குன்றுதோறாடும் குமரக்கடவுள் குடிகொண்டிருக்கும் சிறந்த தலங்கள் பலவற்றுள் ஒன்று கழுகுமலை...
கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் மத்தியில் உள்ள ஒரு சிறந்த முருகதலம்- செவ்வாய் தலம்- யாத்திரை தலம்- காணிக்கை தலமும்கூட.
தமிழகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிறந்து விளங்கும் முருகத்தலங்களில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தமிழகத்தின் தென்பழனி என்று அழைககப்படுகிறது..
கழுகுமலையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதீஸ்வரர் கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.
அருணகிரிநாதர் திருப்புகழால் துதித்துள்ள தலங்களில் ஒன்று.
சம்பாதி என்ற கழுகு முனிவர் இத்தல முருகனை வழிபட்டதால் இந்த ஊர் கழுகுமலை என்று பெயர் பெற்றது ..
யானை படுத்திருப்பது போன்ற தோற்றமுடன் குன்றின் முன்பகுதி திகழ்கிறது.
இங்குள்ள மலையில் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவரைக் கோவில் ஆகும்.
கோவிலுக்கு விமானம் கிடையாது.
சுற்றுப் பிராகாரமும் கிடையாது.
மலையைச் சுற்றித்தான் பிரகார வலம் வரவேண்டும்.
மலை 300 அடி உயரம் உள்ளது. கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன.
ராமாயணக் காலத்தில் ஜடாயுவின் தம்பியான சம்பாதி, ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட இத்தலத்திலுள்ள சிவபெருமானை ஆம்பல் மலர்களால் பூஜித்து அவர் அருள் பெற்றான்.
அவன் தோஷம் நீங்க தந்தையாருக்கு முருகன் சிபாரிசு செய்ததாகவும், இந்த சம்பவம் தைப்பூசத் திருநாளன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே இந்த ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சம்பாதி என்ற கழுகு பூஜித்த தலம் என்பதால், இந்த மலை கழுகாசலம் என்றும், கழுகுமலை என்றும் அழைக்கப்பட்டது.
முருகப் பெருமான் கழுகாசலபதி எனப்பட்டார்.
கர்ப்பக் கிரகத்தில் வள்ளி- தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார்.
மற்ற கோவில்களில் உள்ளதுபோல முருகனின் வாகனமான மயில் வலது பக்கம் அல்லாமல் இடது பக்கம் நோக்கி காட்சி அளிப்பது தனிச்சிறப்பு.
இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் ஆறு கரங்களும் உள்ளன.
தென்னிந்தியாவிலேயே இம்மாதிரியான திருக்கோலம் கொண்ட முருகன் கோவில் இது மட்டுமே.
தாரகாசுரனை வதம் செய்த கார்த்திகேயனே இக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார் என்று கூறப்படுகிறது.
முருகன் மேற்கு முகமாக இருக்கும் சந்நிதானத்தையுடைய மலை "சிவன் ரூபம்' என்றும்;
கிழக்கு முகமாக இருக்கும் மலை "சக்தி ரூபம்' என்றும் வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளது.
கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர்,
குன்று தோறாடிய மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும்; அவற்றில் ராஜயோகமாக குமரன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும்பொழுது இத்தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும்; அகத்திய முனிவரின் இருப்பிடமான பொதிகை மலையை நோக்கி முருகன் தென்மேற்காக அமர்ந்துள்ளார் என்றும் கூறுவர்.
இராவணனால் ஜடாயு கொல்லப்பட, இராமன் ஜடாயுவுக்கு சகல கருமங்களும் செய்து ஜென்ம சாபல்யம் அடையச் செய்தார்.
இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி இராமபிரானைத் தரிசித்து வணங்கி, "நான் என் சகோதரனுக்கு ஈமக்கிரிகைகள் செய்யாததால் கரும சண்டாளன் ஆகிவிட்டேன். அதற்கு ஒரு வழி கூறவேண்டும்' என்று வேண்ட, இராமன் சம்பாதியை நோக்கி, "நீ கஜமுக பர்வதத்தில் மயில்மீது அமர்ந்திருக்கும் முருகனை- அவ்விடத்திலுள்ள ஆம்பல் தீர்த்தத்தில் முழ்கி பூஜை செய்தால் உன் சண்டாளத்தன்மை நீங்கி மோட்சம் அடைவாய்' என்றார்.
அதன்படி சம்பாதி வணங்கி மோட்சம் பெற்ற தலம் இது.
கழுகாசலமூர்த்தி கோவில் அருகேயுள்ள மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும் கோவிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமண சிற்பத்தொகுதிகளும், அய்யனார் சுனையும் உள்ளன.
| தெப்பக்குள
தென்னிந்தியாவின் எல்லோரா என அழைக்கப்படும் வெட்டுவான் கோவிலின் பெரும்பாறையில் 25 அடி ஆழத்தில் சதுரமாகத் தோண்டி வேறெங்கும் காண முடியாத. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கண்கவர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் அர்த்த மண்டபம் உள்ளது.
கோவிலில் நான்கு பக்கங்களிலும் உமாமகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா சிற்பங்கள் உள்ளன.
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரை உலகறியச் செய்த அருமையும் இந்த கழுகாசல மூர்த்திக்கே சாரும்.
பாட்டுக்கொரு பாரதி இங்கு வந்து பாடியதும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதராலும், சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதராலும், கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயராலும், நாடக உலகில் புகழ்பெற்ற எம்.ஆர். கோவிந்தசாமி அவர்களாலும், ஏனைய புலவர்களாலும் புகழ்பெற்றது கழுகுமலையாகும்.
சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்
வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கு
கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.
பாடும் போதே, கால்கள் தானே ஆடி விடும்!
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்,
முருகா என்று ஓதுவார் முன்!
நாமும் கூடவே பாடிப் பார்ப்போம், கால்கள் தானே ஆடுகிறதா என்று! :-
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் காக்கும் அடியா!
தலப்பெருமை
கழுகாசமூர்த்திக்கு முகம் ஒன்று ,கரம்ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார்.
மயிலாக மாறிய இந்திரன் . பிற கோயில்களின் அசுரன் தான் மயிலாக இருப்பான் . எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது.
எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிதணாமூர்த்தி) முருகனும்(செவ்வாய்) இருப்பது சிறப்பு . எனவே குரு மங்கள ஸ்தலம் என்கிறார்கள்.
கழுகாசலமூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம்.
இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும் , சிவ பெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும்.
முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.
முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார்.
வதம் செய்த களைப்பு தீர கஜமுகபர்வதத்தில் ஓய்வு எடுத்தார்.
அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார்.
இதனால் மகிழந்த முருகன் சம்பாதிக்கு முக்திதந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகளை செய்ய முடியாத பாவம் நீங்கியது.கழுக முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் "கழுகுமலை' எனப்பெயர் பெற்றது.
காலத்தினால் அழியாத கல்வெட்டுகள், சிற்பங்கள் என மலையின் பாதி உயரஅளவில் சிற்பங்களே அலங்கரிக்கின்றன.
சிற்பங்கள் அத்தனையும் கலையழகு. முற்காலத்தில் ஜைன வகுப்புகள் அவ்விடத்தில் நடத்தப்பட்டுள்ளன.
கருங்கல் மலையில் கற்கோவிலை செதுக்கியிருக்கிறார்கள். மகாபலிபுரத்துச்சிற்பங்களை நினைவுபடுத்தும் படியாக இருக்கிறது அதன் அழகு.
தற்போது சங்க இலக்கியப் பேரவை சிறப்பாகச் செயல்படுகிறது என்பது மிகவும் ஆச்சரியப்படுத்தும் நிகழ்வு!
ஜைனர்களின் முக்கிய இடமாக கழுகுமலை விளங்குகிறது. ஜைனர்களின்
கல் வெட்டுக்கள் இங்கு காணப்படுகிறது. குகைக் கோயிலான வேட்டுவன் கோயில்,பார்க்கத்தக்க இடமாகும்.
இதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். படங்களுக்கு நன்றி. இங்கே சமணப் படுகைகள் இருக்கா ???
ReplyDelete@எல் கே said...
ReplyDeleteஇதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். படங்களுக்கு நன்றி. இங்கே சமணப் படுகைகள் இருக்கா ???//
சமணப் படுகைகளுக்குப் புகழ்பெற்ற தலமாயிற்றே.
கருத்துக்கு நன்றி.
இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. படங்கள் அதிகம் இருப்பதால் பிளாக் திறக்க அதிக நேரமாகிறது என்ற கருத்தால் குறைத்து இருக்கிறேன்.
@ FOOD said...//
ReplyDeleteஉபயோகமான கருத்துக்கு நன்றி ஐயா.
புதிய தகவல்களுடன் நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
ReplyDelete//இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. படங்கள் அதிகம் இருப்பதால் பிளாக் திறக்க அதிக நேரமாகிறது என்ற கருத்தால் குறைத்து இருக்கிறேன்.//
பிகாசா-வில் அப்லோட் செய்து விட்டு லின்க் கொடுத்து விடுங்கள். அதில் சென்று பார்க்கலாமே...
ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு என் பெரிய அக்கா பிள்ளை இந்தக்கழுகுமலையில் TNEB இல் முதன்முதலாக வேலையில் சேர்ந்தபோது, என்னை அவ்விடம் வரச்சொல்லி அழைத்தார். ஏனோ எனக்கு அப்போது போகமுடியாமலேயே போய்விட்டது. பிறகு அவர் பல்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிச்சென்று விட்டார்.
ReplyDeleteஅந்த என் மனக்குறையை தங்களின் இந்தப்பதிவு தீர்த்து வைத்துள்ளது.
மிகவும் குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தாங்கள் சொல்லும் படங்களே நிறைவாக உள்ளன.
வழக்கம்போலவே அனைத்துச் செய்திகளையும், தலபுராணத்தையும், தங்களுக்கே உரித்தான மிகுந்த அழகுடன் தொகுத்து அளித்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பிரியமுடன் vgk
சிற்பங்கள் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசம்பாதி ஜடாயுவின் அண்ணன்; தம்பியை சூரிய வெப்பத்திலிருந்து காக்க தன் இறக்கைகளினால் மூடி, அதனால் இறக்கைகளை இழந்தவர் எனப் படித்திருக்கிறேன். புதுத் தகவல்களைத் தந்ததுக்கு நன்றி
This comment has been removed by the author.
ReplyDelete@வெங்கட் நாகராஜ் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@பிகாசா-வில் அப்லோட் செய்து விட்டு லின்க் கொடுத்து விடுங்கள். அதில் சென்று பார்க்கலாமே...//
நல்ல அறிவுரை. முயற்சி செய்து கற்றுக் கொள்கிறேன்.
@வை.கோபாலகிருஷ்ணன் said//
ReplyDeleteஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி ஐயா.
@middleclassmadhavi said...//
ReplyDeleteசம்பாதி பற்றிய கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
அருமையான ஆவலைத் தூண்டும் புகைப் படங்கள். கழுகுமலை பற்றி ஒரு உபரித் தகவல்...கழுகுமலைக் கந்தசாமி என்ற ஒருவர் வானொலியில் பாடக் கேட்டிருக்கிறேன்!
ReplyDelete@ஸ்ரீராம். said...//
ReplyDeleteஅருமையான தகவலுக்கும்,கருத்துப்ப்கிர்வுக்கும் நன்றி.
அருமையான பதிவு.
ReplyDeleteகழுகுமலை பார்த்திருக்கிறோம். படங்கள் நிறைய கதை சொல்கின்றன. மலையில் பள்ளத்தில் உள்ள சிற்பங்களின் படங்கள் மிக அருமை. மேலிருந்து தான் பார்க்க முடியும். வயதானவர்கள் மலை மேல் செல்வதே மிக சிரமம்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
புதிய தகவல்களுடன் நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
ReplyDeleteஅப்பப்பா ஒரு பதிவில் எவ்வளவு விவரங்கள்... ஒவ்வொரு முறையும் வியந்துபோகிறேன்... நன்றி முருகா! ;-))
ReplyDeleteI HEARD about this temple. But dont have a chance to visit.
ReplyDeleteNow because of you i got a chance to new and visiually visit the temple. Thanks a lot.
viji
இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. படங்கள் அதிகம் இருப்பதால் பிளாக் திறக்க அதிக நேரமாகிறது என்ற கருத்தால் குறைத்து இருக்கிறேன்
ReplyDeleteNo No.....
Like to view a lot of pictures dear.
Pl. post along with pictures.
So that person like me cannot go places can enjoy through this pictures.
viji
@Rathnavel said...//
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள்./
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
@ மாலதி said...
ReplyDeleteபுதிய தகவல்களுடன் நல்ல பகிர்வு. மிக்க நன்றி.//
வாங்க மாலதி. கருத்துக்கு நன்றி.
@ RVS said...
ReplyDeleteஅப்பப்பா ஒரு பதிவில் எவ்வளவு விவரங்கள்... ஒவ்வொரு முறையும் வியந்துபோகிறேன்... நன்றி முருகா! ;-))//
முருகா !முருகா!!
கருத்துக்க் நன்றி முருகா.!
@ viji said...//
ReplyDeleteவாங்க விஜி வாங்க. உங்க கருத்துகளுக்கு நன்றிங்க. இனி படங்கள் சேர்க்கிறேன்.
வழக்கம்போல் பதிவும் படங்களும் அருமை அருமை
ReplyDeleteநீங்கள் பதிவிடுதலைக்கூட பின்னிரவிலோ
அல்லது அதிகாலையிலோ செய்தீர்கள் ஆயின்
முதல் பதிவாக உங்கள் பதிவை பார்ப்பவர்களுக்கு
ஒரு தெய்வீக தரிசனத்தைக் கண்டது போன்று
மனம் குதூகலமடையும் என நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்..
பல கோவில்களை பற்றி
ReplyDeleteதாங்கள் தரும் ஆன்மீக தகவல்கள்
மனதை சாந்தப்படுத்துகிறது
மனதை ஆண்டவன் பக்கமாய் திருப்புகிறது
நன்றி மேடம்
@ Ramani said...//
ReplyDeleteமுதல் பதிவாக உங்கள் பதிவை பார்ப்பவர்களுக்கு
ஒரு தெய்வீக தரிசனத்தைக் கண்டது போன்று
மனம் குதூகலமடையும் என நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்..//
Thank you sir.
@ A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteபல கோவில்களை பற்றி
தாங்கள் தரும் ஆன்மீக தகவல்கள்
மனதை சாந்தப்படுத்துகிறது
மனதை ஆண்டவன் பக்கமாய் திருப்புகிறது
நன்றி மேடம்//
Thank you sir.
சிர்பங்களின் அழகு வியக்கவைக்கிறது.உங்க பக்கம் வந்தா சாமி கும்பிடாமப் போக முடியாது !
ReplyDelete@ ஹேமா said...
ReplyDeleteசிர்பங்களின் அழகு வியக்கவைக்கிறது.உங்க பக்கம் வந்தா சாமி கும்பிடாமப் போக முடியாது !//
வாங்க ஹேமா. கருத்துக்கு நன்றி.
என் தொடர்கதைக்கு மிகவும் உபயோகமான தகவல்கள் ...நன்றி
ReplyDelete;)
ReplyDeleteஅச்யுதா!
அனந்தா!!
கோவிந்தா!!!
அனைத்து தகவல்களையும்
ReplyDeleteஅழகாய் தொகுத்து
கலையழகு மிளிரும்
அற்புத படங்களை சேர்த்து
அளித்த மன நிறைவான் பதிவு.
பாராட்டுக்கள்
உங்கள்பணி மேன்மேலும்
சிறக்க வாழ்த்துகிறேன்
அனைத்து தகவல்களையும்
ReplyDeleteஅழகாய் தொகுத்து
கலையழகு மிளிரும்
அற்புத படங்களை சேர்த்து
அளித்த மன நிறைவான் பதிவு.
பாராட்டுக்கள்
உங்கள்பணி மேன்மேலும்
சிறக்க வாழ்த்துகிறேன்
531+2+1=534 ;)
ReplyDelete