Friday, May 16, 2014

சந்தோஷம் பொங்கும் சர்வதேச குடும்ப தினம்-







ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை
ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, 
மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். 
சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். 

குடும்பம் அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். 
இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்வது காலத்தின் கட்டாயமாய்... பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம்..!


இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. 
குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. 


"மேம்பட்ட சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமுறையினரிடையே ஒற்றுமை' என்பது, சர்வதேச குடும்ப தினத்தின் மையக்கருத்து. 

உலகளவில் சொந்த இருப்பிடத்தை விட்டு, உள்நாட்டுக்குள் அல்ல, வெளிநாடுகளில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களை சார்ந்து உள்ளது. 
என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை. 
குடும்பமே முதல் வேலை : ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை குடும்பதினம் வலியுறுத்துகிறது. 
தனிக்குடும்ப வாழ்க்கை, விவாகரத்துகள், தாய், தந்தை இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தடுப்பதற்கு குடும்பங்களின் ஓற்றுமை அவசியம்.
தொடர்ப்புடைய பதிவுகள்
குதூகல குடும்பதினம் வாழ்த்துகள்..















21 comments:

  1. சர்வதேச குடும்ப தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. குடும்ப தின வாழ்த்துக்கள் அம்மா - என்றும்...

    ReplyDelete
  3. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் குடும்ப தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா.

    ReplyDelete
  4. குடும்ப தின நல்வாழ்த்துக்கள்.-

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய குடும்ப தின நல்வாழ்த்துக்கள்!

    ஒரு கூட்டுக் கிளியாக பாடல் வரிகளை இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பலமுறை வைரமுத்து அவர்களின் வரிகளை நினைத்து வியந்திருக்கிறேன். வரிக்கு வரி ஸ்ரீராமரின் கொள்கைகள். அவர் அவருடைய தம்பிகளை பார்த்து பாடுவது போல நினைத்துப் பார்த்தாலும் ரொம்ப பொறுத்தமாக இருக்கும். இசைஞானியின் இசை வேறு கேட்கவும் வேண்டுமா? இந்த பாடல் அளிக்கும் நெகிழ்ச்சியையும் மகிழ்சியையும். :)

    ரொம்ப நாள் கழுத்து இந்த பாடலை நினைவு படுத்திவிட்டீர்கள். இனி ஒரு 7 அல்லது 8 முறையாவது இந்த பாடலை கேட்டுவிட்டு தான் மறு வேலை!

    ஸ்ரீராமஜெயம்!!!

    ReplyDelete
  6. சந்தோஷம் பொங்கும் சர்வதேச குடும்ப தின நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  7. குதூகல குடும்பதின நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  8. அழகான படங்களும் கார்டூன்களும் மிகவும் ரஸிக்கும் படியாகவே தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. காணக்காண மகிழ்ச்சிகள். ;)

    >>>>>

    ReplyDelete
  9. ஆரம்பத்தில் நீலக்கலரில் எழுதியுள்ள 18 வரிகளுடன் கூடிய அந்தப்பாடல் அருமையாக உள்ளது. மிகவும் பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்.

    அதுவும் அந்த 15 + 16 வது வரிகள் ....

    //பேருக்கு வாழ்வது வா ழ் க் கை இல்லை
    ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை//

    அடடா ! அதே அதே ..... நான் நினைப்பதும்.

    [என்னப்பொருத்தம் ....... நமக்குள் இந்தப்பொருத்தம்]

    >>>>>

    ReplyDelete
  10. //ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்//

    [நானும் தான் செய்து வருகிறேன்]

    //என் கண்ணில் ஈரமில்லை//

    அது காய்ந்து வற்றிப்போயிருக்கும் 3-4 ஆண்டுகளுக்கு முன்பே.

    [என் கண்ணில் மட்டுமல்ல நெஞ்சிலும் எப்போதுமே ஈரமுண்டு. அதுதான் என் பிரச்சனையே.]

    >>>>>

    ReplyDelete
  11. __ __ __ __ யின்
    வெற்றிகரமான 1276வது பதிவுக்கு
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்,

    நன்றியோ நன்றிகள்.

    oo oo oo

    ReplyDelete
  12. அன்பின் அம்மாவிற்கு வணக்கம்
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் சர்வதேச குடும்ப தின நல்வாழ்த்துகள். இப்படியொரு தினம் இருப்பதையே தங்களிம் பதிவின் மூலம் தான் அறிந்தேன். மிக்க நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  13. 37/39 = 94.87% ’அம்மா’ன்னா அம்மா தான், மீதி பேரெல்லாம் சும்மா தான்.

    இந்த வெற்றி இந்திய அளவில் மூன்றாம் இடம் எனச்சொல்கிறார்கள். என்னைப்பொறுத்த வரையில் அது முற்றிலும் தவறு என்பேன்.

    அகில இந்திய அளவில். சதவீத அடிப்படையில் எந்தக்கட்சி இதுபோல 90%க்கு மேல் வாங்கியுள்ளது? அதனால் அம்மா தான் அகில இந்திய அளவில் நம்பர் ஒண்ணாக்கும். ஜாக்கிரதை !

    ReplyDelete
  14. அதைபோலவே, தங்களின் வலையுலக வெற்றி, அதைவிடப் பிரமாதமாக அமைந்துள்ளதில், எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    21.01.2011 முதல் 16.05.2014 வரையிலான

    1212 நாட்களில் 1276 பதிவுகள்.

    1276/1212 = 105.28% ;)))))))))))))))

    வெற்றி மேல் வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. கூட்டுக் குடும்பம் என்பது
    கானல் நீராகிவிட்ட நிலையில் ,
    குடும்பத்திற்கு ஒரு தினம் என்று
    ஒதுக்கி, கூட்டுக் குடும்பத்தை
    நினைத்து ஏங்க வைத்த
    பதிவிற்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete
  16. சர்வதேச குடும்ப தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. சர்வதேச குடும்ப தின வாழ்த்துக்கள் அம்மா. புதிய செய்தியை தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. இனிய சர்வதேச குடும்ப தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. அருமையான பதிவு
    குடும்ப தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. குடும்ப தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அருமையன குடும்பதின பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete