ஸ்ரீ கிருஷ்ணபகவானின் ஜனனம் முதல் ருக்மிணி கல்யாணம் வரை நிகழ்ந்த லீலா விநோதங்களை ""கிருஷ்ண லீலா தரங்கிணி'' என்ற பெயரில் வடமொழியில் இசை நாடகமாக அளித்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற அருளாளர்.
குருவின் ஆணைப்படி நாமபஜனம் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டபோது
கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.
நிவாரணம் வேண்டி இறைவனை தியானித்து திருப்பதியில் தங்கியிருந்தபோது திருவையாற்றுக்கு அருகில் உள்ள க்ஷேத்திரத்திற்குச் செல்லுமாறு அசரீரி வாக்கு கிடைத்த தலத்தைத் தேடிச் செல்கையில், நடுக்காவேரி என்னுமிடத்தில் ஒரு விநாயகர் ஆலயத்தில் தீர்த்தரின் கனவில் திருமலைநாதன் தோன்றி, மறுநாள் காலை கண்விழித்தவுடன் முதலில் தென்படும் பிராணியைப் பின் தொடருமாறு அறிவுறுத்தினார்.
மறுதினம் தீர்த்தர் கண்களில் இரண்டு ஸ்வேத வராகங்கள் (வெள்ளைப் பன்றிகள்) தென்பட, அவற்றைத் தொடர்ந்து செல்ல, அவை பூபதிராஜபுரம் (தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் உள்ள பெருமாள் ஆலயத்தில் நுழைந்து மறைந்தன.
ஆலயத்திற்குள் சென்ற தீர்த்தரின் வயிற்று வலியும் உடனே மாயமாய் மறைந்துவிட்டது. தனது நன்றிக்கடன் தீர்க்கும் விதமாக வரகூரிலேயே தங்கி, வேங்கடேசப் பெருமானின் அருளால் கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற கிரந்தத்தை அருளிச் செய்தார். வரகூரில் கோகுலாஷ்டமி உற்ஸவத்தை நடத்தி மகிழ்ந்தார்.
ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகளுடைய பக்திக்கு வசமாகி, பாலகோபாலனே பாட்டிற்கு நர்த்தனமாடி, மகிமையை யாவரும் உணரச் செய்தான் என்பார்கள்.
ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் இயற்றிய தரங்கிணியில் ""ராமகிருஷ்ண கோவிந்தேதி'' என்று தொடங்கும் கீதத்தில் நாமசங்கீர்த்தன பிரவாஹத்தில் ஸ்ரீராமநாமா கங்காநதியாகும், அதனுடன் சேர்ந்த கிருஷ்ண நாமா யமுனை நதியாகும், அவைகளுடன் சேர்ந்த கோவிந்தநாமா சரஸ்வதி நதியாகும். இந்த நாமசங்கீர்த்தன வெள்ளத்தில் மனத்தாலும், நாவாலும், உடலாலும் ஸ்நானம் செய்யலாம் என்று புண்ணிய தீர்த்தங்களையும், நாம சங்கீர்த்தன த்ரிவேணி மகிமையையும், இணைத்து நயம்படக் கூறிய அழகு இணையற்றது..!
ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணி பற்றி பதிவில் கானலாம் ...
வரகூர் பெருமை அறிந்தேன். நன்றி
ReplyDeleteதரிசித்து மகிழ்ந்தோம்
ReplyDeleteதிருவுருவப் படங்களுடன் ஊரின் சிறப்பு குறித்தும்
அருமையாகப் பதிவு செய்து தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வழக்கம் போல படங்களுடன் பதிவு அட்டகாசமாக உள்ளது.பூபதிராஜபுரம் (தற்போதைய வரகூர்) நடுக்காவேரியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
ReplyDeleteவரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம்.
Deleteதகவலுக்கு நன்றி. அடுத்தமுறை தஞ்சை செல்லும்போது வரகூர் சென்று வருகிறேன்.
Deleteசிறப்பான படங்கள்... நன்றி அம்மா... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteவரகூர் பெருமாள் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றி !
thanks for sharing a new temple
ReplyDeleteவரகூர் பெயர் வரலாறு புதுத் தகவல் எனக்கு.
ReplyDeleteமிக்க நன்றி.
இனிய நாள் அமையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வரஹூர் பெருமாள் பற்றிய வியப்பளிக்கும் படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.
ReplyDeleteபலமுறை நேரில் சென்று தரிஸித்துள்ளேன்.
இன்று அந்தப்பெருமாளே, இந்தப்பதிவின் மூலம், எனக்கு [வீட்டிலிருந்தவாறே] காட்சிகொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள்.
வரகூர் இப்படி ஒரு ஊர் இருக்கிறது என்பதே உங்களால் தான் தெரியவருகிறது. படங்கள் வெகு சிறப்புங்க.
ReplyDeleteவரகூர் பற்றி முதல்முறையாகப் படிக்கிறேன். எப்படிப் போக வேண்டும் என்று கொஞ்சம் வழி சொல்லுங்களேன், ப்ளீஸ்!
ReplyDeleteஅருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்,
Deleteதஞ்சாவூர் மாவட்டம்.
வரகூர்-613 101
http://wikimapia.org/18563724/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
Deleteஅன்புள்ள திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு,
Deleteவணக்கம்.
வரஹூர் மிகச்சிறியதோர் குக்கிராமம்.
அக்ரஹாரத்தின் நடுவில் தான் கோயில் அமைந்துள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள்.
ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமமும் உண்டு.
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியை ஒட்டி இங்கு நடைபெறும் உரியடி உத்ஸவம் உலகப்புகழ் வாய்ந்தது.
அன்று இரவும் முழுவதும் இந்த கிராமமே அமர்க்களப்படும். சுற்றிவர உள்ள பல ஊர்களில் இருந்தும் மக்கள் இங்கு கூடுவார்கள். திருச்சியிலிருந்தும் ஏராளமானவர்கள் VAN வைத்துக்கொண்டு செல்வதுண்டு.
எல்லா வீடுகளின் உள்ளேயும், வாசல் திண்ணைகளிலும், வெளியூரிலிருந்து வருகை தரும் பலரும் தங்கள் இஷ்டப்படி, தங்கள் சொந்த வீடுபோலவே பயன்படுத்திக்கொள்வார்கள்.
அந்த ஊர் ஜனங்கள் மிகவும் நல்லவர்கள்.
வருவோருக்கெல்லாம் அன்னதானம் அமர்க்களமாக நடைபெறும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை இங்கு நாம் பிரத்யக்ஷமாகப் பார்க்கலாம்.
யார் வீட்டுக்குள்ளும் நாம் உரிமையுடன் நுழைந்து, பாத் ரூம் டாய்லெட் என எதையும் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எல்லோரையும் எல்லோரும் ’வாங்கோ’ ‘வாங்கோ’ ‘வாங்கோ’ எனச்சொல்லி, சம்பந்தி உபசாரம் போலச்செய்து, உபசரித்து மகிழ்வார்கள்.
சமீபத்தில் இரண்டு ஆண்டுக்கு முன்பு என் சின்னப்பிள்ளையும் நானும் இந்தக்கோயிலுக்குச் சென்று வந்தோம்.
தெய்வ சந்நதியில் கஷ்குமுஷ்கு என்று ஒரு குழந்தை, கொள்ளைச்சிரிப்புடன் கிருஷ்ண விக்ரஹம்போல, தன் தாயின் மடியிலிருந்து எங்களிடம் தாவி வந்தது.
நாங்கள் அபிஷேகம் முடியும் வரை, கடைசிவரை அந்தக்குழந்தையை எங்களிடமே வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தோம். ஒரு வயது மட்டுமே ஆகியிருந்த குழந்தை அது. அதன் பெயர் ’அநிருத்’ என்பது. பிறகு அவர்களும் புறப்பட்டு விட்டனர், நாங்களும் புறப்பட்டு விட்டோம். அவர்கள் யார் என எங்களுக்கு முன் பின் தெரியாது.
அந்தக்குழந்தையை மட்டும் எங்களால் பலநாட்களுக்கு மறக்கவே முடியவில்லை. அதன் பிறகு தான் என் சின்னப்பிள்ளைக்கு ஓர் குழந்தை பிறந்தது. அந்த என் பேரனுக்கும் ‘அநிருத்’ என்றே பெயர் சூட்டினோம். எல்லாம் அந்தக்கோயில் ஸ்ரீ கிருஷ்ணன் செய்த பரம அனுக்ரஹமே என்பது மட்டும் நிச்சயம்.
இந்தக்கோயிலில் ஓர் பாட்டி செய்துகொண்ட விசித்திரமான பிரார்த்த்னையை நகைச்சுவையாக என் கீழ்க்கண்ட பதிவினில் எழுதியுள்ளேன். அவசியம் படியுங்கோ. கருத்துச்சொல்லுங்கோ.
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html
அன்புடன்
கோபு
ஆஹா!.. அற்புத தரிசனம்!... நன்றியம்மா.. இத்தனை புகழ் பெற்ற
ReplyDeleteவரகூருக்கு - தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கண்டியூர், திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் நகரப்பேருந்தில் செல்லலாம்.வரகூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் அலங்கார வளைவு அடையாளமாக உள்ளது.பிரதான சாலையில் இறங்கி 1.கி.மீ தூரம் நடந்தால் முதலில் கைலாசநாதர் கோயில். அடுத்து பெருமாள் கோயில். வாருங்கள் வரகூருக்கு!..
என் சின்ன அக்கா மும்பையில் வாழ்க்கைப்பட்டிருந்தாள்.
ReplyDeleteஅவளுக்கு நான்கு குழந்தைகள். முதலில் 1 பெண் பிறகு 3 பிள்ளைகள்.
அவளுடைய புக்காத்து [புகுந்த வீட்டு] குலதெய்வம் இதே வரஹூர் பெருமாள் தான்.
அவள் ஒவ்வொரு வருஷமும் டெலிவெரிக்கு திருச்சி வரும் போதும், பிறகு குழந்தைக்கு முடிகாணிக்கை செலுத்தும் போதும், நானும் அவளுடன் துணைக்கு வரஹூர் செல்வது உண்டு.
அதன்பிறகும் நான் தனியாக என் குடும்பத்தாருடன் அவ்வப்போது பலமுறைகள் சென்று வந்ததும் உண்டு.
குழந்தைகளுக்கான இழுப்பு நோய், மாந்தம், பெரியவர்கள் சிலருக்கு முக்கியமாக பனிகாலங்களில் ஏற்படும் வீசிங் [மூச்சுத்திணறல்] பிரச்சனை, போன்றவற்றிற்கு, இந்தக்கோயிலில் உள்ள கிணற்றுக்கு, வாளியும், கயிறும் வாங்கிக்கொடுப்பதாக், பிரார்த்தனை செய்து கொண்டால் மிகவும் நல்லது என்றும் நான் பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.
என் சின்ன அக்கா மும்பையிலிருந்து கேட்டுக்கொண்டதால், ஒருமுறை நானும் என் மற்றொரு அண்ணாவும் ஆளுக்கு ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, திருச்சியிலிருந்து புறப்பட்டு இந்தக்கோயிலுக்கு, கயிறு + வாளி கொடுத்துவிட்டு வந்தது நினைவில் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ;)
திருச்சியிலிருந்து காரில் இந்தக்கோயிலுக்குச் செல்ல விரும்புவோர் கல்லணை + திருக்காட்டுப்பள்ளி வழியாகச் செல்வதுதான், SHORTEST ROUTE ஆக இருக்கும்.
கோவில் இருக்குமிடத்தின் பெயர் வரகூரா?
ReplyDeleteபடங்கள் பிரமாதமாக இருக்கின்றன
மிச்ச பின்னூட்டங்களைப் பார்த்தபின் எழுதியிருக்க வேண்டும்..
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வரகூர் பெருமாள் வரலாறும், படங்களும் அழகு.
ReplyDelete