Saturday, January 3, 2015

ஆபரணத் தாவரங்கள்






நாம் புனிதமான செடியாக துளசியை கருதுகிறோம்.

ஆபரணச் செடிகளையும் .இல்லங்களில் வளர்த்து அழகு செய்கிறோம்..

வீடுகளின் அழகை அதிகரித்துக் காட்டுபவை பசுமையான தாவரங்கள் .. அழகிய இலை மற்றும் பூக்களைக் கொண்ட தன்மை உடையவை. 

சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன.
குரோட்டன்ஸ் செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது.

பவுடர் பப் சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் பூக்கும் தன்மையுடையது.
வாஸ்து சாஸ்திரப்படி, வீடுகளில், சீன மூங்கில் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன
மூங்கில் செடி நம் வீட்டை அலங்கரிக்கவும் பயன்படுகிறது

  வீட்டில் வைத்தால் அதிர்க்ஷ்டம் என்று நினைப்பதால் மூங்கில் செடியை ஒரு கண்ணாடி பௌலில் வளர்ப்பார்கள். 

  பரிசாகப்பெற்றுக்கொண்டால்  கொண்டால்   எங்கும், எதிலும் வெற்றி என்ற நம்பிக்கையால் மூங்கில் செடியை ஒருவருக்கு பரிசாகக் கொடுத்தால், பெறுபவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர். .
அதிர்க்ஷ்ட மூங்கில் செடியை எப்போதும் தண்ணீரிலேயே வைத்து,. தினமும் அதற்கு தண்ணீர் மாற்றுவது அவசியம்..
மூங்கில் செடி நன்கு செழிப்போடு நீண்ட நாட்கள் இருக்கும்.
 இந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற்கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கும் தொடர்பிருப்பதாக நம்பிக்கை உண்டு..
ஜேட்  ( jad )எனப்படும்செடி வகை சீன வாஸ்து சாஸ்திரத்தில் ஐஸ்வர்யம் வழங்கும் செடியாக வளர்க்கப்படுகிறது..

ஜேட்' செடியை வீட்டில் வளர்ப்பது நல்லது. முக்கியமாக செல்வத்தின் பகுதியான தென்மேற்கு திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானது. வீட்டின் செல்வ அதிர்ஷ்டத்திற்கு இது சக்தியை ஊட்டுகிறது.

இல்லத்தின் முன்புறம் வைத்தால் வாசல் வழியாக செல்வத்தை அழைத்துவரும் என்று நம்பிக்கை நிலவுகிறது..

வீட்டின் பின் வாசலிம் ஒன்று வைத்து வளர்த்தால் செல்வம் வெளியேறாமல் பாதுகாக்குமாம்.

போன்சாய் முறையில் தொட்டியிலும் வைத்து வளர்க்கப்பட்டு 
வீட்டு அறைகளிலும் செல்வம் நிலைக்க வளர்க்கிறார்கள்.

இதன் இலைகள் நாணயங்களைப்போல் இருப்பதால் டாலர் செடி 
என்றும் அழைக்கப்படுகிறதாம்..

இதன் இலைசாறுகளை இலைகளில் உண்ண குளவிகள் கூடு கட்டுகின்றன..
இந்தச்செடிக்கு வாரம் ஒருமுறை குறைந்த அளவு தண்ணீர் ஊற்றினால் போதும்..
பல வண்ணங்களில் பூக்களைச்சொரிந்து ஆபரணமாகத்தான திகழ்கிறது இந்தச்செடி..










12 comments:

  1. ஆபரணத் தாவரங்கள் அழகு சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் சிறப்பான தகவல்கள் அம்மா...

    ReplyDelete
  3. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    அரிய செய்திகள்.. அழகிய படங்கள்..
    தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!..

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா
    தகவலைஅறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான செடிகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. ஆன்மீக பதிவுகள் மட்டுமில்லாமல் இது போல இயற்கை பதிவுகளும் அழகிய புகைப்படங்களுடன் போட்டு அசத்துகிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. "தாவரங்கள் சிறப்பினை தந்த
    கரங்களை போற்றுகிறோம்!
    "ஆபரணத் தாவரங்கள்" பதிவு
    அருமை! சிறப்பு!
    புதுவை வேலு
    (எனது புதிய படைப்பு "இறைவனைத் தேடி"

    நேரமிருப்பின் வாரூங்கள் பதிவினை நோக்கி)

    ReplyDelete
  8. பெயர் தெரியாதபல செடிகளை என் மனைவி வைத்திருக்கிறாள் என் வீட்டில் இப்போது ஒரு வெற்றிலைக் கொடி வெகு வேகமாய் வளருகிறது. நாங்கள் வெற்றிலை போடும் பழக்கமில்லாதவர்கள். மனி ப்லாண்ட் என்னும் ஒரு வகைச்செடி. கேட்காமல் எடுதுப் போய் ( திருடிப் போய்) வளர்க்க வேண்டுமாம். பசுமையான செடி வகைகள் கண்ணுக்கு இதமானவை பூச்செடியாகவும் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. மற்றபடி இந்த வாஸ்து சமாச்சாரங்களில் நம்பிக்கை இல்லை. என் மூத்த மருமகள் பெங் சூயி யில்கொஞ்சம் நாட்டம் கொண்டவள். பதிவில் காணும் படங்களில் உள்ள செடிகளை அதிகம் கண்டதில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்கள்..நன்றி

    ReplyDelete
  10. செடிகளின் கதை மனதைத் தொடுகிறது.

    ReplyDelete
  11. எங்கள் வீட்டிலும் இது உள்ளது
    நன்கு வளரும்.
    ஆனால் பூக்களை இது வரை காணவேயில்லை.

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete