"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாமத் ததுல்யம் ராம நாம வராணனே
என்று மூன்று முறை ராம நாமத்தை மனதாரச் சொன்னால், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தையே பாராயணம் செய்த பலன் கிடைக்கும்' என்று பரமசிவன் பார்வதி தேவிக்குக் கூறியுள்ளார்.
, விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. "நாராயண' நாமத்திலிருந்து "ரா'வும் "நமசிவாய' நாமத்திலிருந்து "ம'வும் சேர்ந்து அமைந்ததே "ராம' என்னும் திருநாமம்.
இப்படி எழுத்துகள் சேர்ந்து ராம நாமம் அமைந்ததுபோல், சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில், ஜி.எஸ்.டி. சாலையில் சென்னை நுழைவு பாகத்தில் . ஸ்ரீராமாஞ்சனேயர் திருக்கோவிலும் ஸ்ரீவைத்யநாத சுவாமி திருக்கோவிலும் அமைந்திருப்பது சிறப்பு..
ஸ்ரீராமாஞ்சனேயர் டிரஸ்ட் சார்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அமைப்பு பல சமுதாயப் பணிகளையும், அருமையான ஆன்மிக சேவையையும் செய்து வருகிறது.
சிவன் கோவிலும் விஷ்ணு கோவிலும் அருகருகே அமைந்துள்ள
ஸ்ரீராமாஞ்சனேயர் திருக்கோவில் பல சிறப்பான விசேஷங்களைத் கொண்டவையாகும்.
ஆழ்வார்களில் பூதத்தாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் போற்றிப் பாடிய திவ்ய தேசமான திருநீர்மலைக்குத் தென்கிழக்கே சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை என்ற மலையடிவாரத்தில் அமைந்துள்ளன.
இராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கை நோக்கி எடுத்துச் செல்கையில் இங்குள்ள பச்சை மலையைக் கடந்து சென்றதாக ஐதீகம்.
அதனால் இன்றும் இம்மலையிலிருந்து வீசும் காற்றாலும் கிடைக்கும் பச்சிலைகளாலும் பலரின் தீராநோய்கள் தீர்க்கப்பட்டு கோவிலின் அருகிலேயே காசநோய் மருத்துவமனையை அரசு நடத்தி வருவதும், அதன்மூலம் பலர் நன்மை பெறுவதையும் அறிய முடிகிறது.
முதன் முதலில் கோவில் கொண்ட ஆஞ்சனேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
எதிர்காலத்தில் இங்கு பெரிய கோவிலமைந்து இப்பகுதி மக்களும் மற்றவர்களும் நன்மை அடையப் போகிறார்கள் என்பதை,
1960- ஆம் ஆண்டிலேயே தெளிவுபடுத்திக் கொடுத்த
காஞ்சி . பரமாச்சாரியார் ஆக்ஞைப்படி அமைக்கப்பட்ட, திருக்கோவிலில் ஆஞ்சனேயருக்காக ராமபிரான் எழுந்தருளியுள்ளார்.
நோய் தீர்க்கும் இடமாக அமைந்திருந்ததால் வைத்யநாத சுவாமியும் இங்கு கோவில் கொண்டு விட்டார்.
தீரா நோய்களைத் தீர்க்க வைத்தியநாதசுவாமியும் பிறவிப் பிணி தீர்க்க ராமபிரானும் ஒருங்கே அமைய, குருவருளும் திருவருளும் கூடி மக்களின் பக்தியால் இன்று பெரிய கோவிலாக வளர்ந்து நிற்கிறது.
ராமர் கோவிலில், முதலில் வரம் தருவதில் வல்லவரானஆஞ்சனேயர்
சந்நிதியில் மட்டைத் தேங்காய் கட்டிப் பிரார்த்தனை செய்துகொண்டால் விருப்பங் களை நிறைவேற்றித் தருகிறார்.
தன்னுடைய ஆராதனத்திற் காக 1967-ல் சிந்தாதிரிப் பேட்டை ஸ்ரீராமாஞ்சனேயர் ஸத்சங்கத்திலிருந்து ஸ்ரீசீதா, லஷ்மண சமேத ராமர் திருவுருவங்களைப் பெற்றார்.
.எந்தக் காரியத்திற்கும் மிக முக்கிய . லக்ஷ்மி கடாட்சம் பெற மஹாலக்ஷ்மி சந்நிதியும்,
சகல காரிய சித்திக்காக சுதர்சன நரசிம்மருக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்தன. "மனத்துக்கினியானை' என்று ராமரைப் பாடிய ஆண்டாளுக்குதனிச் சந்நிதி உள்ளது.
புனர்வஸு நட்சத் திரத்தில் ராமனுக்கும், மூல நட்சத்திரத்தில் அனுமனுக்கும், உத்திர நட்சத்திரம், வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மிக்கும், சித்திரை, ஸ்வாதி நட்சத்திரத்தில் சுதர்ஸன நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
நித்தமும் யாராவது ஒரு பக்தர் மூலம் நித்ய உற்சவம் நடந்து வருகிறது. ஸ்ரீராம நவமி, அனுமத் ஜெயந்தி உற்சவங்கள் மிக விமரிசையாய்
நடந்து வருகிறது.
ஸ்ரீவைத்யநாத சுவாமியைத் தரிசிப்பவர் களுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படுவது போன்றே மருந்து பிரசாதம் அளிப்பதால்,நோய்கள் தீரப் பெற்றவர்கள் பலர்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கே சென்று வந்த நிறைவு ஏற்படுகிறது.
வைத்யநாத சுவாமி சந்நிதியில் சசிமங்கள கணபதி, வள்ளி தேவசேனாவுடன் முருகன், விஷ்ணு துர்க்கை, தட்சிணா மூர்த்தி, நடராஜர் சந்நிதிகளுடன் நவகிரகங்களும் அருள் பாலிக்கிறார்கள்.
இந்த சந்நிதியில் அங்காரகனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டால் இத்திருக்கோவில் சென்னை யில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற பெருமையைப் பெற்றுவிடும்.
நன்றி சகோதரியாரே
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள். படங்கள் அருமை இந்தக் கோவிலை கடந்து பல முறை சென்றதுண்டு. ஆனால் உள்ளே போனதில்லை நிச்சயம் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும்
ReplyDeleteHappy New Year.
ReplyDeleteToday is Saturday with Amavasya.
Yesterday only we finished Sundarakanda Paarayanam
Today, It is heartening to
have a Darsan of
Lord Rama and Nanaganallur Ramaanjaneyar.
Thank U so much.
subbu thatha.
நானும் பலமுறை கடந்து சென்றுள்ளேன். கோவிலுக்குப் போனதில்லை. வருடங்களுக்கு முன் ஒரு சாலை விரிவாக்கத்தின்போது இந்தக் கோவிலுக்கு ஆபத்து வந்ததாகவும் நினைவு.
ReplyDeleteஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம்.
ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி. காலையில் அசோக்நகர் ஆஞ்சநேயர் தரிசன பாக்யம். டி.வி.யில் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசித்து உங்கள் தளத்தில் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை ராமாஞ்சனேயர் தரிசனம்.
ReplyDeleteஸ்ரீராம் குறிப்பிட்ட நிகழ்வுக்கு முன் இந்தக் கோயிலுக்குச் சென்று தரிசித்திருக்கிறேன்.
சுப்புதாத்தா நங்கநல்லூர் ஆஞ்சநேயர் பற்றியும் குறிப்பிட்டு விட்டார். ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
ஹனுமத் ஜெயந்தியன்று விஷேசமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான தரிசனம். நன்றி.
ReplyDeleteஅனுமனுக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டாமே? அவர் தாயார் அஞ்ச்னா தேவி அழைத்த செல்லப் பெயராமே அது?.. அதனால் தான் அனுமனின் அழகு கைங்கர்யம் கூடியிருக்கும் காண்டத்திற்கு சுந்திர காண்டம் என்று வால்மீகி பெயர் வைத்தாராம்.
ReplyDeleteசமீபத்தில் 'தீபம்' இதழில் படித்தேன்.
நாளுக்கேற்ற பதிவு
ReplyDeleteஅவசியம் சென்று தரிசிக்க வேண்டுமென்கிற உணர்வினைத் தந்தது சகோதரி இப்பதிவு படித்தவுடன்...
ReplyDeleteஇராம இராம....
சிறப்பான தகவல்கள்..... படங்களும் அருமை.
ReplyDeleteபடங்கள் அழகு. இந்தக் கோயிலுக்கு ஒரே ஒரு முறை சென்றதுண்டு. அழகான கோயில். அதன் சிறப்பை உங்கள் பதிவில் தெரிந்து கொண்டோம்.
ReplyDeleteகீதா
தொடர்க
ReplyDeleteசிறப்பான தரிசனம்.
ReplyDeleteஅனுமத் ஜெயந்திக்கான அருமையான பகிர்வு
ReplyDeleteஅம்மா இன்று தான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன். ஸ்ரீ ஹனுமன் ஜெயந்திக்கான அருமையான பதிவு காணக்கிடைத்தது. படங்கள் எல்லாமும் விளக்கங்களும் ரொம்ப நல்லா மனதுக்கு நிறைவா இருக்கும்மா. நன்றிகள். இன்றுதான் புதிதாக வலைப்பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கேன். என் பக்கமும் வாங்கம்மா. நன்றி
ReplyDeleteஅருமை ராஜி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)
ReplyDelete