Tuesday, May 6, 2014

மதுரை அரசாளும் மரகதவல்லி மீனாட்சி



மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் முதன்மையானது. ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது. 
மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லாலானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில்   உள்ள கோவில்களில் முதன்மைக் கோவிலாகத்திகழ்கிறது..!
கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள  
இந்திய அதிசயங்களில் ஒன்றாக பெருமை சேர்க்கிறது..!

 மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருவது சிறப்பம்சம்..!
தூங்காநகரம் என பெயர் பெற்ற மதுரை  கலையழகும், 
சிலையழகும், சிற்பத்திறனும், சித்திரவனப்பும் கொண்டது. 

நாத அமைப்பு கொண்ட தூண்களை உடையது. 

மூர்த்தி, தலம், தீர்த்தப்பெருமை கொண்டது

கடம்ப மரமும் வில்வ மரமும் தல விருட்சம். 

பொற்றாமரைக் குளம், வைகை நதி, கிருதமாலை, கொண்டாழி, 
தெப்பக் குளம், புறந்தொட்டி, நிர்மால்ய தீர்த்தம் ஆகியவை 
தல தீர்த்தங்களாகும். 

 மதுரைமல்லி, தாழம்பூ, குங்குமம், பிட்டு பலகாரம் என 
மதுரையின் பெயருக்கு சிறப்பு சேர்க்கின்றன 

ஆலய பிரசாதம் பிட்டு!
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பெற்று மனித குலத்தின் முதுகில் முதுகுத்தண்டில் முத்திரை பதித்த திருவிளையாடல் நடைபெற்ற தலமாற்றே..! 
பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்திரங்களாக இடம்பெற் றுள்ளன. 

இதே 64 திருவிளையாடல்கள் சுவாமி கோவில் மகாமண்டபத்தில் வண்ணச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.

மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை எழுந்தருளலும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களாகும்
வைகை நதியின் எழில் கோலம்

10 comments:

  1. இந்திய அதிசயங்களில் ஒரு சிறப்பு... படங்கள் அருமை அம்மா...

    ReplyDelete
  2. மதுரையைச் சுற்றிப் பார்த்த அனுபவம்..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. மதுரை அரசாளும் மரகதவல்லி மீனாக்ஷி என்ற தங்களின் தலைப்புக்கும், அன்னை மீனாக்ஷிக்கும் அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு !

    கற்கண்டாய் இனிக்கிது அந்தக் காணொளி.

    சிவபெருமானின் லீலைகளைச் எடுத்துச் சொன்னவிதம் சூப்பர் !

    கடைசிபடம் பொற்றாமரைக்குளம் +
    ’கோ பு’ ர ம் சொக்க வைக்கிறதே!

    ’ரம்’ உள்ளே இறங்கியது போல ஒரே கிக் !

    அனைத்துக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. மிக அழகான ,எனக்கு பிடித்தமான கோவில் மதுரை மீனாட்சி.அழகான படங்கள் .நன்றி.

    ReplyDelete
  5. மதுரை மீனாக்ஷியம்மனைப் பார்த்ததும் அங்கே கிடைக்கும் தாழம்பு குங்கும வாசனை அலையலையாய் மிதந்து வருகிறது. நல்லதொரு பகிர்வு . காணொளி அருமை.

    ReplyDelete
  6. மதுரையின் சிறப்புக்களை மதுரமாக தந்தது பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நீங்கள் பகிர்ந்த மதுரை மீனாக்ஷியம்மை படம் வீட்டில் வைத்து இருந்தால் மிகவும் நல்லது என்பார்கள். இரவு அர்த்தசாம பூஜையின் போது இந்த வெள்ளைபட்டு புடவை உடுத்தி இருப்பார் மீனாக்ஷி.
    பாடலும், கணொளியும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கோயில் நகராம் மதுரையைப் பற்றியும் விழாக்களைப் பற்றியும் தங்களின் பகிர்வு, படத்துடன் மிக அருமை.

    ReplyDelete
  9. மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றிய அறிய செய்திகளையும் படங்களையும் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  10. படங்கள் அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete