சமீபத்திய வலை உலாவில் என் மனம் கவர்ந்த சில சிற்பங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்குள் புதிய சிந்தனையும் சாதனை செய்யும் மனப்பான்மையும் வேரோடி கிடக்கிறது.
என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்குள் புதிய சிந்தனையும் சாதனை செய்யும் மனப்பான்மையும் வேரோடி கிடக்கிறது.
விவசாயிகள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் பாடு அரிசி, கோதுமை, கரும்பு பயிரிட்டு மூன்று போகம் விளைவித்து காட்டிவிட்டு போகவேண்டியதுதானே. அதுதான் இல்லை. நாங்களும் வித்தியாசமாக ஏதாவது சாதிப்போம் என்று ஜப்பானில் உள்ள இனகாடேட் கிராம மக்கள் கிளம்பினர்.
சுமார் 2500 ஏக்கர் நிலத்தில், வெவ்வேறு நிறங்களில் நெல் பயிரிட்டு அதில் பல்வேறு உருவங்களை வரவழைக்கத் தொடங்கினர். இது நடந்தது 1993 இல். இந்த பயிரோவியங்களில் நெப்போலியன், இவாகி மலை, பாரம்பரிய ஜப்பானியர், சுனாமி அலை என பயிர் உருவங்கள் பல பிம்பங்கள் காட்டுகின்றன.
2000ஆம் ஆண்டில், ஜப்பானின் புகழ்பெற்ற மரச்சிற்பியான ஷராக்கு உள்ளிட்ட கலைஞர்களின் அரிய படைப்புகளைக் கூட பயிரோவியங்களாக இவர்கள் உருவாக்கி திகைக்க வைத்தனர்.
கணினி காலம் வந்ததும் அதற்கேற்ப இக்கிராம மக்களும் மாறினர். கணிணி தொழில்நுட்ப உதவி மூலம் கச்சிதமாக, வேண்டிய அளவில் இந்த பயிர் உருவங்களை உருவாக்குகிறார்கள். பல்வேறு அனிமேஷன் உருவங்களைக்கூட பயிர்களை வைத்து படைக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி.
இந்த அதிசயங்களைக் காண ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இனகாடேட் கிராமத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இதனால் கிராமத்தின் வருமானமும் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது. உயிரோவியங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஜப்பானியரின் பயிரோவியங்களை காணுங்கள்.
மணல் கோட்டை கட்டி மனத்தில் வாழும் மனிதர்!
சுதர்சன் பட்நாயக்… தன்னுடைய சிற்பக்கலைத்திறனால் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர். மணல் சிற்பங்களை படைப்பதில் வல்லவரான இவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதர்சன் பட்நாயக் சிறுவனாக இருக்கும்போதே கடற்கரைப் பகுதிக்குச் சென்று மணல் கோட்டைகளை கட்டுவார். அவருடைய பொழுதுபோக்கு அவருக்கு இப்போது புகழையும் செல்வத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
ஏதோ ஒன்றை மணலில் கட்டுவதற்கு பதில் நிகழ்காலத்தில் நிகழ்வதை சுட்டும் வகையில் கட்டுவதுதான் பட்நாயக்கிற்கு பிடிக்கும். சர்வதேச அளவில், பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியவர் சுதர்சன் பட்நாயக்..
மணலில் அவர் கட்டும் கோட்டைகள் நீரில் கரைந்தாலும், நம் மனதை விட்டு என்றென்றும் மறையாது.
பயிர் ஓவியங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பசுமையாய் இருந்தது. மணல் சிற்பங்களும் நன்றாக இருந்தன. ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்த்தாலும் தெவிட்டாத சுவை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎன்ன தான் ஸ்பெஷல் ரவா வெங்காய ஊத்தப்பம் என ஹோட்டலில் போய் ருசிக்காக சாப்பிட்டாலும், வீட்டுச்சாப்பாடு போல ஆகுமா?
ReplyDeleteஅதுபோலவே இந்தப்பயிரோவியங்களில் ஒருசிலவற்றை வேறு பதிவுகளில் ஏற்கனவே பார்த்திருந்தாலும், தாங்கள், தங்கள் கைமணத்தில் செய்து, வர்ணனைகளுடன் பரிமாறியது மிகச்சிறப்பாக [வீட்டுச்சாப்பாடு போல ருசியாகவே] உள்ளது.
அந்தத்தொந்தி கணபதியின் ஒய்யாரப்படுக்கை வெகு அழகாகவும், எல்லா மணல் சிற்பங்களின் அடியில் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களும் சமூக சிந்தனையை ஏற்படுத்துவதாக உள்ளன.
ஜப்பானியர்கள் காரியங்களில், சாதனைகளில் மட்டுமல்லாமல், கற்பனையிலும் கட்டிக்கரும்பென நிரூபித்துவிட்டனர்.
வழக்கம் போல் அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
//மணலில் அவர் கட்டும் கோட்டைகள் நீரில் கரைந்தாலும், நம் மனதை விட்டு என்றென்றும் மறையாது.//
ReplyDeleteவெகு அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
ஆம். மனதினில் என்றும் நிலைத்து நிற்கும்.
//சுதர்சன் பட்நாயக்… தன்னுடைய சிற்பக்கலைத்திறனால் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர். மணல் சிற்பங்களை படைப்பதில் வல்லவரான இவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதர்சன் பட்நாயக் சிறுவனாக இருக்கும்போதே கடற்கரைப் பகுதிக்குச் சென்று மணல் கோட்டைகளை கட்டுவார். அவருடைய பொழுதுபோக்கு அவருக்கு இப்போது புகழையும் செல்வத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.//
அற்புதக் கலைஞராகிய அவரை இருகரம் கூப்பித்தொழுகிறேன்.
இந்தியர்களின் திறமை இந்தியாவைவிட வெளிநாடுகளில் தான் அதிகம் ஜொலிப்பதாகவும், மதிக்கப்படுவதாகவும் உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பதிவுக்கும், பல்வேறு அரிய பெரிய அருமையான தகவல்களுக்கும் நன்றி.
மிகச் சிறப்பானதாக தேர்தெடுத்து
ReplyDeleteமிகச் சிறப்பாகப் பகிர்கிறீர்கள்/
எங்கள் தேடல் பசி
உங்களால்தான் நிறைவடைகிறது
தொடர வாழ்த்துக்கள்
கலக்கலா இருக்கு கண்ணுக்கு குளிர்ச்சி
ReplyDeleteஅற்புதமான உயிரோவியங்கள். மிகுந்த கற்பனையும் உழைப்பும் வேண்டியிருக்கும்.
ReplyDeleteஇராஜேச்வரி நான் ஒரு மெயில் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் வந்ததா’பதில் அனுப்பவும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@வெங்கட் நாகராஜ் said.//
ReplyDeleteதெவிட்டாத கருத்துக்கு நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteஅருமையான உற்சாகமான கருத்துக்கு நன்றி ஐயா.
@ Ramani said.../
ReplyDeleteஉற்சாகமான கருத்துக்கு நன்றி ஐயா.
@ ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteகலக்கலா இருக்கு கண்ணுக்கு குளிர்ச்சி//
குளிர்ச்சியான் கருத்துக்கு நன்றி.
@ FOOD said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
படங்களும் பதிவும் அருமை! ஜப்பான் எப்பவுமே பிரமிப்பை ஏற்படுத்துகிறது!
ReplyDeleteபயிரோவியம் புல்லரிக்க வைத்தது.
ReplyDeleteமணல் சிற்பங்கள் சிறப்பாக இருந்தது.
பகிர்வுக்கு நன்றி. ;-))
யப்பானியர்கள் என்றும் உச்சத்தில் தான் நிற்கிறார்கள் ... நல்ல தகவல் + புகைப்படங்கள் ...
ReplyDelete@மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை! ஜப்பான் எப்பவுமே பிரமிப்பை ஏற்படுத்துகிறது!//
ஆம். சரியான கருத்து. ஜப்பான் பிரமிப்பு ஏற்படுத்தும் தேசம்.
@மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை! ஜப்பான் எப்பவுமே பிரமிப்பை ஏற்படுத்துகிறது!//
ஆம். சரியான கருத்து. ஜப்பான் பிரமிப்பு ஏற்படுத்தும் தேசம்.
@ RVS said...
ReplyDeleteபயிரோவியம் புல்லரிக்க வைத்தது.
மணல் சிற்பங்கள் சிறப்பாக இருந்தது.
பகிர்வுக்கு நன்றி. ;-))//
கருத்துக்கு நன்றி.
@ RVS said...
ReplyDeleteபயிரோவியம் புல்லரிக்க வைத்தது.
மணல் சிற்பங்கள் சிறப்பாக இருந்தது.
பகிர்வுக்கு நன்றி. ;-))//
கருத்துக்கு நன்றி.
Wounderful post.
ReplyDeleteExcellent pictures.
Well write up. I enjoyed.
Thankyou Rajeswari.
viji
nice pictures
ReplyDeleteபயிரோவியங்கள் மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தன. அற்புதம்.
ReplyDelete@ viji said...
ReplyDeleteWounderful post.
Excellent pictures.
Well write up. I enjoyed.
Thankyou Rajeswari.
viji//
வாங்க விஜி. கருத்துக்கு நன்றி.
@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeletenice pictures//
நன்றி.
@ Lakshmi said...
ReplyDeleteஇராஜேச்வரி நான் ஒரு மெயில் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் வந்ததா’பதில் அனுப்பவும்.//
நன்றி அம்மா. பதில் உடனே அனுப்பிவிட்டேன்.
@ கந்தசாமி. said...
ReplyDeleteயப்பானியர்கள் என்றும் உச்சத்தில் தான் நிற்கிறார்கள் ... நல்ல தகவல் + புகைப்படங்கள் ...//
நன்றி கருத்துக்கு.
அருமை.
ReplyDelete570+3+1=574 ;)
ReplyDelete