'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' காருண்ய ஈசன் திருக்காரணி ஸ்தலத்தில், ஜீவர்களை சிவமயமாக்கும் பொருட்டு, தொண்டை நாட்டில் சைதாப்பேட்டை என்றழைக்கப்பெறும் சைதை எனும் ஊரில் நடுநாயகமாக காரணீஸ்வரர் என்ற சிறப்பு நாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
காமதேனு என்ற தெய்வப் பசுவை, இந்திரன் வசிஷ்டருக்காக
ஒரு மண்டல காலத்திற்கு அதை அவருடன் அனுப்பிவைத்திருந்தான்.
ஒரு மண்டல காலத்திற்கு அதை அவருடன் அனுப்பிவைத்திருந்தான்.
ஒரு மண்டலம் கடந்தும் காமதேனு பசு திரும்ப வராததால், இந்திரன் சபையிலுள்ள மூத்தோர்களிடம் தன் வருத்தத்தைக் கூற, அதில் ஒரு முனிவர் இந்திரனை நோக்கி, 'மன்னா! உமது காமதேனு வசிஷ்டரின் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால், அவர் கோபமுற்று நீ காட்டிற் சென்று சஞ்சரித்து என் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால், நீ காட்டுப் பசுவாகப் போ!' எனச் சபித்துவிட்டார். அதனால்தான் காமதேனு இங்கு திரும்பவில்லை. அது இப்போது, காட்டுப் பசுவாக சஞ்சரித்து வருகிறது எனத் தெரிவிக்க, இந்திரன் அம்முனிவரிடமே அதை தான் மீண்டும் அடைவதற்கான வழிமுறைகளைக் கேட்டான்.
இந்திரனிடம், பூலோகத்தில் தொண்டை மண்டலத்துள், மயிலை மாநகர எல்லைக்கும் திருவான்மியூர் எல்லைக்கும் நடுமத்தியில், மேற்கே சில கடிகை தூரத்தில் 'நீ சோலை ஒன்றை உண்டாக்கி அச்சோலைக்குள் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவாயானால் உனது காமதேனுவை அடையலாம்!' என்று வழிகூறி அருளினார்.
இந்திரன் தன் வாகனமாகிய மேகங்களை அழைத்து, அவற்றிடம் அந்த முனிவர் குறிப்பிட்ட இடத்திலே அணிதிரண்டு மழையைப் பெய்வித்து அந்த இடத்தை குளுமைப்படுத்துமாறு கட்டளையிட்டான்.
மேகங்கள் (கார் - மேகம்) அணி (அணி - ஒன்றுதிரண்டு) திரண்டு, அக்குறிப்பிட்ட இடத்திலே மழையைப் பெய்வித்து அவ்விடத்தைச் சோலையாக்கின.
இந்திரன் சோலைக்குள் தங்கி சிவலிங்கத்தை நிறுவி, அதற்கு மேற்குப் புறத்தில் தடாகம் ஒன்றை உண்டாக்கி, நாள்தோறும் காலம் தவறாமல் செய்த பூஜையில் நெகிழ்ந்த ஈசன், இந்திரன் முன் தோன்றி, 'நீ விரும்பியவண்ணமே காட்டுப் பசுவாக மாறியுள்ள காமதேனுவை, காமதேனுவாக மாற்றி உம்மிடம் அனுப்பி வைப்போம்' என்று கூற, பரவசப்பட்ட இந்திரன்
ஈசன் இந்திரனிடம், 'மேகங்களைத் திரளச்செய்து இங்கு என்னைப் பிரதிஷ்டித்து வணங்கியபடியால், இத்தலம் 'காரணி' என எக்காலத்தும் வழங்கப்படும். நீ நிர்மாணித்த இந்த தீர்த்தத்திற்கு 'கோபதி சரஸ்' என்ற பெயரால் சிறப்பு பெறும்!' என ஆசீர்வதிக்க, மனமகிழ்ந்த இந்திரன் இறைவனிடம், 'இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கிரமப்படி உன்னை அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் தந்து நித்தியானந்த வாழ்க்கையை அருளவேண்டும்!' என வேண்டினான். ' ஈசன் வரமளித்தார்.
காரணீஸ்வரரிடம், பிரம்மா தனது சிருஷ்டி தண்டத்தைப் பெற்றார்..
ஸ்ரீதேவிக்கும் சரஸ்வதி தேவிக்கும் இடையில் உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அதிகம் கருணை புரிபவர்கள் யார் என்ற வாக்குவாதத்திற்குத் தீர்வு காண இருவரும் இந்திரனிடம் செல்ல, தேவேந்திரனோ 'ஸ்ரீதேவிதான் கருணை புரிவதில் சிறந்தவர்!' என்று கூறினான்.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி இந்திரனை நோக்கி, ' சங்கநிதி பதுமநிதி எல்லாவற்றையும் இழந்து மதயானையாக மாறித் திரிவாய்!' என்று சபித்தாள்.
இதனால் மனம் நொந்த இந்திரன் ஸ்ரீதேவியிடம், 'உம்மைப் புகழ்ந்ததனால் அல்லவோ எனக்கு இந்த நிலை!' என்று வேதனைப்பட்டான். அதற்கு ஸ்ரீதேவி இந்திரனிடம், , பூலோகத்திலுள்ள காஞ்சி நகருக்குச் சென்று தவம் செய்! ஸ்ரீமந் நாராயணமூர்த்தியின் அருளால், இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறுவாய்! என திருவாய் மலர்ந்தருளினாள்.
இந்திரன் தந்த தீர்ப்பில் நிறைவுறாத சரஸ்வதி, ', சத்தியலோகம் போவோம்! அங்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது எனப் பார்ப்போம்!' எனக் கூறி, சத்தியலோகத்திலிருக்கும் பிரம்மதேவரின் தீர்ப்பை நாடிச் சென்றாள்.
அங்கும் பிரம்மதேவர், 'ஸ்ரீதேவிதான், கருணை புரிவதில் தலைசிறந்தவள்!' என்று கூறிவிட, மீண்டும் கோபம் கொண்டாள் சரஸ்வதி. பிரம்மன் அவள் கணவன். ஆதலால், ' சபிக்க நியாயமில்லை!' என்று கூறி, படைப்பின் அம்சமான பிரம்மாவின் சிருஷ்டி தண்டத்தைப் பிடுங்கிக்கொண்டு பூலோகத்துக்குச் சென்றுவிட்டாள்.
பிரம்மா ஸ்ரீதேவியிடம், 'உண்மையை எடுத்துரைத்ததால், நான் என் தண்டத்தை இழக்க நேர்ந்தது. எனவே, நீங்களே அதைப் பெறுவதற்கான வழியைக் கூறி அருளவேண்டும்!' எனத் திருமகளிடம் வேண்டினார்.
ஸ்ரீதேவியும் பிரம்மாவிடம், 'இந்திரனால் ஸ்தாபித்து பூஜிக்கப்பட்ட காரணீஸ்வரரை, நீங்கள் பூலோகத்துக்குச் சென்று பூஜித்து வாருங்கள். சிருஷ்டி தண்டம் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும்!' எனக் கூற, அதன்படியே பிரம்மாவும் இத்தலத்திற்கு வந்து நிலத்தை சீர்ப்படுத்தி, காரணீஸ்வரருக்கு கிரமப்படி பத்து நாள் உற்சவ கைங்கரியம் செய்தார்.
பிரம்மாவின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த காரணீஸ்வரர் அவர்முன் தோன்றி, ', காஞ்சி நதி தீரத்தை அடைந்து யாகம் ஒன்றை செய்தீர்களானால், ஸ்ரீமந் நாராயணமூர்த்தியின் அருளால் சிருஷ்டி தண்டத்தைப் பெறுவீர்கள்!' என வரமருளினார்.
பிரம்மனால் பூஜிக்கப்பட்ட அந்த பத்து நாள் உற்சவ கைங்கர்யமே,
வருடா வருடம் சித்திரை மாத சுக்கில பட்ச பஞ்சமி திதியில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உற்சவம் ஆரம்பித்து, சதுர்த்தசி திதியில் பூர்த்தியாகும்.
வருடா வருடம் சித்திரை மாத சுக்கில பட்ச பஞ்சமி திதியில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உற்சவம் ஆரம்பித்து, சதுர்த்தசி திதியில் பூர்த்தியாகும்.
கொடியேற்றத்தோடு தொடங்கும் சித்திரைப் பெருவிழாவில்
மிக முக்கியசிறப்பு அம்சம் வெள்ளி ரிஷப வாகனக் காட்சியும்,
அறுபத்து மூவர் உற்சவமும். .
மிக முக்கியசிறப்பு அம்சம் வெள்ளி ரிஷப வாகனக் காட்சியும்,
அறுபத்து மூவர் உற்சவமும். .
காரணீஸ்வரருக்கு விதிப்படி கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபங்களைக் கட்டியதோடு, சுற்று மதில்களையும் எழுப்பி மற்ற திருப்பணிகளான கோபதி சரஸின் கரைகளைப் புதுப்பித்தும், நித்திய உற்சவ நைவேத்தியாதிகளை நியமித்தும் பூஜித்து வந்த ஆதொண்ட சக்ரவர்த்தியும், அவரது துணைவியாரும் கோபுர நுழைவாயிலின் உள் வாயிற்படியில், வணங்குவது போன்ற உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்...
கொடி மரத்தின் கீழே , கொடிமர விநாயகர் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்... கன்னி மூலையிலும் ஒரு விநாயகர்.
நடராஜர் அமைந்திருக்கும் உள் வழியே கிழக்கு திசையை நோக்கியவண்ணம் லிங்க வடிவில் காரணீஸ்வரர், இந்திரனுக்கு வாக்களித்தபடி, 'தன்னை நாடி வந்திருப்போருக்கும் நித்தியானந்த வாழ்வைத் தந்தருள்புரிகிறார்.
..
தட்சிணாமூர்த்தி,
நாராயணர், பிரும்மா, , சந்திரசேகரர், ஆறுமுகக் கடவுள், பிட்சாடன மூர்த்தி, துர்க்கை, நடராஜர் மற்றும் பைரவ மூர்த்தி சன்னதிகள் உண்டு..
63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகள்,,
63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகள்,,
சிவ தியானத்திலேயே இருக்கும் சண்டிகேஸ்வரர் அமைதியாக
சிவ தரிசனப் பலனைத் தந்தருளுகிறார்.
சிவ தரிசனப் பலனைத் தந்தருளுகிறார்.
பைரவரை அடுத்து உட்பிரகாரத்தில் அருள்மிகு காரணீஸ்வரர் உடனுறையும் சொர்ணாம்பிகையைத் தரிசிக்கலாம்.
அபய வரத முத்திரைகளோடு நின்ற கோலத்தில் திகழும் சொர்ணாம்பிகையின் திருக்கோலம் . 'சின்னஞ்சிறு பெண்போலே' என்ற பாடல்வரிகளுக்கு ஏற்றாற்போலவே அம்பிகையின் திருவுருவம் அழகுற அமைந்துள்ளது.
அம்பிகையின் உட்பிரகாரத்திலேயே சூரியனுக்கும் சிலை அமைந்துள்ளது...
அம்பிகையின் உட்பிரகாரத்திலேயே சூரியனுக்கும் சிலை அமைந்துள்ளது...
வேதகிரீஸ்வரர் உடனுறை திரிபுர சுந்தரியின் தெவிட்டாத திருவுருவங்கள் மனத்தை கொள்ளை கொள்கின்றன.
வெளிப்பிராகாரத்தில் பழனி ஆண்டவர், ஆஞ்சனேயர், நவகிரகங்கள்,
அகோர வீரபத்திரர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சனீஸ்வரருக்கும் தனித்தனி ஆலயங்கள் உண்டு... .
அகோர வீரபத்திரர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சனீஸ்வரருக்கும் தனித்தனி ஆலயங்கள் உண்டு... .
கொடிமரத்துக்கு நேர் எதிரே நந்தவனமும், அருகிலுள்ள பிரதான மண்டபத்தில் காரணீஸ்வரர் உடனுறை சொர்ணாம்பிகையின் உற்சவச் சிலைகளைக் கண்டு வணங்கலாம்.
இந்திரனாலும் பிரம்மனாலும் பூஜிக்கப்பெற்ற ஈஸ்வரர், மகாபாரதப் போரினால் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட அத்தி தோஷங்களையும் நீக்கியவர்.
கன்னட தேசத்தில் விப்பிரர் குலத்தில் அவதரித்து சிறுவயது முதலே சிவ சிந்தனையில் இருந்துவந்த குருலிங்க சுவாமிகளுக்கும் தன் அருளை வழங்க தலத்துக்கு வரவழைத்த ஈசன், அவரது சிவத்தொண்டில் மகிழ்ந்து அவர் கையிலேயே லிங்கமாகி அவரை ஆட்கொண்டருளினார்
குருலிங்க சுவாமிகளின் சமாதி, காரணீஸ்வரர் கோயில் அமைந்துள்ள அதே காரணீஸ்வரர் தெருவில் மகாத்மா காந்தி நூல் நிலையத்தை அடுத்து அமைந்துள்ளது.
கா ரு ண் ய ம்
ReplyDeleteஅருளும்
திருக்காரணீஸ்வரர்
சிவசொர்ணாம்பிகை
என தலைப்பினில் முதல் வார்த்தையின் மூன்றாம் எழுத்துக்கு
[ண = ண்] நெற்றியில் ஓர் பொட்டு வையுங்கோ, ப்ளீஸ்.
மூ.பொ.போ.மு.க. ............ ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!
என் வேண்டுகோளின்படி உடனடியாக பளிச்சென்று பொட்டு வைத்துள்ளதற்கு மிக்க நன்றி.
Delete//பொட்டு வைத்த முகமோ
ஆ... ஆ... கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ ..................
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ//
எனப்பாடத்தோன்றுகிறது ! ;)
மகிழ்ச்சி, நன்றி !!
காமதேனு தரும் சுவை மிக்க பால் போலவே தாங்களும் பல்வேறு தகவல்களை பொழிந்துள்ளது மிகவும் ருசியோ ருசியாக உள்ளன.
ReplyDeleteமொத்தத்தில் பால்கோவா போன்றதோர் ருசி. தூத்பேடா சாப்பிட்டதுபோன்றதோர் தனிச்சுவை.
பதிவுலக ஆன்மிகக் காமதேனுவால் பொழிந்துள்ளது வேறு எப்படி இருக்க முடியும்? ;)
>>>>>
படங்களும் பதிவும் விளக்கங்களும் புராணக்கதைகளும் வழக்கம்போல மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteoOo
காரணீஸ்வரர் சிறப்புகள், படங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான தகவல்கள். அழகழகான விளக்கங்கள். படங்களும் மிக நேர்த்தி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசென்னை சைதையில் அமைந்துள்ள அழகான ஸ்தலம் இது. தினமும் கிடைக்கும் கோபுர தரிசனம் இன்று இங்கு தங்களால் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteகாரணீஸ்வரரின் வரலாறு, தகவல்கள், படங்கள் சிறப்பான பகிர்வு.நன்றி.
ReplyDeleteபடித்ததும் சென்று பார்க்கும் படி சென்னை சைதை பற்றிய தகவல்கள் மிக மிக சிறப்புங்க...
ReplyDeleteகாருண்யம் ததும்பும் திருக்காரணீஸ்வரர் பற்றிய பதிவு சிறப்பு..
ReplyDeleteசிவசொர்ணாம்பிகையின் அழகு தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்!...
கராணீஸ்வரர் , சொர்ணாம்பிகை தரிசனம் பெற்றோம்.
ReplyDeleteவிரிவான தகவல், அழகான படங்கள் எல்லாம் மிக அருமை.
குருலிங்கம் சுவாமிகள் பற்றிய செய்தி தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
இதுவரை நான் முழுமையாக அறிந்திராத கோயில். நல்ல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள். இறைவனின் அருட்தரிசனம் மனதிற்கு நிறைவைத் தந்தது.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் நன்று. தெரியாத செய்திகள் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteநிறைய தெரியாத தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி அம்மா.
ReplyDelete