திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது சித்திரைத் திருநாள், திருவாதிரை நட்சத்திரம்.
இராம லக்க்ஷ்மணர்களில் லக்ஷ்மணரின் அவதாரம் தான் ஸ்ரீ ராமானுஜர்.
மஹாவிஷ்ணுவின் , நின்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் கிடந்தால் புல்கும் அணையாம் ஆதிசேஷனே லக்ஷ்மணன். சேவா நாயகன்.
அவனே ஸ்ரீராமானுஜராக வந்து மக்கள் உய்ய வந்த மாமுனி.
இந்த அவதார புருஷனின் தோற்ற முக்கியத்துவமே அனைவரையும் பகவான் வழிப்படுத்துதலே.
ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியாரான ஸ்ரீ ராமானுஜரின் பெற்றோர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பெருமாளை குழந்தை செல்வத்திற்க்காக வேண்டிய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெருமாள் பார்த்தசாரதியே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது.
வேதம் தமிழ் செய்த மாறன் என்றபடி, தமிழ்மறையை ஈன்ற தாயாக நம்மாழ்வாரைப் போற்றும் வைணவ உலகம், அந்தத் தமிழ்மறையை பாலூட்டி சீராட்டி வளர்த்த செவிலித் தாயாக ராமானுஜரைப் போற்றுகிறது.
திருக்கோயில்களில் தமிழ்மறை முழங்க வித்திட்டவர் ஸ்ரீராமானுஜர்.
ஆளவந்தாருக்கு ராமானுஜர் செய்துகொடுத்த உறுதிமொழிகளில் ஒன்று, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை பண்ணோடு ஆலயங்களில் ஒலிக்கச் செய்வது.
இதை ராமானுஜர் நிறைவேற்றி வைத்ததால்தான், வைணவ ஆலயங்களில் தமிழ் மறை இன்றளவுக்கும் ஒலித்துவருகிறது.
கடவுள் இருக்கிறார் அவரை அணுக எல்லோருக்கும் உரிமை உண்டு. சில நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவன் நாமம் என்பதைத் திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் நின்று உரக்க அறிவித்தவர்.
ஜாதி பேதம் பகவானுக்கு இல்லை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் தானே அவ்வழியில் நடந்து நிரூபித்தவர்.
கி.பி.1017ல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் எளிய தத்துவங்களையும் சமூகக் கோட்பாடுகளையும் எல்லோரும் உணரவேண்டும்.
சாதி, மதம் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்திய ஆன்மிகப் பெரியவர்.
பெண்களைச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்த பெண் விடுதலை சிந்தனையாளர்.ராமானுஜர் பெண் விடுதலைக்கும், சமூகத்தில் அவர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்கும் விரும்பிய புரட்சியாளர் .....
ஆன்மிக வழியில் சமூக சீர்திருத்தத்தை இந்த மண்ணில் உண்டாக்கியவர் "ஸ்ரீ ராமானுஜர்'
ராமானுஜரின் 120 ஆண்டுகால பெருவாழ்வு போற்றத்தக்கது.
" அவருடைய கருத்துகளும், பெண்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவமும், ஸ்ரீ ராமானுஜரின் தியாக வரலாறும் ஸ்ரீ ராமானுஜரை இன்றும் வணங்கக் காரணமாகிறது.
அவரது இளமைப் பருவம் முதல் அவர் சமாதியாகும் வரை சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் சமமாகப் பார்க்கும் கொள்கையைக் கொண்டிருந்தார்.
ராமானுஜர் தன்னுடைய குருவாக தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பிதான் இருக்கவேண்டும் என்று நினைக்க. சாதிப் பாகுபாட்டைக் காரணம் காட்டி, ராமானுஜரின் விருப்பத்தை மறுக்கிறார் திருக்கச்சி நம்பி.
ராமானுஜரின் சேவை மனப்பான்மையை உணர்ந்த ஸ்ரீரங்கத்திலிருக்கும் ஆளவந்தார் தன்னுடைய சீடர் பெரிய நம்பியின் மூலம் காஞ்சியிலிருக்கும் ராமானுஜருக்கு மூன்று கட்டளைகளை இடுகிறார்.
பிரம்ம சூத்திரத்திற்கு எளிய விளக்கத்தை எழுத வேண்டும்,
வைணவ வேதங்களை மக்கள் மறக்காமல் இருக்கச் செய்ய வேண்டும், வியாசர், பராசரர் போன்றவர்களின் புகழை மக்கள் மறக்காமல் காப்பாற்ற வேண்டும்.
இந்த மூன்று கட்டளைகளை ராமானுஜரைச் செய்யச் சொல்லும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பியையே தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டவர் ராமானுஜர்.
அரசனையும், ஆண்டியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பக்குவம் ராமானுஜருக்கு உண்டு.
அதனால்தான் தன் சீடர்களிலேயே முதலியாண்டான் என்னும் பெருமையை கூரத்தாழ்வாருக்கு ராமானுஜர் கொடுத்தார்.
கூரத்தாழ்வார் தன்னை மன்னர் என்னும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு தன் மனைவியோடு ராமானுஜரோடு சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்.
உறங்கா வில்லி என்னும் மல்யுத்த வீரன், தன் மனைவியின் கண்ணழகை விடச் சிறந்த அழகு வேறெதுவும் இல்லை என்னும் முடிவோடு இருப்பவன். அவனுக்கு பெருமாளின் கண்களைத் தரிசனப்படுத்துகிறார் ராமானுஜர். அந்த உண்மையான அழகின் தரிசனத்தில் தன்னைப் பறிகொடுத்த உறங்காவில்லி, ராமானுஜரின் குழுவில் வில்லி தாசனாகிறான்!
ஸ்ரீரங்கத்தில் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பலரையும் ஆலயப் பிரவேசம் செய்யவைக்கிறார் ராமானுஜர்.
அதனால் அங்கிருந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த பலரின் எதிர்ப்புக்கு ஆளாகி ஒருகட்டத்தில், உணவில் விஷம் கலந்து அவரைக் கொல்ல சதி உணர்ந்து கொண்ட ராமானுஜர், "நான் எல்லாரையுமே நாராயணனாகத்தான் பார்க்கிறேன்...அப்படியிருக்க ஒரு நாராயணனுக்கு நான் வாழ்வது பிடிக்கவில்லை என்றால், நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை... சாப்பிடாமல் என் உயிரை நானே போக்கிக் கொள்கிறேன்...' என்று உண்ணாவிரதம் தொடர்ந்து அவரது சீடர்களும், பொது மக்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
நிலைமை தீவிரமாவதை உணர்ந்த சதிக்குக் காரணமானவர்கள், "எங்களை மன்னித்து விடுங்கள்..உங்களின் பெருமையை உணராமல் செய்துவிட்டோம்' என்று தங்களின் தவறை உணர்ந்து திருந்துகிறார்கள்.
உடையவர் தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்க கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் . பாரத
தேசம் முழுதும் யாத்திரை சென்று "ஸ்ரீமன் நாராயணனின் பரத்வததை" நிலை நாட்டினவர்.
ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.
யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் படித்தார் ராமானுஜர். தன்னை மிஞ்சிய சீடனாக இருந்ததால், ராமானுஜர் மீது அவருக்குப் பொறாமை. இந்த சமயத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னனின் மகளுக்கு பேய்பிடித்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
.ராமானுஜரும், ஸ்ரீமன் நாராயணனை மனதில் எண்ணி, அந்த ராஜகுமாரியின் தலையில் கை வைத்தார். அந்த ராட்சதன் முக்தியடைந்தான். ராஜகுமாரி சுகமடைந்தாள்.
செயல் வீரர். உடையவர் ஸ்ரீராமானுஜர் இயற்றிய ஸ்ரீரங்கநாத கத்யம் மிக சிறப்பாகப் போற்றப்படுகிறது.
எல்லோர் மனதிலும் தர்ம சிந்தனையை விதைக்கும். நேர்மையான வாழ்க்கையை வாழ, எளியோரை அரவணைத்துச் செல்லும் சமத்துவ நோக்கோடு உலகை அணுக, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உத்வேகம் தரும்.
மேல்கோட்டை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்தை சுல்தானின் அரண்மனைக்குக் கொண்டு போய்விடுகின்றனர். சுல்தானிடம் விக்கிரகத்தை ராமானுஜர் கேட்கிறார். அந்தப்புரத்தில் தன்னுடைய பெண் அதை வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுல்தான்.
அரசவையில் இருந்தபடி ராமானுஜர் "செல்வப் பிள்ளாய்...' என்ற பாடலைப் பாட, அந்தப்புரத்திலிருந்து அரசவைக்கு வருகிறது அந்த விக்கிரகம்.
அதை எடுத்துக் கொண்டு ராமானுஜர் ஊர் திரும்புகிறார். வரும் வழியில் அந்த விக்கிரகத்தை தன் உயிரினும் மேலாக நினைத்துக் கொண்டிருக்கும் சுல்தானின் மகள், "இதைப் பிரிந்து நான் இருக்கமாட்டேன்' என்று கூறியபடி, பல்லக்கில் இருக்கும் விக்கிரகத்தைத் தழுவ அங்கேயே அவளின் உயிர் பிரிகிறது.
இன்றைக்கும் மேல்கோட்டை நாராயணபுரத்தில் பீவி நாச்சியாருக்குக் கோயில் உள்ளது.செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமான இவள்,
செல்லப்பிள்ளை
இராமப்பிரியன்
யதிராஜ சம்பத்குமரன்
வைரமுடி சேவை
மூலவரின் பாதத்தில் "வரநந்தினி' என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். .
ராமானுஜர் மேல்கோட்டையில் 12 வருஷம் இருந்துவிட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது, அங்கிருந்த அவரது சீடர்கள் துயரமாக இருப்பதைக்கண்டு அவரை மாதிரியே ஒரு விக்ரஹம் செய்து அதை அவர்களுக்குத் தன் நினைவாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இது ‘தமர் உகந்த திருமேனி’ என்று போற்றப்படுகிறது.
ஊர் மக்கள், அவரைப் பார்த்தால் தங்களிடம் பேசுவது போல இருப்பதால், இந்த விக்ரஹத்தைப் ‘பேசும் ராமானுஜர்’ என்று அழைக்கிறார்கள்.
கோயிலுக்கு வெளியில் இருக்கும் துவஜஸ்தம்பம் கம்பீரமாக ஒரே கல்லில் 45 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஒரு பக்கம் ஹனுமார், மறுபக்கம் கருடன் என்று அதற்கு முன் விளக்கு ஏற்றி அதைச் சின்னக் கோயிலாகவே ஆக்கிவிட்டார்கள்.
வைணவ ரகசியத்தை அறிந்து வருவதற்காக 18 முறை திருக்கோஷ்டி நம்பியிடம் சென்று வருகிறார்.
இறுதியில், "இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால் நீ நரகத்திற்குப் போவாய்' என்ற எச்சரிக்கையுடன் திருக்கோஷ்டி நம்பி ராமானுஜருக்கு வைணவ ரகசியத்தைக் காதில் சொல்கிறார்.
உடனே ராமானுஜர் இந்த மந்திரத்தைக் கேட்கும் எல்லாரும் சொர்க்கத்திற்குப் போய் நான் நரகத்திற்குப் போனாலும் எனக்குச் சந்தோஷமே என்றபடி, திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை ஊர் மக்கள் அனைவருக்கும் சொல்ல கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார்.
அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார்.
ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தான்மட்டும் கரையேறாது, இவ்வுலகே இப்பிறவிப் பெருங்கடல் கடந்து கரையேற வேண்டுமென, தனக்குக் கிடைத்த மகாமந்திரத்தை உலகறிய ஓதிய ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த காலம்.
அவருடைய பக்தர்களில் கணவன் – மனைவி இருவர், தங்கள் ஊரில் வறட்சி ஏற்பட்டதால் ஸ்ரீ ராமானுஜர் ஆதரவில் வந்து சேர்ந்தார்கள்.
ஒருநாள் ஸ்ரீராமானுஜர் மடத்தில் ஆராதனை நடந்துகொண்டிருக்கின்றது. மனைவியைக் கூப்பிடக் கணவன் வந்து விட்டார். ‘கிராமத்தில் மழை பெய்து நீர் நிறைந்துவிட்டது என்றும் நீ அங்கு வரவாம். எனவே இப்போதே கிளம்பு. அப்புறம் இருட்டி விடும்’ என்று அவசரப்படுத்துகிறார்.
எப்படி இராமானுஜரிடம் சொல்லாமல் ஊருக்கு கிளம்புவது? கூப்பிடுவது தன் கணவன்.
அது நாள் வரை மடத்தில் குருவின் ஆதரவில் இருந்துவிட்டு, குருவிடம் விடை பெறாது எங்ஙனம் கிளம்புவது! மனம் அங்கலாய்க்கிறது.
கண்கள் உள்ளேயே பார்த்துக்கொண்டிருக்கின்றது.
உடலும் உணர்வின் வெளிப்பாடாய், பதற்றமாய் இருக்கின்றது.
இந்த உணர்வின் போராட்டம், உணர்வின் அதிர்வு யாரை அசைக்கணுமோ அவரை அசைத்துவிட்டது.
ராமானுஜர் கண் விழிக்கிறார். தீர்த்தப் பாத்திரம் எடுத்து வாசலில் வந்து அந்த அம்மா அருகில் நிற்கிறார். “இந்தா தீர்த்தம்! கணவனுடன் சந்தோஷமாய்ப் போய்வா” என்கிறார்.
அம்மாவின் கரங்களில் குருவின் தீர்த்தம்! கண்களில் ஆன்மாவின் நீர் தாரையாய் வழிகின்றது.
“உணர்வை உணர்வு அறியும் தாயே” என்றார் குரு.
ஆம்! குருவும் சீடர்களும் ஒரு தாயும் மக்களும்தான். அந்தக் கனிவும் அனுசரணையும் புரிந்தலும் இருக்க வேண்டும்.
திருமலை திருப்பதியில் ராமானுஜர் மோர் விற்கும் இடையர் குலப்பெண்மணி ஒருத்திஇடைச்சியின் நம்பிக்கையை மதித்து சிபாரிசு கடிதம் ஒன்றினை திருமலை திருப்பதி பெருமாளுக்கு எழுதத் தொடங்கினார்.
பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள். ""இது என்ன சீட்டோலை?'' என்று அவர்கள் கேட்டனர்.
ராமானுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர்.
பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,""உனக்கு மோட்சம் கொடுத்தேன்'' என்றார்.
அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.மோருக்கு விலை மோட்சம் !!!
எனக்கு பிள்ளைகள் இல்லையே! வருந்திய ராமானுஜர்:
நம்மாழ்வாரைப் "பகவானின் திருவடி' என்று போற்றுவது போல தன்னை நம்மாழ்வாரின் திருவடியாக உலகம் கருதவேண்டும் என்பது ராமானுஜர் எண்ணமாக ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரைப் பக்தியுடன் வழிபாடு செய்து வந்தார் ராமானுஜர்.
ஆற்றங்கரையில் ஆடை உடுத்தி, திருமண் காப்பிட்டு சீடர்களுடன் கோயிலுக்கு கிளம்பிய நேரத்தில், ஆற்று மணலில் துணி காயவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவர். அவருடைய திருவடிகளை வணங்கினார்.
தான் வணங்கியதோடு தன் பிள்ளைகளை, ""சடகோபா வா! காரிமாறா வா! குருகூர் நம்பி வா!'' என்று பெயர் சொல்லி அழைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார்.
அந்த தொழிலாளியையும், அவருடைய பிள்ளைகளையும் கண்டு வியப்பில் ஆழந்தார் ராமானுஜர்.
""இந்த தொழிலாளியைப் போல இல்லறத்தில் வாழ்ந்து, நம்மாழ்வாரின் இனிய திருநாமங்களை (பெயர்கள்) பிள்ளைகளுக்கு இட்டு அழைக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே! காவி கட்டி இப்படி துறவியாகி விட்டேனே!'' என்று வருந்தினார். நம்மாழ்வார் மீது, ராமானுஜர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியுணர்வு வெளிப்படுகிறது.
வாழி உடையவர் நாமம்.
இராமனுஜருக்கு பல திருநாமங்கள் : இராமாநுஜர், இளையாழ்வார், எதிராசர், உடையவர், எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யகாரர், அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான், நங்கோயிலண்ணர் -
ஆண்டாள் நாச்சியாரின் ஆசைப்படிதிருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு 100 தடாவெண்னையும்,அக்கார வடிசலும் சமர்பித்ததால்,ஆண்டாள் இவரை அண்ணா என்று அழைத்ததார்எனவே இவர்
கோவில் அண்ணன்.
திருப்பாவையை எப்போதும் சிந்தித்த்ருந்ததால்
திருப்பாவை ஜீயர்
பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியதால்
பாஷ்யக்காரர்.
துறவிகளின் அரசர் என்பதால்
யதிராஜர்
திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷ்ரஉபதேசம் பெற்று அதை அனைவரூம் உய்ய வேண்டிதான் நரகம் சென்றாலும் சரி என்று அனைவருக்கும்அந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்டியூர்கோவில் மதிலின் மேல் ஏறி அனைவருக்கும்
அருளியதால் எம்பெருமானார் (எல்லாருக்கும்தலைவர்)
எனப்படுகிறார்.
இராமனுஜர் திருவரங்கம் சென்ற போது பெரியபெருமாள் தமது திருப்பொலிந்த திருவடியை இவரதுசென்னி மேல் பொறித்து " உபயவிபூதிசெல்வத்தையும், உமக்கும் உம்உடையாருக்கும் தந்தோம் இனிநம்முடையதிருக்கோவிலை திருப்பணிசெய்யக்கடவீர்" என்றதால் இவர்
உடையவர்எனப்படுகின்றார்
திருவரங்கம் கோயிலின் உள்ளே நுழைந்ததும் முதல் சுற்றுப் பிரகாரத்தில் கார்த்திகைக் கோபுரத்துக்குள் நுழைவதற்கு முன் வலதுபுறம் திரும்பினால் – சேஷராய மண்டபத்துக்கு அருகில் தனிக் கோயிலைப் போல இருக்கிறது உடையவர் சன்னதி, அதாவது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி.
கி.பி. 1017-ல் அவதரித்து 1137-ல் மறைந்த ஸ்ரீ ராமானுஜரின் உடலை இன்னமும் அப்படியே பாதுகாத்து, கெடாமல் வைத்திருப்பதாகவும் அதுதான் கருவறையிலுள்ள ராமானுஜரின் திருமேனி என்றும் , கருவறையிலுள்ள ராமானுஜரின் திருவுரு சுதையாலானதாகவும் சொல்லப்படுகிறது ...
`
பெருமாளின் வசந்த மண்டபமாக இருந்த இந்த இடத்தில் பெருமாளே விரும்பியதால் ராமானுஜரின் திருமேனியைப் பூமிக்குள் வைக்க ராமானுஜரோ தானாக மேல் நோக்கி எழுந்தார், தானான திருமேனியாக. அவர் உடல் மேல் நோக்கி வந்தது.
நம் முன்னோர்கள் மூலிகை மூலம் அவருடைய உடலைப் பாடம் செய்து பாதுகாத்து வைத்துள்ளனர்.
எனவே, இங்கே மூலவருக்குத் தீர்த்தம், தயிர், பால் அபிஷேகம் இல்லை
ராமானுஜர் அவதாரத்தலம்
ராமானுஜர் விமானம்
ராமானுஜர் விமானம்
ராமானுஜர் தானுகந்த திருமேனி |
தன்னுடைய 120வதுவயதில் எப்படி பாஷ்யக்காரர் இருந்தாரோ அதேபோலே வடிவமைக்கப்பட்ட திருமேனி,இராமானுஜரே இந்த திருமேனியை தழுவிஆசிர்வதித்ததால் இது "தானுகந்த திருமேனி" என்றுஅழைக்கபடுகின்றது
அமெரிக்காவின் நியூயார்க்கிலும் ராமானுஜர் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ...
அப்போதுக்கு இப்போதே சொல்லி விட்டோம் என்று இருக்கணும்
காரேய் கருணை ராமானுஜர் .
//"இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால் நீ நரகத்திற்குப் போவாய்' என்ற எச்சரிக்கையுடன் திருக்கோஷ்டி நம்பி ராமானுஜருக்கு வைணவ ரகசியத்தைக் காதில் சொல்கிறார். உடனே ராமானுஜர் இந்த மந்திரத்தைக் கேட்கும் எல்லாரும் சொர்க்கத்திற்குப் போய் நான் நரகத்திற்குப் போனாலும் எனக்குச் சந்தோஷமே என்றபடி, திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை ஊர் மக்கள் அனைவருக்கும் சொல்கிறார்.கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.//
ReplyDelete1000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு புரட்சிக்கருத்துக்களைக் கொண்ட்வராக இருந்துள்ளார் என்பது தான் மிகவும் ஆச்சர்யமான விஷயம்.
இங்கு திருச்சியில் உறையூர் என்ற பகுதியில் நாச்சியார் கோயில் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் வருடத்தில் சில நாட்கள் இந்தத்துலுக்க நாச்சியாரை காண வருவதாக ஐதீகம் இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கர்னாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணம் கோவிலைக்கட்ட திப்புசுல்தான் பொருளுதவி செய்ததாக அங்கு பல தகவல்கள் சொல்லுகிறார்கள்.
அதுபோல கோபண்ணா என்கிற இராமதாஸர் சர்க்காருக்குச்சேர வேண்டிய வரிப்பணத்தில், கட்டிய பத்ராஜலம் இராமர் கோவிலுக்காக, சுல்தான் உத்தரவுப்படி பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தும், இறுதியில் அவரின் மகிமையறிந்த சுல்தான், அவருடனேயே பத்ராசலம் இராமர் கோயிலுக்குப்போய் தரிஸனம் செய்து வைக்கச்சொல்கிறார்.
கோபண்ணா சிறையில் இருக்கும்போது அவரை விடுவிக்க ஸ்ரீ இராம லக்ஷ்மணரே வெட்டியான்கள் வேஷத்தில் சுல்தான் முன்பு தோன்றி, அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணத்தை எடுத்து கோயில் எழுப்பியதால், கோபண்ணா என்கிற இராமதாஸருக்கு தண்டனை கிடைத்ததால், அவரை விடுவிக்க வேண்டி, தங்க நாணயங்களைக் கொட்டிக்கொடுத்து காட்சி தந்துள்ளது, பிரவசனங்கள் கேட்கும்போது மிகவும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
இந்தக்கதைகளிலிருந்து ஒருசில காலகட்டங்களில் இந்து முஸ்லீம் ஒற்றுமையாக, ஒருவர் வழிபாட்டுக்கு மற்றவர் இடைஞ்சல் இல்லாமல் இருந்துள்ளனர் என்பது புலப்படுகிறது.
இராமனுஜர் பற்றிய அரிய பல செய்திகளுக்கு பாராட்டுக்கள்.
நன்றிகள்.
பிரியமுள்ள,
vgk
உங்க பக்கம் வந்தா அருமையான ஆன்மீகப்பதிவுகள் சிறப்பான விளக்கங்களுடன் படிக்கக்கிடைக்கிரது.
ReplyDeleteநன்றி.கோபால் சாரும் நல்ல பின்னூட்டம் கொடுத்திருக்கார்.
@வை.கோபாலகிருஷ்ணன் said.../
ReplyDeleteநிறைந்த பொருளுடன் அருமையான கருத்துரை தந்ததற்கு நன்றி ஐயா.
பத்ராசல ராமரின் அற்புத கருணை உள்ளம் பற்றி பக்தி சிரத்தையுடன் அறிய கொடுத்ததற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@ Lakshmi said...//
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.
உங்களால் எங்களுக்கு இறைவன் அருள் கிடைகிறது..
ReplyDeleteநன்றி..
@* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஉங்களால் எங்களுக்கு இறைவன் அருள் கிடைகிறது..
நன்றி..//
கருத்துரைக்கு நன்றி ஐயா.
Very well said Rajeswari.
ReplyDeleteThanks for the elebarated writings along with very pretty pictures.
viji
@ viji said.../
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க விஜி.
அம்மாவின் கரங்களில் குருவின் தீர்த்தம்! கண்களில் ஆன்மாவின் நீர் தாரையாய் வழிகின்றது
ReplyDeleteஆகா ............ என்ன ஒரு வார்த்தை ...........
இதை படிக்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர், இதுவரை நான் ஸ்ரீ ராமானுஜரை பற்றி அறியாத , தெரியாத, புரியாத செய்திகள். இந்த மகானை பற்றி எழுதி பகிர்ந்ததர்க்கு பல கோடி புண்ணியம் உங்களுக்கு. நன்றி இதுபோல் மனம் துய்க்கும், ஏற்கும், ஈர்க்கும்,பல படைப்புகளை வழங்க வேண்டுகிறேன்
நல்லபல விவரங்களுடன் நயமான பதிவு.
ReplyDelete@A.R.ராஜகோபாலன் said...//
ReplyDeleteநன்றி இதுபோல் மனம் துய்க்கும், ஏற்கும், ஈர்க்கும்,பல படைப்புகளை வழங்க வேண்டுகிறேன்//
எனது சங்கல்பமும் கூட. கருத்துகளுக்கு நன்றி ஐயா.
@ FOOD said...//
ReplyDeleteஉயர்ந்த ராமானுஜ்ரைப் பற்றிய கருத்துக்கு நன்றி ஐயா.
This comment has been removed by the author.
ReplyDelete;)
ReplyDeleteஅச்யுதா!
அனந்தா!!
கோவிந்தா!!!
ரொம்பவும் சிறப்பாக உடையவரின் சரித்திரத்தை எழுத்துக்களில் வடித்திருக்கிறீர்கள், சகோதரி. அந்தக் காரேய் கருணை இராமானுசனின் திருவருள் என்றும் உங்களுக்கு நிலைத்திருக்கட்டும்.
ReplyDeleteஸ்ரீமதே ராமானுஜாய நம:
508+2+1=511 ;)
ReplyDelete[தங்களின் பதில் மகிழ்ச்சியளித்தது. மிக்க நன்றி]