மதுரையின் வரலாற்றை பறைசாற்றும் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகப்புகழ்பெற்ற உன்னத விழா.

சித்திரைத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கோலாகல நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

சித்திரைத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கோலாகல நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

மதுரைக்கு வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அழகர், கள்ளழகர் ஆகிய திருப்பெயர்களைகொண்ட சுந்தரராஜப் பெருமாள் குடிகொண்டிருக்கிறார்.
அங்கிருந்து அவர் கள்ளழகர் வேடம் தரித்து, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்குவதற்காகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், தங்கை மீனாட்சிஅம்மனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகவும் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வருவதாக விழா கொண்டாடப்படுகிறது..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடத்தி அழகரை எதிர் கொண்டு வர்ணனை பாடல்களை பாடி. தோல் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தெளித்து ஆடிப்பாடி வரவேற்பார்கள்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் வந்து திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சூட்டப்படுவது கண்கொள்ளாக் காட்சி..!

அழகர் தல்லாகுளம் கருப்பணசாமிகோவிலில் ஆயிரம்பொன்சப்பரத்தில் எழுந்தருளும்போது சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளுடன். தங்கக் குதிரையில் அமர்ந்தபடி ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்படுவார்..
அதிர்வேட்டுகள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் ‘ வைகை ஆற்றில் இறங்கும் போது ‘கோவிந்தா, கோவிந்தா‘ என்று எழுப்பும் முழக்கம் விண்ணை முட்டும்...

செம்புகளில் சர்க்கரையை நிரப்பி தீபம் ஏற்றி அழகருக்கு காட்டி வழிபடுவார்கள்.

செம்புகளில் சர்க்கரையை நிரப்பி தீபம் ஏற்றி அழகருக்கு காட்டி வழிபடுவார்கள்.

தங்கக்குதிரையில் வந்த அழகரை, அழகரின் சகோதரரான வீரராகவப்பெருமாள் வரவேற்று மூன்று முறை அவரை வலம் வருவார்..

.ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளி திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கும்..
முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகனாவதாரம் உள்பட 10 அவதாரங்களில் அழகர் காட்சி தருகிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா அறிந்து மகிழ்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
சிறப்பான திருவிழா படங்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மதுரை அரசாளும் மீனாட்சி திருக்கல்யாணம் பற்றிய அழகான பதிவு!..
ReplyDeleteசித்திரை திருவிழாவை நேரில் கண்டு ரசித்த மகிழ்ச்சி.
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அழகு.
வாழ்த்துக்கள். காணொளிஅருமை.
சித்திரை வந்தாலே அடிக்கடி முத்திரை பதிக்கும் பதிவுகள் கிடைத்து...
ReplyDeleteகும்மென்ற ஜிம்மென்ற தனி நறுமணம் கமழ்ந்து.....
மனதை மிகவும் சொக்க வைக்கிறது ....
நாசியில் கமழும் நறுமணமும்......
மனதில் முகிழ்க்கும் சந்தோஷமும் எடுத்துச்சொல்லி மாளாது ! ;)
அழகான படங்கள், அருமையான விளக்கங்கள். மதுரைக்கே நேரில் சென்று வந்த மகிழ்ச்சி.
பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
சித்திரைத்திருவிழா சிறப்பினை அழகாக படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசித்திரை வந்தாலே மதுரை திருவிழா பற்றிய உங்களது முத்திரைப் பதிவுகளும் பச்சைக் கிளியோடு வந்து பரவசம் அடையச் செய்கின்றன.
ReplyDeleteசிறப்பான சித்திரைத்திருவிழா பற்றி அழகழகான புகைப்படங்களுடன் பகிர்வினை தந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteசிறப்பான படங்கள். சித்திரைத் திருவிழா சிறப்பான பதிவு.
ReplyDeleteஒருமுறை இந்த விழாக்காலத்தில் மத்ரைலிருந்தோம். கள்ளழகர் கோவிலிலிருந்து வேடம் தரித்து பலரும் வைகை நோக்கி வருவதைத்தான் காண முடிந்தது. நல்ல வெயில் காலத்தில் பெருங்கூட்டம் . எதுதான் மக்களை ஈர்த்திழுக்கிறது.படங்கலுடன் பதிவு அருமை.
ReplyDelete