Sunday, May 29, 2011

இசைமழை பொழியும் அழகுப் பறவைகள்


  

Bird SuppliesBird SuppliesBird SuppliesBird SuppliesBird Supplies


அழகுத் தோகை விரித்து ஆடி நம்மை மகிழ்விக்கும் மயில்
அன்னை பார்வதி தேவி மயிலின் அழகிய ஆட்டம் கண்டு சிவன் கூறிய உபதேசப் பாடத்தைக் கோட்டை விட்டு கவனம் சிதறியதால் மயிலாக உருவெடுத்து கற்பகமாய் சிவனைப் பூஜித்ததலம் மயிலாப்பூர்.

கோல எழில் மயிலாய் மயிலையில் காட்சி கொடுக்கும் அன்னை கடம்பாடவியாம் காஞ்சியில் குயிலாய் இருப்பாள் வீணையின் நாதத்தைப் பழிக்கும் கிளி மொழியாள் அவள்..

ஆடும் மயிலேறி மாணிக்கமாய் ஓடிவந்தருள்வான் தமிழ்க் கடவுள் முருகன். 
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது
தலையில் மயில் பீலி சூடுவான் தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்.
அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
 மயில் உணர்த்தும் ஓம்கார உருவத்தின் தத்துவம் இந்திரிய ஜெயம் ஆகும்.
223
தோற்றத்தில் தன்னிகரில்லாத மயில் குரலினிமை குறைந்தது. 

குரலினிமை மிக்க கூடு கூட கட்டத்தெரியாத கன்னங்கரிய குயிலுக்கு அழகு குறைவு.

திருவேங்கடமுடையானின் திருமண ஓலை எழுதிய வியாசரின் புத்திரரான சுகமகரிஷி முற்பிறப்பில் கிளியாக இருந்து வேதம் கேட்டவர்.

ஆண்டாளின் தோளில் அமர்ந்து இனிய குரலில் இறைநாமம் சொல்லிக் கொண்டிருக்கும் கிளி. மதுரை மீனாட்சியுடன் இணைபிரியாமல் அழகுக்கு இலக்கணம் சொல்லும். 

மணல் மூடியிருந்த திருவரங்கக் கோவிலை அதன் மாகாத்மியத்தை இடைவிடாமல் சலிக்காமல் சொல்லிச் சொல்லி மன்னன் காதில் விழுந்து, அவன் கிளியின் சொற்களை ஆராய்ந்து அகழ்ந்து திருவரங்கக் கோவிலை மீண்டும் கண்டடைவதற்கு கிளியே காரணகர்த்தா.

வானுலகம் சற்றுச் சலிக்கும் சமயங்களில் தெயவங்களும் வந்து கண்டுரசிக்க தேர்ந்தெடுப்பது இந்தப் பறவைக் கூட்டங்களைத்தானோ??  

எங்கள் கோகுலத்தின் கண்ணன் கொஞ்சுமொழிபேசிமகிழும் பொற்சித்திரம்..
வானம்பாடி பறவைகள் இரண்டின் ஊர்வலம் இங்கே நடக்கிறது
இசைமழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது    
Lord+krishna+and+radha+stories
அழகிய வண்ணத் தோற்றமும், இனிய குரலும் கொண்ட கிளியே எங்கள் குழந்தைகளின் வளர்ப்புத் தேர்வு . 

கோடை விடுமுறையைக் கொண்டாட வாங்கிய அழகிய வண்ணக்கிளிகளின் படங்கள் இங்கே...











படங்களைக் குறைக்கவேண்டும் என்ற என் சங்கல்பத்தைப் பங்கப்படுத்திய பறவைக் கூட்டங்கள்.... 
அழகுத்தோற்றத்தில் சில பறவைகள் பார்வைக்கு...






  

28 comments:

  1. படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. அசையும் பறவைகள் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஃஃஃஃஃபடங்களைக் குறைக்கவேண்டும் என்ற என் சங்கல்பத்தைப் பங்கப்படுத்திய பறவைக் கூட்டங்கள்..ஃஃஃஃஃ

    அப்பாடி சரணாலயத்தில் கூட இப்படி ரசிக்கலாமா தெரியல... மிக அருமையான தொகுப்புங்க..

    ReplyDelete
  4. பறவைகள் பலவிதம் .... ஒவ்வொன்றும் ஒருவிதம் ....

    ஆஹா கிளிகள் கொஞ்சுகின்றன

    குருவிகள் குதிக்கின்றன

    பழத்தைக்கொத்தும் அழகு

    மயில்கள் ஆடி மகிழ்விக்கின்றன

    தோகை விரித்த மயிலின் மேல் வள்ளி தெய்வானை ஸகிதம், ஆறுமுகனின் அழகிய தோற்றம், மயிலின் காலடியில் நீண்ட அழகிய நாகப்பாம்பு... ஆஹா!

    வானம்பாடிப்பறவைகளுடன் கண்ணன்

    பல ஜோடி கூண்டுக்கிளிகள் விடுதலை விரும்பியாக

    அந்த மூன்றில் நடுநாயகமான ஒன்று இங்கும்மங்கும் அசைவது, கழுத்தைத் திருப்பிப்பார்ப்பது .. அருமையோ அருமை

    சொல்லிவைத்தது போல ஒவ்வொரு பறவைகளும் கழுத்தைத்திருப்பிப் திருப்பி இராணுவ அணிவகுப்புபோல .. அடடா என்ன அழகு

    குட்டிப்பறவையொன்று குதூகலத்துடன் மலைக்குமலைதாவும் அனுமனை ஞாபகப்படுத்துவதுபோல .. என்ன லூட்டி அடித்து மகிழ்விக்கிறது.

    மொத்தத்தில் அனைத்தும் அருமை.

    கண்கொள்ளாக்காட்சிகள் அளித்து மகிழ்வித்த உங்களை அந்தப்பறவைகள் போலவே பறந்தோடி கோவைக்கே வந்து நேரில் பாராட்டிட ஆசை தான்.

    பிரியத்துடன் [சம்சார சாகரம் என்ற கூண்டில் அடைபட்டுள்ள பறவை] vgk

    ReplyDelete
  5. @எல் கே said...
    படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி//
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. @ கலாநேசன் said...
    அசையும் பறவைகள் அருமை. வாழ்த்துக்கள்//
    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ ♔ம.தி.சுதா♔ said...//
    அப்பாடி சரணாலயத்தில் கூட இப்படி ரசிக்கலாமா தெரியல... மிக அருமையான தொகுப்புங்க.//
    அருமையான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    பறவைகள் பலவிதம் .... ஒவ்வொன்றும் ஒருவிதம் ..//
    ஒவ்வொரு பறவையையும் ரசித்து ரசித்து கருத்து அறிவித்திருக்கும் தங்கள் ரசிகத்தன்மைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
    உங்கள் கருத்துரைக்குப் பிறகு மீண்டும் பதிவைப் பார்த்தால் சுவை பன்மடங்காகிறது.
    மிகுந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  9. ஆடும், பாடும் பறவைகள்.....அழகு.

    ReplyDelete
  10. wow!!!!!!!!!!!!!!!!!!
    Pretty Rajeswari. Very very pretty.
    Sitting inside the home, you had taken me to all the places. Now the lively lovely birds. Super animation dear. I love the post very much. I had got full energy seeing the birds to run the full day.
    Thankyou dear.
    viji

    ReplyDelete
  11. உங்களது இந்த பதிவில் இணைக்கப்பட்ட animation photoகள் அற்புதமாக இருக்கின்றது! எனது விருப்பமான கடவுள் வண்ணமயிலேறி வரும் முருகனே!!!

    ReplyDelete
  12. அருமையான பறவை படங்களின் தொகுப்பு..!

    -
    DREAMER

    ReplyDelete
  13. ஓவியமும் பறவைகளும் மிக மிக அழகு!!

    ReplyDelete
  14. @ viji said...//
    அழகான அருமையான கருத்துக்கு நன்றி விஜி.

    ReplyDelete
  15. @ கார்த்தி said...
    உங்களது இந்த பதிவில் இணைக்கப்பட்ட animation photoகள் அற்புதமாக இருக்கின்றது! எனது விருப்பமான கடவுள் வண்ணமயிலேறி வரும் முருகனே!!!//
    உங்கள் பெயரே சொல்கிறதே !
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. @DREAMER said...
    அருமையான பறவை படங்களின் தொகுப்பு..!

    -
    DREAMER//
    கனவின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. @ FOOD said...
    பக்தி பரவசம், பறவைகள் அற்புதம்.//
    அற்புதமான கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @ குணசேகரன்... said...
    ஒரு குட்டி வேடந்தாங்கல், //
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. @Mano Saminathan said...
    ஓவியமும் பறவைகளும் மிக மிக அழகு!!//
    வாங்க! வாங்க !! நன்றிங்க கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  20. @ Aravind said...//
    அம்மா....
    அருமை அருமை....
    பல்சுவை வண்ணக்கிளிகள்....

    அதுவும் ஜோடிகள்....//

    பாசக்கிளியின் வண்ணமிகு வாழ்த்துக்கு பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.
    நன்றி.

    ReplyDelete
  21. மிக நல்ல பதிவு ,
    ஒவ்வொரு பதிவிலும்
    வைரமாய் பல பிரிணாமங்களை சொல்லி
    பிரமிக்க வைக்கிறிர்கள் மேடம்

    ReplyDelete
  22. அசையும் பறவைகள் அழ்கோ அழகு !

    ReplyDelete
  23. ஆஹா... அனிமேஷனில் பறந்த அழகுப் பறவைகள் உள்ளத்தில் குடியமர்ந்தன. நன்றி ஐயா!

    ReplyDelete
  24. ;)

    அச்யுதா!

    அனந்தா!!

    கோவிந்தா!!!

    ReplyDelete
  25. 528+2+1=531 ;)))))

    என் பின்னூட்டத்தை மீண்டும் நானே படிக்கும் போதும், அதற்கான தங்களின் பதிலை மீண்டும் ஒருமுறை படிக்கும் போதும் எனக்கு எவ்ளோ மகிழ்ச்சியாக உள்ளது தெரியுமா!!!!!

    அதற்காகவே பொறுமையாக இனிமையாக மனமகிழ்ச்சியுடன் இந்த வேலையைச் செய்ய உள்ளேன். ;)))))

    ReplyDelete