உலகத்தின் பல நாடுகளிலும் இந்துக் கடவுளின் திருக்கோயில்கள் இருக்கின்றன.
கோலாலம்பூரில் பத்துமலை அடிவாரத்தில் வெங்கடாசலபதிக்கு ஒரு கோயில் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
உலக சரித்திரத்தில் முதல் இடம் கிடைத்த, கண்ணாடிக் கோவில் ஜோகர் பாருவில் இருக்கிறது.
சிங்கப்பூரையும் ஜோகர் பாரு நகரத்தையும் இணைப்பது கடலின் மீது கட்டப்பட்டபாலம் தான்.
மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள்.
உருண்டை வடிவ உலகில் கண்ணாடி பதிக்க பட்ட ஆலயம் மலரும் வண்ணம் அழகுற சமைத்து கண்களை உருளச் செய்தது அதிசயம் .உலக மக்கள் இந்துவாகப் பிறந்தவர்கள் அனைவரும் மகிழ்வுறும் விசயம் .
தொடக்கத்தில் சிறிய குடிசையாக இருந்து, கால ஓட்டத்தில் ஜோகூர் பாருவில் அமைந்த மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட முதல் மலேசியக் கோவில் என்பது சிறப்பம்சம்.
கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கோவில் கோபுரமும், நுழைவாயிலும் எங்கும் உள்ளது போல் சாதாரணமாகத் தான் தோன்றின.
ஆனால் உள்ளே சென்ற போது பிரமிப்பு ஏற்படுகிறது.
எங்கும் கண்ணாடிகள் மயம். சிறு சிறு கண்ணாடிகள்! ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! தூண்களிலும், மேலே விதானம் முழுவதுமே கண்ணாடிக் கூரை தான். அத்தனை கண்ணாடிகளும் சேர்ந்து ஒளித் துண்டுகளைப் பிரதிபலிக்க எங்கேயோ ஒரு மாயபுரியில் இருப்பது போல் பிரமை.
கீழே மழமழ தரை! அவற்றில் அத்தனை கண்ணாடிகளும் பிரதிபலிக்கிறது.
.இந்து ஆகம விதிப்படி பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் எனப் பெயரிடப்பட்டது.
காளியம்மன் அருளால் இங்கு காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்தப் போது தாஜ்மகாலையும் இன்னும்ம் பிரசித்தி பெற்ற பல கோவில்களைப் பார்த்திருக்கிறார்.
எல்லாமே அமைப்பிலும் அழகிலும் எல்லாரையும் கவர்ந்து இழுத்தன.
பின்னர் பர்மாவுக்கும் சென்றிருக்கிறார். அங்கே உள்ள கோவில்களில் இந்தக் கண்ணாடி அமைப்பைப் பார்த்திருக்கிறார். அதில் சிறிய அமைப்பாகத் தெரிந்தது.
திரு. சிவசுவாமிக்கு இது பெரிய கனவை உண்டாக்கியது.
அந்த வேலைப்பாடு செய்த பர்மிய தொழிலாளிகளைச் சந்தித்தார்.
அவர்கள் குடும்பங்களை ஜோகர் பாருவுக்குக் கொண்டு வந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார். தகுந்த ஊதியமும் கொடுத்தார்.
.இந்தக் கோயிலை நிர்மாணிப்பதற்கு தாய்லாந்தில் தான் பார்த்த கண்ணாடிக் கோயிலே முன் மாதிரியாக இருந்தது என்கிறார் அறங்காவலரான எஸ். சின்னதம்பி.
10 லட்சம் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில் கோவிலின் 95 சதவீதம் விதானம், ஸ்தூபிகள், தூண்கள், ஆகியவற்றுக்கான பத்து லட்சம் வர்ணமயமான கண்ணாடித் துண்டுகள் தாய்லாந்து ஜப்பான் பெல்ஜியம் ஆகிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டன.
ஜொகர் சுல்தான் அவர்கள் 1922 இல் இதைக் கட்டுவதற்கான நிலத்தைக் கொடுத்தார்.
கோவில் 1996இல் புனரமைக்கப்பட்டது. கோவில் முழுவதும் குளிர் சாதனம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஆயிரத்து ஐநூறு பக்தர்கள் தரிசிக்கலாம்.
ராஜ காளியம்மன் கோவிலில் சிவன், விஷ்ணு,பெரியாச்சி அமமனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர்,முருகன், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எட்டு குருமார் துறவிகள் என சிலைகள் பல இரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- பகவான் இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாயிபாபா, சுவாமி இராகவேந்திரர், இராமலிங்க அடிகள், இயேசு நாதர், புத்தர், நபிகள், மற்றும் துறவிகள் சிற்பங்களையும் கண்ணைக்கவரும் வடீவில் அமைத்திருப்பதாக ஆலய அறங்காவலர் குருஜி சின்னத்தம்பி குறிப்பிடுகிறார்.
பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை 2010 ஏப்ரல் 22ஆம் தேதி இந்தக் கோவிலைப் பாராட்டி எழுதியுள்ளது.
ஆலயத்தை ஒட்டிய மூன்று மாடிக் கட்டிடத்தில் இலவச சேவையாக நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சமயக்கல்வி, பாடசாலைக்கல்வி, கணினிக்கல்வியோடு தற்காப்புக்கலையும் சொல்லித்தரப்படுகிறது ..
இந்திய பாரம்பரியக் கலைகளான சங்கீதம், பரதம், தபேலா இவற்றோடு வேலைவாய்ப்பு மையம், தரும காரியங்கள், போட்டி நிகழ்ச்சிகள், பஜனை உலா ஆகியவும் இங்கே இலவசமாக நடாத்தப்படுகிறது.
கண்களுக்கு விருந்தாக வசீகரத் தன்மையுடன் கூடிய அருள் தரும் இராஜ காளி அம்மன் ஆலயம் கண்ணாடி பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளோடு அமைந்தது, மனதிற்கும் அமைதி தரவல்லதாக அமைந்திருப்பது வியப்புக்குரியது.
2008ம் ஆண்டில் நேபாள அரசி வருகை தந்தார். அவர் ஆலயத்தைக் கண்டு வியந்து சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டப விதானத்தில் பதிப்பதற்காக மிகவும் சக்தி வாய்ந்த மூன்று லட்சம் உருத்திராட்ச மணிகளை நன்கொடையாக கொடுத்துள்ளார் ..
இராஜகாளியம்மன் ஆலயத்தை அழகுற அமைத்த ஆலயவிற்பன்னர்களுக்கும் ஆலயத்தை அமைக்கப் பாடுபட்டவர்க்கும் இராஜகாளியம்மன் அருளாசி என்றும் கிடைக்கும்.
நாமும் தரிசித்து அம்மன் அருள் பெறலாம்.
ஆஹா, கண்ணாடிக்கோயிலின் அருமை பெருமையெல்லாம் தங்கள் கைவண்ணத்தில் வெகு அழகாகப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதுவரை கேள்விப்படாத ஓர் அதிசயம் தான் இது. பதிவுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
ReplyDeleteமுதலில் வெறும் கண்களால் ஒருமுறையும், பிறகு கண்ணாடி அணிந்துகொண்டு ஒருமுறையும் அனைவரும் படிப்பார்கள்/பார்ப்பார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது.
அன்புடன் தங்கள் பிரியமுள்ள vgk
அருமையான பயண தொகுப்பு
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநிறைய படங்கள். நிறைய விபரங்கள்.
நல்ல விஷயங்களாக தேடித் தேடிக் கொடுக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
நல்ல பயனுள்ள பதிவு...நன்றி...
ReplyDeleteஇன்னும் நிறைய சொல்லுங்கள்...
படம் சூப்பர்...பதிவும் சூப்பர்...
http://zenguna.blogspot.com
AHA!!!!!
ReplyDeleteArpudam.
I cannot go over to this places. But you made me see by photos and writing.
Very pretty dear.
Thanks for the post.
viji
கண்ணாடி கலக்கல்
ReplyDeleteநீங்க என்ன மலேசியாவா?
ரொம்ப நன்றி. இதெல்லாம் நாங்க எங்க போய் பாக்கறது. உங்களை மாதிரி ஆளுங்க போட்ட இங்க இருந்தே தரிசனம் பண்ணிடுவோம் ,. நன்றி
ReplyDeleteDear thozi,
ReplyDeleteMarvellous presentation. thanks a lot.
ஸ்ஸ்ஸ்.......அப்பப்பா... தகவல் கழஞ்சியம் அம்மா நீங்க...
ReplyDeleteஅப்பாடி....உலக அத்தனை அதிசயங்களும் உங்கள் கையில்போல !
ReplyDeleteஇந்த கோவில் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்... பார்த்ததில்லை... இன்னைக்கி உங்க புண்ணியத்துல பாத்துட்டேன்... Superb...உங்க Blog travel encyclopedia போல இருக்கு... ஊருக்கு வர்றப்ப எங்க எல்லாம் சுத்தி பாக்கணும்னு உங்க ப்ளாக்ல பாத்து பிளான் பண்ணிக்கலாம் போல இருக்கு... ரெம்ப நன்றி'ங்க
ReplyDeleteரசித்தேன்.
ReplyDelete;)
ReplyDeleteகேஸவா
நாராயணா
மாதவா
கோவிந்தா
விஷ்ணு
மதுசூதனா
திருவிக்ரமா
வாமனா
ஸ்ரீதரா
ஹ்ருஷீகேஷா
பத்மநாபா
தாமோதரா
-oOo-
474+2+1=477
ReplyDelete