தாய் வீடு சமயபுரம் தன்னருள்சேர் கண்ணபுரம்
கோவில் என்றும் கோட்டை என்றும் கோலம் தரும் காளிபுரம். (தாய்).
காப்பதற்கே அமைந்த இடம் கைதொழுவார் திரளும் இடம்
வேப்பிலையால் வேலிகட்டி வினைகளெல்லாம் தீர்க்கும் இடம். (தாய்).
பகை அடக்க வரும் நீலி பண்பு மிகும் மலைச்செல்வி
பகை அறுக்கும் உயிர்களுக்கு வழிகாட்டும் மகமாயி. (தாய்).
எட்டு திசையும் மணம் பரவ இடும் நீறு உயர்மருந்து
பட்டினியாய் நோன்பிருந்து பயன் வழங்கும் தவக்கொழுந்து. (தாய்).
தங்கஜடாமகுடத்துடன் - குங்கும மேனி நிறத்தில் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன-கண்களில் அருளொளி வீச வைரக்கம்மல்களுடன் மூக்குத்தியும், சூரியன் சந்திரன் போல பேரொளிவீச காட்சி தரும் மகா அன்னை சமயபுரம் மகமாயியின் அருளொளி பொங்கும் அற்புத திருக்கோலத்தினை காணக்கண்கோடி வேண்டும்தான்..
அம்மனை பக்திப் பரவசத்தால் வியந்து விழிவிரித்து நோக்கினால் ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம் மணி வில் பாசம் வலப்புறமாக கத்தி சூலம் அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களை தாங்கி காட்சிதருகிறாள்.. .
இடது காலை மடக்கி வலது காலை தொங்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்பொழிந்து கொண்டிருக்கிறாள்..
கருவறையில் அமர்ந்த நிலையில் காட்சியளித்துக் கொண்டு அம்பாள் எழுந்தருளியிருக்கும் இடம் முதன்மை பீடமாகும் . அன்னையின் தலைக்கு மேலே ஐந்துதலை நாகம் குடையாக விளங்குவது சிறப்பாகும் .
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் அம்பாள் மாறுபட்ட வடிவம் கொண்டு அருளாட்சி வழங்கும் திருவுருவம் மரத்தாலும் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் புதுமையான ஒன்றாகும் .
10 ஆண்டிற்கு ஒருமுறை இது மறுசீரமைப்பு செய்யப்படுகிறது..
சித்திரை மாதத்தில் சித்திரை தேரோட்டமும்,
வைகாசி மாதத்தில் பஞ்ச பிரகாரத்திருவிழாவும்
ஆனி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆறுகால பூஜையும்
பிரதோஷம், அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகின்றன.
வைகாசி மாதத்தில் பஞ்ச பிரகாரத்திருவிழாவும்
ஆனி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆறுகால பூஜையும்
பிரதோஷம், அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகின்றன.
ஆடி மாத்தில் ஆடிப்பூரத் திருநாள்
அன்று தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. -
திருக்கோயிலின் முதல் கோபுரவாயில் வழியாக நுழைந்தால் திருச்சுற்றின் முதலில் அருள்மிகு விநாயகர் சன்னதியையும் அதனை தொடர்ந்து திருக்கோயிலின் தல மரமான வேம்பு மரத்தை அடையலாம்.
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மை இடமாகத் திகழ்கிறது.
அம்பாளுக்கு திருப்பூஜைகள் நடைபெறும் போது
தல விருட்சத்திற்கும் பூஜைகள் நிகழ்த்துவது வழக்கம்.
வேப்ப மரம் என்றாலே அது மகா மாரியின்
மறு பிம்பமாகக் கருதப்படுகிறது.
வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்திக் கூறும் மரபு
தமிழ்ப் பண்பாட்டில் நிலைபேறு டையதாகக் கருதப்படுகிறது.
பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இவ்வேப்ப மரத்தினடியில்
உள்ள புற்றில் தான் ஆயிரம் கண்ணுடையாளின்
அழகிய செப்புத் திருமேனி எடுக்கப்பட்டது.
உள்ள புற்றில் தான் ஆயிரம் கண்ணுடையாளின்
அழகிய செப்புத் திருமேனி எடுக்கப்பட்டது.
தற்போது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சியளித்துக் கொண்டுள்ளார்.
நலன்பயக்கும் வேப்ப மரம்அன்னையின் திருவுருவமாக
வணங்கப் பட்டு வருகிறது.
வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகா மாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்ப பூவை நெற்றியில் உள்ள வைரத் திலகத்திற்கும் தொடர்புபடுத்திக் கூறுவர்.
எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும்
பொது மக்களுக்கும் குறைகளை நீக்கி அருள் வழங்கும்
தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.
பொது மக்களுக்கும் குறைகளை நீக்கி அருள் வழங்கும்
தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.
தொடர்புடைய பதிவுகள்
அதிகாலையில் அம்மனின் அருள் பெற்றேன். இன்றென்னவோ படங்கள் திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது!
ReplyDeleteசென்று வந்த கோயில்தான் என்ற போதிலும்அனைத்தும் அறியாச் செய்திகள்தான்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தொடர்புடைய பழைய பதிவினையும் கண்டேன். இன்று உங்கள் பதிவுகளின் புண்ணியத்தில் சமயபுரம் அம்மன் தரிசனம் கண்டேன்! நன்றி!
ReplyDeleteசமயபுரம் அம்மா சமயத்தில் காப்பாள்... அருமை அம்மா... படங்களும் சிறப்பு...
ReplyDeleteஎங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,
ReplyDeleteமாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் பாடி இருக்கிறேன்.
www.menakasury.blogspot.com
கேளுங்கள்.
சர்வ மங்களங்களும் அருளும் சமயபுரம் மஹமாயீ அம்பாளுக்கு அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.
ReplyDelete>>>>>
அன்றாடம் ஆங்காங்கே நடைபெற்று வரும் அனைத்துக்கும்
ReplyDelete(அனைத்து அட்டூழ்யங்களுக்கும் கூட) சமயபுரத்தாளே சாட்சி !
>>>>>
ஆரம்பத்தில் தடங்கலாக [Error] காட்டினாலும் பிறகு ஒரு வழியாக மாரியம்மன் பாடல்களை அருமையாகக் கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.
ReplyDelete>>>>>
’குங்கும் மேனி நிறம்’ என்பது புதுமையான கேள்விப்படாத நிறமாக உள்ளது.
ReplyDelete‘கு ங் கு ம’ என இருக்கலாமோ என நினைக்கத்தோன்றுகிறது.
இருப்பினும் படத்தினில் பார்க்க எப்போதுமே என் அம்பாள் ‘கும்முனு ஜிம்முனு’ தான் உள்ளது.
தினமும் ஒருமுறை தரிஸித்து வருவதால் நெஞ்சினில் அந்த அழகிய அம்பாள் உருவம் ஆழமாகப் பதிந்து விட்டது.
என்னவொரு அழகு ! எவ்வளவு ஒரு கம்பீரம் !! எடுப்பான மிடுக்கான அலங்காரம் மிகவும் அசத்தலாகவே உள்ளது. ;)
>>>>>
புதுப்பித்த புதுமையான குங்குமம் பசுமையாகக் கும்கும்ன்னுக் காட்சியளிக்கிறது. ;)))))
Deleteமிக்க நன்றி.
அன்னையை அடுத்து தரிசிக்க வேண்டும் என்னும் எண்ணத்தைத் தூண்டுகிறதுபதிவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதுபோல தங்கள் விளக்கங்களில் ஓர் இடத்தில்
ReplyDeleteசித்திரைக்கு ’ம த ம்’ பிடித்துள்ளது.
சமயபுரம் யானைக்குத்தான் ஒருமுறை மதம் பிடித்து
அது மிகவும் லூட்டி அடித்து விட்டது.
சித்திரை என்று ஒரு மதம்
இருப்பதாகவும் தெரியவில்லை.
ஒருவேளை சித்திரை மாதமாக இருக்குமோ ?
சித்ரா நக்ஷத்திரத்தில் உதித்த
செந்தாமரையே .... செந்தேன் நிலவே
இவற்றை சற்றே கவனிக்குமா ?
>>>>>
மதம் மதம்மாறி மாதமாக ஆகியதில் மகிழ்ச்சி.
Deleteஅதுபோலவே அனைவரின் மனமும் மாறட்டும்.
என்றும் மன மகிழ்ச்சி வெள்ளமாகப் பொங்கட்டும். ;)))))
*தொடர்புகள் அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வந்தாலும்*
ReplyDeleteதொடர்புடைய பதிவுகளையும் சென்று கண்டு களித்து வந்தேன்.
[*மின் தொடர்பு + நெட் தொடர்புகளைச் சொன்னேனாக்கும்*]
>>>>>
இன்று காலை எழுந்ததும், எங்கள் குல தேவதா, கிராம தேவதா, இஷ்ட தேவதாவான சமயபுரம் மஹா மஹமாயீயை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்ததில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் மனதில் ஏற்பட்டது.
ReplyDeleteஅனைத்துக்கும் காரணமான என் அம்பாளுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
;) 1289 ;)
ooo O ooo
சர்வ மங்கலம் அருளும் சமயபுரத்தாள்..
ReplyDeleteசஞ்சலங்கள் தீர்த்து என்றும் சமயத்தில் காப்பாள்..
.பல வருடங்களுக்கு முன்பு சென்று வந்தது. அடுத்த தடவை இந்தியா வரும்போது கண்டிப்பாக தரிசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.
ReplyDeleteAs usual super.
ReplyDeleteசமயபுரம் மாரியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....
ReplyDeleteசில முறை சென்றிருக்கிறேன்..
படங்கள் வெகுச்சிறப்பு! ஒரு முறை சென்று வந்திருக்கிறேன்! தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteஇப்போதெல்லாம் நேரில் சென்று சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. உங்கள் பதிவின்மூலம் பல தகவல்களையும் அறியமுடிந்தது தரிசனமும் கிடைத்தது அருமையான படங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDelete