கு அருள வாழ்த்தும்-----பத்மாசூரி.
ReplyDelete@ சந்திர வம்சம் said...//
ReplyDeleteமதுரை மீனாட்சியின் அருள் வாழ்த்து கூறி ஆசீர்வதித்த சந்திரவம்சத்தின் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.
அனைத்துப் படங்களும் அருமை..Fishery science படிப்பவர்களுக்கும் இந்த பதிவு உதவும்..
ReplyDelete@குணசேகரன்... said...
ReplyDeleteஅனைத்துப் படங்களும் அருமை..Fishery science படிப்பவர்களுக்கும் இந்த பதிவு உதவும்..//
தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.
அழகோ அழகுப் படங்கள் ~
ReplyDeleteஇன்றுதான் பார்த்தேன் பதிவை மீன் படத்தொகுப்பு மிக அருமை இன்னும் பல அபூர்வ மீன் படங்கள் உள்ளன அவற்றை அடுத்த தொகுப்பாக வெளியிடுங்கள்
ReplyDeleteஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ஹேமா said...
ReplyDeleteஅழகோ அழகுப் படங்கள் //
Thank you.
@ கிருபா said...
ReplyDeleteஇன்றுதான் பார்த்தேன் பதிவை மீன் படத்தொகுப்பு மிக அருமை இன்னும் பல அபூர்வ மீன் படங்கள் உள்ளன அவற்றை அடுத்த தொகுப்பாக வெளியிடுங்கள்//
Thank you. I do it sure.
@உலக சினிமா ரசிகன் said...
ReplyDeleteஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்./
Thank you for Introduce.
584+2+1=587
ReplyDelete;)) என் பின்னூட்டத்தை நானே மீண்டும் படித்துவிட்டு குபீரென்று சிரித்தேன் ;))