பண்டரிபுரம் போகாதீங்க, பூதமிருக்கு அங்கே!
பக்திமான் சந்த் துக்காராமின் இந்த அபங்கம், வஞ்சகப் புகழ்ச்சியில் கண்ணனைப் பாடுகிறது.
விட்டல் உறையும் பண்டரிபுரம் போக வேண்டாம், போக வேண்டாம் என்று சொல்வார்கள்.
ஆம், அங்கே செல்ல வேண்டாம், தயவு செய்து செல்ல வேண்டாம்.
அங்கே பெரியதொரு பூதம் இருக்கிறது.
பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!
துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!
விடோபா நகரமான பண்டரீபுரத்தில் சாதுக்களின் கூட்டங்கள் அன்றாடம் விட்டல, விட்டல என வாய் மணக்க பக்தி பரவசத்துடன் பாடியவாறு இருப்பர். மோக்ஷம் இங்கு விலையின்றிப் பெறலாம். (இலவசமாக) காரணம்? அதை வாங்குவோர் எவரும் இங்கில்லை.
எங்களுக்கு வைகுந்தம் வேண்டாம், பண்டரி நாதனைப் பார்த்து விட்டோமென்பார்கள் இங்குள்ளவர்கள்.இதனை ஓர் அபங்கத்தின் (பாடலின்) வாயிலாக பெருமைபடக் கூறுகின்றார் மராட்டிய மஹான் துக்காராம் ஸ்வாமிகள்.
எங்களுக்கு வைகுந்தம் வேண்டாம், பண்டரி நாதனைப் பார்த்து விட்டோமென்பார்கள் இங்குள்ளவர்கள்.இதனை ஓர் அபங்கத்தின் (பாடலின்) வாயிலாக பெருமைபடக் கூறுகின்றார் மராட்டிய மஹான் துக்காராம் ஸ்வாமிகள்.
துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.
எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.
ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.
பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின், இந்த உலகும் ஒரு பொருட்டோ?
திருவண்ணமலைக்குக் காந்தமலை என்ற பெயருமுண்டே. திருப்பதி, சபரிமலை போன்ற இட்ங்களும் காந்த சக்தி மிக்கவை. மீண்டும் மீண்டும் செல்லும் ஆசையைத்தூண்டக் கூடியவை.
ஆடி மாதம் வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள், காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள்.
வீர சிவாஜி பவானி அம்மனின் மிகசிறந்த பக்தர். அவர் செய்யும் முக்கிய காரியங்களுக்கு முன் "ஜய் பவானி" என்ற முழக்கம் வரும் அன்னை பவானியைத்தவிர அவருக்கு ஸ்ரீபண்டரிநாதர் மீதும் அபரிமிதமான பக்தி இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பண்டரிபுரம் சென்று சேவைச் செய்வார். அந்தக்கோயிலுக்கும் நிறைய உதவிகள் செய்துள்ளார்.
சிவாஜியின் குரு ஸ்ரீ ஸமர்த்த ராம்தாஸ். குருவுக்கு எப்போதுமே ராமநாமம் தான். ராமரைவிட்டு அவர் வேறு எவரையுமே நினைக்கமாட்டார். ஆனால் சிவாஜிக்கோ தன் குருவைப் பண்டரிபுரம் அழைத்துப்போக வேண்டும் என ஆசை. ஸமர்த்த ராமதாஸ் சீடனின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஒப்புக்கொண்டார். பண்டரிபுரம் கோயிலும் வந்தது. எங்கும் "விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல. பண்டரிநாத விட்டல" என்ற கோஷம் கேட்டபடியே இருந்தது. சத்ரபதி சிவாஜியும் பண்டரிநாதனை வணங்கியபடி உள்ளே நுழைந்தார். கூடவே மிகவும் மெதுவாக தயங்கியபடியே குருஜியும் உள்ளே நுழைந்தார். பின் தன் தலையைத் தூக்கியபடியே கர்ப்பகிரஹ மூர்த்தியைப்பர்த்தார்.
அங்கு அவர் கண்ட காட்சி........ நீல வர்ணம் கையில் வில் அத்துடன் சங்கு சக்கரம் கழுத்தில் துளசிமாலை. அங்கு ஸ்ரீராமபிரானே அவர் முன் தெரிந்தார். அப்படியே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்தார். அங்கு அவர் கண்ட காட்சி........ நீல வர்ணம் கையில் வில் அத்துடன் சங்கு சக்கரம் கழுத்தில் துளசிமாலை. அங்கு ஸ்ரீராமபிரானே அவர் முன் தெரிந்தார். அப்படியே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்தார்அப்பா விட்டலா, என்ன கருணை உனக்கு! எனக்காக நீ ராமனாகவே மாறி எனக்குத்தரிசனம் தந்துவிட்டாயே" என்றபடி கண்களில் நீர் வழிய இரு கரங்களையும் கூப்பி வணங்கினார். அன்றைய தினத்திலிருந்து அவரும் விட்டலனை வழிபட ஆரம்பித்தார்.
கீதையில் கண்ணன் "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நான் ஆகிவிடுவேன்" என்று சொன்னது எவ்வளவு உண்மை..
பண்டர்பூரில் அவதரித்த மஹான் நரஹரி என்பவர் விட்டல பாண்டுரங்கன் இருக்கும் பண்டர்பூரில் தங்க நகைகள் செய்யும் குலத்தில் பிறந்தவர். நகைகள் செய்யும் தொழிலில் அவரை யாரும் மிஞ்சமுடியாத அளவு கீர்த்தி பெற்றிருந்தார். நரஹரியோ தீவீர சிவ பக்தர். சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடமாட்டார். வெளியூரிலிருந்து ஒரு பணக்கார பாண்டுரங்க பக்தர் வந்தார். அவர் வந்த விஷயம் நெடுநாட்களாக அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து விட்டலனின் அருளால் ஒரு மகன் பிறந்தான். அவருக்கு வேண்டுதல் மகன் பிறந்தால் பாண்டுரங்கனுக்கு கேசாதி பாதம் தங்க நகைகள் செய்து போடுவதாய். ஊரில் விசாரித்ததில் எல்லோரும் நரஹரியின் பேரைத்தான் சொன்னார்கள். அவர் காலைப் பிடித்துகொண்டு கதறி எப்படியாவது நகைகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத பாவியாகிவிடுவேன் என்று கெஞ்சினார்.
மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அளவுடனும் நகைகளைச் செய்து கொடுத்தார். எல்லா நகைகளும் சரியாக நேராக வந்து அளவெடுத்துச் செய்தமாதிரியே இருந்தது ஒரு நகையைத்தவிர. அதுதான் விட்டலனின் அரைஞாண்கயிறு. அதைச் சாத்தியபோது இரண்டு விரக்கடை அளவு கம்மியாக இருந்தது. பக்தரும் மறுபடியும் நரஹரிவீட்டுக்கு ஓடிச் சென்று அரைஞாண் கயிறு அளவு போதவில்லை என்று கூறினார். நரஹரிக்கு நம்பிக்கையில்லை இருந்தாலும் உடனே இரண்டு விரக்கடை அளவு கூட வைத்து செய்து போட்டுப் பார்க்கச் சொன்னார். நரஹரிக்கு நம்ப முடியவில்லை. அவரது தொழில் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை.
நரஹரி தனது கண்களை ஒரு கறுப்பு வஸ்த்திரத்தால் இறுகக் கட்டிகொண்டார். அவரை விட்டல பக்தர் அழைத்துக்கொண்டு பாண்டுரங்கனின் விக்கிரகத்துக்கு அருகில் நிற்க வைத்து நரஹரி விட்டலனனின் இடுப்பு அளவை எடுத்துக்கொள்ளூங்கள் என்றார். நரஹரியும் வேண்டா வெறுப்புடன் பண்டரிநாதன் மீது கைகளால் தடவி இடுப்பின் அளவை ஒரு கயிற்றின் மூலமாக எடுக்க முற்பட்டார்.
முதலில் இடுப்பை தடவும் போதுநரஹரியின் கைகளுக்குபுலித்தோல் தென்பட்டது. நரஹரி ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து மேலே கைகளை கொண்டு சென்று மேலும் தடவினார். இப்போது விக்கிரஹத்தின் கழுத்தில் ருத்ராக்ஷமாலை பட்டது. பின்னர் தேடும்போது வழ வழவென்று பாம்பு போன்ற வஸ்து பட்டது, மேலும் கைகளின் ஒரு புறம் டமருகம்மும், திரிசூலமும் பட்டது, மறுபுறம் மானும், மழுவும் பட்டது. மேலும் ஆச்சர்யத்துடன் உணர்ச்சியின் மிகுதியாலும் தலையின்மீது தடவும்போது கங்கையும், பாலசந்திரனும், ஜடாமுடியும் பட்டதுகையில் தென்பட்டதெல்லாம் சாக்ஷாத் சிவனின் அம்சங்கள் ஆனால் இவர்களோ இவனை ராமச்சந்திரனாக அவதாரம் எடுத்த விஷ்ணு என்று சொன்னார்கள். ஒருவேளை இப்போது பிரதோஷ சமயம் அதனால் தனக்கு சிவனின் மீது உள்ள அபார பிரேமையால் மனப்பிரமையோ என்று நினைத்து மீண்டும் ஒருமுறை தடவிப்பார்க்கலாம் என்று பாண்டுரங்கனை தடவினார். ஆனல் இந்த முறையும் ருத்திரனனின் அம்சங்களே கைகளில் பட்டது.
மற்றொரு மஹான் கூறுவதாவது: “பலதேச, தேசாந்திரங்கள் பலவற்றைக் கண்டு வந்தேன். பல புண்ணிய நதிகளில் நீராடியும் வந்திருக்கிறேன். யாது பயன்? என் மனத்திற்கு நிம்மதியைத் தரவில்லையே! பின் பண்டரீபுரம் வந்தடைந்தேன். பண்டரிநாதனைத் தரிசித்தேன். அதன் பிறகே என் இதயத்திற்கு மனச் சாந்தி கிடைத்தது எனத் தன் பாடலொன்றின் வாயிலாக எடுத்துரைத்தவர், தமிழ் நாட்டு நந்தனாரைப் போன்று தாழ்ந்த குலத்தில் தோன்றிய, சிறந்த பக்தரான சோகாமேளா என்பவர்.
மேலும், பாண்டுரங்கனின் பக்தரான நாமதேவர், தன் ஞானப்பார்வையால் எதையும் அறியக்கூடிய சக்தி படைத்ததொரு பெரும் ஞானி. அவர் பாண்டுரங்கனோடு பேசியதாக வரலாறும் உண்டு. இவர் கூறினார்: “பாண்டுரங்கன் சந்திரபாகா நதிக் கரையில் நிற்கின்றான். அவன் தரிசனம் இன்பம் தரவல்லது. அவன் பெயரைக் கேட்டால் உள்ளம் மகிழும். அவன் தோற்றம், வசீகரிக்கும் தன்மை கொண்டது. 28 யுகங்களாகச் செங்கல் மீது நின்றவாறு, இருகைகளையும் இடுப்பின் மீது வைத்துக்கொண்டு ராதா, ருக்மணி சமேதராக பக்தர்களுக்கு நீண்ட காலமாகத் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றார்” என தன் பாடலின் வாயிலாக அழகுபட விளக்குகிறார். இவ்வாறாக அருட்கவிகளும், பக்தர்களும், மஹான்களும் பாண்டுரங்கன் தங்கள் இதயத்தில் வாசம் செய்ய வேண்டுமென்ற விரதத்தையும், பாத சேவை சுகத்தையும் தந்தருள வேண்டுமென பெருமைபடப் பாடியுள்ளார்கள்.
கானோபாத்திரை என்னும் பக்தை பாண்டுரங்கனை வேண்ட அவளிடம் இருந்து ஒரு ஜோதி புறப்பட்டு பாண்டுரங்கனின் விக்ரகத்திற்குள் செல்வதை எல்லோரும் கண்டனர். கோயிலின் தெற்கு பிரகாரத்தில் ஒரு குழி தோண்டி அதில் கானோபாத்திரையின் உடலைப் புதைத்தனர். இறைவனை எண்ணி கண்மூடி இருகரம் கூப்பி வணங்கினர். கண்ணைத் திறந்து பார்த்தபோது, புதைத்த இடத்தில் ஒரு விருட்சம் (மரம்) இலைகளும், பூக்களுமாய் நிறைந்து நின்றது. அர்ச்சகர்கள் வியந்து வணங்கினர். பண்டரிபுரம் செல்பவர்கள் அந்த விருட்சத்தை வணங்கி அதன் இலைகளை பிரசாதமாக ஏற்று கானோபாத்திரையை வணங்கி சென்றனர். ஆலயத்தின் தெற்கு கோபுர வாயிலை கானோபாத்திரை வாயில் என்று இன்றும் அழைக்கின்றனர்.
தாமாஜி பண்டிதர் என்னும் பெரும் தர்மசிந்தனை கொண்ட தாளாளருக்காக சாட்சாத் பாண்டுரங்கன் தரிசனம் கொடுக்க தாமாஜி அரசுப்பணியை உதறிவிட்டு பண்டரிபுரத்திலேயே தங்கியிருந்து, பூஜை செய்து தனது காலத்தைக் கழித்தார்.
பீமா நதி பண்டர்பூர் அருகே பிறைச் சந்திரன் வடிவில் செல்லுகின்றது. ஆகவே அந்த நதி இங்கே சந்திரபாஹா என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. முன்னொரு காலத்தில் இது தண்டிரவனம் என்ற பெயரில் அழைக்கப் பட்டு வந்தது. இங்கே முக்தாபாய், சானதேவன் என்ற இரு வயது முதிர்ந்த தம்பதிகள் வசித்தனர். அவர்களின் ஒரே மகன் புண்டரீகன் என்ற பெயரில் வளர்ந்து வந்தான். அப்போது விருத்தாசுரனை வதம் செய்த இந்திரன், அதன் காரணமாய் சாபம் பெற்று ஒரு செங்கல்லாய் மாறி, அங்கே இருந்து வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாய் வரும் நாளில் தனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
புண்டரீகன் இயல்பாகவே அவன் தாய், தந்தையரிடம் அதிக அபிமானமும் பற்றும் கொண்டவனாய் இருந்தான். தாய், தந்தையருக்குச் சேவை செய்வதே தன் கடமை எனக் கருதி வந்தான். ஒரு நாள் அவ்வாறு தாய், தந்தையரின் சேவையின் அவன் மிகவும் மும்முரமாய் இருந்த சமயம், வாசலில் ஒரு குரல் கேட்டது. "புண்டரீகா, புண்டரீகா, உடனே வா!" என்றது அந்தக் குரல்.
புண்டரீகன், "என் தாயும், தந்தையும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இப்போது சப்தம் போட்டுப் பேசினால் அவர்களின் ஓய்வு நேரத்திற்கு ஊறு நேரிடும்" என்று சொல்கின்றான். "புண்டரீகா, நான் யார் தெரியுமா? நான் சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே வந்திருக்கிறேன் அப்பா. உன்னைக் கடைத்தேற்றி உனக்கு முக்தி கொடுக்கவே வந்துள்ளேன். சற்றே வந்து நான் சொல்வதைக் கேட்பாய்". இது வந்தவரின் குரல்.
நீர் யாராக வேண்டுமானாலும் இரும். எனக்குக் கவலையில்லை ஐயா. காத்திருக்க முடியுமானால் காத்திரும். நான் சற்றுப் பொறுத்து வந்து உம்மைக் காண்கின்றேன். புண்டரீகன் பதில் கொடுத்தான் "ஆஹா, இந்தக் குடிசைக்கு முன்னால் ஒரே சேறாய் இருக்கிறதே. நான் எங்கே காத்திருப்பது? உட்காரக் கூட இடம் இல்லையே?" வந்தவரின் அங்கலாய்ப்பு. புண்டரீகன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்ணில் பட்டது ஒரு செங்கல். அந்தச் செங்கல்லைக் கையில் எடுத்துத் தூக்கி எறிந்தான். "இதோ, இந்தக் கல் மீது நீர் நின்று கொள்ளும். நான் இதோ வருகிறேன்"
கல்லைத் தூக்கி எறிந்தான் புண்டரீகன். பகவானின் பாதம் பட்டதோ இல்லையோ, இந்திரனுக்குச் சுய உருவம் வந்துவிட்டது. புண்டரீகனுக்கும், பகவானுக்கும் தன் நன்றிகளைச் சொன்னான் இந்திரன். சற்றுப் பொறுத்து வெளியே வந்து பார்த்த புண்டரீகன், கல்லில் நிற்கும் சாட்சாத் மஹாவிஷ்ணுவையும், அவரை வணங்கிய வண்ணம் நிற்கும் இந்திரனையும் கண்டு அதிசயித்தான். புண்டரீகன் மனம் வருந்தினான் பகவானையே தான் காக்க வைத்ததை எண்ணி, எண்ணி பகவானோ அவனைத் தேற்றுகின்றார். "புண்டரீகா, நீ பெற்றோரிடம் கொண்டிருக்கும் பக்தியை வெளி உலகுக்குக் காட்டவேண்டியே நாம் இவ்வாறு ஒரு சோதனை செய்தோம். உனக்காக நாமே இங்கே காத்திருந்தோம். இதேபோல் எம்மைத் தேடி வரும் அடியாருக்காக நாம் இங்கேயே இருந்து காத்திருக்கவும் முடிவு செய்துள்ளோம்.என்றார். அது முதல் புண்டரீகன் தூக்கி எறிந்த அந்தச் செங்கல் மீது நின்ற வண்ணமே பண்டரிநாதன் பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான். அன்று முதல் இறைவன் அங்கேயே கோயிலிலும் குடி கொண்டான் விட்டலன் என்ற பெயரிலேயே.
அனைத்துக் கோயில்களிலும் குடி கொண்டிருக்கும் பகவானுக்காகப் பக்தர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இங்கோ பகவானே பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான், நின்ற வண்ணமே அதி அற்புத தரிசனம். நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றான் விட்டோபா. அவன் சந்நிதியைக் கண்டதும், நம்மையும் அறியாமல் கண்கள் மழையை வர்ஷிக்கின்றன. நெருங்க, நெருங்க மனம் சொல்லவொண்ணா ஆனந்தத்தில் ஆழ்கின்றது. இன்று காலையில் விட்டோபாவுக்கு அலங்காரம் செய்வதைக் காட்டினார்கள். அந்த அலங்காரத்திலேயே தலையில் தலைப்பாகையுடன், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றான். உச்சியில் இருந்து, பாதம் வரைக்கும் அவனைத் தொட்டு அனுபவிக்கலாம்.
அங்கிருந்து ருக்மாயி, இங்கே தமிழ்நாட்டில் ரெகுமாயி என்றாகி விட்டது. ருக்மாயியைக் காணச் சென்றோம். ரெகுமாயியிடம் நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டுச் சற்று நேரம் நின்றோம். கொஞ்சம் நிதானமாய்த் தரிசிக்கலாம் ரெகுமாயியை.
திருப்பதி சென்றால் என்னதான் கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷம் போட்டாலும் உண்டியலில் பணம் போட்டே ஆகவேண்டுமாம். அங்கே உண்டியலே பிரதானம். இங்கே பண்டரிபுரத்திலோ எத்தனை பணம் உண்டியலில் கொட்டினாலும் விட்டலா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா என்று நாம ஜெபமே பிரதானம்.
கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம் சென்றிருந்தோம். சேங்காளிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தில் வந்த விட்டல்தாஸ் மகாராஜ், இங்கு ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தான் என்ற ஒரு பக்தி மற்றும் தொண்டு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். விட்டல்தாஸ் மகாராஜின் நாமசங்கீர்த்தனம் மற்றும் பக்த விஜயம் உபன்யாசங்களைக் கொண்ட நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி, தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கோவிந்தபுரம் விட்டல்தாஸ் ருக்மணி சமஸ்தான் வளாகத்தில் ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு ஒரு பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
நாம சங்கீர்த்தனம், ராதா கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை பக்தர்கள் வசதியாக பார்க்கும் வகையில் தூண்களே இல்லாத வசந்த மண்டபம், இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.
கோசாலை: பசுக்களின் மகத்துவத்தையும் அவற்றை வளர்ப்பதால் கிடைக்கும் பலன்களையும் விளக்கும் வகையில் மிகப் பெரிய கோசாலையை கோவிந்தபுரத்தில் விட்டல்தாஸ் நிறுவி நிர்வகித்து வருகிறார். இங்கு வளர்ந்து வரும் அனைத்து பசுக்களும் பிருந்தவனம், துவாரகா மற்றும் கோவர்த்தனம் போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவை.
அதாவது பகவான் கிருஷ்ணர் மேய்த்த பசுக்களின் வம்சத்தில் வந்தவை. 300க்கும் மேற்பட்ட இந்த பசுக்கள், மிக நல்ல முறையில் உணவு, தண்ணீர் வசதிகளுடன் உரிய மருத்துவ வசதிகளுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்த பசுக்கள் மூலம் கிடைக்கும் பால் பொருட்களும் வரட்டியும் விற்கப்படுவதில்லை.பகவானின் அபிஷேகத்திற்கும் பயன்படுவதோடும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
Dear thozi,
ReplyDeleteThanks a lot for presenting vittal
pandu ranga with vey nice pictures.
பண்டரீபுரம் சென்றுள்ளேன். இடுப்பு இரண்டிலும் இருகைகள் வைத்தபடி, செங்கல்மேல் நிற்கும் பாண்டுரங்கனை தரிஸித்துள்ளேன்.
ReplyDeleteசந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்துள்ளேன். அதுசமயம் ஸ்ரீ காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதி ஸ்ரீ சங்கர சேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் (ஸ்ரீ மஹாபெரியவா) அவ்விடம் சந்திரபாகா நதியின் அக்கரையில் இருந்த கரும்புக்காட்டினில் முகாமிட்டிருந்தார்கள்.
என் தாயார் மனைவி குழந்தைகளுடன் படகில்போய் தரிஸித்து வந்தது பசுமையாக ஞாபகத்தில் உள்ளது.
ஸ்ரீ பக்த துக்காராம் பற்றி நிறைய வாசித்துள்ளேன். நிறைய பிரவசனங்கள் கேட்டுள்ளேன்.
தங்கள் பதிவின் மூலம் மற்ற பாண்டுரங்க பக்தர்களையும் பற்றி மீண்டும் நினைவுக்குக்கொண்டு வர முடிந்தது.
வரும் செவ்வாய் விடியற்காலம் கிளம்பி தக்ஷிண பாண்டரிபுரமாகத் திகழும் கோவிந்தபுரம் செல்ல உள்ளேன்.
இந்த நேரத்தில் தாங்கள் வெளியிட்டுள்ள இந்தப்பதிவு எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நன்றிகள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
தங்கள் பதிவைப் பார்ப்பதன் மூலம்
ReplyDeleteஅனைத்து திருத்தலங்கள் குறித்த
முழு விவரங்கள் தெரிவதோடு மட்டும் அல்லாது
அவசியம் அங்கு சென்று தரிசித்து
வரவேண்டும் என்கிற ஆவலும் மேலிடுகிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பூனாவில் இருந்தசமயம் அடிக்கடி பண்ட்ரிபூர் போய் தரிசித்து இருக்கேன். இவ்வளவு விஷயங்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை. உங்க பதிவின் மூலமாக நிறைய விஷயங்கள் தெரிந்து
ReplyDeleteகொள்ள முடிகிரது. நன்றி.
இங்கிருந்தே செலவில்லாமல் பண்டரிபுரம்! காது குளிர பக்தர்களின் சரித்திரம் - உங்களுக்கு நன்றி!!
ReplyDeleteஅரியும் அரனும் ஒன்று என்று தெரிவித்த பண்டரிபுரம் நாயகனுக்கு , கோவிந்தபுரம் விட்டல்தாஸ் ருக்மணி சமஸ்தான் வளாகத்தில் ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு ஒரு பிரமாண்டமான கோயில் அந்த பக்கம் அடிக்கடி செல்வேன் . பார்க்கவேண்டும். அருமையான படங்கள்
ReplyDeleteபடங்கள் அழகு.பக்தி வராதவங்களையும் பதிவு பக்தியாக்கிடும் போல இருக்கே.வாசிக்க சுவாரஸ்யம் !
ReplyDeleteமஹா பக்த விஜயம் கேட்டது போன்ற உணர்வு. விட்டல விட்டல பாண்டுரங்கா! ;-))
ReplyDeleteOne of the place I want to have Darshan is Pandaripuram. Your writing make me urge to go over there.
ReplyDeleteThankyou Rajeswari.
viji
;)
ReplyDeleteகேஸவா
நாராயணா
மாதவா
கோவிந்தா
விஷ்ணு
மதுசூதனா
திருவிக்ரமா
வாமனா
ஸ்ரீதரா
ஹ்ருஷீகேஷா
பத்மநாபா
தாமோதரா
-oOo-
452+2+1=455 ;)
ReplyDelete