ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே
ஸ்ரீ ஸ்ரீநிவாச மங்கள ஸ்லோகம்.
திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீயப்பதியான ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம்.
அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே,
வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே,
மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல
நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
ஓம் நமோ பத்மாவதி
பத்ம நேத்ர வஜ்ர வஜ்
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி
(ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்)
திருமலை ஏழுமலையானின் பட்டத்துராணியான திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, ஆண்டுதோறும், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மஞ்சள், குங்குமம், கோரோஜனம், கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் அனைத்தும் கலந்த, வாசனை திரவியத்தை கோயில் சுவற்றில் பூசி, கோயில் முழுவதையும் சுத்தம் செய்யப்படும்.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் அவதார உற்சவமாகக் கொண்டாடப்படும் கார்த்திகை பிரம்மோத்ஸவப் பெரு விழா பகலில் ஒன்றாகவும் இரவில் ஒன்றாகவும் நடைபெறும் வாகனசேவை ,மஞ்சள், வளையல் குங்குமம் அடங்கிய ஸ்ரீ பத்மாவதி தாயாரின்பிரசாதம் வழங்கப்படும்.
கஜ வாகன சேவையும் , பஞ்சமி தீர்த்த சேவையும் மிகவும் பிரசித்திபெற்றவை.
தங்களின் பதிவு மூலமாக கார்த்திகைப் பெருவிழாவினைக் கண்டேன். புகைப்படங்கள் மிக அருமையாக இருந்தன. நன்றி
ReplyDeleteசிறப்பை அறித்தேன் அம்மா... படங்கள் அட்டகாசம்...
ReplyDeleteநேரில் சென்றால் கூட இத்தனை அற்புதமாக
ReplyDeleteதரிசிக்கமுடியுமா என்பது சந்தேகமே
அற்புதமான படங்களுடன் தரிசித்து மகிழ்ந்தோம்]
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
சிறப்பான விளக்கம் அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பத்மாவதி தாயாரின் பிரம்மோற்சவ சேவை குறித்த தகவல்கள் அறிந்துகொண்டேன்! படங்கள் அழகு!
ReplyDeleteஹம்ச வாகன உலா தொலைக்காட்சியில் பார்த்தோம். அருமையா படங்களுடன் பதிவும் அழகு.
ReplyDelete