Saturday, July 2, 2011

பிரகலாதவரதனின் பார்வைப்பிரசாதம்





அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில

[Image1]
அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தவற்றில் தனிச்சிறப்புபெற்றது நரசிம்ம அவதாரம். 
அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர்.

இரண்யன் என்னும் அசுரன், தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டுமென உத்தரவிட்டான். 

அவனது மகன் பிரகலாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். 

தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான். 

பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற  திருவுளம் கொண்டார் திருமால்..

 தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். 
எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார். "
நரசிம்மர் வழிபாடு
உன் ஹரி எங்கே இருக்கிறான்?' என்று அவன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். 

இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். 

இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம். 

இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். 

இரண்யனை தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். 

அவரது உக்ரத்தைத் தணிக்க லட்சுமிபிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அதுமுதல் அவர் "லட்சுமி நரசிம்மர்' என பெயர் பெற்றார்.
 பழமை வாய்ந்த கோயில்  எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. 

நெல்லையப்பர், காந்திமதி அம்பிகை கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது. 

இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன. 

இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. 

ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. 

வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் கோன் இதை மீண்டும் கண்டுபிடித்தார். 

அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். 

 வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையாழ்வார் கோன் ஆகியோர்  பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.
கருடாழ்வார் 

கொடிமரம்
[Gal1]
செவ்வாய் தோஷ நிவர்த்தி: 
கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் எடுத்து செல்கின்றனர். 

ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். 

இதனால் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமண தடை விலகுவதாக நம்பிக்கை. 
நீராஞ்சன தீபம்
[Gal1]
கடன் பிரச்னை, நீதிமன்ற வழக்கு பிரச்னை, வீடு, நிலம் பிரச்னைகள் தீர்வதற்கும், வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்கின்றனர்

எந்தக் குறை ஏற்பட்டாலும், அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நரசிம்மபெருமாளையும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து, உருக்கமாக, தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதை இங்கு காண முடியும்.

தாயார் பூதேவி

தாயார் ஸ்ரீதேவி
[Gal1]

இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். 

அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள். 

இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம்.

பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது. 
இப்படிப்பட்ட பெருமாளை "பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை.
உற்சவர் நரசிங்கப்பெருமாள்

இருப்பிடம்: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பின்புறமுள்ளமேலமாட வீதியில் கோயில் அமைந்துள்ளது. 
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுனுக்கு செல்லும் பஸ்களில் சுவாமி சன்னதி முன்பு இறங்கி நடந்து சென்று விடலாம்.
திறக்கும் நேரம்: காலை 8- 10.30 மணி, மாலை 5.30 - இரவு 8 மணி.போன்: 98940 20443, 95859 58594.
ஆழ்வார்கள்
[Gal1]

27 comments:

  1. அவதராங்களின் வரலாறு...

    பிரகலாதனின் அருளை அடைந்தேன் தங்கள் பதிவின் மூலம்....

    ReplyDelete
  2. //உன் ஹரி எங்கே இருக்கிறான்?' என்று அவன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம்.// மிக சுவையகவும், சுலபமாக புரியும்படியகவும் விளக்கியுள்ளீர்கள். உங்கள் கோவில் பற்றிய பதிவுகளை படிக்கும் பொழுது உடன அங்கு சென்று தரிசிக்க அவல் எற்படுகிறது...

    ReplyDelete
  3. புதிய புதுமைத் தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. பிரகலாதனின் பார்வைப் பிரசாதம்
    கண்களால் உண்டு பரவசம் கொண்டேன்
    அனைவருக்கும் வழங்கி பெருமிதம் கொள்ளும் தாங்கள்
    எல்லா வளமும் நலமும் பெற மனமாற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. @ FOOD said...//

    அருமையான வித்தியாசமான கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. @# கவிதை வீதி # சௌந்தர் said...
    அவதராங்களின் வரலாறு...

    பிரகலாதனின் அருளை அடைந்தேன் தங்கள் பதிவின் மூலம்....//

    கருத்துரைகளின் மூலம் உற்சாகம் அடைந்தேன். நன்றி.

    ReplyDelete
  7. @ RAMVI said...//

    வாருங்கள். கருத்துரைகளுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  8. @ middleclassmadhavi said...
    புதிய புதுமைத் தகவல்களுக்கு நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @ Ramani said...//

    வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  10. தொடர்ந்து ஆன்மாகப் பதிவாக தந்து எங்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துவதர்க்கு நன்றிகள்..

    ReplyDelete
  11. @!* வேடந்தாங்கல் - கருன் *! s//

    கருத்துரைகளுக்கு நன்றி..

    ReplyDelete
  12. //அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நரசிம்மபெருமாளையும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து, உருக்கமாக, தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதை இங்கு காண முடியும்.///


    பக்தியின் உச்சமே கண்ணீர்தான் என்று நிரூபணம் செய்த பதிவு
    பக்தனுக்காக அருள் மட்டுமல்ல அவதாரமே எடுப்பான் என்பதன் சாரத்தை சொன்ன விதமும் மனதிற்கு இதம்
    நன்றி

    ReplyDelete
  13. அருமையான தகவல்கள் - தொடருங்கள். புத்தகமாக போடவும்.. அனைவரும் பயன்பெறுவர்

    ReplyDelete
  14. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

    ReplyDelete
  15. நல்ல பயனுள்ள பதிவு.
    திருநெல்வேலி செல்லும்போது தரிசனம் செய்கிறோம்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. எனக்கு மிகவும் பிடித்த, பரம பாகவதனான, பிரகலாதன் சரித்திரமாக இருக்கும் என்று நினைப்பதால் முழுவதும் பொறுமையாகப்படித்து விட்டு மீண்டும் கட்டாயம் வருவேன்.

    இன்று கொஞ்சம் தாமதமாகவே வருவேன்.

    காரணம் உங்களுக்கே தெரியும். vgk

    ReplyDelete
  17. வழக்கம் போல் ஸ்திரவாரமாகிய சனிக்கிழமைக்கு தகுந்தாற்போல நரசிம்ஹ அவதாரம், இந்தக் கோயில் அமைந்துள்ள இடம், திறந்திருக்கும் நேரம், தொலைபேசி எண் எல்லாம் கொடுத்து, அதன் வரலாற்றுச்சிறப்புகள், பிரார்த்தனை செலுத்தும் வழக்கங்கள், வேண்டுதலுக்கான பலன்கள் எல்லாமே தகுந்த படங்களுடன் வெகு அழகாக வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. //சிலையின் சிறப்பு: தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம்.//

    ஆமாம். அப்படித்தான் இருக்கும்.

    //ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலெட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது.//

    ஆஹா, நல்லதொரு புதுத்தகவல்.

    [பெருமாளுக்கு மிகவும் இஷ்டமான காரியத்தை, அவருக்கு சிரமம் கொடுக்காமல், பிராட்டியே செய்திருப்பது, கேட்கவே சந்தோஷமாக உள்ளது]

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  19. //இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள். இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம்.//

    குறையே எப்போதும் ஏற்பட்டு வரும் நம் மக்களுக்கு நல்ல நம்பிக்கையூட்டும் ஆறுதலான தகவல். நன்றி!!

    ReplyDelete
  20. //இப்படி ஒரு சிலையமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும். அது மட்டுமல்ல! இந்தப் பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது.//

    சிங்கமுகம் இல்லாத நரசிம்ஹரா!
    அடடா, இது புதுத்தகவலாக உள்ளதே!

    //இப்படிப்பட்ட பெருமாளை "பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை.//

    நல்லது. கோரிக்கைகளை பரிவுடன் ஏற்றுக்கொண்டால் சரிதான்.

    ReplyDelete
  21. சிறப்பான பகிர்வு.முழுமையாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  22. சில வருடங்களுக்கு முன்னர் , நெல்லையப்பர் கோயிலுக்கு சென்றேன், இந்த கோயில் பற்றி அறிந்திலேன். அடுத்த முறை செல்லும் போது, அவசியம் தரிசிக்க வேண்டும்.

    ReplyDelete
  23. தினம் ஒரு பதிவு , இத்தனை படம், விவரங்களுடன், எப்படி முடிகிறது தங்களால் மேடம் ?

    ReplyDelete
  24. அருமையான இந்த ஆன்மீக தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. Fine post.
    The information given in the last is really very useful.
    viji

    ReplyDelete
  26. 683+6+1=690

    [முதல் படம் கடந்த 15 நாட்களுக்கும் பலமுறை REPEAT ஆகியுள்ளது. இருப்பினும் நரசிம்ஹ பெருமாளை, உங்கள் பதிவுகளின் மூலம் அடிக்கடி தரிஸிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே]

    ReplyDelete