- தர்மத்தையும் நீதியையும் விட கருணையே பெரியது என நிலைநாட்டியவர் ஆதிசங்கரரது குலதெய்வம்தான் கேரள மாநிலம் காலடியில் வீற்றிருக்கும் "திருக்காலடியப்பன்'.
- கண்ணபரமாத்மா தான் திருக்காலடியப்பனாக அருள்பாலிக்கிறார்.
- தீவினைகளை கருணையால் மாய்த்த ஆதிசங்கரர் உலகுக்கே உபதேசம் செய்து "ஜகத்குரு" ஆனார்.
- அவரது குலதெய்வமான திருக்காலடியப்பன் உன்னி கிருஷ்ணனாக (சின்னக் கண்ணன்) அருள்பாலிக்கும் கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கதது....
- மூலவரான திருக்காலடியப்பன் வலது கையில் வெண்ணெய் வைத்துள்ளார். இடதுகை இடுப்பில் இருக்கிறது. வலது மேல்கையில் சக்கரம், இடது மேல்கையில் சங்கு வைத்திருக்கிறார். பெருமாள் கோயில்களில் கண்ணனின் அருகில் சிவ, பார்வதி அருள் பாலிப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர்.
இதன் அருகே தலவிருட்சமான பவளமல்லி உள்ளது.
நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது.
இதில் குழலூதும் கண்ணனும், அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர்.
கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது.
நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது.
இதில் குழலூதும் கண்ணனும், அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர்.
கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது.
ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் "தத்வமஸி' என்று எழுதப்பட்டிருக்கும்.
"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்' என்பது இதன் பொருள்.
தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர்.
"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்' என்பது இதன் பொருள்.
தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர்.
ஆதிசங்கரரின் அவதார தலமான கேரளா காலடியில், கனகதாரா யாகம் நடக்கும் அட்சய திரிதியை நிகழ்ச்சி சிறப்பானது.
சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிøக்ஷ எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
உணவேதும் இல்லை. தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள்.
- ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர், மறுநாள் துவாதசி திதியில் பிøக்ஷ கேட்டு, அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று "பவதி பிக்ஷõம் தேஹி' என்றார்.
உணவேதும் இல்லை. தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள்.
இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்று மகாலட்சுமியைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.
இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழை மூதாட்டியின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.
இதன் அடிப்படையில், திருக்காலடியப்பன் கோவிலில் மகாலட்சுமிக்கு தங்கநெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழை மூதாட்டியின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.
இதன் அடிப்படையில், திருக்காலடியப்பன் கோவிலில் மகாலட்சுமிக்கு தங்கநெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.
அந்த வீடு இன்றும் இருக்கிறது. அந்தப் பெண்ணின் வம்சாவளியினர் இன்றும் அந்த பொன்மழை பொழிந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
சங்கரர் வாழ்ந்த 32 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் 32 நம்பூதிரிகள், 10 ஆயிரத்து எட்டு தடவை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்கின்றனர்.
யாகத்தின் முடிவில் தங்க நெல்லிக்கனியை வழங்குகிறார்கள்.
யாகத்தின் முடிவில் தங்க நெல்லிக்கனியை வழங்குகிறார்கள்.
- தங்க நெல்லிக்கனியை பூஜையறையில் வைத்து, கனகதாரா ஸ்தோத்திரம் படித்தால் வீட்டிலும் தங்கம் மழைபோல் பொழிந்து செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் அவதார நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு தங்க நெல்லிக்கனியும், வெள்ளி நெல்லிக்கனியும், கனகதாரா யந்திரமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு தங்க நெல்லிக்கனியும், வெள்ளி நெல்லிக்கனியும், கனகதாரா யந்திரமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிலவாரங்களுக்கு முன்பே பெயர் நட்சத்திரம் சொல்லிப் பணம் கட்டிப் பதிவு செய்து கொண்டால் யாகத்தில் வைத்த கனகதாரா யந்திரமும்,தங்க அல்லது வெள்ளி நெல்லிக்கனியும் தருவித்துத் தருகிறார்கள்.
கோவை அன்னபூரணி கோவிலில் அட்சய திருதியை அன்று நடைபெறும் திருவிளக்குப் பூஜையில் நாராயணீயம் வாசிக்கப்படும்.
ஒவ்வொரு துவாதசியன்றும் நாரயணீயப் பாராயணம் சிறப்பாக நடைபெறும் அற்புதம் கண்கொள்ளாக் காட்சி
என்ன ஆச்சரியம்? சங்கரர் காலால் அடி வைத்த உடனேயே ஆறு ஊருக்குள் புகுந்தது.
அப்பழுக்கற்ற பெரியாறு நதி சங்கரரின் தாய் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தது.
கோவை அன்னபூரணி கோவிலில் அட்சய திருதியை அன்று நடைபெறும் திருவிளக்குப் பூஜையில் நாராயணீயம் வாசிக்கப்படும்.
ஒவ்வொரு துவாதசியன்றும் நாரயணீயப் பாராயணம் சிறப்பாக நடைபெறும் அற்புதம் கண்கொள்ளாக் காட்சி
- சங்கரரின் தாய் தினமும் நீண்ட தூரம் நடந்துசென்று பெரியாறு ஆற்றில் குளித்து அங்கிருந்த கண்ணனை தரிசனம் செய்து வந்தார்.
- வயதாகிவிட்டதால், அவரால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை.
- ஆனால், பெரியாற்றில் குளிக் காமல் இருக்கவும் முடியவில்லை.
- அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கண்ணனை பிரார்த்தனைசெய்தார். அப்போது அசரீரி தோன்றி, ""குழந்தாய்! நீ உனது காலால் அடி வைக்கும் இடத்தில் பெரியாறு உன்னைத்தேடி வரும்,''என ஒலித்தது.
என்ன ஆச்சரியம்? சங்கரர் காலால் அடி வைத்த உடனேயே ஆறு ஊருக்குள் புகுந்தது.
அப்பழுக்கற்ற பெரியாறு நதி சங்கரரின் தாய் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தது.
- அதுவரை "சசலம்' என்ற பெயருடன் விளங்கிய கிராமம், இந்த நிகழ்ச்சிக்கு பின் "காலடி' என பெயர் பெற்றது.தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய தன் குலதெய்வத்திற்காக, கி.பி 795ல் தானே ஒரு கோயில் கட்டி அதில் திருக்காலடியப்பனை பிரதிஷ்டை செய்தார்
- சங்கரர். புதிய வழியில் ஓட ஆரம்பித்த பெரியாறு "பூர்ணா" என பெயர் பெற்றது. இதில் தான் முதன் முதலில் திருக்காலடியப்பனுக்கு ஆறாட்டு விழா நடந்தது.
- காலடியில் பூர்ணமான பூர்ணாநதியை வரவழைத்த பரமேஸ்வரனின் அவதாரமான அக்னித்தழல் சங்கரர் தன் காலடியால் பாரதத்தை நடந்தே அளந்து பல திருத்தலங்களை திருத்தி அமைத்தார்.
சிருங்கேரி போன்ற மடங்களைத் ஸ்தாபித்தார்.
- அவர் ஸ்தாபித்த ஷண்மதங்களின் வரலாறு, அவரது வாழ்க்கை வரலாறு போன்றவை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். காணக் கோடி வேண்டும்.
- சங்கரரின் தாயார் மரணப்படுக்கையில் இருந்தது அப்போது இமயச்சாரலில் இருந்த சங்கரருக்கு மனக்கண்ணில் காட்சிப்பட, அவரது இறுதிக்காலத்தில் அன்னையின் அருகில் இருப்பதாக வாக்களித்தபடி கிளம்பினார்.
- யமகிஙரர்கள் யாரும் த்ன் மெல்லிய பயந்த சுபாவமுள்ள தாயை வருத்திவிடக்கூடாதென்று தன் ஆராதனைக் கிருஷ்ணனை வேண்டிக்கொண்டார்
-முற்றும் துறந்த முனிவராலும் துறக்கமுடியாத தாய்ப்பாசத்தினால்.மீறமுடியுமா அபத்பாந்தவனால்?
- மரணப்படுக்கையில் புலன்கள் ஒடுங்கி ஊசலாடிக்கொண்டிருந்த சங்கரா..சங்கரா என்று அந்த நிலையிலும் அரற்றிக் கொண்டிருந்த தாயைத் தன் மடியில் ஏந்திக் கொண்டான் வாசுதேவன்.
- சற்று ஆசுவாசப்படுத்திக் கண்திறந்து பார்த்தால் துளசிமாலையும், மஞ்சள் பட்டுப் பீதாம்பாமும் அணிந்து,மயில்பீலி அசைய கையில் புல்லங்குழலுடன இனிய புன்முறுவலுடன் தன் தலைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்ஆனந்ததுடன் மகன் வரவை எதிர் நோக்கி கண்மூடி சங்காரா என்று அழைத்து தன் தலையைத் தாங்கி இருந்த மடியைத் தடவிப்பார்க்க குலதெய்வமான சங்கரர் புலித்தோலும்,ருத்ராட்ச மாலையும்,தலையில் பிறைச்சந்திரனும் கங்கையும் சூடி அருளாசி வழங்கக் கண்டாள்.
- தன் இறுதிப்பயணத்தில் இரு பெரும் தெய்வங்களும் தன் காட்சியை வழங்கி முக்தி தர வந்திருப்பது தான் பெற்ற சங்கரனால் தான் என்று அறிந்து அவரைப் புகழ்ந்து தாய் போற்றினாள்.
- தான் உலகப்புகழ் பெறுவதற்கு இந்தத் தாயின் வயிற்றில் பிறந்த புண்ணியத்தால் தான் என்று மாத்ருகா பஞ்சகம் என்ற துதியையே இயற்றி பெற்ற தாய்க்குப் புகழாரம் சூட்டினார்.
இவற்றை ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டும்.
அட்சய திரிதியை நன்னாள், தர்மத்தை வலியுறுத்துகிறது. தர்மம் இருக்கும் நாட்டில், செல்வம் பெருகும்.
இந்நாளில் செய்யப்படும் தர்மம், பெரும் நன்மை தரும். ஒரு காலத்தில், மக்களின் பசி தீர்க்க, இந்நாளில் தயிர்சாதம் தானம் செய்தனர். “அட்சய" எனும் சொல்லுக்கு, “வளர்தல்’ என்று பொருள்.
இந்நாளில் செய்யப்படும் தர்மம், பெரும் நன்மை தரும். ஒரு காலத்தில், மக்களின் பசி தீர்க்க, இந்நாளில் தயிர்சாதம் தானம் செய்தனர். “அட்சய" எனும் சொல்லுக்கு, “வளர்தல்’ என்று பொருள்.
விஜயரகுநாத நாயக்க மன்னர், ஆந்திர, கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம், அவரது ஆட்சியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மழை இல்லாததால், தண்ணீர் பஞ்சமும் வந்து விட்டது.
இதுபற்றி மன்னரிடம் சொன்ன அமைச்சர், “மன்னா… இயற்கையை யாராலும் வெல்ல இயலாது. நாம் மகான் ராகவேந்திரரை அழைப்போம். அவர், இங்கு வந்தாலே போதும். மழை பெய்யுமென நான் நம்புகிறேன். மக்கள் படும் வேதனை தீரும்…" என்றார்; மன்னரும் சம்மதித்தார்.
ராகவேந்திரரை அவர்கள் அழைத்து வந்தனர். அவர் தரையில் நெல்லைப் பரப்பி, "அட்சய" என்று எழுதினார்; மறுநிமிடமே மழை கொட்டியது. 10 ஆண்டுகளாக பெய்யாத மழை, 10 நாட்களில் கொட்டி, கண்மாய்கள் நிரம்பின; ஆறுகள் பெருகி ஓடின. மக்கள் விவசாயப் பணிகளைத் துவக்க, மன்னர் மானியம் அளித்தார்.
"அட்சய" எனும் சொல், அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது. அட்சய திரிதியை நன்னாளில் நகை, பொருள் வாங்கினால், ஏராளமாய் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நமக்காக மட்டும் இல்லாமல், தர்ம சிந்தனையுடன் கஷ்டப்படுபவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, வசதி படைத்தவர்கள் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுக்கலாம்; ஏழை மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்யலாம்.
நமக்காக மட்டும் இல்லாமல், தர்ம சிந்தனையுடன் கஷ்டப்படுபவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, வசதி படைத்தவர்கள் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுக்கலாம்; ஏழை மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்யலாம்.
இந்நாளில், நகை வாங்குவதன் மூலம், சேமிக்கும் வழக்கமும் ஏற்படுகிறது. ஐந்தாண்டுக்கு முன், ஒரு பவுன் நகை, எட்டாயிரத்துக்கு வாங்கி இருந்தால், அதன் இப்போதைய மதிப்பு, 16 ஆயிரம் ரூபாய், இப்படி இரட்டிப்பு நன்மை கிடைக்கச் செய்யும் விழாவாக, அட்சய திரிதியை அமைந்துள்ளது.
இந்நாளில், லட்சுமி தாயார் படத்தின் முன், நெய் விளக்கேற்றி, செல்வம் பெருக வேண்டுவர்.
உழைப்பின் மூலம் பெறும் செல்வம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதற்காக, கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும்.
உழைப்பின் மூலம் பெறும் செல்வம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதற்காக, கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும்.
திரவுபதியின் புடவையை கவுரவர்கள் இழுத்து அவமானப்படுத்திய வேளையில், கிருஷ்ணர் அவள் முன் தோன்றி, "அட்சய" என்றார்; அந்தப் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது.
இவ்வகையில், வாழ்க்கையில் சிரமப்படுபவர்களுக்கு பாதுகாப்பு தரும் நன்னாளாகவும் அட்சய திரிதியை அமைந்துள்ளது.
இவ்வகையில், வாழ்க்கையில் சிரமப்படுபவர்களுக்கு பாதுகாப்பு தரும் நன்னாளாகவும் அட்சய திரிதியை அமைந்துள்ளது.
குசேலன் கொண்டு வந்த அவலை அட்சய என்று சொல்லி ஒரு துளி வாயில் இட்டுக்கொண்டான் மாயக் கண்ணன்.
அடுத்த நிமிடம் குசேலன் குபேரனானான்.
அட்சய திரிதியை நன்னாளில், அனைவர் இல்லத்திலும் செல்வ வளம் பெருக வேண்டுவோம்.
- வாழப்பிறந்தவனுக்கு வடக்கு : செல்வம், பொன், பொருள், வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஆகியவற்றை அருள் பவர் லட்சுமி குபேரர். "குபேரன் என்றால் "செல்வத்தைப் பெருக்குபவன்.சிவபெருமான் அவனை வடதிசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வடதிசைக்கு ஏற்றம் உண்டானது. "வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற சொல்வழக்கு உண்டானது இதனால் தான். நவக்கிரகங்களில் பொன்மனம் படைத்தவர் குரு. இவருக்குரிய திசை வடக்கு. குருவின் பார்வை பட்டால் கோடி நன்மை என்று குறிப்பிடுவர். குபேரனுக்குரிய விமானம் குபேரவிமானம். இவ்விமானம் எங்கு பறந்து சென்றாலும் பொன், முத்து, நவமணிகளைச் சிந்திக் கொண்டே செல்லும். அந்த விமானத்தை குபேரனிடம் இருந்து ராவணன் பெற்றுக் கொண்டதாக ராமாயணம் கூறுகிறது.
- குபேரன் சிவந்தநிறமும், குள்ளமான உருவமும், புஷ்டியான செல்வச்செழிப்பும் கொண்டவராக இருக்கிறார். குபேர பட்டினத்திற்கு அழகாபுரி என்று பெயர். அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தையின் மீது குபேரன் அமர்ந்திருப்பார். முத்துக்குடை அவர் மீது சுழன்று கொண்டிருக்கும். திருப்பதி வெங்கடாஜலபதி- பத்மாவதி திருமணத்திற்குப் பணம் தேவைப்பட்டது. பெருமாள் குபேரனை அழைத்து உதவும்படிவேண்டிக் கொண்டார். ""என்னிடம் உள்ள செல்வத்திற்கு எல்லாம் அதிபதி திருமகளே. அவளோ உம் மார்பில் குடியிருக்கிறாள். அதனால், என்னிடம் செல்வம் கேட்டுப் பெற வேண்டியதில்லை, என்று லட்சுமி குபேரர் மறுத்துவிட்டார்.
- அட்சய திரிதியை அன்று செல்வ வளம் தரும் லட்சுமி குபேரரை வழிபட்டால் வீட்டில் செல்வத்திருமகளின் அருள் பெருகும்.
- நெல்லிமரத்தில் திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு "ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகத் திகழ்வது நெல்லி.
- நெல்லிமரம் இருக்கும் வீட்டில் திருமகள் நித்யவாசம் புரிவாள். தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் இருக்கும். குறைவில்லா செல்வம் வீட்டில் பெருக அட்சய திரிதியை நாளில் நெல்லிமரத்தை வீட்டில் நடுவது சிறப்பு...
- புலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் ,பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் ராவணன், மற்றவர் குபேரன். அசுரரானாலும் குபேரனுக்கு இருந்த நல்ல குணத்தைக் கண்ட தேவர்கள் அவரை தம்முள் ஒருவராக இருக்க கடலில் வந்து வாசிக்குமாறும், அனைத்து நதிகளும், நீர் நிலைகளும் அவரை வணங்கி வழிபடும் எனவும் கூற அவரும் அங்கு சென்றார். ஆகவே அந்த கடலுக்குள் இருந்த செல்வத்தினால் அவர் பல செல்வங்களைப் பெற்றார்.தவத்திற்கு மெச்சிய பிரும்மாவும் அனைத்து லோகங்களிலும் உள்ள அனைத்து செல்வங்களையும் கண்காணித்து அதை கேட்பவர்களுக்கு வழங்கும் அதிபதியாக அருள் புரிந்தார். ஆகவேதான் கடலில் பிறக்கும் உப்பு செல்வங்களில் தலையானதாகக் கருதப்பட்டு அட்சய திருதியை அன்று கல் உப்பு வாங்கவேண்டிய முக்கியப் பொருளாக இருக்கிறது
- திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, வெள்ளுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை ஸ்ரீதிருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி என்ற புரதான திருக்கோவில் உள்ளது. கோவில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் விஜயாதித்த சோழ மன்னரால் பராமரிக்கப்பட்டு வந்தது. கோவிலில் மகாலட்சுமி வில்வமரமாக தோன்றி சிவலிங்கத்தின் மீது வில்வமழை பொழிந்து வழிபட்டதின் பயனாக இறைவன் மஹாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை கொடுத்தாக ஓலைச்சுவடிகளில் உள்ளது.
- விஷ்ணுவின் இதயத்தில் மஹாலட்சுமியை ஸ்தாபனம் செய்த தலமாகவும் விளங்கி உள்ளது. மன்மதன் தான் இழந்த உடலை சிவபெருமானை வழிபட்டு மீண்டும் உடலை பெற்றதாகவும், முசுகுந்த சக்ரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்ததாகவும், குபேரனும், ஆதிசேஷனும், சூரியனும் சிவபெருமானை வழிபட்ட தலமாக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும், வில்வ மர நிழலில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும் தான்.
- மஹாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால், இறைவனுக்கு ஐஸ்வரயேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்யாநுக்ரஹர் என்ற பெயர்களும் உள்ளது.
- கோவிலின் சிறப்பு அம்சமாக குழந்தை பாக்கியம் வேண்டுவோர் திருக்காமேச பெருமானை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம்.
நெல்லி மரத்தை இணைத்து அட்சய திருதியை சொன்னது சிறப்பு. வழக்கம் போல ஏகப்பட்ட தகவல்கள் அடங்கிய பதிவுப் பொக்கிஷம். ;-))
ReplyDeleteபெரிய பதிவு;ஆனால் தகவல் களஞ்சியம்.அக்ஷய திரிதியையன்று ஒரு மங்களகரமான பதிவு!
ReplyDeleteநெல்லி மரம் தகவல் புதியது.....
ReplyDeleteமற்றவை அதி புதியவை
RAJESWARI,
ReplyDeletei AM VERY VERY EAQERLY OPENED THE P.C.
yES YOU HAVE DONE IT.
tHANKYOUVERYMUCH.
VIJI
மிக அருமை முழுமையான ஒரு தகவல் பொக்கிஷம்.. விக்கி பிடீயாவுக்கு அனுப்புங்கள்..
ReplyDelete”அட்சய திருதியை” பற்றிய ப்ல்வேறு விளக்கங்கள், அட்சயமாக வளந்துகொண்டு சென்றது, மிகவும் பிரமிப்பாக இருந்தது.
ReplyDeleteநாங்கள் இன்று அக்ஷய திருதியையில் உங்களின் இந்தப்பதிவைப்படித்ததே எங்களின் பெரும் பாக்யம்.
காலடியில் ஆரம்பித்து தலைமுடிவரை அனைத்தும் வெகு அருமையாக எழுதியுள்ளீர்கள்.
அதுவே எனக்கு தங்க நெல்லிக்கனி கிடைத்ததுபோல ஒரு சந்தோஷத்தை அளித்துள்ளது.
உங்களின் இதுபோன்ற எழுத்துக்கள் என்னை உங்களின் பதிவுக்கு அடிமையாக்கிவிட்டன.
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இதுபோன்ற அருமையான பதிவுகள் பல தந்து எங்களுக்கு நல்வழிகாட்டிட இறைவன் அருள் செய்ய வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன் உங்கள் பிரியமுள்ள vgk
நமக்காக மட்டும் இல்லாமல், தர்ம சிந்தனையுடன் கஷ்டப்படுபவர்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, வசதி படைத்தவர்கள் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுக்கலாம்; ஏழை மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்யலாம்.
ReplyDelete......முக்கியமான இந்த நல்ல எண்ணத்தை தான் , பலரும் மறந்து விடுகிறார்கள். :-(
முதல் படம் அருமை. அழகு.
ReplyDeleteசங்கரரின் தாய் பற்றிய வரிகள் நெகிழ்ச்சி.
உங்கள் கோவில் பற்றிய படைப்புகள அனைத்தையும் மொத்தமாக ஒரே தொகுப்பாக புத்தகம் போடலாம். ஒரு பி டி எஃப தொகுப்பாக மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
Dear thozi,
ReplyDeleteYou have remarkedly explained about akshaya thiruthiyay.Thanks a lot.
அட்சய திருதியை என்றாலே மக்களுக்கு நகைக்கடைதானே நினைவிற்கு வரும்.இவ்ளோ விசியம் இருக்கா?
ReplyDeleteஇடையில் படிக்க சிரமமாக வரிகள் ஒன்றோடு ஒன்றாக உள்ளதை மட்டும் சரிசெய்திடுஙள்
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு தொய்வின்றி
ReplyDeleteமிக அழகாக அனைத்து விவரங்களையும்
சொல்லிப்போகிறீர்கள்
இப்படி ஒட்டுமொத்த விவரங்களை
எங்களுக்க்காக வழங்கும் உங்களுக்கு
எல்லா வளமும் நலமும் வழங்க வேண்டுமாய்
ஆண்டவனை மனப்பூர்வமாக வேண்டிக்கொள்கிறேன்
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
446+2+1=449
ReplyDelete