நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா -
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே,
நிஷாகந்தி மலர்கள் மலர்வது அழகு
மொட்டு மலர்வது அழகு மலர்ந்த பின்னோ அழகோ அழகு
ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு அழகு
ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு அழகு
இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர் - கேரளா, ஊட்டி, கோவை போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட நிஷாகந்தி செடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கள் பூக்கிறது.
வெண்மை நிறத்தில் அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே
பூக்கும் மலர்களை, "அனந்த சயனப் பூ" என்று அழைக்கின்றனர்.
நிஷாகந்தி பூக்கள் இரவு சுமார் 9 மணிக்கு மேல் பூத்து
அதிகாலை 4 மணிக்குள் வாடி விடுகின்றன.
செடியில் உள்ள இலைகளில் இருந்து பூக்கள் மலர்கின்றன.
இரவின் நறுமணம் எனப் பொருள்படும் நிஷாகந்தி மலர் மலையாள இலக்கியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளது.
நிஷாகந்தி மலரை பெரும்பாலும் யாருமே பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் இதன் ஆயுள் மிகக் குறுகியது. இதன் மொட்டு சூரியன் மறைந்த பிறகு விரியத்தொடங்கி மறுநாள் சூரியன் உதிப்பதற்குள் வாடிவிடும். இது முழுமையாக விரிந்திருப்பது நள்ளிரவில் மட்டுமே.
ஆண்டுக்கு ஓரிருமுறை மழைக்காலத்தில் மட்டும் மொட்டு உருவாகி இரு வாரங்களில் முழுமை அடைகிறது.
ஒரு மாலை வேளையில் அது விரியத் தொடங்குகிறது.
நள்ளிரவில் அது சுமார் ஒரு அடிக்குமேல் விட்டமுள்ள அழகிய மலராக மலர்ந்து மணம் வீசுகிறது.
விடிவதற்குள் வாடித் தலை சாய்ந்து விடுகிறது.
மணமான அன்றே விதவையான பெண்ணுக்கு உருவகமாக இந்தமலரை மலையாள இலக்கியங்கள் கூறுவதுண்டு. விரகதாபத்தின் சோகமலராக இந்த அழகிய மலரை மலையாளக் கவிதைகள் வர்ணிக்கின்றன.
நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..
நின் அரும பூ வாடியில் நீ தேடுவதாரே ஆரே..
என்ற மலையாளப் பாடல் மதுரமாய் ரீங்கரிக்கும்.
இது கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கள்ளிச் செடிகளைப் போலவே இதுவும் இலைகளை நட்டாலே அதிலிருந்து துளிர்விட்டு வளரக்கூடியது.
செடி எளிதாக வளரும் என்றாலும் சில வகை மண்ணில் இது பூப்பது அரிது. சில இடங்களில் பூப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். பொருத்தமான மண்வகையும் காலநிலையும் அமைந்தால் ஓரிரு ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும். மழைக்காலங்களில் மட்டுமே மொட்டுவிடும். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பூக்கலாம்.
நிஷாகந்தி வாசனையும் அழகும் நள்ளிரவில் காண்பது
அற்புதமான அனுபவம்.
தமிழ்ப் புலவர் கபிலர் கூறும் ’நள்ளிருள் நாறி’ (Selenicereus) இரவில் மணம் வீசும்நிஷாகந்தி மலராகும்..‘இருள் வாசி’ எனப்படும் இருவாட்சி மலர் என்றுகூறுவோரும் உண்டு.
என் மகன் சிறு வயதில் விவசாயக்கண்காட்சி பார்க்க தன் தந்தையுடன் சென்றிருந்தார்.
மழலை மொழியில் அம்மாவுக்குச் செடி என்றால் பிடிக்கும் இந்தச் செடியை வாங்கித் தாருங்கள் என்று கேட்டு ஒரு செடி வாங்கிவந்து என்னிடம் கொடுக்க, குழந்தை ஆசையாக வாங்கி வந்திருக்கிறதே என்று வீட்டுத்தோட்டத்தில் நட்டேன்.
சமீபத்தில் மொட்டு விட்ட அதன் தோற்றம் வித்தியாசமாக இருக்கவே வலையில் தேடிப் பார்த்து அதன் பெயர் அபூர்வமான நிஷாகந்திப் பூ என்று அறிந்து கொண்டேன்.
காந்தள் மலர் தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம்எனப்படும்.
இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால்
தலைச்சுருளிஎன்றும் அழைக்கப்படும்.
இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. *
மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனைவெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.
கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள்என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.
சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும்.
இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது.
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.
“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.
கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.
தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது.
தமிழ் ஈழத்தின் தேசியப் பூவாகவும்
தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகவும் மதிக்கப் படுகிறது.
ஆஸ்டர், மேரி கோல்டு, மேரி கோல்டு மினியேச்சர், பால்சம், டெய்ஸி, டாலியா, சால்வியா, கிரைசாந்தியம், கேட்கஸ் போன்ற வண்ண மிகு மலர்கள் மனம் கொள்ளை கொள்ளும்..
படங்களும் விளக்கங்களும் அருமை.
ReplyDelete//நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
ReplyDeleteமானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..
நின் அரும பூ வாடியில் நீ தேடுவதாரே ஆரே..
என்ற மலையாளப் பாடல் மதுரமாய் ரீங்கரிக்கும்.//
தாங்கள் மலையாளம் கூட அறியுமோ?
தங்களைப்போய் இப்படிக்கேட்டு விட்டேன் என் அறியாமையால்.
தாங்கள் அறியாதது தான் ஏதும் கிடையாதே. கலைவாணி போல அறிவுச்சுடரல்லாவா தாங்கள்
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகு தான். அதுபோலவே தங்கள் படைப்புகளும் அழகோ அழகு தான்.
படங்கள், விளக்கங்கள், கேள்வியேபடாத அனந்தசயனப்பூக்களின் மகிமை என பல புதிய விஷயங்கள் தங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
நன்றி! அன்புடன் பிரியமுள்ள vgk
எந்தப் பதிவாயினும் சரி
ReplyDeleteஎந்தப் பொருள் குறித்த பதிவாயினும் சரி
தகவல்களை பூர்ணமாகத் தருவதில்
தத்ரூபமான படங்களுடன் தருவதில்
தங்கள் பதிவுதான் முதன்மையானது
என்பதில் எள்ளளவும் சந்தேககமில்லை
பெருமிதத்துடன் தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
@dhaya nithi //
ReplyDeleteபடங்களும் அதற்க்கு உணளின் கருத்துகளும் விளக்கங்களும் பாட்டும் படியாக உள்ளது அழகிய மலர்கள் இலக்கிய கால பெயர்களுடன் விளக்கங்களை தந்தமை பாட்டுகளுக்குரியான அது சரி ஒரு கமுக்கம் (ரகசியம் )வேண்டும் இந்த படங்களை எங்கிருந்து பெறுகிறீர் ? தொடர்க....//
At Google...
படங்களுடன் விளக்கம் . அழகிய பூக்கள். இன்றைய பதிவு ஒரு பூந்தோட்டம்தான்.
ReplyDeleteWow!!!!!!!!!!!
ReplyDeleteMalarpole malkinra manan vendum Thaye.......
My daily mornings will bloom on hearing the song at Vijay T.V. at India. Here I had the darshan of pretty flowers today. The animation of photos made me happy.
Nice write up.I enjoyed it in this morning.
Thanks Rajeswari.
viji
நல்ல பதிவு! அருமையான எழுத்து. எங்கிருந்து இந்த தகவல்கள் கிடைக்கிறது! நிறைய படிக்கிறீர்கள் போலும், எப்படி இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டீர்கள்! ஓ....... மலர்களுக்குதான் மலர்களை பற்றி தெரியுமே! வாழ்க வளமுடன்!
ReplyDeleteஓம் சிவ சிவ ஓம்!
Epiphyllum endra thavarathirku Nishakanthi, Brahmakamalam, Anandhasayanam pondra Sirapu Peyargal undu enbathai thangal virivana pathivin moolam Arindhom.. Nishakanthiyin Nilavin Venmai matrum Narumanathai thangal pathivai padikkum pothe Nugarnthom.. Sanga Ilakkiya malar Kandhalin Iru Vagaigal pattriya thagaval thangalathu Nunniya Thiranaaivu Aatralai Velikonarndhadhu.. Magathuvamana Malargalin Vilakkam thodara Vazhthugirom..
ReplyDelete”பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா” ன்னு பாடத்தோணுது, அந்தக் கடைசி படமான, மினுமினுக்கும் அழகிய பட்டாம்பூச்சியைப் பார்த்ததும்.
ReplyDeleteஎப்படித்தான் இப்படியான ஜொலிக்கும் படங்களைத் தந்து அசத்துகிறீர்களோ?
தங்கள் உழைப்பின் கடுமை என்னை தினமும் பிரமிக்க வைக்கிறது.
நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து மேலும் பல்லாயிரம் பதிவுகள் எங்களுக்குத் தந்தருள எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் என்றும் பிரியமுள்ள vgk
Seenivasan Kalaiyarasi has left a new comment on your post "நிஷாகந்திப் பூ":
ReplyDeleteEpiphyllum endra thavarathirku Nishakanthi, Brahmakamalam, Anandhasayanam pondra Sirapu Peyargal undu enbathai thangal virivana pathivin moolam Arindhom.. Nishakanthiyin Nilavin Venmai matrum Narumanathai thangal pathivai padikkum pothe Nugarnthom.. Sanga Ilakkiya malar Kandhalin Iru Vagaigal pattriya thagaval thangalathu Nunniya Thiranaaivu Aatralai Velikonarndhadhu.. Magathuvamana Malargalin Vilakkam thodara Vazhthugirom..
dowsarpaandian has left a new comment on your post "நிஷாகந்திப் பூ":
ReplyDeleteநல்ல பதிவு! அருமையான எழுத்து. எங்கிருந்து இந்த தகவல்கள் கிடைக்கிறது! நிறைய படிக்கிறீர்கள் போலும், எப்படி இவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டீர்கள்! ஓ....... மலர்களுக்குதான் மலர்களை பற்றி தெரியுமே! வாழ்க வளமுடன்!
ஓம் சிவ சிவ ஓம்!
Lakshmi has left a new comment on your post "நிஷாகந்திப் பூ":
ReplyDeleteபடங்களும் விளக்கங்களும் அருமை.
வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "நிஷாகந்திப் பூ":
ReplyDelete”பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா” ன்னு பாடத்தோணுது, அந்தக் கடைசி படமான, மினுமினுக்கும் அழகிய பட்டாம்பூச்சியைப் பார்த்ததும்.
எப்படித்தான் இப்படியான ஜொலிக்கும் படங்களைத் தந்து அசத்துகிறீர்களோ?
தங்கள் உழைப்பின் கடுமை என்னை தினமும் பிரமிக்க வைக்கிறது.
நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து மேலும் பல்லாயிரம் பதிவுகள் எங்களுக்குத் தந்தருள எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் என்றும் பிரியமுள்ள vgk
வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "நிஷாகந்திப் பூ":
ReplyDelete//நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..
நின் அரும பூ வாடியில் நீ தேடுவதாரே ஆரே..
என்ற மலையாளப் பாடல் மதுரமாய் ரீங்கரிக்கும்.//
தாங்கள் மலையாளம் கூட அறியுமோ?
தங்களைப்போய் இப்படிக்கேட்டு விட்டேன் என் அறியாமையால்.
தாங்கள் அறியாதது தான் ஏதும் கிடையாதே. கலைவாணி போல அறிவுச்சுடரல்லாவா தாங்கள்
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகு தான். அதுபோலவே தங்கள் படைப்புகளும் அழகோ அழகு தான்.
படங்கள், விளக்கங்கள், கேள்வியேபடாத அனந்தசயனப்பூக்களின் மகிமை என பல புதிய விஷயங்கள் தங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
நன்றி! அன்புடன் பிரியமுள்ள vgk
Posted by வை.கோபாலகிருஷ்ணன் to மணிராஜ் at May 12, 2011 1:50 PM
dhaya nithi to me
ReplyDeleteshow details May 12 (1 day ago)
படங்களும் அதற்க்கு உணளின் கருத்துகளும் விளக்கங்களும் பாட்டும் படியாக உள்ளது அழகிய மலர்கள் இலக்கிய கால பெயர்களுடன் விளக்கங்களை தந்தமை பாட்டுகளுக்குரியான அது சரி ஒரு கமுக்கம் (ரகசியம் )வேண்டும் இந்த படங்களை எங்கிருந்து பெறுகிறீர் ? தொடர்க....
- Show quoted text -
Ramani has left a new comment on your post "நிஷாகந்திப் பூ":
ReplyDeleteஎந்தப் பதிவாயினும் சரி
எந்தப் பொருள் குறித்த பதிவாயினும் சரி
தகவல்களை பூர்ணமாகத் தருவதில்
தத்ரூபமான படங்களுடன் தருவதில்
தங்கள் பதிவுதான் முதன்மையானது
என்பதில் எள்ளளவும் சந்தேககமில்லை
பெருமிதத்துடன் தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
நிஷாகந்திப் பூ மற்றும் காந்தள் மலர் இவைகளைப் பற்றி வரலாற்றுக் கதைகளிலும் மற்ற சில இடங்களிலும் படித்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. நிஷாகந்திப் பூ பார்க்கும், நுகரும் ஆவலை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteபூக்களாக சொரிந்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
என்னவொரு அருமையான பூக்கள் பற்றிய பதிவு.நிஷாகந்திப் பூ வாசனையாக இருக்குமோ !
ReplyDeleteநிறைவான விஷயங்கள்.செங்காந்தள் பூவை கார்த்திகைப்பூவாகக் கொண்டாடுகிறோம் ஈழத்தமிழர்கள் நாம் இப்போ !
Wonderful to read madam....each and every flower has got it's own beauty on the earth.....It shows your poetic eyes and talent in all the aspects....cool to know you in life
ReplyDeleteSanjutha said...//
ReplyDeleteதாவரவியல் மாணவியான தங்களின் கருத்து மதிப்பு மிக்கது. நன்றி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபல தகவல்களை அறியத் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteநிஷாகந்தி பூ ,காந்தள் மலர் பற்றிய அழகிய விவரங்களுடன் மலர்ந்த பதிவு ..மிகவும் அருமை
ReplyDeleteதொடர்ந்து சிறப்பான நிகவுகளைதரும் உங்களுக்கு உள பூர்வமான பாராட்டுகளும் நன்றியும்
சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
பூ மீது பட்டுப்பூச்சி பார்த்திருக்கிறேன்!
ReplyDeleteபட்டுப்பூச்சிக்குள் பூக்களா!?
எனக்குப் பிடித்த பாட்டு-செம்மீன்தானே?
ReplyDeleteஅழகிய படங்கள்,அருமை.
பழைய பதிவு போல் தெரிகிறது, இருந்தும் எப்படி எங்கள் டாஸ்போர்டில் வருகிறது?
ReplyDeleteஎது எப்பிடியோ, பதிவு நிறைய தகவல்களை கொண்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை!
எந்து ஒரு ரசம், எந்து ஒரு சௌந்தர்யம், காணான் நல்ல ரசம் கேட்டோ.....
ReplyDeleteஎவ்ளவு அழகு... குட்டிப்பையன் அப்பாக்கிட்ட சொல்லி வாங்கி வந்த செடியை எத்தனை பிரியமாக அதை நட்டு வைத்து வளர்த்தி படிக்கும்போதே ஏதோ ஒரு தேவகன்னிகை சூடிய மலராய் இருக்குமோ என்ற அளவுக்கு நினைக்கவைத்த மிக அற்புதமான பதிவு ராஜேஸ்வரி...
பதிவுகளில் வித்தியாசமாக ஜொலிக்கும் படங்களாக பூக்களுக்கு இன்று கொண்டாட்டம் தான் அத்தனை மலர்கள் இன்று மலர்ந்துள்ளது உங்கள் வலைப்பூவில் இன்று...
நிஷாகந்திப்பூ பற்றி என்றோ நான் பள்ளியில் படித்தபோது அறிந்தது.. எத்தனையோ வருடங்கள் கழித்து அதை படங்கள் மூலமாகவும் உங்கள் எழுத்துகள் மூலமாகவும் விவரங்கள் பூரணமாக அறிய முடிந்ததுப்பா...
ஆஹா நிஷாகந்தி பூ அனந்தசயனப்பூ பற்றி படித்து முடித்தபோதே காந்தள் பூ பற்றிய விவரங்கள் அதன்பின் வரிசையாக விதம் விதமாக இதுவரை நான் காணாத மலர்களின் தொகுப்பு அதன் விவரங்கள் அடங்கிய அரிய பொக்கிஷ தொகுப்பாக இருந்ததுப்பா....
ஆச்சர்யம் ஆச்சர்யம் மலைப்பு.. எத்தனை நன்றிகள் சொன்னாலும் போறாது...
அறிந்துக்கொள்ள இயலாத எத்தனையோ விவரங்களை பதிவுகளை அரிய தொகுப்பாக தாங்கள் பதிவதை பார்க்கும்போது உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் என்றும் தரவேண்டும் இறைவனிடம் என்று வேண்டவே தோன்றுகிறதுப்பா...
அன்பு நன்றிகள்பா அரிய விவரங்கள் பகிர்வுக்கும் அழகிய படங்கள் பகிர்வுக்கும்...
அரிய படங்கள்.. அருமையான விளக்கங்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
470+3+1=474 ;)
ReplyDelete