Friday, May 20, 2011

கோவை கோனியம்மன்





[Image1]

[Gal1]





கோவை மாநகரத்தின் காவல் தெய்வமாகவும் தனிப் பெரும் அரசியாகவும் ஆட்சி நடத்துகிற அருள்மிகு கோனியம்மன், துர்கா பரமேஸ்வரியின் வடிவம்..

பராசக்தியின் கோபாவேசக் கூறு என்றழைக்கப்படுகிற துர்காதேவியே, கோனியம்மன்..


கோவையைக் காத்தருள் கோமகளாகிய கோனம்மையே!

 இயற்கையோடு இயைந்துபோன தமிழக மக்கள், அம்பிகையை, இயற்கையாகவும்,  கண்டு வழிபட்டார்கள். 

 கோவை கோனியம்மனுக்கு முக்கியமான இடமும். தனித் தன்மையும் உண்டு ; கோனியம்மனைக்  கோயம்புத்தூர் வந்து தான் தரிசிக்கமுடியும்.
p_0006
ஆலயம் அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது..

தென்னகத்தில் கோயம்புத்தூர் சில மன்னர்களின் தலை நகராக இருந்து ஒரு கோட்டைக்குள் இரண்டு ஆலயங்கள் இருந்தன. 

கோட்டைக்கு வெளியே சிறிய கோனியம்மன் ஆலயம் இருந்ததாம். ஒரு நேரத்தில் கோவன்புத்தூர் மற்றும் அந்தக் கோட்டை எதிர் தேச மன்னர்களின் படையெடுப்புக்கு ஆளாகி முற்றிலுமாக அழிந்தது.  

 அம்மனின் சக்தியால் .சிறிய அளவிலேயே இருந்த கோனியம்மன் ஆலயம் மட்டும் அழிக்கப்படவில்லை

 இருளர் தலைவனான கோவன் என்பவர், காடு திருத்தி மேடாக்கி ஊரமைத்தார். கோவன் அமைத்த புத்தூர் என்பதால், கோவன்புத்தூர் என்று பெயர்பெறத் தொடங்கி, காலப்போக்கில் அதுவே கோயம்புத்தூர் என்றானது.

பத்து வீடுகள் (குடிசைகளானாலும்) சேர்ந்தாற்போல் அமைந்தால்கூட, அருகில் மண்திட்டு அமைத்து, அரசும் வேம்பும் நட்டு, கல்லோ மண்ணோ பிடித்து ஒரு பிம்பம் செய்து, அதையே காவல் தெய்வமாக வணங்குவது தமிழர் வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில், தான் அமைத்த புத்தூரிலும், அவ்வாறே செய்யத் தலைப்பட்டார் கோவன்..

கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில் களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தி யின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள். 

தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.




p_0002







கோவை கோனியம்மன் கோயிலில்  அம்மனுக்கு தங்கப்பாவாடை  சாற்றுகிறார்கள் !


 வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங் கள் உள்ளன.




 ஆடி யில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


கோவை மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப காரியங் களுக்கும் கோவையின் அரசியாக திகழும் கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.

கோவை நகரில் இங்கு சிறப்பாக தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.


அக்னி திருமணம்: மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர்.

பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர்.

அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.



தம்பதி கிரகம்: நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை செய்கின்றனர். இங்குள்ள ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது.

[Gal1]

. அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்.



நவக்கிரக சன்னதியிலுள்ள கிரகங்கள் மனைவியருடன் காட்சி தருவது விசேஷம். சூரியன் ஏழு குதிரை பூட்டியரதத்தில் வீற்றிருக்கிறார்.

[Gal1]
.
பத்து வீடுகள் (குடிசைகளானாலும்) சேர்ந்தாற்போல் அமைந்தால்கூட, அருகில் மண்திட்டு அமைத்து, அரசும் வேம்பும் நட்டு, கல்லோ மண்ணோ பிடித்து ஒரு பிம்பம் செய்து, அதையே காவல் தெய்வமாக வணங்குவது தமிழர் வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில், தான் அமைத்த புத்தூரிலும், அவ்வாறே செய்யத் தலைப்பட்டார் கோவன்..

காவல் தெய்வம் என்று சொன்னாலும், பெரும்பாலும் அன்னையையே காவல் தெய்வமாகக் கொள்வதும் வழக்கம். என்ன இருந்தாலும், குழந்தைக்கு அன்னைதானே அன்புடைப் பாதுகாப்பு! அதன்படி, ஊரின் வடக்குப் பகுதியில், தான் நட்ட கல்லையே, அம்பிகையாக, அன்னையாகக் கோவன் வழிபட்டாராம்.

அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். , இருளர்கள்  அம்மனையே தங்க ளது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங் கினர்.



  கோட்டையின் வெளியில் கோனியம்மன் ஆலயம் அமைத்து கோட்டைக்குக் காவல் தெய்வமாகவும்,  குலதெய்வமாகவும், போரில் வெற்றி தரக்கூடியவளான துர்கையை, கோயில் எழுப்பிக் கும்பிட்டனர்.

 கோனியம்மனாக வழிபடப்படுகிறாள். துர்கை பாதுகாப்பு கொடுப்பாள் (துர்கம் என்பதே கோட்டை என்று பொருள்படும்); துர்கை வெற்றியும் தருவாள் (

அந்தக் காலத்து அரசர்கள், போருக்குச் செல்லும் முன்னர், துர்கையையும் காளியையும் வழிபட்டுவிட்டுச் செல்வார்கள்.

  கோசர்கள் கட்டிய கோயிலே, கோவை நகருக்கு நடுவில், தற்போது கோலாகலமாக விளங்கும் கோனியம்மன் ஆலயம். 

தங்களது வாழ்வும் வளமும் யாவும் அம்பிகையே என்று நினைக்கும் தர்மத்தின் வெளிப்பாடுதான், கோனியம்மன் என்கிற பெயர். ‘

கோன்’ என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும். அனைவருக்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், யாவர்க்கும் (யாவற்றுக்கும்) தலைவி என்னும் பொருள்கள் புலப்படும்வகையில், தங்களுடைய அன்னையை, கோனி என்றே மக்கள் அழைத்தனர்.

வெற்றித் தேவதையாக  தமது நோய்களைத் தீர்க்கும் குளிர்நாயகியாகவும், தீமைகளை அழிக்கும் துர்கா பரமேஸ்வரியாகவும் வழிபட்டனர். 

கோவன் வணங்கிய வன தேவதை’  கோனியம்மனை,  ஆலயத்தின் சக்தியைப் பற்றிக் கேட்டறிந்த மைசூர் தேசத்து மன்னர்கள் அந்த ஆலயத்து தேவியை மகிஷாசுரமர்தினியாக பாவித்து ஆலயத்திற்கு  மகிஷாசுர மர்த்தினி வடிவத்தைப் பிரதிஷ்டை செய்து, பூஜைகளை மீண்டும் தொடங்கினர்

சாந்த சொரூபி என்றும், சாந்தி துர்கை என்றும் அழைக்கப்படுகிறது கோனியம்மன்  வடக்குப் பார்த்து அமர்ந்து வலது காலை மடித்து பீடத்தின்மீது வைத்துக்கொண்டு, இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கிறாள். 

காலடியில் துஷ்ட அரக்கன் கிடக்கிறான்; 

தீமை முகத்தில் ஊஞ்சலாட, வாளும் கேடயமும் கொண்டு அம்பிகையோடு போருக்கு வந்த அவன், அம்பிகையால் வெட்டி வீழ்த்தப்பட்டு, காலடியில் சுருண்டு கிடக்கிறான்.  

கழுத்தில் ஆரம் அணிந்த அம்பிகையின் முகம், சற்றே உக்கிரமாக உள்ளது; பொங்கிய சினம், இன்னமும் அடங்காததுபோன்று தெரிகிறது. 

தலையை மணிமகுடம் அலங்கரிக்கிறது.

p_0004

சிவ அம்ச அம்பிகை: கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். 

சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

கோனியம்மன், வீர சக்தியானவள் என்பதை விளக்குவதாகவே அவளுடைய தோற்ற அமைப்பு திகழ்கிறது. 

வலது காதில் குண்டலம் அணிந்திருப்பவளின் இடது காதில் தோடு. இடது பாகம் அம்மையின் பாகம் என்பதால் தோடும், வலது பாகம் ஐயனின் பாகம் என்பதால் குண்டலமும் உள்ளன. எனவே, அம்பிகை அர்த்தநாரீஸ்வர சக்தியாகவும் கோலம் கொண்டிருக்கிறாள்.


அலகிலா அழகின் அற்புத இலக்கணம்
பொலியும் மங்கலப் பூரணி போற்றி
அம்புலிக் கீற்றணி செம்பொன் சடையார்
சம்புவின் உயிர்மலி சாம்பவி போற்றி

என்று அம்பிகை ஆதி தேவதையை வணங்குகிற நிலையில் கோனியம்மனை பிரார்த்தனை தெய்வமாகவும், தத்தம் வீட்டுப் பெண்ணாகவும் கோவை மக்கள் காண்கின்றனர். திருமணம் நடத்தி வைத்தல், தடைகளை நீக்குதல், பிள்ளைப்பேறு நல்கல், பணியிடம் வாய்க்கச் செய்தல், செல்வமும் செழிப்பும் தருதல், வளமும் நலமும் வாரி வழங்கல் என்று அனைத்து வகையான பிரார்த்தனைகளும் நேர்த்திகளும் நிறைவேற்றித் தருபவளாகவே அன்னை அருள்பாலிக்கிறாள்.

அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்ச முக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.


இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். 

மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர். 

தங்கள் வீட்டுப் பெண்ணான கோனியம்மா, தம்முடைய குழந்தைகளின் திருமணத்தைக் கோலாகலமாகவே நடத்தி வைப்பாள் என்று பரவசப்படுகிறார்கள்.


நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.  

மாசியில் 14 நாள் திருவிழா, தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். 

p_0007
புலி வாகனம்,  கிளிவாகனம், சிம்ம வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாடும் நடைபெறுகிறது.

நகர தெய்வம் கோனியம்மனுக்கு மாசிமாதம் தீகுண்டம் இட்டுவிட்டால் இன்றும் யாரும் ஊரை விட்டு வெளியில் போகமாட்டார்கள்.

காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஊர்வலம், திருக்கல்யாணம், தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அன்று அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளுவார்.  பரிவேட்டை.  தமிழில் லட்சார்ச்சனை, தீர்த்தவாரி.  வசந்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.


p_0003

மாசி மாதத்தில் தேர்த்திருவிழா காணும் கோனியம்மன், பக்தர்களின் வாழ்க்கையைக் கோணலின்றிக் காப்பாற்றிடுவாள். 

உலகரசியான அவள் ஜகன்மாதா; அன்பு அன்னையான அவள் பிரமாண்ட நாயகி; அருளாட்சி நடத்துவதால் 

அவளே ராஜராஜேஸ்வரி; கரிசனத்துடன் அணைப்பதால் அவளே கோனியம்மா!







18 comments:

  1. ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை கருப்பக்கவுண்டர் தெருவில் [இப்போதும் வசித்து வரும்]உள்ள என் அண்ணன் மகளுடன், அவர்கள் புகுந்த வீட்டுக்காரர்களின் குலதெய்வம் என்ற முறையில் இந்தக்கோயிலுக்குப்போய் வந்துள்ளேன்.

    தங்கள் படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல வெகு அருமையாகவே உள்ளன.

    நான் இந்தக் கோயிலுக்குச் சென்று வந்தபோது இது பற்றியெல்லாம் ஒன்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

    இப்போது தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

    அன்புடன் vgk

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நிறைய விபரங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நிறைய விபரங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. MY gOD mY gOD
    Tears are sheding from my eyes. I cannot read fully.
    My childhood was spend in this temple. Every Friday went along with my father.
    Ther thiruvizha is a rejoying for us all the realations from sorrounding will gather to my house because the ther passes by in our stree(Vysial street).
    I never never miss going this temple whenever i visit Coimbatore.
    Tomorrow my daughter is going to Coimbatore and her first visit out
    must be to this temple and then only outings.
    I dontknow how to tell Thanks to you dear.
    The tears from my eyes will tell you so.
    viji

    ReplyDelete
  5. மறுபடியும் நிறைய விவரங்கள். என்னதான் புனருத்தாரணம் செய்தாலும் எனெக்கென்னவோ இப்படி பளிச் என இருக்கும் கோவில்கள் சுவாரஸ்யம் இருப்பதில்லை. பழமை வாசனையோடு இருந்தால்தான் சுவாரஸ்யம். இது என் கருத்து.

    ReplyDelete
  6. //‘கோன்’ என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும். அனைவருக்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், யாவர்க்கும் (யாவற்றுக்கும்) தலைவி என்னும் பொருள்கள் புலப்படும்//

    இந்தத்தகவல் இன்று புதிதாகத்தெரிந்து கொண்டேன். நல்லதொரு விளக்கம்.

    நரிக்குறவர் பரம்பரையில் குழந்தை பிறக்கும்போது எந்த ஊரில் பிறக்கிறார்களோ, அந்த ஊருடன் கோன் என்று சேர்த்து வைக்கிறார்கள் என்று படித்துள்ளேன். உதாரணம்: திண்டிவனத்தில் பிறந்த நரிக்குறவரின் ஆண் குழந்தைக்கு ”திண்டிக்கோன்” என்று பெயர் சூட்டுவார்களாம்.

    நீங்கள் சொல்லும் கோன் என்றால் அரசன் என்ற விளக்கமும் சரியாகவே இங்கு அமைகிறது.

    ReplyDelete
  7. காவல் தெய்வம் என்று சொன்னாலும், பெரும்பாலும் அன்னையையே காவல் தெய்வமாகக் கொள்வதும் வழக்கம். என்ன இருந்தாலும், குழந்தைக்கு அன்னைதானே அன்புடைப் பாதுகாப்பு!

    பக்தி
    பரவசத்தோடு
    பாச
    பிரவாகமும்
    பகிர்ந்தது மிக சிறப்பாய் இருந்தது
    கோயம்புத்தூர் பொருள் அர்த்தம் இன்றுதான் புரிந்து கொண்டேன்
    இன்னும் துர்க்கையின் பொருளும் அறிந்தேன் தெளிந்தேன்

    ReplyDelete
  8. வாவ்.... நம்ம ஊரு கோவில்... பார்க்கவும் படிக்கவும் புல்லரிக்கிறது... மிக்க நன்றி'ங்க பகிர்ந்து கொண்டதற்கு...

    ReplyDelete
  9. இவ்வளவு விபரங்களை அறிந்து வைத்திருக்கிறீர்களே !

    ReplyDelete
  10. இந்த அம்மணினி பெயராலேயே ஊர் அழைக்கப்பட்டு மருவி இன்று கோவை என்றாகி விட்டது

    ReplyDelete
  11. அருமையான தகவல்கள்... வலைப்பதிவின் மூலம் ஒரு சாசனம் ஆகிவிட்டது கோனியம்மன் வரலாறு! வாழ்த்துகள். அவரவர் ஊரைப் பற்றி அவரவர் தான் பெருமைப்படுத்த முடியும்! கோன்-பற்றிய தங்கள் விளக்கமும் வை.கோ. சாரின் தகவலும் வெகு சுவை. எதையும் உபயோகமாக செய்யும் தங்களுக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  12. என்னுடைய கல்லூரிக்கால கோயம்புத்தூரில், கோணியம்மன் நான் விருப்பப்பட்டு சென்ற கோவில். 25 வருடம் கழித்து கோவிலின் வளர்ச்சியை புகைப்படம் மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது. நன்று.

    ReplyDelete
  13. அருமையான தகவல்கள்... வலைப்பதிவின் மூலம் ஒரு சாசனம் ஆகிவிட்டது கோனியம்மன் வரலாறு! வாழ்த்துகள். அவரவர் ஊரைப் பற்றி அவரவர் தான் பெருமைப்படுத்த முடியும்! கோன்-பற்றிய தங்கள் விளக்கமும் வை.கோ. சாரின் தகவலும் வெகு சுவை. எதையும் உபயோகமாக செய்யும் தங்களுக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  14. ஐ ...எங்க ஊர் கோவில்....இவ்ளோ விஷயம் இருக்கா......? இப்போது தான் அறிந்து கொண்டேன் .நான் இது வரைக்கும் இரண்டு தடவை தான் சென்றுள்ளேன்..இனி அடிக்கடி போவேன்.....

    ReplyDelete
  15. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete
  16. அட...எங்க ஊர் கோவில்+அம்மன்+அக்கோவில் கதையை செவ்வாய்கிழமை வில்லுக்கு வைக்கும் நேரத்தில் படிக்க மெய் சிலிர்க்கிறது...
    எத்தனை முறை இந்த அம்மனை தரிசித்து வந்திருப்பேன்....இப்போ மீண்டும் தர்சனம் செய்த சந்தோஷம்...நன்றி.

    ReplyDelete