Saturday, May 28, 2011

மஹா பிரத்யங்கரா தேவி





" ஓம் ஷம் பஷ ஜ்வாலாஜிஹ்வே கராளதம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரா ஷம் ஹ்ரீம் ஹிம்பட் "

பிரத்யங்கரா தேவி மூல மந்திரம்

நல்லவர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை  முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது அய்யாவாடியிலுள்ள பிரத்யங்கரா தேவி கோயில்.
 தேவி பிரத்யங்கரா தான் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள பக்தர்களுக்கே தன்னை வெளிக் காட்டிக் கொண்டு வந்துள்ளார். 

மிகவும் உக்ரஹமான முகத்துடன் காட்சி தரும் அவர் உருவம் எத்தனைக்கு எத்தனை பயங்கரமாக உள்ளதோ அதனை கருணை உள்ளம் கொண்டவள் 

அவரை அனைவராலும் ஆராதிக்க முடியாது.  

அவள் படத்தை தனி நபர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளவும் கூடாது என்பது ஒரு விதியாம் . 

அப்படிப்பட்ட அந்த தேவியின் ஆலயம் பல இடங்களிலும் உள்ளது.


கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ஒன்று சிற்ப்பாக அமைந்துள்ளது.

ஐயாவாடியில் தேவி பிரத்யங்கரா ஆலயம் திருநாகேஸ்வரம் ஆலயத்தில் இருந்து வெகு சமீபத்தில்  உப்பிலியப்பன் ஆலயத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

 ஆலயத்தில் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூடையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது.  

தேவியின் சக்தியை காட்டும் அதிசயம்  தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை, எவருடைய கண்களும் எரிவதும் இல்லாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.

மஹா பிரத்யங்கரா தேவி கைமேல் பலன் தருவாள். 

 அழிக்க எவர் நினைத்தாலும்,  வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும்.  

எதிரிகளை வெகுநிச்சயமாய்   வேண்டுபவரின் நியாயம் இருந்தால் துவம்சம் செய்வாள்.
வாழ்வில் அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து அப்பாவிகளை மீட்க சில ஆலயங்கள் பிரத்யோகமாக முன்னோர்களால் வழிபடப்பட்டுவருகிறது.


கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐயாவாடியில் உள்ள பழமையான தேவி பிரத்யங்கரா ஆலயம் பிரசித்தி பெற்றது.


தனது பக்தன் பிரகலாதனை கொடுமைப் படுத்திக்கொண்டு இருந்த ஹிரண்யகசிபு என்ற அசுரனை அழிக்க மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டி இருந்தது. 
 அசுரன் பெற்று இருந்த வரத்தின்படி அவனை மனிதர்களோ, மிருகங்களோ அல்லது வேறு ஆயுதங்களினாலோ கொல்ல முடியாது.  அவன் ரத்தம் கீழே சிந்தினால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் அவன் வெளிவருவான். ஆகவே 

மனிதரும் அல்லாமல், மிருகமும் அல்லாத மிருகத் தலைக் கொண்ட ஒரு பயங்கர உருவைக் கொண்ட ஜீவனாக அவதாரம் எடுத்த நரசிம்மர் அந்த அசுரன் பிரகலாதனுடன் நின்று கொண்டு இருந்த இடத்தில் இருந்த ஒரு தூணில் இருந்து அதை உடைத்துக் கொண்டு வெளிவந்து அந்த அசுரனை தன் தொடை மீது பிடித்து வைத்துக் கொண்டு அவன் உடலை தன் விரல் நகத்தினால் கீறி அவன் உடலில் இருந்து வெளி வந்த ரத்தத்தைக் குடித்து அவனை கொன்றார்.





    அவன் ரத்தம் பூமியில் சிந்தினால் மீண்டும் அவன் உயிர் பிழைப்பான் என்பதற்காக சிவபெருமான் சரபேஸ்வரர் என்ற உருவத்தை அதாவது சிங்கத்தின் முகம், பாதி மனிதர் உடல் , பாதி சரபு என்ற பறவை. அந்த பறவையின் இறகுகளாக காளி மற்றும் துர்க்கை   உருவை எடுத்த சிவன் அசுரனைக் கொன்று கொண்டு இருந்த நரசிம்மரை அசுரனுடன் சேர்த்து ஆகாயத்தில் தூக்கி வைத்து அரக்கன் சிந்திய ரத்தத்தை பறவை கீழே விழாமல் குடித்தது.  

    அசுரனின் ரத்தம் கீழே சிந்தாமல் அவன் உயிர் பிழைக்க வழி இல்லாமல் மரணம் அடைந்தான்.

    அரக்கனைக் கொன்ற பின்னும் நரசிம்மரின் இரத்த வெறி அடங்கவில்லை. 

    உலகம் முழுவதையும் அவர் அழிக்கத் துவங்க தேவர்கள் சரபேஸ்வரர் உருவில் இருந்த சிவபெருமானிடம் அடைக்கலம் ஆயினர். 

    சிவபெருமானும் தனது மூன்றாவது கண்ணில் (சரபேஸ்வரர் நெற்றியில் இருந்து) இருந்து ஒரு பயங்கர தேவதையை வெளிப்படுத்தினார். 

    அவள் ஆயிரத்தி எட்டு சிங்கத்தின் , இரண்டாயிரத்து பதினாறு கண்கள், அதைத் தவிர மூன்றாவது கண், இரண்டாயிரம் கைகள், அந்தக் கைகளில் இருந்த விரல்களில் புலியின் நகங்கள், யமனைப் போன்ற கரிய நிறம், நீல ஆடை,  சரீரமோ யானயை விட பத்து மடங்கு பெரியது என்ற விஸ்வரூப தோற்றத்துடன் வெளி வந்தாள்.
    முமூர்த்திகளின் மனைவிகளான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி போன்ற மூவருமே சிவ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய பிரத்தியங்கரா தேவியை உருவாக்கினார்கள் எனக் கூறுகின்றது புராணம் ..  

    அப்படி வெளிவந்த உடனேயே அவள் நரசிம்மரை நோக்கி ஓடினாள். தன்னை விட அதி பயங்கர ரூபத்துடன் வந்துள்ள ஜீவனைக் கண்ட நரசிம்மர் ஓடத் துவங்க அவரை துரத்திப் பிடித்த பிரத்தியங்கர தேவி அவரை தனது வாய்க்குள் போட்டுக் கொண்டு அப்படியே விழுங்கி யதும் அவள் கோபம் தணிந்தது. சாந்தம் அடைந்தவள் தனது விஸ்வரூப தரிசனத்தைக் களைந்து மகா பிரத்தியங்கர தேவியாகி நின்றாள்.
    ஒரு முறை இந்திரஜித் ஸ்ரீ ராமபிரானுடன் போரிட்ட போது அவரை வெல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்து எட்டு திக்குகளிலும் பிரேதங்களை வைத்து நிகும்பலா என்ற யாகத்தை துவக்கி, பிரத்தியங்கரா தேவியை ஆராதித்தான். 

    அந்த யாகம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு அவன் ராமரை அழித்து விடுவான் என்பதினால் லஷ்மணர் தனது சகோதரரான ராமனுக்காக இங்கு ஹனுமனுடன் வந்து எந்த காரணத்தைக் கொண்டும் அக்கிரமத்தை வெல்ல விடக்கூடாது என அந்த தேவியை வேண்டினார். 

    அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த தேவியும் தர்மமே வெல்லும் எனக் கூறி இந்திரஜித்துக்கு அவன் வேண்டிய வரத்தை தர மறுத்து விட்டாள்.

    இந்த பூமியில்தான் பஞ்ச பாண்டவர்களும் கூட வந்து பூஜைகளை செய்தனராம். 

    பூக்கள் கிடைக்காத நிலையில் அங்கிருந்த மரத்தின் இலைகளால் பூஜை செய்து பீமன் வரம் பெற்றானாம்.

    அகத்திய முனிவரும் தன்னுடன் பதினெட்டு சித்தர்களை அழைத்து வந்து இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு பிரத்தியுங்கரா தேவியை பூஜித்ததாகவும் ஆகவே அவள் அகத்தியருக்கு மட்டும் காட்சி தந்தருளினாளாம் ...
    ஆலயத்துக்குள் அமர்ந்து உள்ள பிரத்தியங்கா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்தவாறு எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.  முகம் சிங்கத்தினுடயது . கழுத்திலோ மனித கபாலத்தில் கோர்த்த  மாலைகள். தலை மீது படம் எடுத்து ஆடும் எழு தலை நாகம். பயங்கரமான தோற்றம். பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதி.

    சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது. 

    சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள். 

    அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள்  எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..

      ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.
      ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்யப்படுவது இல்லை. 
      தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது. 
      ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதனால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை. 

      ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது.  
      ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது. 
      இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை. 

      இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம்  

      - ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன

      -நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன

      -பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன

      - நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது .


      Ayyaavadi Prathyankaradevi Temple

      22 comments:

      1. //அந்த உருவை எடுத்த சிவன் அசுரனைக் கொண்டு கொண்டு இருந்த நரசிம்மரை அசுரனுடன் சேர்த்து ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொண்டார்//

        6 வது வார்த்தையான “கொண்டு” வை ”கொன்று” என்று மாற்றலாமோ?

        ஒரு முறை படித்து விட்டேன். மீண்டும் பின்னூட்டமிட வருவேன்.

        தங்களின் JEWEL STAND எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அன்புடன் vgk

        ReplyDelete
      2. சுவாரஸ்யமான தகவல்கள். உப்பிலியப்பன் கோவிலும் (என் திருமணம் கூட அங்குதான் நடந்தது!) திருநாகேஸ்வரமும் போய் இருக்கிறேன். பக்கத்தில் உள்ள இதை மிஸ் செய்து விட்டேன் போலும்!

        ReplyDelete
      3. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
        மிகவும் நன்றி ஐயா உங்களின் நுணுக்கமான அவதானிப்பிற்கும்,உடனடி கருத்துக்கும்.மாற்றி விட்டேன். நன்றி.

        ReplyDelete
      4. @ஸ்ரீராம். said...//
        உப்பிலியப்பன் கோவிலும் (என் திருமணம் கூட அங்குதான் நடந்தது!) //
        சுவாரஸ்யமான தகவல். என்றென்றும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
        மிகுந்த வரப்ப்ரசாதம் பெற்ற தலம். பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பிரத்யோக தலம். நம் முதல்வர் அம்மா வழிபடும் தலம்.அவசியம் சென்று உணர்ந்து வாருங்கள் அந்த தலத்தின் மகிமையை.

        ReplyDelete
      5. //நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூட்டையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது. அதில் தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் என்ன என்றால் அந்த தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை, எவருடைய கண்களும் எரிவதும் இல்லை. இந்த அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.//

        ஆஹா, கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக, அதிசயமாகத்தான் உள்ளது. [வீட்டில் தோசை மிளகாய்ப்பொடிக்கு, மிளகாய்வற்றல் வறுக்கும்போதே நமக்கு கமரல் ஏற்படுகிறது.] எல்லாமே தெய்வச்செயல் தான்.

        //இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாய் இவள் துவம்சம் செய்வாள். உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் இதில் மிக முக்கியம்.//

        திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பது நன்கு புலப்படுகிறது.

        //சிவபெருமான் சரபேஸ்வரர் என்ற உருவத்தை அதாவது சிங்கத்தின் முகம், உடலோ பாதி மனிதர், பாதி சரபு என்ற பறவை. அந்த பறவையின் ரக்கைகளாக காளி மற்றும் துர்க்கை இருந்தனர்.//

        இந்த விளக்கம் அருமை. அடியேன் இன்று தான் தெரிந்துகொண்டேன், நன்றி.

        //பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதி.//

        அதனால் தான் பல விஷயங்கள் ஒருவித பயம் காரணமாக முழுவதும் அறியமுடியாமல் உள்ளன.

        //இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம்
        - ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன
        -எதிரிகள் நாசம் அடைவார்கள்
        -நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
        -பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன
        - நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது .//

        லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !

        ReplyDelete
      6. எனக்கென்னவோ அம்பாளை சாந்த ஸ்வரூபியாக, அழகான நகைகள் புஷ்பங்கள் மற்றும் விசிறி மடிப்புடன் கூடிய புடவை/பாவாடை அலங்காரங்களுடனும், சிரித்தவண்ணம், கருணை கொண்ட முகத்துடனும் தரிஸிக்கவே பிடிக்கிறது.

        அந்த நிலையில் “நான் இருக்கிறேன், நீ எதற்கும் கவலைப்படாதேடா குழந்தை” என்று அபயஹஸ்தம் காட்டிடுவது போலத்தோன்றி, மனச்ஸாந்தி ஏற்படுத்துவதாக ஒரு திருப்தி உண்டாகிறது.

        காளி, துர்க்கை, மஹா பிரத்யங்கரா தேவி, மகிஷாசுரமர்த்தினி போன்ற அம்பாள் உருவங்கள் மனதில் பயத்தைத்தோற்றுவிப்பதாகத் தோன்றுகிறது.

        சாதாரணமாகவே வீட்டில் உள்ள பெண்கள், மங்கலஸ்நானம் செய்கிறேன் என்று சொல்லி, நகைகளைக்கழட்டி வைத்துவிட்டு, பாத்ரூமைவிட்டு வெளியே வரும்போதே, கோபமாக ஏதாவது கத்தினாலே, காளிதேவியோ என்று பயத்தில் நடுங்க வேண்டியுள்ளது.

        அதுவும் அம்பாளுக்கு கோபம் வந்து ஆயுதங்களைக்கையில் எடுத்தால் கேட்கவா வேண்டும்.


        சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம், எரிமலை, கொடிமின்னல்+இடியுடன் கூடிய மழை, காட்டாற்று வெள்ளம் போல ஒரு நொடியில் உலகமே கிடுகிடுத்துப்போய் விடுமே.

        அம்மா தாயே!
        அகிலாண்டேஸ்வரி நீயே!!
        எங்கள் எல்லோரையும் கருணைகொண்டு காக்கவேண்டும்!!!

        பிரியமுள்ள vgk

        ReplyDelete
      7. அம்மாவை பார்த்தாலே பயமா இருக்கு இனி எதிரிகள் தூள் தூள் தான்

        ReplyDelete
      8. @ஆர்.கே.சதீஷ்குமார் said...//
        Thank you for comment.

        ReplyDelete
      9. I enjoyed it. There is one Temple at Chennai also for this Devi.
        Thanks for your writing.
        viji

        ReplyDelete
      10. பணபலமும் புஜபலமும் கொண்டு
        அடாவடித்தனம் செய்வோரை
        அடக்குவதற்க்காக இப்போது ஒரு தெய்வம்
        அவசியம் வேண்டியிருக்கிறது
        வழக்கம்போல் பதிவும் படங்களும் அருமை
        நாங்கள் உங்களுக்கு மிகவும்
        கடமைப்பட்டவர்களாக மாறிவிட்டோம்
        தொடர வாழ்த்துக்கள்

        ReplyDelete
      11. @ மாலதி said...//
        @ viji said...//
        @ Ramani said...//
        Thank you.

        ReplyDelete
      12. சுவாரஸ்யமான தகவல்கள்.
        Thanks dear friend cont..,

        ReplyDelete
      13. ஒவ்வொரு பதிவிலும், உங்கள் உழைப்பு தெரிகிறது. பகிர்விற்கு நன்றி, சகோ.

        ReplyDelete
      14. பயங்கர தோற்றமுடைய தெய்வங்கள் கஷ்டத்தில் சட்டென பலன் தரும். பிரத்யங்கார தேவியை சென்னை காளிகாம்பாள் கோவிலில் கண்டுள்ளேன். இப்போதுதான் பிரபலமாகி வரும் அன்னை. பொதுவாகவே எதிரியை அழிக்கும் என்றால் கெடுதல் செய்யும் என்று பொருள் கொண்டு பயந்துவிடுகிறார்கள். ஆனால் எதிரியின் மனதில் உள்ள தீயை அணைத்து எதிரி என்கிற தோற்றத்தை இல்லாமல் செய்வதுதான் தெய்வச்செயல். சரிதைக்கு நன்றி.

        ReplyDelete
      15. பல பலன் தரும் ஆன்மீக தகவல்களை இவ்வளவு வேகமாக, பிரமிக்கவைக்கும் மின்னும் படங்களுடன் தருவதற்கு முதலில் என் பணிவான "நன்றியினை" தங்களுக்கு சமர்ப்பிக்கின்றென்.----பத்மாசூரி

        ReplyDelete
      16. கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ????


        இந்த கோவில் எங்கே?? எந்த அடையாளம்??நான் பார்க்க விரும்புகிறேன் சரியான இடத்தில் சொல்லவும்

        ReplyDelete
      17. Muruga said...
        கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ????


        இந்த கோவில் எங்கே?? எந்த அடையாளம்??நான் பார்க்க விரும்புகிறேன் சரியான இடத்தில் சொல்லவும்///

        கோவையில் இருந்து பல்லடம் செல்லும்போது ஒண்டிப்புதூர் மேம்பாலம் வ்ரும்.. அந்தபாலத்திலிருந்து வலதுபக்கம் திரும்ப வேண்டும்...


        அங்கு சாந்த சரபேஸ்வரர் ஆலயம் - பிரத்யங்கராதேவி ஆலயம் என்று வழிகேட்டுத்தான் சென்றோம்...

        வழிகாட்டிப்பலகையும் உண்டு.. அமாவாசையில் மிளகாய் யாகம் செய்கிறார்கள்.. இனிப்புகளும் சேர்க்கிறார்கள்..

        அருமையான தலம்...

        ReplyDelete
      18. ;)

        அச்யுதா!

        அனந்தா!!

        கோவிந்தா!!!

        ReplyDelete
      19. 523+4+1=528 ;)

        [சுட்டிக்காட்டியதை பாஸிடிவ் ஆக எடுத்துக்கொண்டு உடனே திருத்திக்கொண்டு விட்டதாகச்சொல்லியுள்ளதில் மகிழ்ச்சி. நன்றி.]

        ReplyDelete
      20. புதுவை அருகில் உள்ள மொரட்டாண்டியில் ஆலயம் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ ஸ்ரீ பாதாள ப்ரத்யங்கிரா தேவி மிகவும் சிறப்புமிக்கவள். எத்துனை உக்கிரம் கொண்டவளாக அன்னை காட்சி அளித்தாலும், நாடி வருவோருக்கு கருணை பெருங்கடலாகவே திகழ்கிறாள். வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு அது.

        அன்னையை வெறும் சிலையாக மட்டும் நினைக்காமல் உயிரும் உணர்வும் கொண்ட பரபிரம்மமான தாயாக நினைத்து பாவனை வழிபாடு செய்யப்படும் ஆலயம் இது.

        கோடை நாட்களில் பருத்தியிலான வசதிரங்களே அன்னைக்கு அணிவிக்கப்படும். பூஜை முடிந்த நேரத்தில், அன்னையின் அன்பை தேடி வந்த அன்பர்களுக்கு அன்பையும் கருணையையும் மாரியாய் பொழிந்து அமர்ந்திருக்கும் அன்னைக்கு அசதியை நீக்கும் வகையில் புற சேவைகள் செய்தும், கை விசிறியால் காற்று வீசியும், அன்னையின் தேகத்தை கைகளினால் பிடித்து விட்டு அன்னைக்கு சிறப்பான சேவைகள் செய்யப்படும்.
        வந்து அன்னையை தரிசிக்கும் ஒவ்வொருவரும் அன்னையின் கருணையினால் நெகிழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது உறுதி.

        -நன்றி!!
        என்றும் அன்னையின் கருணையில் மணிகண்டன் தேவராஜ்

        ReplyDelete
      21. இன்று எங்கள் வீட்டில் பல ஜெபங்கள் செய்யபடுகின்றன. அதில்
        பிரத்தியங்கரா தேவி ஜெபமும் உண்டு.அதை ஜெபிக்கும் போது
        பிரத்தியங்கரா தேவி பற்றி எல்லாம் விஷயமும் தெரிந்து கொண்டேன்.
        தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.மிகவும் நன்றாக இருந்தது.

        ReplyDelete