Thursday, May 19, 2011

அருள்மிகு மள்ளியூர் மகாகணபதி கோயில்




                    

முழு முதற் கடவுளான கணபதியின் அணைப்பில், திராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணனின் அற்புதக் காட்சி கருவறையிலேயே மனம் நிறையக் காணமுடிகிறது.


அருள்மிகு மகாகணபதி கோயில்.மள்ளியூர் கேரளா மூலவர் கணபதிகண்ணன் ஊர் மள்ளியூர் கோயிலின் சிறப்பம்சம் : மாமாவின் மடியில் மருமகன் இருந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம்.மருமகனின் மடியில் மாமா அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியுமா. இந்த அதிசயத்தைக் காண வேண்டுமானால் கேரள மாநிலம் மள்ளியூர் மகா கணபதி கோயிலுக்கு செல்ல வேண்டும். இங்கே கணபதியின் மடியில் கண்ணன் வீற்றிருக்கும் கோலத்தைக் காணலாம். குழந்தையாக இருப்பதால் மருமகன் மடியில் மாமா அமர்ந்து விட்டார் போலும்.

[Gal1]
ஆதிமூலமும் ஆதிநாயகனும் சேர்ந்திருக்கும் இந்த அற்புதத்தை பார்த்து பார்த்து ருசித்துக் கொண்டே இருக்கலாம். கர்ப்பக்கிரகத்திலேயே இப்படி ஒரு அபூர்வக்காட்சி கிடைக்கிறது.முக்கிய திருவிழாக்கள் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல வரலாறு: ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை ஆகிய இரு குடும்பத்தினரும் இணைந்து ஒரு மேற்கூரை இல்லாத சிறிய சுற்றுச்சுவர் கட்டி நடுவில் கணபதியை வைத்தனர். ஒருமுறை இவ்விரு குடும்பங்களுக்கும் மிகவும் கஷ்டம் ஏற்பட்டது.கோயில் பராமரிப்பு பாதிப்புக்குள்ளானது. அவர்கள் கணபதியை பக்தியோடு வழிபாடு செய்து வந்தனர். இதற்கு கட்டணம் உண்டு.

இவர்களது வம்சாவழியில் வந்த சங்கரன் நம்பூதிரி குருவாயூரப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தினமும் இந்த கணபதி கோயில் முன் அமர்ந்து கிருஷ்ணனின் பெருமைகளைப் பற்றி வேதவியாசரால் அருளப்பட்ட பாகவதத்தை பாராயணம் செய்து வந்தார். கிருஷ்ண பகவான் விக்ரகம் செய்து கணபதியின் மடியில் அமர்த்தினார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருப்பதை போன்ற வடிவமைப்பைப் பார்த்தால் மெய்சிலிர்க்கும்.

வழிபாடு: இங்கு முக்கிய வழிபாடு முக்குற்றி புஷ்பாஞ்சலி ஆகும்.முக்குற்றி எனப்படும் செடியை 108 என்ற எண்ணிக்கையில் வேரோடு பறித்து ஒருவகை வாசனை திரவத்தில் மூழ்கவைத்து விடுவார்கள். பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம் ஓதி வழிபாடு செய்கிறார்கள். இப்படி செய்வதனால்எப்படிப்பட்ட தோஷத்திலிருந்தும் விடுபடலாம் என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்தப் பூவை மூக்குத்திப்பூ என்று சிறுவயதில் கை நிறையப் பறித்து கம்மல், மூக்குத்தி, மோதிரம் வளையல், கொலுசு என ஒட்டி விளையாடியது மனதில் ஓடியது.
இறைவனுக்கு உகந்த தச மலர்களுள் - ஒன்றாம். ஆஹா இத்தனை மருத்துவ குணமுள்ள மலர்களையா கைநிறைய வைரமாய் பறித்து விளையாடியிருக்கிறோம்! மூக்குத்திப்பூ மேலே காத்து உட்கார்ந்து பேச, அதைக் காணும் மனம் தெம்மாங்கு பாடிய மலரும் நினைவுகள் மலர்ந்தன.
 இதுதவிர நோயிலிருந்து விடுபட தடி பச்சரிசி மாவு நைவேத்தியம் என்னும் வழிபாடு செய்யப்படுகிறது.

            
திருமணத்தடை நீங்குவதற்காக செவ்வாய் வௌளிக்கிழமைகளில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் பழமாலை மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கும் முன்பதிவு உண்டு.

குழந்தை பாக்கியத்திற்காக பால்பாயாசம் படைக்கப்படுகிறது.
பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு சதுர்த்தியூட்டு சோறு காய்கறி படையல் எனப்படும் வழிபாடைச் செய்கிறார்கள்.


எல்லா வழிபாட்டுக்கும் கோயிலிலேயே பணம் செலுத்த வேண்டும். வெளியில் இருந்து வாங்கிச் செல்லும் பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


ஆயிரம் செம்பு கலச ஜல அபிஷேகம் செய்யப்படும் வழிபாடு பல தடங்கல்களை நீக்கும் இந்த அபிஷேகம், அபிஷேகப்பிரியரான சிவனின் மகனுக்கு விஷேஷமாகச் செய்யப் படுகிறது. ஒரு நாளுக்கு இரண்டு முறையே நடைபெறும் இந்த பூஜைக்கு முன்பதிவும், நிகழ்த்துபவரின் முன்னிருப்பும் அவசியம்.

kalasam_w

சகஸ்ர கலசாபிஷேகமும் சிறப்பாக செய்யப்ப்டுகிறது.

கர்பக்கிரகத்தில் மாலை அர்ப்பணிக்கலாம்.
தேங்காய் உடைத்தல் அனைத்து தடைகளையும் தகர்க்கும் வழிபாடாகும்.

    

மண்டல மகரவிளக்கு காலங்களில் விளக்கேற்றுத்ல், புஷ்பாஞ்சலி, மாலை வழ்ங்குதல் சிறப்பாகும்.

கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்தி மகாகாவலன் யட்சி நாகர் சன்னதிகள் உள்ளன. இருப்பிடம் கோட்டயத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் 21 கி.மீ. தொலைவில் குறுப்பந்தரை உள்ளது. கோட்டயத்திலிருந்து பஸ்கள் உள்ளன. 


சங்கீத ஆராதனை:  புல்லாங்குழல் நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சபரிமலை மகரவிளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் உள்ள அரங்கில் இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடுகிறார்கள். புதிய பாடகர்களும் இசை கற்பவர்களும் இந்த அரங்கத்தில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப்பெறுகிறார்கள். இசைநிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.


[Image1]




  

Ashtavinayak   






24 comments:

  1. ஆன்மீக விருந்து!

    ReplyDelete
  2. அருமையோ அருமை ...
    http://zenguna.blogspot.com/

    ReplyDelete
  3. நிறைந்த படங்களுடன் தர்சித்தோம்.

    ReplyDelete
  4. Aha!!!!!!!!
    Had Ganapthey Darshan today morning.
    Very very pretty photos.
    Nice detail write ups.
    I never heard of this place.
    Thanks Rajeswari. Thanks a lot.
    viji

    ReplyDelete
  5. யார் மனம் உருகி
    கை தூக்கி தொழுதாலும்
    கை நீட்டி அழைத்தாலும்
    ஓடி வரும் கண்ணன்
    மூன்று கையுடைய
    மூல நாயகன்
    மடி அமர்ந்து
    திரிசனம் தருகிறார் என்பது
    என் வாழ்வில் புது செய்தி
    ஆன்மிகம் அருளும்
    உங்களின் பதிவிற்கு
    மனம் மகிழ்ந்த நன்றி

    ReplyDelete
  6. என் இஷ்டதெய்வம் விநாயகரின் மடியில் குட்டிக்கிருஷ்ணன். ஆஹா அருமையோ அருமை தான்.

    என்னுடைய அடுத்த படைப்பு : ”மூக்குத்தி” சிறுகதை 6 அல்லது 7 பாகமாக வெளியிட தயார் நிலைக்குக்கொண்டு வந்துள்ள சமயம், நீங்கள் மூக்குத்திப்பூவென குறிப்பிட்டுள்ளது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.

    என்னவொரு coincidence பாருங்கள் நமக்குள். என்னுடைய ஆத்மார்த்த அன்புள்ள பதிவராகிய உங்களின் + இஷ்டதெய்வமாகிய விநாயகரின் + குருவாயூரப்பனாகிய குட்டிக்கிருஷ்ணனின் ஆசிகள் சேர்ந்து கிடைத்ததுபோல ஒரு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  7. தவழும் குழந்தையாக ஐந்து கரத்துடனான பிள்ளையார், நர்த்தன விநாயகர்கள், யானைமேல் பவனிவரும் அற்புத விநாயகர், கம்பீரமான தோற்றத்துடன் கூடிய காலில் கொலுசு அணிந்த யானை, முகத்தினில் தங்கக்கவசம் அணிந்த அணிவகுக்கும் யானைகள் அசத்தலான பதிவு.

    இரண்டு தீபங்களுக்கு நடுவில் காட்டியுள்ள, நல்ல சிவப்பாக உள்ளது சிவபூஜைக்குரிய இருட்ச்சிப்பூவென்று நினைக்கிறேன். சரியா? அது கொத்துக்கொத்தாக குடை போல அழகாக இருக்கும். நான் நிறைய பறித்து வந்துள்ளேன்.

    வாழ்த்துக்கள். பிரியமுள்ள vgk

    ReplyDelete
  8. @ வை.கோபாலகிருஷ்ணன் said.//.
    இரண்டு தீபங்களுக்கு நடுவில் காட்டியுள்ள, நல்ல சிவப்பாக உள்ளது சிவபூஜைக்குரிய இருட்ச்சிப்பூவென்று நினைக்கிறேன். சரியா? அது கொத்துக்கொத்தாக குடை போல அழகாக இருக்கும். நான் நிறைய பறித்து வந்துள்ளேன். //
    சரியாக அருமையாக கவனித்திருக்கிறீர்கள் ஐயா. புஷ்பாஞ்சலிக்கு இந்தப்பூ தான் சாற்றினார்கள்.

    ReplyDelete
  9. அழகிய படங்கள்...கேரள கட்டடக் கலையில் அழகிய கோவில்.

    ReplyDelete
  10. தங்களின் பதிவு உண்மையில் பிரமிப்பு உண்டாக்குகிறது! மிக நல்ல பதிவாளர் என்ற "பட்டத்தினை"

    தங்களுக்கு அளித்தால் பட்டம் தங்களால் பெருமை அடையும்...பத்மாசூரி

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கோவில்களுக்குச் செல்லும் வழியைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  13. எப்படிங்க...உங்களால இந்த மாதிரியான ஆன்மீக தொகுப்புகள் தொடர்ந்து எழுத முடிகிறது? நல்ல சமூக பணி நண்பரே...

    ReplyDelete
  14. Dear thozi,
    I bow my head before this ganapathy to wipe out my sins committed knowingly or unknowingly.

    ReplyDelete
  15. சில வருடங்களுக்கு முன் கேரளா சென்றிருந்த போது, இந்தக்கோவிலுக்கு அழைத்துப்போக என் நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவசர வேலைக் காரணமாய் நான் கோவிலைப் பார்க்காமல் உடனேயே திரும்ப நேர்ந்தது. உங்கள் புண்ணியத்தில் தரிசித்த பரவசம். அழகான படங்கள். பதிவுக்கு நன்றி இராஜேஸ்வரி!

    ReplyDelete
  16. புதியக் கோவில் மற்றும் புதியத் தகவல்கள்.. நன்றிங்க

    ReplyDelete
  17. I truly appreciate this post. Ive been looking everywhere for this!
    Thank goodness I found it on Bing. You have made my day!
    Thanks again!
    Also see my site: free phone number lookup

    ReplyDelete
  18. Appreciate this post. Let me try it out.
    my web site - long term payday loans

    ReplyDelete
  19. This іѕ really faѕсinаting, You're a very professional blogger. I'vе
    joined уour feeԁ and look forward to seekіng extгa
    οf уοur greаt ρoѕt.
    Αԁԁitiοnallу, I hаve shагeԁ
    уοur wеb sіte іn my socіal nеtωorks
    Here is my web site - vida vacations

    ReplyDelete
  20. Very energetic blog, ӏ liκed thаt
    a lot. Wіll thеre bе a part 2?

    Feel free to surf to my ωebpagе payday loans online direct lenders

    ReplyDelete
  21. A person essentially lend a hаnd tο make сritiсallу articles Ӏ would ѕtate.
    Τhat iѕ the first time I frequеnted your
    web page and thus faг? I surpriseԁ with the anаlуѕіs you mаde to
    create this pаrticular submit amazing. Excеllеnt activitу!


    My page; DiamondLinks.net

    ReplyDelete
  22. A person essentіally lend a hanԁ to
    make critically articleѕ Ι would ѕtate.
    That is the fiгst time I fгequеnted your wеb page аnd thuѕ far?
    I suгprised wіth thе analysiѕ yоu
    made to cгeatе this pагticular ѕubmit amazing.
    Excellent aсtivity!

    Also νiѕit my wеbsіte -
    DiamondLinks.net
    Also see my page :: DiamondLinks.net

    ReplyDelete
  23. பொழுதுதான் படிக்கிறேன் இராஜராஜேஸ்வரி. கண்ணனும் கணேசரும் அருமை. இவ்வளவு பரிகாரங்கள் அமிந்த தலத்தைப் பற்றி இப்பொழுதுதான் படிக்கிறேன் மிக நன்றி மா.

    ReplyDelete