மலர்தலை உலகின் கண் உள்ள உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டுக் கருணையே உருவான சிவபெருமான் எழுந்தருளியுள்ள நடுநாட்டுத் திருத்தலங்களுள் சிறப்புற்று ஓங்கிய திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்திற்கு மேற்பால் , காவும் பூவும் நிறைந்த புள்ளினங்களும், வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவள் நல்லூரில் குரங்குலாவும் குன்றுறை மணவாளா என்று அருணகிரிநாதர் அருளியவாறு மணவாளரான முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
நாரத்தை என்னும் ஒருவகை மரம் உண்டு. அந்த வகையைச் சேர்ந்தகொளஞ்சி மரங்கள் நிறைந்த வனத்தில் அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பது வழக்கம்.
பசுமாடு ஒன்று அடந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்த்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாகப் பால் சொரிவதைப் பார்தத பொது மக்கள் புனித தெய்வம் எனக்கருதி வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.
சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பதுகுறித்து ஆரய்ந்த போது விருத்தாச்சலத் திருத்தல வரலாற்றில்
தம்பிரான் தோழர் என்று சொல்லக்கூடிய தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார்.
இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், , விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார்.
"விருத்தம்' என்றால் "பழமை' என்று பொருள்.
இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார்.
சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம்.
அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார்.
திருமுதுகுன்றத்து இறைவன் பரம்பொருளாகிய ஈசன் பக்தனோடு விளையாட எண்ணித் தனது மைந்தன் முருகனிடம்
" சுந்தரன் மதியாது செல்கிறான்.அவனை எமதிடத்தில் பணியச்செய்" என ஈசனே பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது.
அதன்படி விருத்தாச்சலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலிபீட உருவில் அமைந்துள்ளான் என உறுதி செய்யபட்டது.
கொளஞ்சிச் செடிகளின் ஊடேயும் ,பசுவின் கொளம்பின் மூலமாகவ்ம் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தைச்சூட்டி வழிபட்டார்கள்.
முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார்.
இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.
இறைவன் செயலால் இப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரர், திருமுதுகுன்றம் வந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, பாடல் பாடி, இழந்ததை பெற்று சென்றார்.
சுந்தரரை வழிமறித்து வேடுவராக வந்த முருகப்பெருமானே திருமுதுகுன்றத்தின் மேற்கே சுயம்புமூர்த்தியாக தோன்றி சுந்தரருக்கு அருள்பாலிக்கிறார்.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் இத்திருத்தலத்தில் ஜீவசித்தி பெற்ற திருத்தலமாகவும் அறியப்படுகிறது.
கொளஞ்சியப்பரின் வலப்பாகத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்மிகு சித்தி விநாயகர் பெரிய திருமேனி கொண்டு காட்சி தருகிறார்.
இருவருக்கும் தனித்தனி விமானங்கள்.
கொளஞ்சியப்பர் விநாயகர் சந்நிதிகளுக்கு எதிரில் வேட்டைக்கு தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய குதிரைகள் நிற்கின்றன.
குதிரைச் சிலைகள் கண்ணையும் கருத்தையும் கவரும் கம்பீரத் தோற்றம் உடையவை.
கோயிலின் பின்பக்கமாக இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனிக்கோயில் இருக்கின்றன.
சுவாமி சந்நிதிக்கு எதிரில் மகா மண்டபத்தை ஒட்டி சற்றே இடப்பக்கத்தில் முனியப்பர் சந்நிதி உள்ளது.
முனியப்பருக்கு எதிரில் கல்லிலும், இரும்பிலும் வடிக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான சூலங்கள் மேல் நோக்கி நெருக்கமாக நாட்டப்பெற்றுள்ளன. இவற்றை அடுத்துச் சற்றே கிழக்கில் வீரனார் காட்சி தருகிறார்.
பிராது பிரார்த்தனை :
கடலூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முருகன் குடிகொண்ட பிரார்த்தனைத் திருத்தலமாக விளங்கிவருகிறது.
பக்தர்கள் தங்களின் எந்தவிதமான நியாயமான கோரிக்கைகளையும் :தம் குறை முடிக்க வேண்டி, பிராது கட்டுதல் என்ற நேர்த்தி கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது.
பொருள் களவு போய்விட்டலோ கொடுத்த கடன் திரும்பாவிட்டாலோ, பிறர் தம்மை வஞ்சித்து விட்டலோ, கடும் நோயால் அவதி உற்றாலோ , குடும்பப் பிரச்சினைகளால் வாடினாலோ, மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் தடைபட்டாலோ, வேலை கிடைக்காது, வறுமை உற்றாலோ, வேறு யாதொன்று வேண்டி நின்றாலோ, யாவற்றையும் இங்கே பிராது கட்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
எவ்வாறு பிராது கட்டுவது??
பிராது வாசகத்தை ஒரு வெள்ளைத் தாளில் கீழ்க்கண்டவாறு எழுதவேண்டும்.
மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.....
மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.....
என ஆரம்பித்து தான் எந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றும்,தன்னுடைய கோரிக்கை இன்ன என்றும் தெளிவாக எழுதி கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால் அவர் அதை கொளஞ்சியப்பர் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு விபூதி பொட்டலம் ஆக்கி தருவார். அதை சிறுநூலால் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் கட்டித் தொங்க விட்டுவிட்டு விடைபெறலாம்.
இப்படி வேண்டிக்கொண்ட 90 நாட்களில் பிராது கட்டியவரின் எண்ணம் ஈடேறும். எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 10 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.
ராஜினாமா கட்டணம்: கோரிக்கை நிறைவேறினால் இந்த தேதியில் நான் வந்து வைத்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திகடனை செலுத்தலாம்.
குழந்தை வரம், கடன் தொல்லை,திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம்,பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
ஆடு மாடு கோழி தானம், எடைக்கு எடை நாணயம் வழங்கல், முடி எடுத்தல், பால்குடம் எடுத்தல்,ஆகியவை இங்கு விசேசம். பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்தல் இங்கு விசேசம்.
உடலெங்கும் அலகு குத்தி வருதல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.
உண்டியலில் பொன்தாலி, குண்டு, வெள்ளியில் பரு முதலியன நீங்கப்பெற்றவர்கள் அதன் வடிவில் செய்து வழங்கும் பரு உருண்டை, கண்ணடக்கம், மனிதர் கை, கால், வயிறு, மார்பு வடிவில் செய்யப்பெற்ற வெள்ளி உடல் உறுப்புகள், தொட்டிலில் கிடக்கும் குழந்தை வடிவங்கள் யாவும் நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.
கருவறை பின்பக்கம் வேப்பமரம் மற்றும் அரச மரங்களில் குழந்தை உறங்குவது போல் ஒரு கல் வைத்துச் சிறு ஏணைகள் கட்டித் தொங்க விட்டுப் பிள்ளை வரம் வேண்டுதலும் உண்டு.
தொட்டில் கட்டுதல், பூஜைமணி வாங்கி வைத்தல், விளக்குகள் வாங்கி வழங்குதல் ஆகிவற்றையும் பக்தர்கள் செய்கின்றனர்.
நெல் , கம்பு, கேழ்வரகு ,சோளம், மணிலா,உளுந்து, பயிறு கொள்ளு, நவதானியங்கள்,மஞ்சள்ல முந்திரி, கனிவகைகள், பலா, வாழை, மா அனைத்து வகைக் காய்கறிகள், பசுமாடுகள், காளைகள், எருமை, கன்றுகள், ஆடுகள், கோழிகள் என பக்தர்கள் நேர்த்திகடன்களாக செலுத்துகின்றனர்.
வசதியுள்ள பக்தர்கள் தாமே உணவு தயாரித்து படையல் இட்டு நைவேதனம் செய்து மற்றவர்களுக்கும் அன்னதானமும் வழங்குகிறார்கள்
சுவாமி சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர்.உருவமும் - அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார்.
3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலி பீட பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.
வேப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாடாற்றி ஐயன் அருள் மருந்தாகிய விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார்.
தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து வேப்பெண்ணெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன.
ஆறாத புண்கள் கட்டிகள் முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும் மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக்கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ் வேப்பெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது.
இந்த எண்ணை வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.
குழந்தைக்கு காப்பிடுதல் :
பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்கு பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேசம்.
குழந்தை பிறந்ததிலிருந்து இங்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்,
பொட்டு கூட வைக்க மாட்டார்கள்.
இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு பொட்டு வைக்கிறார்கள்.
”ஆலயத்தைச் சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கென்று குலதெய்வம் இருந்தாலும்கூட கொளஞ்சியப்பரையும் தங்கள் குலதெய்வமாக எண்ணி வழி படுகிறார்கள்.
தங்கள் வேளாண்மை வளமாக விளைவதற்கு வேண்டிக் கொள்ளும் விவசாயிகள், கடலை, கம்பு, சோளம், நெல், எள்- இப்படி தானியங்களைக் கொண்டு வந்து கொளஞ்சியப்பருக்குச் சூறையிடுவது வழக்கம்.
அதேபோல் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளைக் கொண்டு வந்து முடி எடுத்து, பொங்கல் வைத்து பூஜை செய்து, அக்குழந்தைகளுக்கு ஆண் என்றால் கொளஞ்சியப்பன், கொளஞ்சி என்றும்; பெண்களுக்கு கொளஞ்சி யம்மாள் என்றும் பெயர் வைத்துச் செல்வது வழக்கத்தில் உள்ளது.
பங்குனிஉத்திரம் -10 நாட்கள் திருவிழா சித்ராபவுர்ணமி நாளில் 1008 பால்குடம் எடுப்பார்கள் வைகாசித்திங்கள் - வசந்த உற்சவம் - 10 நாட்கள் திருவிழா- லட்சார்ச்சனை - சட்டத்தேரில் முருகன் விநாயகருடன் வீதி உலா மாதந்தோறும் கார்த்திகை நாளன்று சிறப்பான அபிசேக ஆராதனைகள் நிகழ்ந்து வருகின்றன.
சந்தனத்தால் செய்து வைக்கப்பெற்றுள்ள முருகன் திருவுருவத்தைப் பீடத்தின் மேல் நிறுவி, கிரீடம் அணிவித்து உருவத்திருமேனியில் கொளஞ்சியப்பரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.
ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறும்.
அன்றும் ஏராளமான காவடிகள் வரும்.
ஐப்பசித் திங்கள் கந்தர்சஷ்டி ஆறு நாட்களும் கொளஞ்சியப்பர் ஆறுவகையில் அலங்கரிக்கப்படுகிறார்.
ஏராளமான திருமணங்களும் இங்கே நடைபெறுகின்றன. தை வெள்ளி, ஆடிவெள்ளிகளில் மாவிளக்கு இட்டு வழிபடும் பழக்கம் உள்ளது.
வடக்கு வாயிலில் ஐந்து நிலைக் கோபுரம் அமைக்கப்பட்டு, உள் மண்டபங்கள் கட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் அறநிலையத் துறையின் ஒப்புதலோடு மகா கும்பாபிஷே கம் பல லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோஷத்துக்கிடையே வெகு விமரிசை யாக நடைபெற்றது.
அதே நேரத்தில் சூரியனிலிருந்து அம்பு போன்ற ஒளி வெள்ளம் கோபுரத்தின் கலசம் வரை நீண்டு வந்த காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வியப்பிலும் ஆச்சரியத் திலும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
கொளஞ்சியப்பர் தரிசனம் அருமையாக இருந்தது!
ReplyDeleteவிரிவாக இருக்கிறது..
ReplyDeleteசில கோயில்களின் வரலாறு படிக்கும்பேர்து ஆச்சரியமாகவும், நம்மபமுடியாத வேடிக்கையாகவும் இருக்கிறது..
உண்மையில் அவ்வாறு வாழ்க்கை இன்றி யாரும் அவதாரங்கள் ஆகமுடியாது...
வாழ்த்துக்கள்..
படங்கள் அருமை...
தரிசனம் பெற்றேன்..
அருமையான செய்திகள்! தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
பொறுமையாகப்படித்துவிட்டு நாளை புதன் இரவு பின்னூட்டம் அளிக்கிறேன்.
ReplyDeleteஅதுவரை பொறுத்தருள வேண்டுகிறேன்.
அன்புடன் vgk
கொளஞ்சியப்பர் தரிசனம் அருமையாக இருந்தது!படங்கள் அருமை...
ReplyDeleteதரிசனம் பெற்றேன்..
அருமையான பதிவு.
ReplyDeleteஉங்கள் பதிவுகளால் நிறைய கோவில்களை தரிசனம் செய்கிறோம்.
வாழ்த்துக்கள் அம்மா.
அருமையான பகிர்வுக்குநன்றி.../// நன்றி
ReplyDeleteமிக அருமை.. கொளஞ்சியப்பர் கோயில் சென்றிருக்கிறேன்.. ஆனால் விபரங்கள் புதுமை..
ReplyDeleteஇன்னொரு கேள்விப் படாத தலம். தகவலுக்கு நன்றி. நீங்கள் இதுவரை சென்றிராத திருத்தலம் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஎன் அம்மாவுக்கு மிகவும் பிடித்த தலம் இது. சிறுவயதில் அம்மாவுடன் பலமுறை சென்று வந்திருக்கிறேன். அற்புதமான பதிவு.அழகான படங்கள்
ReplyDeleteஇது நான் பார்க்காத கோயில். எப்படித்தான் இவ்வளவு புகைப்படம் கிட்டுகிறதோ. எனக்கென்றால் வாசலிலேயே கேமராவை கடத்திவிடுகின்றனர்.
ReplyDeleteதகவல்கள் அருமை... பெரும் சிரமத்திற்கு அப்பால் பதிவு போடுகிறீர்கள்... (எவ்ளோ டைப் பண்ணனும்) வாழ்த்துக்கள்.. என்னுடைய அம்மா உங்கள் பிளாக் ரசிகை ஆகிவிட்டார்.
ReplyDeleteவழக்கம்போல் படங்களும் பதிவும் அருமை
ReplyDeleteபிராது கட்டுதல்,கிலோமீட்டருக்கு 10 பைசா
வாபஸ் பெறுதல் முதலான தகவல்கள் எல்லாம்
புதியனவாகவும் ஆச்சரியமூட்டுவைகளாகவும் இருந்தன
தாங்கள் இந்தப் பதிவை அனைவருக்கும் பயன்படும்படியாக
மிக அழகாக நேர்த்தியாக செய்து போகிறீர்கள்
பதிவர்கள் அனைவரின் சார்பாக நன்றி
அதேசமயம் மா நில வாரியாக இருக்குபடியாக
பின்னாளில் இதை பிரித்துவைத்தீர்கள் ஆயின்
எப்போது எங்கு போவதாக இருந்தாலும்
தங்கள் பதிவினைப் படித்துப் போகும் படியாக
வசதியாகஇருக்கும் என நினைக்கிறேன்
ஆன்மீக படைப்பு அருமை!
ReplyDeleteRamani said...//
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. தங்களின் கருத்துப்படி மாநில வாரியாக பிரித்து வைக்க முயற்சிக்கிறேன்.
தலங்களை மனக்கண்ணில் தரிசித்து பதிவிட்டுப் படங்களை இணைக்கத் தெரிகிறதே தவிர மற்றவற்றிற்கு வேலை மும்முரத்தில் இருக்கும் குழந்தைகளைத் தொல்லை செய்ய மனம் வருவதில்லை.
கொளஞ்சியப்பர் பிராது புது சமாச்சாரம். அருமை. நன்று. ;-))
ReplyDeleteஆண்டவனின் அருட்ப்ரசாதம்
ReplyDeleteபெற்றவர் நீங்கள்
எப்படி இந்த அற்புதநடை சாத்தியமாயிற்று
உங்களுக்கு
ஒவ்வொன்றும்
பக்தி பரவசம்
கொளஞ்சியப்பர் பதிவு
அமிர்தம்
தங்களின் இந்தப்பதிவை முழுவதும் நிறுத்தி நிதானமாகப்படித்து முடித்துவிட்டேன்.
ReplyDeleteஊறுகாயில் கொளிஞ்சிக்காய் என்று ஒன்று உண்டு. எனக்கு அதன் புளிப்பும் கசப்பும் சேர்ந்த ருசி மிகவும் பிடிக்கும்.காரமில்லாமல் உப்பு மட்டும் நிறைய போட்டு வெய்யிலில் உலர்த்தி காயவைத்து விடுவார்கள்.
வாய்க்கு நாக்குக்கு ருசியில்லாமல் எதுவும் பிடிக்காமல் ஜுரமும் சேர்ந்து கொண்டால், இந்த உப்புப்போட்ட கொளுஞ்சிக்காய் ஊறுகாய், சூடான கஞ்சி+மோருடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நாக்கிற்கும் தேவாமிர்தமாக இருக்கும்.
அதுபோலவே உள்ளது உங்களின் இந்தப்பதிவும்.
உங்களைப்பாராட்ட வரவர வார்த்தைகளே கிடைப்பதில்லை.
உங்கள் பதிவுகள் அனைத்தும் பிற்காலத்தில் நல்லதொரு ஆன்மீகப்பயணம் மேற்கொள்ள அனைவருக்குமே சிறந்த வழிகாட்டியாகவும், சரித்திர சான்றுகளாகவும், பொக்கிஷங்களாகவும் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
நீங்களே இவற்றை தொகுப்பு நூல்களாக வெளியிட முயற்சிக்கலாம் என்பது என் அபிப்ராயம்.
வாழ்க உங்கள் தொண்டு. வளர்க உங்கள் ஆன்மீக பயணக்கட்டுரைகள்.
அன்புடன் பிரியமுள்ள vgk
ADA .. NEENGA ORU BOOK PODALAM POLIRUKKEY...... :) NANDRU
ReplyDeletevery nice . kolanjiyapar thunai
ReplyDeletevery nice kolanjiyapar thinai
ReplyDelete;)
ReplyDeleteஅச்யுதா!
அனந்தா!!
கோவிந்தா!!!
இந்த கோயிலுக்கு 1960 -1969 வருடங்களில் எங்கள பெற்றோருடன் சிறிய குழந்தையாக இருந்த போது பல முறை போன அனுபவம் உண்டு.
ReplyDeleteமிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்
485+3+1=489
ReplyDelete