Thursday, November 20, 2014

சித்திர சபை குற்றாலம்

















பஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா,கொடியேற்றத்துடன் துவங்குவது வழ்க்கம்.! -
 
குற்றாலம் மெயின்அருவிக்கு அருகில் கோயில் கொண்டுள்ள குழல்வாய்மொழி அம்மன் சமேத குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

திருவிழாவிற்காக இலஞ்சியிலிருந்து திருவிலஞ்சிகுமாரரை அழைத்து வரும் வைபவம் ,.சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. 

தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கும்... 

விழாவில்  பஞ்சமூர்த்திகள் புறப்பாடும்,தேரோட்டமும் நடந்தது. விநாயகர், சுப்பிரமணியர், குழல்வாய்மொழிஅம்மன், குற்றாலநாதர் ஆகிய நான்கு தேர்களையும் பக்தர்கள் வடம்பிடித்துஇழுப்பார்கள்.. சிவனடியார்கள் பஞ்சவாத்தியம் முழங்கிச்செல்வார்கள்..

  நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனை சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை,  விசு தீர்த்தவாரி மற்றும் திருவிலஞ்சிக்குமாரர் பிரியாவிடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது

8 comments:

  1. திருக்குற்றாலத்தைப் பற்றி அழகான படங்களுடன் இனிய பதிவு..

    ReplyDelete
  2. ஒவ்வொரு வருடமும் தரிசித்து விடுவோம்...

    ReplyDelete
  3. குற்றால அருவிக்கு மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன். நீரே இல்லாதபோதும் ஒருமுறை. ஆனால் கோவில் வைபவங்கள் குறித்து ஏதும் தெரிந்து கொண்டதில்லை. படங்களுடன் பதிவு அருமை.

    ReplyDelete
  4. படங்களும், பதிவும் அருமை.

    ReplyDelete
  5. திருக்குற்றால நாதர் பற்றிய தகவல்கள் அருமை! நன்றி!

    ReplyDelete
  6. அருமை தோழர் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கோயிலுக்குச் சென்றுள்ளேன். இருப்பினும் தாங்கள் தந்துள்ள புகைப்படங்களில் உள்ள ஓவியங்களைப் பார்க்கவில்லை. அரிதான புகைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. ஹலோ!
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete