அன்னையெனும் சமயபுர அன்புருவே வா வா வா !
ஆனந்த மணிவிளக்கே அழகொளியே வா வா வா !!
இன்னவிருள் அகற்றிடுவோர் இன்னமுதே வா வா வா !!!
ஈகை மனங்கொண்டோரின் இசை மலரே வா வா வா !!!!
அம்மா என்றெழைத்தவுடன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து பேரறிவான பேரொளியாய் ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்று இன்றி நிற்கும் பராசக்தி சிருஷ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றல் நிறைந்தவளாகத் திகழ்கிறாள்..
சரஸ்வதி, வைஷ்ணவி, ரௌத்ரீ, மாஹேஸ்வரி மனோன்மணி என்ற பெயர் பூண்டு ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிர்களை உய்விக்க வேண்டும் எனும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும், நின்று அருளும் இடமாகும் சமயபுரம் ..!
கண்ணனூரில், கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர்.
சரஸ்வதி, வைஷ்ணவி, ரௌத்ரீ, மாஹேஸ்வரி மனோன்மணி என்ற பெயர் பூண்டு ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிர்களை உய்விக்க வேண்டும் எனும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும், நின்று அருளும் இடமாகும் சமயபுரம் ..!

பிறகு அந்த இரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால்
இடம் மாறின.
தேவகியின் எட்டாவது பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான்.
அந்த குழந்தை கம்சன் கைகளிலிருந்து மேலே எழும்பி - வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களை தரித்துத்தோன்றினாள்.
இடம் மாறின.

அத்தேவியே "மகா மாரியம்மன்" என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள்.
மக்களின் தீவினைகளையும், தீராத நோய்களையும், தன்னுடைய வேப்பிலை மகிமையால் தீர்த்து வைக்கும் ஆயிரங்கண்ணுடையவளாய் அருள்பாலிக்கிறாள்.
மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்தது..,
அந்த ஆட்சிக்கு தளர்ச்சி நேர்ந்த போது பல்லக்கைத்தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் ..,
பின்னர் வந்து பல்லக்கை தூக்க முயலும் போது, தூக்க இயலவில்லை எனவும், பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் எனவும் வரலாறு கூறுகிறது..

இதனாலேயே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் இருந்துவருகிறது.

தமிழகத்தில் உள்ள மாரியம்மன் தலங்களில் தலைமைத்தலமாக,
அதிக வருமானம் தரும் தலமாக விளங்குவது சமயபுரம்.
அதிக வருமானம் தரும் தலமாக விளங்குவது சமயபுரம்.

கிராமத்தில் மாரியம்மன் பண்டிகைகளில் ஆயிரம் கண்ணுடைய சமயபுரம் மாரியம்மன் பாடகல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் திருவிழா களைகட்டும்.
கண்ணனூர், விக்கிரமபுரம் மாகாளிபுரம், கண்ணபுரம்
ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
திருச்சிக்கு வடக்கில் சமயபுரம் கண்ண்ணூர் பெருவளை வாய்க்கால் கரையில் எழிலுற அமைந்துள்ளது.
ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.
வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் சமயபுரத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

மூலிகையால் ஆன சம்யபுரத்தாளுக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்குத்தான் அபிஷேகம்.

பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் தன் தாயைக் காண வருகிறாள்.
அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு தாய்வீட்டு
சீதனமாக சீர் கொடுக்கின்றனர்.
சமயபுரத்திலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன.
பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. ஆனால் சமயபுரம் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
சமயபுரத்து அம்னைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் பிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.
அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு தாய்வீட்டு
சீதனமாக சீர் கொடுக்கின்றனர்.

விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சிகயாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள். தாயைப்பிரிந்து செல்லவதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை.!
சமயபுரத்து மாரியம்மன் சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால் கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம்.
ஸ்ரீராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி சமயபுரத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி செல்லும் வழியில் குறுக்கிட்ட கால்வாய் கரையில் அம்பாளை வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை, கால் கழுவிவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை.
எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.

அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலைக்கு பூஜை செய்து விளையாடிய தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.
மக்கள் பூ கட்டி பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது.
எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்து யானையும் நடந்து சென்று படுத்துவிட்ட இடத்தல் சிலையை வைத்து பூஜை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள்.

இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம். இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டுவரப்படுகிறாள்.

சமயபுரம் மாரியம்மன் ஆதியில் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்கிற பெயரில் குடிகொண்டிருந்தார்.
கோரைப்பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள் வேறிடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி திரு உருவை சுமந்து சென்றவர்கள் தற்போது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் விக்ரகத்தை இற்க்கிவைத்து சிரமப் பரிகாரம் செய்து கொண்டனர்.
கண்ணனூர் அரண்மனை மேட்டில் ஓலைப்பந்தலில் வைத்துவிட்டுச் சென்றதால் அம்மன் கண்ணனூர் அம்மன் என்றும், கண்ணனூர் மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படை எடுத்துவந்த விஜயநகர மன்னன் தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டபோது கண்ணில் பட்ட அம்மனை வேண்டிய மன்னர் போரில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டுவதாக் நேர்ந்து கொண்டார்.
தற்போதைய கோவில் விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

சமயபுரம் கோவில் கொடிமரத்தை அடுத்துள்ள மண்டபத்தூண்களில் நாயக்க மன்னர்களின் உருவங்களைக் காணும்போது சுமார் 700 ஆண்டுக்ளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை உணரமுடிகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் விக்ரமாதித்தனால் வழிபடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
முக்தீஸ்வரர் கோவிலும், வடக்கே செல்லாயி அம்மன் மற்றும் போஜீஸ்வரன் கோவிலும் அமைந்துள்ளன.
மாயக்கண்ணனின் சகோதரியான மாரியம்மன் திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால் சமயபுரம் கோவிலின் நிர்வாகமும் பல ஆண்டுகளாக திருவரங்க்ம் கோவில் வசமே இருந்து
பக்தர்கள் முயற்சியால் 1984 ஆம் ஆண்டுமுதல் தனி நிர்வாகமாக மாறியது.கிருபானந்த வாரியார் சுவாமிகள் பக்தர்களிடம் நிதிவசூலித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

மூன்று திருச்சுற்ற்கள் கொண்டிருக்கிறது.முகப்பில் நீண்ட மண்டபம் உள்ளது.மூன்றாம் பிரகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் இருக்கிறது.2 ஆம் பிரகாரத்தில் மாரியம்மன் உற்சவமூர்த்தியும், கருப்பண்ண சாமி, விநாயகர் சந்நிதிகளும் அருள்பாலிக்கின்றன.

அம்பாளின் உக்கிரத்தைக்குறைக்க காஞ்சிப்பரமாச்சாரியரின் அருள்வாக்குப்படி நுழைவாயில் வலது புறம் இச்சா, கிரியா, ஞான சக்தி விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, அம்பாளின் கோரைப் பற்களையும் அகற்றி சாந்த சொரூபிணியாக மாற்றி 1970 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்தனர்.

அம்பாளின் கருவறையச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கவும் ஈரப்பதமாக குளிர்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளனர்.
சமயபுரத்தாளின் கருவறையும், விமானமும்
தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளன.
இந்தப்பணிக்காக சுமார் 72 கிலோ எடையுள்ள தங்கம் பக்தர்களால் காணிக்கை வழ்ங்கப்பட்டு அத்துடன் சுமார் 4கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டு சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு ஜொலிக்கிறது.
தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளன.

சுகாசினியாகக் காட்சியளிக்கும் அம்மனின் மேல் ஐந்துதலை நாகம் படம் விரித்துக் குடைபிடிக்கிறது.
இடதுகாலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்கவிடப்பட்டுள்ள வலது காலின் கீழ் அசுரர்களின் தலைகள் காண்ப்படுகின்றன.
எட்டு திருக்கரங்களில் முறையே கத்தி,கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.
நெற்றியில் திரு நீறு, குங்குமம், ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அலங்காரங்களுடன் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கத்தையும் தன்னுள் அடக்கி 27யந்திரங்களைத் திருமேனியில் கொண்ட பிரதிஷ்டையில் அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.

மன்மத்னை சிவபெருமான் எரித்த வெப்பத்தைத் தாங்கமுடியாத தேவர்களும் மனித உயிர்களும் தவித்து பார்வதியை வேண்ட, அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்ட பார்வதியின் அம்சமே சீதளா தேவியும், மாரியம்மனுமாக வழங்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

கருவறையின் பின்புறம் அமந்துள்ள அம்மனின் பாதத்திற்கு
பூச்சூடி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
பூச்சூடி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

கோவில் முன்மண்டபத்தில் படுத்து உறங்குபவர்களுக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம்.

தலவிருட்சமாக மருத்துவ குணங்கள் நிரம்பிய வேப்பமரம் திகழ்கிறது. வைத்தீஸ்வரன் கோவிலிலும் நோய்கள் தீர்க்கும் வேம்பே தலவிருட்சம்.
குழந்தை வரம் வேண்டி தன் முந்தானையைக்கிழித்து தொட்டிலாக்கிக் கட்டிய வேண்டுதல்களால் நிறைந்து காட்சிப்படுகிறது.
ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள மாரிதீர்த்தம் தெப்பக்குளமும்,
எதிரில் ஓடும் பெருவளை வாய்க்காலும் புண்ணிய தீர்த்தஙகள்.
எதிரில் ஓடும் பெருவளை வாய்க்காலும் புண்ணிய தீர்த்தஙகள்.

திருவிழா இல்லாத நாட்களில் 20 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப் பட்ட தங்க ரதம் கட்டணம் கட்டி இழுக்கலாம். அம்பாளுக்கு தங்க கவசமும் அணிவிக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலாலயம் செய்து பின்னர்
ஆலய பீடதில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.
ஆலய பீடதில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.
கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்மான செல்லாண்டி அம்மனுக்கு முதல் பூஜை கொடுத்தபின்னரே உலகாளும் அன்னை பூஜை ஏற்கிறாள்.

பூஜை செய்து விபூதி பிரசாதமாக வழங்குகிறார்கள்.

விஜய நகரப் பேரரசின் காலத்தில் ஸ்தலவிருட்சத்தின் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம்.அர்த்த ஜாமப்பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குள் சென்று அம்மனைப் பூஜிக்குமாம்.
அதனால் நிர்மால்யப் பூக்கள் கருவறையில் சிதறிக்கிடக்கும் காட்சியை மறுநாள் உஷத் காலப் பூஜைக்குக் கருவ்றையில் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம்.
அதனால் நிர்மால்யப் பூக்கள் கருவறையில் சிதறிக்கிடக்கும் காட்சியை மறுநாள் உஷத் காலப் பூஜைக்குக் கருவ்றையில் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம்.
காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாகவே அந்த நாகம் வெளியே வருவதில்லையாம்.அந்த இடத்தில் இப்போது கம்பிக் கதவு போட்டிருப்பதைக் காணமுடிகிறது.
தைப்பூசத்தின் போது அம்மன் கொள்ளிடக் கரையில் நீராட வருவாள்.
கொள்ளிடம் தான் அண்ணன் அரங்கநாதனையும்
,தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது.
அன்று திருவரங்கம் ஆலயத்திலிருந்து பட்டுப்புடவை,மாலைகள்,தளிகைகள் மகமாயிக்குச் சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.தீர்த்தவாரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தைமாதப் பெரு விழாவின் போது சிம்மம்,பூதம்,அன்னம்,ரிஷபம்,யானை,ஷேஷம்,குதிரை வாகனங்களில் உலா வந்து ஒன்பதாம் நாளிலே தெப்பத் திருவிழா கண்டருள்கிறாள் அன்னை.
தைமாதப் பெரு விழாவின் போது சிம்மம்,பூதம்,அன்னம்,ரிஷபம்,யானை,ஷேஷம்,குதிரை வாகனங்களில் உலா வந்து ஒன்பதாம் நாளிலே தெப்பத் திருவிழா கண்டருள்கிறாள் அன்னை.
சித்திரை மாத முதல் செவ்வாயன்று நடைபெறும் தேர்த்திருவிழாவும்,வைகாசி முதல் நாள் பிரகாரவிழாவும்,மாசி மாத கடைசி ஞாயிறன்று ந்டைபெறும் பூச்சொரிதல் விழாவும் முக்கியமான திரு விழாக்களாகும்.
தேர்த்திருவிழாவின் பத்தாம் நாள் திருவானைக்காவில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். ஈஸ்வரனிடமும், அண்ணன் அரங்கனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே.!

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருக்கும் நடைமுறைக்கு மாறாக, குழந்தைக்குப் பத்தியம் இருக்கும் தாயின் கருணைப் பெருக்கால் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் காக்கிறாள்.
மாசிமாதக் கடை ஞாயிறு பூச்சொரிதல் விழாவுடன் இந்த விரதம் தொடங்கும் .பூச்சொரிதலின் போது அம்மனுக்குப் பூக்கள் வந்து குவியும்.
சித்திரை,வைகாசி கத்திரி வெயிலின் தாக்கத்தைத் தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு,மக்களைக் குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூமாரி பொழிந்தும், இளநீர், மோர், பானகம்,வெள்ளரிப்பிஞ்சு, துள்ளுமாவு நிவேதித்தும் அவளைக் குளிரச் செய்கிறார்கள்.
அப்போது வெளி நாடுகளிலிருந்தும் கூடை கூடையாகப் பூக்களைப் பக்தர்கள் அனுப்பிவைக்கும் அன்பு நெகிழச் செய்யும்.
பூச்சொரிதல் திருவிழாவை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவசனம் நிறைவு செய்து அம்மனுக்குக் காப்புக் கட்டுகிறார்கள்.
திருக்கோவிலின் தென் கரையிலிலுள்ள சுப்பிரமணியர் கோவிலில் இருந்து மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து ஊர்வலமாக நான்கு தேரோடும் வீதிகளிலும் வலம் வந்து பிரதட்சணமாக ராஜகோபுரம் வழியாக கருவறையிலிருக்கும் அம்மனுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசையின் போது புதிய மூங்கில் தட்டில் பச்சரிசி, தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு காய்கறிகள் சமர்ப்பித்து அம்மனுக்குப் பூஜை செய்து அந்தணர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ தானம் செய்வது பித்ரு தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அஷ்டமங்கலப் பொருள்களை தாலிபலத்திற்காக சுமங்கலிகள் தானம் செய்தால் அம்மனே பெண் உருவில் வந்து ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.
ராகு கேது தோஷம் நீங்கவும், குழ்ந்தைப் பேறுக்காகவும்,தொழில் பிரச்சினைக்காகவும் வேண்டிக் கொண்டால் சமயபுரத்தாள் சமயமறிந்து நிச்சயம் பலன்கொடுப்பாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி குணம் பெற தனி மண்டபம் உள்ளது.இவர்களுக்கு ஆலய அபிஷேகத்தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அம்மனுக்கு உயிப்பலி கிடையாது.
மாவிளக்கும்,எலுமிச்சம்பழ மாலையும் விஷேஷமானவை.
நமது குறைகளை ஒரு காகிததில் எழுதி ஸ்தல மரத்தில் கட்டி பிரார்த்திக்க நம் குறைகள் தீரும்.இதற்கான மஞ்சள் தாள் ஆலயத்தில் கிடைக்கிறது.
கரும்புத்தூளி எடுத்தல் பிரசித்தமான குழந்தைப்பேறு அடைந்த தம்பதியர் நிகழ்த்தும் அருமையான வழிபாடு.
தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன்
ஆற்று நீரைச் சுமந்து அம்மன் பாதத்தில் ஊற்றி குளிரச் செய்வார்கள்.
ஆற்று நீரைச் சுமந்து அம்மன் பாதத்தில் ஊற்றி குளிரச் செய்வார்கள்.

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே ,கண்ணனூர் சம்யபுரம் மாரியம்மனைத் தரிசிப்பது சுற்றுப்புறக் கிராம மக்களின் வழக்கம்.

அம்மனின் அருளைப்பெற்றேன்..
ReplyDeleteநல்ல விரிவான தகவல்..
படங்கள் அருமை....
நேரில் தரிசித்த அனுபவத்துடன் செல்கிறேன்...
சமயபுரம் மகமாயியை கண் குளிர தரிஸித்தேன். நன்றி, நன்றி, நன்றி.
ReplyDeleteமுழுவதும் நான் ஒருமுறை படித்துவிட்டு என் மனைவுக்கு ஒரு முறை படித்துக்காட்டிவிட்டு, மீண்டும் வருவேன்.
நேற்று நான் கொடுத்த வேண்டுகோளை, சமயபுரத்தால் அருளால் இன்றே நிறைவேற்றியுள்ளீர்கள். என் வேண்டுகோளுக்கு பலவித காரணங்கள் உள்ளன. அதுபற்றி விபரமாக உங்களுக்கு மெயில் தருகிறேன்.
சிரமம் கொடுத்ததற்கு மன்னிக்கவும்.
VERY VERY TIMELY HELP, MADAM.
ஆனந்தக் கண்ணீருடன்
தங்கள் பிரியமுள்ள
vgk
நல்ல விரிவான தகவல்..
ReplyDeleteபடங்கள் அருமை....
I am here at USA and it is my duty to lookafter my Grandson. But sometimes my innermind will have the thrist that I am missing my routine temple visits.
ReplyDeleteThanks Rajeswari.
You are making my days wounderful by your writings.
On reading this article I felt as if i visited the place. Fentastic informations.
God bless you dear.
viji
அம்மா....டி... எவ்வளவு விவரங்கள்...
ReplyDeleteஉலகம் முழுவதும் இந்த பதிவு படிக்கப்படும் என்று எண்ணூம்போது ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. மகமாயி பற்றி உள்ளூர்வாசிகள் சொல்லும் அத்தனை தகவல்களும் கூறிவிட்டீர்கள். இன்னும் எதுவோ விட்டு போன நினைப்பு தோன்றுகிறது. மகமாயி பற்றி எவ்வளவு சொன்னாலும் மேலும் கேட்கும் மனதிடம்தான் குறை உள்ளது.

ReplyDelete@சாகம்பரி said...///
ReplyDeleteஆமாங்க ..ஆமாங்க.. பிரியமான தாயைப் பார்த்துவிட்டு வரும்போது திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டு வருவது போல் எதையோ விட்டுவிட்ட நினைவும், இன்னும் எழுதினால் படிப்பவர்கள் வெறுத்துவிடுவார்களோ என்ற நினைவோடும் முடிக்கத் தெரியவில்லையே....
Dear thozi,
ReplyDeleteThanking you to render this article with pious.
இது வரை கடந்த இருபது வருடத்துக்கும் மேலாக ஆண்டிற்கொருமுறை சமயபுரத்தாயையும் வைத்தீஸ்வரனையும், சிதம்பரம் ஆடலரசனையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து வந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு முறை கொடுப்பினையோ.?எல்லாம் அம்மாவின் அருள்.
ReplyDeleteநல்ல விரிவான தகவல் தங்களது இந்தப் பதிவினால்
ReplyDeleteபலமுறை அன்னையின் திருமுகத்தை நேரில்க்
கண்டு தரிசித்த உணர்வைப்பெற்றேன்!..நன்றி
வாழ்த்துக்கள்......
மிக்க அருமையான வலை பதிவு....
ReplyDelete;)
ReplyDeleteகேஸவா
நாராயணா
மாதவா
கோவிந்தா
விஷ்ணு
மதுசூதனா
திருவிக்ரமா
வாமனா
ஸ்ரீதரா
ஹ்ருஷீகேஷா
பத்மநாபா
தாமோதரா
-oOo-
443+2+1=446 ;)
ReplyDeleteஇன்று உங்கள் பதிவின் புண்ணியத்தில் சமயபுரம் அம்மன் தரிசனம் கண்டேன்! நன்றி!
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/5.html
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form
9] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்-10
http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_21.html
மிடுக்காய் கடுக்காய்-11
http://jaghamani.blogspot.com/2012/02/1.html
மலர்களே மலர்களே-12
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
France.